Kaviarasu

பிரிவு

Recommended Posts

sadhguru-isha-wisdom-article-image-illus

பிரிவுகள் வலியை கொடுத்தாலும் ,

அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து.

தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் 
பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி

( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.   நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,577 ஆக உயர்ந் துள்ளது. இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். 275 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாகும்.   https://www.hindutamil.in/news/cinema/bollywood/548102-rajini-amitabh-acting-in-a-short-film-on-coronavirus.html
    • மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்     மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு சிகிச்சை தரும் டாக்டருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரியவந்ததால் தானும் தனித்திருக்க வேண்டிய நிலைக்கு மெர்க்கெல் ஆளானது ஐரோப்பியத் தலைவர்களை வெகுவாகவே கவலையடையச் செய்திருக்கிறது. எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முடிந்த உதவிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் மெர்க்கெல். வனங்களை எப்படிக் காக்கிறார்கள்? கரோனா காரணமாக நாடே முடங்கிவிட்ட நிலையில் காடுகளுக்கு என்ன காவல் என்று பலரும் நினைக்கலாம். இப்போதுதான் காவல் அவசியமாகிறது. வேட்டையாடிகள், விலங்கு வியாபாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், வன வளங்களைத் திருட நினைப்போர், காடுகளில் பொழுதுபோக்க நினைப்போர் ஆகியோரைத் தடுப்பது கூடுதல் பொறுப்பாகிறது. இந்திய வனத் துறையில் முழு நேரப் பணியில் உள்ளவர்களுடன் அன்றாடக் கூலிக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளப்படுகிறவர்களும் உண்டு. சமூக இடைவெளி காரணமாக அவர்களில் பலர் வேலைக்கு வர மாட்டார்கள். எஞ்சிய வன ஊழியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அவரவர் இடங்களுக்கே சென்று வழங்குவது சவாலான வேலை. செயற்கைக்கோள்கள், ஆங்காங்கே காடுகளில் பொருத்தப்படும் கேமராக்கள், ஊழியர்களுக்குத் தரப்படும் தகவல் தொடர்புச் சாதனங்களின் உதவியுடன்தான் கண்காணிக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் சுமார் 21.67% காடுகள். இதில் அரிய விலங்குகளுக்குக் காப்புக்காடுகள் உண்டு. நகரங்களின் எந்த வசதிகளும் இல்லாத, பெரும் சவாலான சூழலிலேயே வனத் துறையினர் காடுகளைக் காவல்காக்கின்றனர். ஆப்பிரிக்காவின் நடமாடும் பரிசோதனை நிலையங்கள் கரோனாவால் அமெரிக்காவே திண்டாடும்போது ஆப்பிரிக்கா எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது. கடுமையாகப் போராடுகிறது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ‘தொற்றுநோய்க்கு அதிகம் பேர் பலியாகிவிடக் கூடாது’ என்ற அக்கறையோடு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் கவனிக்கின்றன. அன்றாடம் 30,000 பேரைப் பரிசோதிக்க மட்டுமே வசதியுள்ள நிலையில், 67 நடமாடும் சோதனை நிலையங்கள் வழியே பரவலான பரிசோதனைக்கு அரசு முனைவது நல்ல முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. https://www.hindutamil.in/news/opinion/columns/548091-europe-waiting-for-angela-merkel.html    
    • நிச்சயமாக  நாம் தான் எமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் சசிவர்னம். எம்மிடையே  மட்டுமல்ல உலகம் முழுவதும் மூட நம்பிக்கைகள் இருந்தன. சுவிற்சரலாந்தில் அவர்களது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகள்  பற்றி சுவிஸ் மக்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். தமது முன்னோரின் மூடப்பழங்கங்களைப் பற்றி எனக்கு சொல்வதில்  அவர்கள் ஈகோ பார்ககவில்லை. இங்கு பாடசாலைகளிலேயே அவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக எவை எல்லாம்  புனையப்பட்ட புராணங்கள் எவையெல்லாம் வரலாறுகள் என்று  படிப்பிற்கிறார்கள். தமது முன்னோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டவை என்பதற்காக அவற்றிற்கு வக்காலத்து வாங்க சகட்டு மேனிக்கு அறிவியல்  விளக்கம் கொடுக்க அவர்கள் முனையவில்லை. அவை அக்காலத்து நம்பிக்கைகள் மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளனர். அதற்காக அவர்கள் முன்னோர்களை அவமதிப்பதக அர்ததம் இல்லை. இங்கு மட்டுமல்ல அனேகமாக வளர்ச்சி  அடைந்த எல்லா நாடுகளிலும் இதே நிலை தான் உள்ளது.  தற்போது பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட 5 ஜி தொடர்பிலும் பெரும்பான்மை பிரித்தானியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே பார்கக முடிகிறது. அப்படி இதற்கு வக்காலத்து   வாங்கினால்  அவன் கிறுக்கனாக இருப்பான். ஒரு தமிழனாக பிரித்தானியரின் வலைத்தளங்களுக்கு சென்று இவற்றை கண்டிக்க உங்களால் முடியும். பிரித்தானிய மக்கள் உங்களை நீ யார் எமது பழக்கங்களை கண்டிக்க  என்று கேட்கப்பவதில்லை.  ஆகவே எம்மிடையே எமது முன்னோர களால் கைக்கொள்ளப்பட்ட முட நம்பிக்கைகளை நாம் தான் களைய வேண்டும்.  எமது காலத்தில் அப்படி நம்பிவிட்டோம். இப்போதைய காலத்திற்கு அவை பொருத்தமானவை அல்ல . அதை விட்டு விடுங்கள் என்று முன்னோர் இனி வந்து எமக்குச் சொல்ல முடியாது. எமது அறிவை உபயோகித்து நாம் தான் அதைச் செய்ய வேண்டும். எனவே அவ்வாறு நீங்கள் கூறிய எமது ஊறிய பழைய மட்டைகளைப்பற்றி நாம் தான் பேச வேண்டும். ஒவ்வொருவர் வீடும் அவரவருனாலேயே சுத்தம் செய்யப்படல் வேண்டும். அதுவே எமக்கு பெருமை. 
    • குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல்     நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் துறைமுக தங்கு தளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் அறிந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரைதிரும்பின. அதே நேரம் குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதமே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைதிரும்பியவண்ணம் உள்ளன. தற்போது தேங்காய்பட்டணம், மற்றும் கேரள கடல் பகுதிகளில் குமரி விசைப்படகுகள் கரைசேர்ந்த வண்ணம் உள்ளன. மேலும் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை நோக்கியும் விசைப்படகுகள் கரைதிரும்பி வருகின்றன. பல வாரங்களாக கடலிலே தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டதால் கரைதிரும்பும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனையை அந்தந்த மீன்பிடி துறைமுகங்களிலே நடத்த வேண்டும். இதைப்போல் கரைதிரும்பும் விசைப்படகுகளில் உள்ள மீன்களை ஏலமிட்டு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அல்லது அவற்றை பதப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மற்றும் மீன்வளத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி கூறுகையில்; கடந்த பிப்ரவரி மாதம் விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக் சென்றமீனவர்களின் ஒரு பகுதியினர் கரைதிரும்பி வருகின்றனர். கரோனா பாதிப்பு தொடங்கி வெகுநாட்களக்கு பின்பு கரைதிரும்புவதால் உடனுக்குடன் துறைமுக தளத்திலேயே அர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். புனிதவெள்ளி, மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வழக்கமாக ஆழ்கடல் தொழில் முடிந்து கரைதிரும்புவது வழக்கம். இதைப்போல் தொழில் முடிந்து 500 விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்றனர். இதில் ரூ.12 கோடி மதிப்பிலான மீன்களுடன் 100 விசைப்படகுகள் குமரிக் கடலின் மேற்கு கரையோரும் சேர்ந்துள்ளனர். மொத்தம் ரூ.70 கோடி மதிப்பிலான மீன்கள் விசைப்படகு மூலம் கரைசேரவுள்ளது. இவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். தற்போதைய சூழலில் விற்பனை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகாத மீன்களைப் பதப்படுத்திப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.   https://www.hindutamil.in/news/tamilnadu/548119-kanyakumari-500-fishermen-return-from-deep-sea-2.html  
    • ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை   ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார். பதிவு: ஏப்ரல் 06,  2020 10:08 AM மாஸ்கோ   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.    ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.     யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.   இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06100842/Five-shot-dead-in-Russia-for-talking-loudly.vpf