Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.

  2. பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள…

  3. கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரை‌யை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா

  4. நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…

    • 0 replies
    • 1.7k views
  5. "காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இரு…

  6. Started by Kaviarasu,

    பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

    • 0 replies
    • 1.2k views
  7. "மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" …

  8. "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று....!" "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று ஏற்றதை எடுத்து மக்களுக்கு வழங்கு மற்றதை தவிர்த்து தூக்கி எறிந்து சுற்றத்தை மதித்து நட்பை வளர்த்து குற்றத்தைக் கண்டால் நீதி நிறுத்தி மாற்றத்தை வேண்டி நடந்து செல்!" அறிவு கொண்ட கொள்கை வழியில் அலசி ஆராந்து முடிவு எடுத்து அன்பு பாயும் மக்களையும் சேர்த்து அச்சம் இல்லா சமூகம் அமைத்து அடிமை ஒழித்த வரலாற்றை தனதாக்கி அக்கினிப் பிழம்பாய் எழுந்தால் என்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. மண்ணில் விழுந்த மழையாய் உன்னில் கலந்தேன் ஜீவநதியாய்... சரவிபி ரோசிசந்திரா

  10. “ஆனந்தம் ஆனந்தமே” "புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே! பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே! உருகி பேசி நெஞ்சில் சாய்ந்து வருடி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே! பருத்த மார்பும் சிறுத்த இடையும் கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே!" "பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில் உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே! திரும்பி பார்த்து வெட்க்கப் ப…

  11. "மஞ்சள் ரோசா மனதை இழுக்குது!" "இரத்தம் சிந்த வைக்கும் முட்களே இரகசியமாக வருடும் மென் இதழ்களே இதழ்கள் நடுவே மஞ்சள் மகரந்தங்களே இத்தனையும் கொண்ட அழகு ரோசாவே!" "மாசி தரும் காதல் மாதமே மாதர் சூடும் ரோசாவின் வாசனையே மாட்சிமை பொருந்திய காதலர் சிறப்பே மாதவி - கோவலன் போற்றிய காதலே " "காதல் கடவுள் மன்மத அழகனே காம தேவனின் இனிய ரதியே காதல் பெருமை ரோமியோ ஜூலியட்டே காதோரம் சொன்ன காதல் மொழியே!" "ரோசா சிவப்பு சொல்லுது - காதலிக்கிறேன் ரோசா மஞ்சள் சொல்லுது - மகிழ்கிறேன் ரோசா இளஞ்சிவப்பு சொல்லுது - விரும்புகிறேன் ரோசா செம்மஞ்சள…

  12. வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரு…

  13. தேங்காய்ச் சொட்டு!🌴 ******************🌴 பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம் பார்க்க இங்கு யாருமில்லை. பாராளுமண்ற உணவுக்காக-பலகோடி ஒதுக்குதல் நியாயமில்லை. அடுப்பு எரித்து எத்தனை நாட்கள் அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள் உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள் ஊருக்கு வெளியில் போனதில்லை. அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்த அழகான தென்னைமரங்களிவை இப்புவிதன்னில் எம்மைக்காக்கும் இதயம் நிரம்பிய வரங்களிவை. அரசை நம்பி உணவுக்கு அலைந்தால் ஆயுள் எம்மிடம் மிஞ்சாது அனைவரும் 🌴🥦மரங்கள் நட்டு வளர்த்தால் அகிலத்தில் பஞ்சம் எமக்கேது. அன்புடன் -பசுவூர்க்கோபி.

  14. "நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... " "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு வாசம்தாரும் மல்லிகையும் வாடிப்போகுது தேசம்சுற்றும் மாமா நெருங்கிநிண்ணு பேசாயோ பாசம்ஒன்றும் உன் இதயத்தில் இல்லையோ மோசம்இல்லா காதலை வீறாப்பின்றி சொல்லாயோ?" 'கஞ்சி குடிக்கையிலே நினைப்பெல்லாம் நீயய்யா கொஞ்சிக் குலாவ மனதெல்லாம் ஏங்குதய்யா வஞ்சகம் வேண்டாம் இறுமாப்பை நிறுத்தய்யா செஞ்சதையும் சென்சிபுட்டு விலகியது ஏனய்யா மஞ்சள் புடவையில் மணிக்கணக்காய் காத்திருக்கேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. 'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சு…

  17. மீன்பாடும் தேன்நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் . வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். . காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள…

    • 0 replies
    • 879 views
  18. "அலையாடும் அழகு" "அலையாடும் அழகு குமரியின் வனப்பே விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே! உலை வைக்கும் மங்கையின் கண்ணே அலை எடுத்து எவரையும் மயக்குமே!" "சேலைத் தாவணியில் மனதைக் கவருதே மாலை அணிந்த அணங்கின் வடிவமே! சோலை நடுவில் எழில் பொழியுதே கலை மகளின் அன்புத் தோற்றமே!" "தலை முடி தோளை வருடவே சிலை போல அழகாய் நிற்கிறாளே! வாலைப் பருவம் தாண்டிய தருணியே தலைவனைக் காண ஏக்கம் எனோ?" "நிலை தடுமாற்றம் தரும் தையலே குலைந்து வீழ்த்தும் அணங்கும் நீயோ! ஓலை மடலில் எழுதும் கவிதையோ வலையில் சிக்கா மானும் நீயோ!" …

  19. "மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.

  21. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நி…

  22. "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.