கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 347 views
-
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …
-
-
- 3 replies
- 588 views
-
-
வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் …
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
எப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடா…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950
-
- 2 replies
- 1.2k views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார…
-
- 2 replies
- 687 views
-
-
படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அழகு தமிழ் அன்னையாம் தமிழுக்கு ஆயிரமாயிரம் பேர்சொல்வர் அழகு செந்தமிழ் ,இன்பத்தமிழ் குழந்தையின் நாவில் தவழும் மழலைத்தமிழ், அமுதம் சொட்டும் தேன் தமிழ் இன்பத்தமிழ் அகிலம் எங்கும் காண்போம். அழுகின்ற குழந்தை கூட"அம்மா " என அழைத்தால் உருகாதார் நெஞ்சம் உருகாதோ? செந்தமிழால் இன்னிசையால் பாடடெழுதி கவி எழுதிய கண்ணதாசனுக்கும் எண்ணத்திலே சிந்தையிலே முந்தி வந்த தமிழ் என் உயிரான தமிழ் என் முதல் மொழி என் இனிய மொழி. தமிழ் என் உயிர். கரை காணாத கடல். சுடடால் மிளிரும் பொன் போல அதைக் கற்றால் புரியும் உலகம். வளரும் உலக அறிவும் . தமிழுக்கு நிலவென்று பேர் வளர்ந்து கொண்டே இருப்பதால். பழக பழக பண்பை சொல்லி வாழ வைக்கு…
-
- 3 replies
- 969 views
- 1 follower
-
-
தமிழை நேசி என்றுமெம் தமிழ் அன்னை தன்னைத் தம் இதயம் வைப்பவர் சோா்ந்திடார் ஏழ்மை வாழ்விலும் துயரிலாழ்ந்து தம் இனிய பண்பினை விட்டிடார் கன்றுதாயிடம் காட்டுமன்புபோல் கனிவை எங்கணும் காட்டுவார் காதலுற்றவர் பூதலத்தினில் கருணைமிக்கவர் ஆகுவார். நன்றிலாதன செய்திடார் பிறர் நலனை நெஞ்சிலிருத்துவார் வென்று தம்பகை யன்பினால் வரும் வெற்றியாலுல காளுவார்......... கவிதையில் ஆர்வமுள்ளோர் இதனைத் தொடர்வீர்.
-
- 2 replies
- 997 views
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 2 replies
- 995 views
-
-
உயிரில் கலந்த உறவே.....! முழங்கால் மடித்து இருந்து முழங்கையை முன் நீட்டி முழுசாய் பறித்த ரோசாவைத் தர முத்தமொன்று தந்திடுவாள் மறு கரத்திலோர் பரிசும் பார்த்து கட்டியணைத்திடுவாள் கண்மணியும் சேர்ந்து நடக்கையில் விலகி நடந்தவள் விரலோடு விரல் பின்ன உடையோடு உரசுகின்றாள் முடியை கோதிவிட்டு முன்வந்து முறுவலிப்பாள் கண்ணால் பலகதை சொல்லி பல்லால் இதழ் கடித்திடுவாள் அஞ்சும் மலர் அருகிருக்க நெஞ்ச மலர் மலர்ந்திருக்கும் கெஞ்சும் விரல் கொஞ்சம் தயங்க முந்தும் முகம் முத்தாடும் தேனின்றி குவளைமலர் பூத்திருக்க தேனுடன் வந்த வண்டு சுத்திப் பறக்கும் தேன் இல் மலரில் மகரந்தம் சுவைத்…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள்-பா.உதயன் உங்கள் போலி முகங்களை எங்களுக்கு காட்டாதீர்கள் உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள் உங்கள் போலி கதைகளை சொல்லாதீர்கள் உங்கள் உண்மைக் கதைகளை சொல்லுங்கள் உங்கள் போலி அன்புகளை காட்டாதீர்கள் உங்கள் உண்மை அன்புகளை காட்டுங்கள் உங்கள் போலி சத்தியங்களை செய்யாதீர்கள் உங்கள் உண்மை சத்தியங்களை செய்யுங்கள் உங்கள் போலி கௌரவங்களுக்காகாவும் புகழுக்காகவும் வாழாதீர்கள் உங்கள் அறம் சார்ந்த வாழ்வோடு பயணியுங்கள் பொது நலன்களோடு பயணியுங்கள் உங்கள் சுய தேவைக்காக நலனுக்காக புகழுக்காக எதையும் பயன் படுத்தாதீர்கள் உங்கள் முதுகில் ஊத்தை வைத்துக் கொண்டு அடுத்தவ…
-
- 1 reply
- 457 views
-
-
நேற்று மழை பெய்தது நான் பெய்யச் சொல்லும் போது வந்த மழை அல்ல அது யாருக்காகவோ எவருக்காகவோ பெய்த மழை அது நான் துயர் ஊறிய கண்களும் வெப்பம் மிகுந்த மூச்சும் வெறுப்பேறிய பொழுதும் கொண்ட நேரத்தில் மழையை பெய்யக் கேட்டிருந்தேன் அது பெய்யவில்லை பொய்மையின் வீச்சில் மனம் பொசுங்கிய போது வெறுமையின் அடர் இருள் மனம் சூழ்ந்த போது எல்லாவற்றிலும் வெப்பம் படர்ந்த போது இந்த மழையை வா எனக் கேட்டேன் வரவில்லை நேற்று எவருக்காகவோ பெய்தது எவர் நிலத்தையோ நனைத்தது வீதி ஒன்றில் எவருமற்ற பூங்காவில் தனித்திருந்த ஒரு நிழற் குடையை சரித்துச் சென்றது யாருமற்ற இரவொன்றை நனைத்துச் சென்றது. பறவையின் கூடு புகுந்து சிறகுகளை…
-
- 9 replies
- 1.2k views
-
-
கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரையை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 789 views
-
-
அன்னையர் தினத்தைக் கொண்டாடி அம்மாவை அடுத்த வேளை உணவுக்குத் திண்டாட வைக்கும் பிள்ளைகளும் உள்ளனர் இந்தப் பூவுலகில்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 695 views
-
-
பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும் பாசத்தின் வெளிப்பாடு அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 598 views
-
-
உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 687 views
- 1 follower
-
-