Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இ…

  2. [போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும்…

  3. "மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…

  4. 'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இள…

  5. "தத்துப் பிள்ளை" இலங்கையின் கிழக்கே; வடதிசையில் வெருகலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே அம்பாறை மாவட்டத்தினையும் மற்றும் மேற்கே பொலன்னறுவை மாவட்டத்தினையும் எல்லைகளாகக் கொண்டமைந்த, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பூர்வீகம் கொண்ட, கிழக்கிலங்கையின் நடு நாயகமாகத் திகழ்கின்ற மீன்பாடும் தேனாடு என வர்ணிககப்படும் மாவட்டம் தான் மட்டக்களப்பாகும். "பால் பெருகும் தேன் பெருகும்; பண்புடைய மன்னவர் செங் கோல் பெருகும் படிய பைங் கூழ் பெருகும் புனல் பரந்து கால் பெருகும் கல்லார்கும் சொல்லாட்சி மிகப் பெருகும் நூல் பெருகும் கிடையார்கு நுவலறங்கள் பெருகுமால்" என அனைத்தும் பெருக்கெடுக்கும் மீன்பாடும் தேனாடு பற்றி, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பெரும…

  6. "வாழும் வரைப் போராடு" நான் அன்று சாதாரண வகுப்பு ஏழை மாணவி. என் அப்பா அம்மா கூலி வேலை செய்கிறவர்கள். அவர்களின் உழைப்பில் நானும் தம்பியும் எதோ சமாளித்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த ஒரு கிராம பாடசாலையில் கல்வி கற்றோம். நடந்து தான் பாடசாலை போவது. பாடசாலை நேரத்தின் பின் தனியார் கல்வி, விளையாட்டு அப்படி இப்படி என்றும் ஒன்றும் எமக்கு இல்லை. என் வகுப்பு வாத்தியார் மிக அன்பாக என்னுடன் பழகுவார், நானும் ஒருவேளை என் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அப்படி பழகுகிறார் என்று அந்த அறியாத பருவத்தில் எடுத்துக்கொண்டேன். அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவர் இளம் கல்யாணம் ஆகாத ஆசிரியர். இது அவரின் முதல் நியமனம். அவர் பாடசாலைக்கு அருகில் வாடகை வீடு ஒன்றில் சக…

  7. "உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் …

  8. "ஒரு தாயின் கண்ணீர்" [உண்மைக்கதை] தமிழருக்கு எதிராக அரசின் பார்வை இருந்த காலம் அது. தமிழர் செய்த குற்றம், படிப்பில் கூட கவனம் செலுத்தி, தமது விகிதாசாரத்துக்கும் மிக அதிகமாக, தேர்வில் சித்திபெற்று பல்கலைக்கழகம் நுழைந்ததும், அதனால் திறமையின் அடிப்படையில் கூடுதலான அரச உத்தியோகம் பெற்றதும் தான். இதற்கு மாற்றுவழி, தமிழர் அல்லாதோரை மற்றும் கிராமப்புறங்களில் வாழும் இளைய தலைமுறையினரை ஊக்கிவிப்பதும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதும் தான் உண்மையான சிறந்த வழியென்றாலும், அரசு தமது சமய தலைவர்களின் மற்றும் தம்மை சூழ்ந்து உள்ள அரசியல் தலைவர்களின் இனத்துவேச ஆலோசனையை கேட்டு, தரப்படுத்தல் என்ற கொடிய முறையை அறிமுகப் படுத்தியது. உண்மையில் அரசின் இந்த நடவடிக்கைதான், தமிழர்களி…

  9. "என்ன தவம் செய்தேனோ...!" நான் சாதாரண வகுப்பு மாணவன். நான் எங்கள் சுண்ணாம்பு கல் வீட்டின் திறந்த விறாந்தையில் உள்ள குந்தில் இன்னும் படுத்து இருக்கிறேன். நேரம் காலை ஆறு மணி. கதிரவன் எட்டிப்பார்க்க தொடங்குகிறான். இன்னும் அம்மா தேநீர் போட அடுப்படிக்கு போகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அது தான் அம்மா குளித்து, இப்ப எம் முற்றத்தில் உள்ள துளசியை வளம் வந்து பூசை செய்து கொண்டு இருக்கிறார். நான் படுத்தபடியே, தலைமாட்டில் நான் வைத்திருந்த பாக்கெட் ரேடியோவை இலங்கை, இந்தியா காலை செய்திகள் அறிய திருப்பினேன். "பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடங்களில் ஒன்று இன்று இந்தியா. சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது. அவ்வ…

  10. "கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது…

    • 2 replies
    • 397 views
  11. "அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன் நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்…

  12. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து …

  13. திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வ…

    • 9 replies
    • 958 views
  14. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியி…

  15. அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914‍_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் த…

  16. Started by Kavi arunasalam,

    சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இ…

  17. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் …

  18. மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள். ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்த…

  19. அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம். மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன. நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இரு…

  20. Started by putthan,

    வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன் திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்" "இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே" "எனக்கோ உங்களுக்கோ...." என ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள். " எம் பெருமா…

  21. எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை க…

  22. மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத…

  23. 2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ்…

  24. அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள். என்ன பிரச்சினையென‌ நான் கேட்க ம‌கள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.