தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
பாலியல் கொலைகளில் பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர்... திண்டுக்கல் சிறுமி கொலை உணர்த்துவது என்ன? பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், பெண்கள் பற்றி பொதுவெளியில் எழுப்பப்படும் விவாதங்களின் எண்ணிக்கையைவிட, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். சிறுமிகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதும், அதை அவர்கள் வெளியே சொன்னால் குற்றவாளிகளுக்கு ஆபத்து என அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. சிறார் வதைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்கள் பற்றி பொதுவெளியில் எழுப்பப்படும் விவாதங்களின் எண்ணிக்கையைவிட, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். மேலும், …
-
- 1 reply
- 884 views
-
-
தமிழர் நாகரிகத்தின் தொன்மை வெளியாவதைத் தடுக்க சதியா? கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் தாமதமாவது ஏன்? Rajeevan Arasaratnam October 13, 2020 தமிழர் நாகரிகத்தின் தொன்மை வெளியாவதைத் தடுக்க சதியா? கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் தாமதமாவது ஏன்?2020-10-13T18:03:49+05:30அரசியல் களம் FacebookTwitterMore கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் வெளியாவதில் காணப்படும் தாமதத்தைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித்திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 785 views
-
-
`முதல்வர் பதவி மீது OPS க்கு ஆசையில்லை` ''உங்கள் யாரிடமாவது என்னை முதலமைச்சராக்க வேண்டும் என கேட்டுள்ளேனா? என ஓ பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே செயற்குழு கூட்டத்தில் கேட்டார்.அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை’’- அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகரன் பிரத்யேக பேட்டி
-
- 0 replies
- 621 views
-
-
திமுக கூட்டணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் தனிச்சின்னம்?
-
- 2 replies
- 778 views
-
-
சிறப்புக் கட்டுரை: தமிழக வரலாறு; எதிர்ப்புரட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி மின்னம்பலம் ராஜன் குறை அகில இந்திய அண்ணா திமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மிகுந்த பரபரப்புக்கு இடையில் அறிவிக்கப்பட்டிருப்பது அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அவர் ஆதரவாளர்கள் குதூகலித்துக் கொண்டாடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பப்பட்டது. அனைவரையும் தக்கபடி “அனுசரிக்கும்” எடப்பாடியின் போக்கால் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆதரவு அவருக்கு இருந்தும் ஏன் தற்போது முதல்வராக இருக்கும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தாமதம், குழப்பம் என்ற கேள்விதான் அது. அவரை எதிர்ப்பதாகக் கூறப்ப…
-
- 2 replies
- 660 views
-
-
கேம் சேஞ்சர் ரஜினி: மூவர் ஆடும் ஃபிரண்ட்லி மேட்ச்! மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் வரும் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தால்.... ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ, இந்த சட்டமன்றத் தேர்தலின் போக்கை மாற்றிவிடுவார் என்ற கருத்து இப்போது அரசியல் வட்டாரங்களில் பலமாக நம்பப்படுகிறது. இரு கழகங்களின் பலத்தைப் பற்றியும் அவற்றை எதிர்த்து களமாடுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது பற்றியும் ரஜினி சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாகவே பேசினார். மாற்று அரசியல் குறித்து ரஜினி குறிப்பிட்டபோதுதான் திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி பலம் பற்றிக் குறிப்பிட்டார். கொரோனா ஊரடங்கால் ரஜினியின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் மாறிப்போய்விட்ட நிலையில், அண்ணாத்தே ஷூட்டிங்கை முடித்…
-
- 4 replies
- 1.2k views
-
-
மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் க்ளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி தமிழக கேரள எல்லையில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்து வரும் அனாமிகா, மலைவாழ் குழந்தைகளுக்காக 'ஸ்மார்ட் க்ளாஸ்' எனும் வகுப்பறையை தனது இல்லத்தின் அருகே உருவாக்கி ஒரு மாற்றத்துக்கான விதையாக இருக்கும் கூலித் தொழிலாளியின் மகள்
-
- 3 replies
- 633 views
-
-
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைகிறது. இதை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் பொங்கல் வைத்தும், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் கட்டினார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தமிழக அரசு கூடலூர் லோயர்கேம்பில் நினைவு மணிமண்டபமும், முழு உருவ வெண்கலசிலையும் அமைத்துள்ளது. கடந்த 1895-ம் ஆண்டு பென…
-
- 3 replies
- 810 views
-
-
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறார் மோடி?
-
- 0 replies
- 347 views
-
-
தனி சின்னத்தில் போட்டி: வைகோ பேட்டியின் பின்னணி! மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறி…
-
- 1 reply
- 849 views
-
-
2,000 கோடி ரூபாய் சொத்து விவகாரம்:`சசிகலாவுக்கு செக்!’- உற்சாகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கோஷ்டிகள்! ``மறைந்த ஜெயலலிதாவை அட்டாக் பண்ணும் நோக்கில், அவருடைய வாரிசுதாரர்கள் என்கிற அடிப்படையில் நோட்டீஸின் பிரதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.’’ சசிகலாவின் வருகை விவகாரம் தமிழக அரசியலில் கிராஃப் ஏறி, இறங்கி வருகிறது. அக்டோபர் 8-ம் தேதி நிலவரப்படி அவருக்கு இறங்குமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். ``மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு ஏராளமான ரெய்டுகளை நடத்தி, நிறைய ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. அதையெல்லாம் அரசியல்ரீதியாக எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். `சசிகலா விடுதலை’, `பி.ஜே.பி-யுடன் டீல்…
-
- 0 replies
- 819 views
-
-
தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் தமிழ் மொழி உள்ளடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு! தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில்…
-
- 0 replies
- 655 views
-
-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி தூத்துக்குடி கலெக்டர் தகவல் தூத்துக்குடி,இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாட்டில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். முதல்நாள் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முக்கியமானது ஆகும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முதல்- அமைச்சர் பல்வேறு தளர்வுகள் அறிவித்து உள்ளார். அதில் கோவில்…
-
- 0 replies
- 342 views
-
-
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு தஞ்சாவூர்:தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை செயலாற்றி வருகின்றன. அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை க…
-
- 0 replies
- 902 views
-
-
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு சென்னை, அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7 (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார். இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் …
-
- 6 replies
- 981 views
-
-
சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் முறைகேடுகள் செய்தும் நிதி உதவித் தொகையை பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டவை எனவும் கூறுகிறார் இவர். "கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னர், இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரியிடம் சமர்பித்து சான்று வாங்க வேண்டும். பின்னர், விவசாயியின் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறைக்கு அனுப்பி ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். உரிய பரிசோதனைகளுக்கு பின் மாவட்ட வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்படும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை அனைத்தும் இணைய…
-
- 0 replies
- 649 views
-
-
நிதிநிறுவன கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை தாடிக்கொம்பு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனினும், கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். இதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய கையில் மனுக்கள் அடங்கிய கவர் இருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த போது, அந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே …
-
- 0 replies
- 692 views
-
-
நாளை மறுதினம் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து அ.தி.மு.க.வின் சில மூத்த அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலை…
-
- 2 replies
- 684 views
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Tinnakorn Jorruang படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் …
-
- 6 replies
- 1.2k views
-
-
உபி பெண்ணுக்கு நீதி கேட்டு பேரணி: கனிமொழி கைது! மின்னம்பலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 19 வயது பெண்ணுக்கு நீதி கேட்டு, சென்னையில் திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுமட்டுமின்றி பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் போலீசாரே தகனம் செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு அப்பெண் வன்கொடுமையே செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்ததாக போலீசார் கூறு…
-
- 1 reply
- 915 views
-
-
தமிழக மாணவர்களுக்கு இந்தியில் புதிர் போட்டி! மின்னம்பலம் தமிழக மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புதிர்போட்டி நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் புதிர் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தமிழக அரசு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியது. அதில், “இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி இரவு 12 மணி வரை போட்டி நடக்கிறது. 3 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் போட்டி நடைபெறும். காந்…
-
- 0 replies
- 559 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ், கடந்த 25ஆம் திகதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் அண்ணா அறிவாலய தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கும் அண்ணா அறிவாலய நிர்வாகிகள் 7 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/மு-க-ஸ்டாலினு…
-
- 3 replies
- 680 views
- 1 follower
-
-
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழை வளர்த்த இலட்சணம் இது தான்.!
-
- 2 replies
- 1.2k views
-
-
திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு! மின்னம்பலம் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீத…
-
- 0 replies
- 660 views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: முதன்முறையாக வெளிவந்த வரலாற்று உண்மைகள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக் கொண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு அமைவாக கடந்த ஓராண்டாக இப்பணி நடந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 687 views
-