கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
"அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" "அன்பு செலவானால் ஆதரவு வரவு பண்பு திடமானால் மனிதம் உயர்வு துன்பம் இறந்தால் இன்பம் பிறப்பு தென்பு உதித்தால் தோல்வி மறைவு!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பு அல்ல அற்பம் சொற்பம் தேடல் அல்ல அறிவு உணர்ந்த பாசம் அதுவே!" "பருவம் மலர்ந்தால் காதல் நாடும் படுத்து கிடந்தால் பரிவு தேடும் பரிவு காதல் இரண்டும் அன்பே பலபல வடிவில் எல்லாம் பாசமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 488 views
-
-
என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …
-
- 0 replies
- 1k views
-
-
கடவுள் நடுச்சபை தன்னிலே உடுக்கை இழந்தவள் - இருகை எடுத்தே அழைத்தாலன்றி இடுக்கண் களையேன் - என்று வேடிக்கை பார்த்திருந்த நீரெல்லாம் என்ன கடவுள்...! கர்ணனின் கொடையையே அவன் வினையாக்கி அவன் வரங்களையே சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த நீரெல்லாம் என்ன கடவுள்...! துரோணரை வீழ்த்திடப் பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும் ஒரு பக்கச் சார்புடையீர் இப்படி உம் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறதே நீரெல்லாம் என்ன கடவுள்...! அட..... நான் …
-
- 0 replies
- 658 views
- 1 follower
-
-
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…
-
- 0 replies
- 277 views
-
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 900 views
-
-
இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
-
- 0 replies
- 1.2k views
-
-
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 276 views
-
-
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலு…
-
- 0 replies
- 711 views
- 1 follower
-
-
பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.
-
- 0 replies
- 1.3k views
-
-
கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
-
- 0 replies
- 1.2k views
-
-
"பெண் மனம்" "பெண் மனம் நிலாவரை கிணறோ கண் ஜாலத்தால் மயக்கும் மந்திரவாதியோ மண்ணின் பெருமையின் கலங்கரை விளக்கோ பண்பாட்டின் கலைவடிவம் இவளின் நாட்டியமோ?" "ஆடவள் உள்ளம் ஆடவனின் தடாகமோ அடக்கம் நிறைந்த அழகு மடந்தையோ அடங்கா மனிதனையும் அன்பில் அடக்குவாளோ திடம்பட காதல் கொடுப்பதே பெண்மனமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 666 views
-
-
எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 986 views
-
-
இயற்கையின் இனிமையைத் தொலைத்து மழலையின் சிரிப்பை மறந்து நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும் இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில் சுவரில்லா சித்திரமாய் நரக வாசம் செய்யும் நகரவாசிகளே !!!
-
- 0 replies
- 1.4k views
-
-
'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை... மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது, சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது. இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா? அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா? Every day, something happens, Yet nothing truly makes sense… Though it rains, my heart stays dry, Though the sun rises, my shadow only grows. Has the scent of Sri Lanka faded away? Or have I simply lost myself? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' https://w…
-
- 0 replies
- 129 views
-
-
"மூன்று கவிதைகள் / 13" 'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே' பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே! கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே! துள்ளும் ஆசை இதயத்தில் எழ சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க கள்ளும் தராத மயக்கம் வர உள்ளும் புறமும் நீயே தோன்ற அள்ளும் ஆசை அலையாய் பாயுதே? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- ''புகைப்படக் கவிதை'' "பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான் மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்! வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான் வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…
-
- 0 replies
- 121 views
-
-
மனிதநேயம் பேசும் மகாத்மாக்கள் இங்கு அதிகம்! மதவெறியை பிரசவிக்கும் ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்! மக்களாட்சியைப் பேசும் மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்! கவர்ச்சி காட்டி பணமீட்டும் கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்! பெண்களைத் துரத்தும் நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்! அன்னையின் கருவறையில் நசுக்கப்படும் பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்! பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும் கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்! ஏழையின் செந்நீரை உறிஞ்சும் இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்! இவையனைத்தும் அழிய வேண்டிய அவலங்களே !!!
-
- 0 replies
- 1.5k views
-
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிக…
-
- 0 replies
- 900 views
-
-
வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 806 views
-
-
"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்" "வாலிப வயதில் தவற விட்டதை வானம் பார்த்து ஏங்கி துடித்ததை வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன் வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா வாழா என் வாழ்வை வாழவே!" "வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து கண்டும் காணாத அழகை ரசித்து குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க மண்ணின் வாழ்வு முழுமை பெற மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]
-
- 0 replies
- 414 views
-
-
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 995 views
-
-
“சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025) “சிவப்புத் தீப நாளில்” (நவம்பர் 27, 2025) சிவப்புத் தீப நாளில் கல்லில் செதுக்காத பெயர்களையும் காற்று கிசுகிசுத்து செல்கிறது! சிதறிய தேசத்தின் நினைவுகளை நடுங்கும் எம் இதயங்களில் மீட்டுப் பார்க்கும் நாளிது! தோட்டாக்களுக்கு இடையில் புத்தகங்கள் ஏந்தி விடியலுக்குப் பதிலாக சாம்பல் ஆகிய குழந்தைகளை நாம் நினைவில் கொள்கிறோம்! கண்ணீரால் உலகையே இணைத்த தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்கள் புலம்பல்களாக மாறின வரலாற்றை நாம் நினைவில் கொள்கிறோம்! அநீதியின் புயல்களுக்கு எதிராக எழுந்து பனைமரம் போன்று உறுதியாக நின்ற தந்தையரை நாம் நினைவில் கொள்கிறோம்! வகுப்பறைகள் வயல்களில் எதிர்காலக் கனவுகண்டு சோதனைச்சாவடிகள…
-
- 0 replies
- 160 views
-
-
"என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000] "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !" "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட நேரங்கள் எல்லாம் நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் ! நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி…
-
- 0 replies
- 387 views
-
-
"தமிழ்மொழிப் பற்று" [அந்தாதிக் கவிதை] "தமிழ்மொழிப் பற்று ஓங்கட்டும் வளரட்டும் வளரும் குழந்தைகள் தமிழில் கதைக்கட்டும் கதைக்கும் ஒவ்வொன்றும் உண்மையைப் பேசட்டும் பேசும் போது நிதானம் இருக்கட்டும்!" "இருக்கும் நிலையை ஆராய்ந்து செயல்படட்டும் செயல்படும் அத்தனையும் நன்மை கொடுக்கட்டும் கொடுக்கும் இதயம் எவருக்கும் வேண்டும் வேண்டும் பொழுது எல்லோரையும் நினைக்கட்டும்!" "நினைக்கும் எதுவும் உண்மையைச் சொல்லட்டும் சொல்லும் செயலும் ஒன்றாய் மலரட்டும் மலரும் ஒற்றுமை இணைக்கட்டும் எல்லோரையும் எல்லோருக்கும் ஓங்கட்டும் தமிழ்மொழிப் பற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 662 views
-
-
நீயும் நானும் சமத்துவமாய் வாழும் காலம் பிறக்கலையே நீதி இல்லா பூமியிலே நின்மதியை காணலையே இரவும் பகலும் இயந்திரமாய் இன்னும் துயர் முடியலையே அடிமை வாழ்வு தொலையலையே எங்கள் பசி தீரலையே பா.உதயன்
-
- 0 replies
- 465 views
-
-
'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா நெல்லுச் சோறு நிறைவு கொள்ளும் நெல்லுச் சோறு நிலா ஒளியில் நெல்லுச் சோறு !" "அத்தான் அறுவடை செய்த நெல்லு அத்தை வேகவைத்த கூட்டாஞ் சோறு அழகாய் பாத்தியால் சுமந்த சோறு அன்பாய் இருவரும் உண்ணும் சோறு!" "வேப்பமர குச்சியால் பல் விளக்கி வேக தண்ணியில் வாய் கொப்பளித்து வேட்டி தலைப்பில் வாய் தொடைத்து வேங்கை நிழலில் பரிமாறிய சோறு!" "ஓடும் நீரில் கால் நனைத்து பாடும் குயிலின் இன்னிசை ரசித்து சுடும் சோறை தயிரில் பிசைத்து கடும் காற்றில் ஊட்டிய சோறு !" …
-
- 0 replies
- 408 views
-