கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
774 topics in this forum
-
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்" "மனதின் மூலையில் ஒரு நினைவு அணையா தீபமாய் இன்றும் எரிகிறது தேநீரின் வாசனை காற்றில் வருகிறது வடையின் மெதுமை வாயில் ஊறுது!" "உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!" "விடைகள் புரியா வாங்கு அரசியல் குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம் கடையின் நினைவு மறையா காலமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 225 views
-
-
"இரு கவிதைகள்" [1] "கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [2] "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வருக வசந்தமே-பா.உதயன் 🌺 வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியுதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது அழகிய கதிரவன் கண்ணைத் திறக்கிறான் ஆயிரம் பூக்களின் அழகு சிரிக்குது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு மணி ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது கனவுகள் உயிர்த்தொரு காலம் பிறக்குது காலைப் பொழுதொன்று மெல…
-
- 0 replies
- 785 views
-
-
படக்கவிதை / "மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" "உணர்வுகள் எல்லாம் உள்ளத்தில் பூரிக்க ஆணவம் அற்ற மனத்தைக் கொண்டு ஆணழகன் வருகையை எதிர்ப் பார்த்து மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 896 views
-
-
-
- 0 replies
- 582 views
-
-
2021 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - பிலவ வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை த…
-
- 0 replies
- 1k views
-
-
"மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய ஆச…
-
- 0 replies
- 175 views
-
-
"மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய…
-
- 0 replies
- 353 views
-
-
"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்" "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம் இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய் வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம் வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள் நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய் யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய் கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம் கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய் ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய் …
-
- 0 replies
- 171 views
-
-
"தேடும் விழிகளில்" [கசல் கவிதை] "தேடும் விழிகளில் கதைகள் இருக்கும் சொல்லப்படாத கனவுகள் ஆடும்!" "மௌன பிரார்த்தனையில் ஏக்கம் விரிந்து காதல் கலந்து மோதல் வெடித்து பின்னிப் பிணைந்து கண்களின் கண்ணீர் ஏதேதோ சொல்லும்!" "சோகத்தின் திரைகள் வழியாக மகிழ்ச்சியின் முகமூடி வழியாக மனம் பறந்து தேடும் கண்களில் நம்பிக்கை ஒளிர்விடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 312 views
-
-
"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்" "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம் பூரியரென்று யார் சொன்னது? பூவையர் என்றால் கேவலமா பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?" "மண்ணில் வளத்தைக் காண்பவனே பெண்ணில் வளமோ ஏராளம்! ஆண்களின் இன்பப் பொருளல்ல கண்கள் அவர்களே வாழ்வில்!" "சிவன்-பார்வதி கதை தெரியாதோ சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ? சினம்கொண்டு அவள் எழுந்தால் சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்
-
- 0 replies
- 1.8k views
-
-
"பனியில் நனைந்த சூரியன்" "பனியில் நனைந்த சூரியன் தெரிவதில்லை பணியில் நேர்மை காட்டியவன் வாழ்ந்ததில்லை குனிந்த இனம் என்றும் பிழைத்ததில்லை இனித்த பலகாரம் ஆரோக்கியம் தருவதில்லை!" "நனைந்து நடுங்கும் குளிரில் உடல் கனைத்து அதிர்க்கும் பொங்கு கடல் அனைத்து உயிர்களும் விரும்புவது கூடல் தினைப் புனம் காப்பது மடவரல்!" "சூரியன் உதிப்பது உலகம் வாழ நரி ஊளையிடுவது இரவில் மட்டுமே திரி எரிவது வெளிச்சம் கொடுக்க அறிந்தால் இவை சமூக நீதியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கனைத்து = ஒலித்து அதிர்க்கும் = அதிரும்
-
- 0 replies
- 456 views
-
-
உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது…
-
- 0 replies
- 980 views
-
-
'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups…
-
- 0 replies
- 128 views
-
-
தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே சற்றுப் பொறு விரிகுடா வங்கத்தை விவாகரத்துப் பண்ணிவிட்டு காவிரித் தோழியைக் கட்டித்தழுவக் கங்கை வருகிறாள். எண்ணி ஓர் ஐம்பது ஆண்டுகள்தான். இப்போதே இமயத்திலிருந்து வரும் பனிக்கட்டிகள் எண்ணக் கனவுகளில், எங்கள் உச்சிகளைக் குளிர்விக்கின்றன. எம் கனவில் வங்கத்தைப் பிரியும் கங்கை வளம்தனைக் கொழித்து நிற்க சிங்க மராட்டியத் தலைமை வந்து ‘‘சிஸ்டம் சரியில்லை தீர்த்து வைக்கிறேன் வையத் தலைமை கொள்ள வந்து நிற்கிறேன்‘‘ என்று கவிதை பாடுகிறது. தந்தங்களைப் பிடுங்கிப் பரிசளிக்க சட்டமில்லை! அதனாலென்ன? காவிரி வெற்றிலையைப் பரிசளிப்போம். எப்படியோ மாறிச் சுழித்து பாரதியே நீ கண்ட கனவு நனவாகப் போகிற…
-
- 0 replies
- 1.2k views
-
-
"இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லா…
-
- 0 replies
- 619 views
-
-
காந்தியும் கனவுகளும் காந்தியை ஒரு நாள் கனவில் கண்டேன் எப்படி இருக்கிறது இந்தியா என்றார் நீங்கள் நேசித்த மூன்று குரங்குகள் போல் இல்லை என்றேன் சாதி மதம் என்று சண்டைகள் இல்லையா என்றார் நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் தாத்தா கர்ஜனங்கள் உங்கள் பிள்ளைகள் என்று கடைசி வரை ஒத்துக்க மாட்டானாம் காவிக்குள் புகுந்து இருக்கும் சாமிமார் பிறந்த இடம் போய் பார்த்தீர்களா தாத்தா பத்தி எரிந்தது தாத்தா ஒரு நாள் பாடுபட்டு நீங்கள் கட்டிய ஐக்கியம் செத்து விழுந்தது மானிடம் தாத்தா பாவர் மசூதியை போய் பாருங்கள் ராமர் பிள்ளைகள் உங்கள் சத்திய சோதனையை அந்த புனித மண்ணில் புதைத்து விட்டனர் நேரம் இருந்தால் …
-
- 0 replies
- 435 views
-
-
பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 120 views
-
-
"கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
-
- 0 replies
- 156 views
-
-
புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…
-
- 0 replies
- 1k views
-
-
'காதல் சொல்லத் தூண்டாதோ?' பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'காதல் சொல்லத் தூண்டாதோ?' https://www.facebook.com/group…
-
- 0 replies
- 121 views
-
-
-
- 0 replies
- 795 views
-
-
"தாய்மை" "காதல் உணர்வில் இருவரும் இணைய காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
"எரிச்சலை ஊட்டுகிறது" "எனக்கு மேல்- ஒரு சக்தி உண்டு- அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி உண்டு- அதை நம்புகிறேன் அணங்கு மேல்- ஒரு மோகம் உண்டு - அதை நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு உண்டு- அதை நம்புகிறேன்" "நந்தியை விலத்தி- ஒரு அருள் காட்டியவனை- எனக்குப் புரியவில்லை மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை அந்தியில் வாடும்- ஒரு மலரை மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம் மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை" "வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது கருணைக்கு அகலிகை- ஒ…
-
- 0 replies
- 161 views
-
-
Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…
-
- 0 replies
- 890 views
-