கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"தேடும் கண்களே" "தேடும் கண்களே ஓடும் உலகில் நீயோ நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே! காடும் மலையும் பெரிதல்ல வாடும் கொக்காய் இரவும் பகலும் ஆடும் நெஞ்சே பெரிது! சிறுத்த இடையும் செவ்விதழும் உறுத்தும் பார்வையும் அறுத்து எடுக்குதே என் இதயத்தை! கருத்த கூந்தல் காற்றில் ஆட ஒருத்தி அருகில் வந்தால் குருத்து ஆசை விழிகளில் மலருதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 305 views
-
-
"எதைத் தேடி என்ன பயன் ?" "அறிவைத் தேடி பள்ளிக்கூடம் போனேன் பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன் வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன் எதைத் தேடி என்ன பயன் ?" "அழகை ரசிக்க ஆசை வேண்டாமா? அன்பைப் பகிர நண்பி வேண்டாமா? இன்பம் கொள்ளக் காதல் வேண்டாமா? கணவன் மனைவி உறவு வேண்டாமா?" "உறவு கொள்ள காமம் தேடினேன் உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன் வாழ்வு முழுமையாக மழலை வேண்டினேன் எதைத் தேடி என்ன பயன்?" "வயது போக முதியோர் இல்லம் தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?" …
-
- 0 replies
- 2.2k views
-
-
'கடைக் கண்ணாலே இரசித்தேனே' கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே! இடைவெளி விட்டு நடந்து சென்றாலும் இடையை வருட உன்கை மறக்கவில்லையே! பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே! பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு பொங்கி எழுந்ததே காதலும் காமமும்! பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 148 views
-
-
வாங்கியப் புத்தகங்கள் வசைப்பாடியது வாசல் வழி வந்து என்னை... நித்தம் தேடித் தேடி சேகரித்தது செல்லரித்துப் போகவா? என ஆவேசம் கொண்டு அறைய கை ஓங்கியது அம்மா என்று நான் அழுதிட என்னை அரவணைத்து வாசிப்பின் பூரணத்தை வாய்மொழியில் விளக்கியது என் ஆருயிர் புத்தகம்... ஒருநாளைக்கு ஒருமுறை என்னைப் புரட்டியாவதுபாருங்கள், என்னுள்ளே! ஆழ்ந்து சென்றதும் புதுமுகம் பிறக்கும், புதுஅகம் கிடைக்கும் படிக்காமல் எங்களை அடுக்கி வைப்பதுபெருங்கொடுமை படித்தால் மட்டுமே கிடைக்கும் அவனியில் பெருமை மெத்தப் படித்தோம் என்று பிதற்றும் தற்பெருமை கல்லாதவரிடம் தோற்கும் தினந்தோறும் ஓதும் எளியவன் சொல் எட்டுத்திக்கும் ஒலிக்கும் படிப்பது …
-
- 0 replies
- 644 views
-
-
வாழ்வு! ************* பூப்பதும் உதிர்வதும் பூலோகத்தில்.. அனைத்துக்குமுண்டு உதிர்வதைப் பற்றி ஓரம் கட்டுவோம் பூத்து சிரிப்பதே வாழ்வெனக் கொள்ளுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 717 views
-
-
ஆகாயத்தில் இருந்த நிலவு ஆடிப்பாட வந்ததாம் ஆடிப்பாடி முடித்தப் பின்னே அசந்து போனதாம் வீதியெல்லாம் புகைக்காற்று திணறி மேலே சென்றதாம் மேகமெல்லாம் அனல்காற்று தொப்பென்று கீழே விழுந்ததாம் மயக்கம் தெளிய நட்சத்திரம் தண்ணீர் கொண்டு வந்ததாம் மதி கொஞ்சம் மதி தெளிந்து விண்ணிற்கு சென்றதாம் புகை நமக்கு பகையென்று மறக்கின்றோம் தானே புகையிலையாலே தினந்தோறும் இறக்கின்றறோம் வீணே நற்பழக்கம் வேண்டும் உடல்நலம் பேணவே நம்பிக்கை பரிசளிக்கும் மகிழ்வுடன் வாழவே சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 782 views
-
-
"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!" "அமைதியாய் இருந்து அவன் படித்தான் அடக்கம் கொண்டு தனிமை கண்டான் அறிவு பகிர்வென துணையாய் வந்தாள் அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !" "ஆசிரியர் போல அவனுக்கு இருந்தாள் ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான் ஆகாரம் தீத்துவது போல அவளோ ஆதரவாய் அன்பாய் காதலும் கொடுத்தாள் !" "இன்பம் என்றால் என்ன என்று இலக்கியம் காட்டிய தனி வழியில் இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !" "ஈசன் இவளே இனி என்று ஈடு இல்லா இச்சை கொண்டு ஈயம் உருகியது போல அவனும் ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !" …
-
- 0 replies
- 485 views
-
-
"அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" "அன்பு செலவானால் ஆதரவு வரவு பண்பு திடமானால் மனிதம் உயர்வு துன்பம் இறந்தால் இன்பம் பிறப்பு தென்பு உதித்தால் தோல்வி மறைவு!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பு அல்ல அற்பம் சொற்பம் தேடல் அல்ல அறிவு உணர்ந்த பாசம் அதுவே!" "பருவம் மலர்ந்தால் காதல் நாடும் படுத்து கிடந்தால் பரிவு தேடும் பரிவு காதல் இரண்டும் அன்பே பலபல வடிவில் எல்லாம் பாசமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 487 views
-
-
என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …
-
- 0 replies
- 1k views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் “மாருதி”அவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு! படம் சொல்லும் கவிதை..! ********************** கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே மிஞ்சாத இனிமையின் கொடியிடையே! கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே கருமேகச் சுருள் தந்த காதோர முடியே காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே! கரைதொட்டு பின் திரும்பும் கனிவான அலைபோல்-கால் தொடை பட்டு மேல்படரும் கரை போட்ட உடையே! கலகலக்கும்…
-
- 5 replies
- 3.4k views
-
-
கடவுள் நடுச்சபை தன்னிலே உடுக்கை இழந்தவள் - இருகை எடுத்தே அழைத்தாலன்றி இடுக்கண் களையேன் - என்று வேடிக்கை பார்த்திருந்த நீரெல்லாம் என்ன கடவுள்...! கர்ணனின் கொடையையே அவன் வினையாக்கி அவன் வரங்களையே சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த நீரெல்லாம் என்ன கடவுள்...! துரோணரை வீழ்த்திடப் பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும் ஒரு பக்கச் சார்புடையீர் இப்படி உம் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறதே நீரெல்லாம் என்ன கடவுள்...! அட..... நான் …
-
- 0 replies
- 658 views
- 1 follower
-
-
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…
-
- 0 replies
- 276 views
-
-
வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By…
-
-
- 2 replies
- 507 views
- 1 follower
-
-
இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட…
-
-
- 1 reply
- 127 views
-
-
கொரோனா இப்போ கொஞ்சம் குறைஞ்சா போல கொல்லாது என்ற துணிவு வந்தா போல சோசல் மூமென்ட் என்று சும்மா ஒரு கதை விட்டிட்டு திரும்பவும் இப்போ தொடங்கியாச்சு ஆட்டமும் கூட்டமும் நாளும் பொழுதும் நல்லா நடக்குது வொட்க்கா அடி வெள்ளி சனி வந்தால் காணும் விடியவே கரிச்சு பொரிச்சு கடிக்க இரண்டு ரேஸ்ருக்கு என்று காரமாய் இறைச்சி பிரட்டி மனுசி கமலம் கூட கண்டிராம காலை விடிய இரண்டு போத்தல் எடுத்து காட்டாமல் ஒளிச்சு வச்சு விடிய விடிய நடக்குது கூத்து இன்னும் சிலர் தனிய இருந்து அடிச்சுப் போட்டு தண்ணி கொஞ்சம் தலைக்கு ஏற டெலிபோன எடுத்து வச்சு கதை வேற விடுவான்கள் ஆயிரம் புலி சிங்கத்தை அடக…
-
- 2 replies
- 444 views
-
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 900 views
-
-
இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
-
- 0 replies
- 1.2k views
-
-
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 276 views
-
-
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலு…
-
- 0 replies
- 708 views
- 1 follower
-
-
நிலம் எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .
-
- 13 replies
- 1.6k views
-
-
பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.
-
- 0 replies
- 1.3k views
-
-
கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
-
- 0 replies
- 1.2k views
-
-
"பெண் மனம்" "பெண் மனம் நிலாவரை கிணறோ கண் ஜாலத்தால் மயக்கும் மந்திரவாதியோ மண்ணின் பெருமையின் கலங்கரை விளக்கோ பண்பாட்டின் கலைவடிவம் இவளின் நாட்டியமோ?" "ஆடவள் உள்ளம் ஆடவனின் தடாகமோ அடக்கம் நிறைந்த அழகு மடந்தையோ அடங்கா மனிதனையும் அன்பில் அடக்குவாளோ திடம்பட காதல் கொடுப்பதே பெண்மனமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 666 views
-
-
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகில…
-
-
- 3 replies
- 1.6k views
-
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…
-
-
- 10 replies
- 891 views
- 1 follower
-