தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10247 topics in this forum
-
'கெஜ்ரிவாலைச் சந்தித்தது ஏன்?' - கமல்ஹாசன் விளக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாகக் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசன் சந்தித்துப் பேசினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில்…
-
- 2 replies
- 889 views
-
-
'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா' பெங்களூரு சிறை கைதி சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களை திருப்திபடுத் தும் வகையில், ஜெ., பிறந்த நாள் பேனர்களில், சசிகலா படமின்றி, அச்சிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., பொது செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். இதற்கு, கட்சியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள், ஜெயலலிதாவின் மரணத்துடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசத் துவங்கினர். 'சதி'கலா …
-
- 0 replies
- 531 views
-
-
படத்தின் காப்புரிமை THE INDIA TODAY GROUP தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கொடநாடு கொலை - கொள்ளை குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பதவி விலகி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூறியுள்ளனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?' ARUN SANKAR / Getty கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். #whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே …
-
- 0 replies
- 336 views
-
-
'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இர…
-
- 7 replies
- 1.4k views
-
-
'கோடிக்கணக்கில் பேரம் பேசியது உண்மைதான்' அ.தி.மு.க எம்எல்ஏ ஒப்புதல்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், ஆளுநரிடமும் புகார் அள…
-
- 0 replies
- 409 views
-
-
'கோயம்புத்தூர் வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைத்ததில் எஸ்.பி.வேலுமணி ஊழல்': தொடரும் திமுக - அதிமுக மோதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக - அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது. கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்திற்கான செலவை மாநில அரசும் கோவை மாநகராட்சியும் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. கொரோனா பெருந்தொற…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன. சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள…
-
- 3 replies
- 536 views
-
-
'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை! கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள நிலவர தகவல்களை சொல்லக் கூட, ஆளில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, உறவினர்கள் சந்திக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும், அள…
-
- 0 replies
- 290 views
-
-
'சசிகலா தப்பிக்கவே முடியாது': அடித்துச் சொல்லும் ரூபா! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாகத் தெரிவித்தார். சசிகலா சிறை அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார். இது, கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜ…
-
- 0 replies
- 511 views
-
-
'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!! அ,தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களுக்கும் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையை ஊடகங்களும் இரண்டொரு நாள் வி…
-
- 1 reply
- 796 views
-
-
'சசிகலாவுக்கு எதிரான புகாரில் சமரசம் கிடையாது': டிஐஜி ரூபா உறுதி படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடிஐஜி ரூபா கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா மொட்கில் தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் இன்று டிஐஜி ரூபா கூறுகையில், "பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய…
-
- 1 reply
- 753 views
-
-
'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!' - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா" என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்' என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், …
-
- 9 replies
- 2.1k views
-
-
'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala ’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன்,…
-
- 1 reply
- 650 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாற…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!' -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive " மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப…
-
- 0 replies
- 2.5k views
-
-
'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு "முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். …
-
- 0 replies
- 376 views
-
-
மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார் சாட்டை துரைமுருகன். மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூ-டியூபர் சாட்டை துரைமுருகன். மீண்டும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது கடந்த சில தினங்களுக்கு முன், சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய…
-
- 4 replies
- 810 views
-
-
பட மூலாதாரம்,RAMJI கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது. கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்க…
-
- 1 reply
- 238 views
- 2 followers
-
-
'சாந்தி' திரையரங்கம் இடிக்க முடிவு - நடிகர் பிரபு சென்னையில் உள்ள சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இன்று இந்த செய்தியை உறுதிப்படுத்தினார் நடிகர் பிரபு. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியபோது, சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அங்கு அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. அதில் நவீன தரத்துடன் கூடிய சாந்தி தியேட்டர் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். தினமணி Info: சென்னையின் முதல் ஏ.சி தியேட்டர் 'சாந்தி' என பெருமை பெற்றது!
-
- 5 replies
- 3k views
-
-
'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிக…
-
- 4 replies
- 970 views
-
-
'ஈஷா யோகா மையத்தில் இருக்கும் மகள்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகள்களை மீட்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ்- சத்திய ஜோதி தம்பதியின் மகள்கள் கீதா (34), லதா (31). இவர்களது தந்தை காமராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகள்கள் இரண்டு பேரும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக தனது மகள்கள் இரண்டு பேரையும் சிறை வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி, சென…
-
- 0 replies
- 471 views
-
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலை…
-
-
- 30 replies
- 2.5k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஏப்ரல் 2025, 03:17 GMT இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விம…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-