Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய…

  2. தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்…

  3. 'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி …

  4. 89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார். அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்…

  5. என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்? Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST] கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது. Also Read களத்தில் குறைந்த வேகம்? வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லா…

  6. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்ப…

  7. 'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா? பட மூலாதாரம்,MKSTALIN/X கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 13 பிப்ரவரி 2026, 10:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் …

  8. 'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பட மூலாதாரம்,Thanya Nathan படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2026, 05:59 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்." 24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே…

  9. இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. "தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் …

  10. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் ; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 02:08 PM இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட…

  11. தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2026 பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர். முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் (Placenta) மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்…

  12. எம்.பி.கமல்ஹாசன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிக…

      • Like
      • Haha
    • 8 replies
    • 756 views
  13. தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம் தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்…

  14. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்! இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐ…

      • Like
    • 2 replies
    • 235 views
  15. 'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2026, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை…

  16. ’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக ப…

  17. 'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன? பட மூலாதாரம்,@TVKHQITWingOffl கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா? தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில்…

  18. துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் - அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,LokBhavanTamilNadu/Facebook படக்குறிப்பு,ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப் படம்) கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 பிப்ரவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்ற…

  19. கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு,…

  20. "சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள் படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?" "கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?" சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை. சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர…

  21. இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண …

  22. காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம். தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதன்…

  23. 'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன? பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 29 ஜனவரி 2026, 03:21 GMT "கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்." மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை. கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்…

  24. '20 ஆண்டு தீரா பகையில் 17 கொலைகள்' - போலீஸ் என்கவுன்டரில் பலியான அழகுராஜா யார்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக, நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத…

  25. 'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,@EPSTamilNadu கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 ஜனவரி 2026, 02:52 GMT தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா? எதிரும் புத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.