தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
கடந்த 2 வருடமாக இழந்த மருத்துவப் படிப்பை மீண்டும் பெறுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலைப் போராட்டாத்தில் நேற்று இறங்கி மாணவர்கள் போராடி உள்ளனர் . டிடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன் சுமார் 75 மாணவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். அங்குவந்த காவல் துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக அம் மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் சென்று மின்ட்யில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து மாணவிகளை துன்புறுத்தியதாக தெரிவித்தள்ளனர். இந்த செயலுக்கு காவல்துறையை கண்டித்து மாணவர்களின் நூதன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதன் போது தமிழக அரசுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் ஒன்றும் கொடுத்துள்ளனர்:- எங்களின் மருத்துவப் படிப்பு தொடர வழிவக…
-
- 0 replies
- 359 views
-
-
காவல்நிலையத்தைக் கண்டு அஞ்சும் போலீஸ்காரர்கள்! | Police men does rituals to enter police station M.Ganesh தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை. இப்பகுதிக்கு எனப் புதிதாக காவல்நிலையம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டு அதில் குடியேறினார்கள் காவலர்கள். ஆனால், பெரும்பாலும் யாருமே ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. என்ன காரணம் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "என்ன ஆச்சு... ஏது ஆச்சுனு தெரியல... அந்த போலீஸ் ஸ்டேஷன் எப்போ திறக்கப்பட்டதோ அது முதல் தொடர்ந்து எங்கள் தரப்பில் இழப்பைச் சந்தித்தோம். பல்வேறு காரணங்களில் எங்கள் உடன் பணியாற்றிய மூவரை நாங்கள் இழந்தோம். இது எல்லாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகுதான…
-
- 1 reply
- 626 views
-
-
காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை! சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது எம்ஜிஆர் நாளிதழில் கடந்த சில வாரங்களாகவே பாஜகவே திட்டி கவிதை எழுதி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் நமது எம்ஜிஆரில் இன்று எழுதப்பட்டுள்ள கவிதை பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்தத…
-
- 2 replies
- 2k views
-
-
காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணி…
-
- 0 replies
- 842 views
-
-
காவிரி உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து தருமபுரி மாவட்டத்துக்கு திருப்பிவிடுங்கள்: டிரென்ட் ஆகும் விவசாயிகள் கோரிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2022 காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரசார நடைப…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
காவிரி எங்கே? - காத்திருந்த விவசாயிகள் ஏக்கம்! கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு வரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உடனடியாக திறந்துவி…
-
- 1 reply
- 589 views
-
-
காவிரி என்பது வெறும் நீரல்ல! காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள். வயிற்றுக்கு மட்டுமே சோறிட்…
-
- 1 reply
- 1k views
-
-
காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? ஓர் அதிர்ச்சிப் பயணம் (வீடியோ தொடர்) #Cauvery #Hogenakkal காவிரிதான் நம் வாழ்வாதாரம்... காவிரிதான் நம் வாழ்வு... இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். இதில், காவிரி வறட்சிப்பற்றிப் பேசி இருப்போம். இதில், கடைசிக் காட்சியில், '‘காவிரி வறண்டுருச்சு.. இப்ப என்ன செய்யப்போறோம்னு..’' கேள்வி எழுப்பி முடிக்கிறபோது, கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வதுபோலக் காட்சிவரும். அது, திட்டமிட்டுப் படம்பிடித்தது இல்லை. ஆனால், அந்தக் காட்சி ஒரு குறியீடாக... மாபெரும் இடம்பெயர்வைக் குறிப்பிடுவது மாதிரி அமைந்தது. பறவைகள் சுலபமாக இடம்பெயரலாம்... ஏனெனில், அவைகள் விதைப்பதும் இல்லை... அறுப்பதும் இல்லை…
-
- 4 replies
- 1.4k views
-
-
காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்த…
-
- 0 replies
- 510 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை (டெல்டா) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவ…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது. காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும். காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி த…
-
- 0 replies
- 650 views
-
-
காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அமர்வு விசாரித்து வருகிறது. முதல்வர் சித்தர…
-
- 0 replies
- 680 views
-
-
30th May 2013 இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழகமும் கர்நாடகமும் காவிரி நீரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி நீர் பிரச்னையால் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பண பலம் காரணமாகவே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார். புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆறு மாதங்…
-
- 2 replies
- 561 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி- கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் 100 அடிக்கு மேல் இருந்தால், ஜூன் 12ஆம் தேதியன்று அணை விவசாயத்திற்காகத் திறக்கப்படும். அதன்படி இந்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது, ‘’கர்நாடக அரசு காவிரி ஆற்றில் அணைகளை கட்டி மின்சாரம் தயாரிக்க போவதாக கூறுவது அப்பட்டமான பொய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால், தமிழகத்தின் நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கிரி, அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழனுக்கே சொந்தம். வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில…
-
- 0 replies
- 784 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழகத்துக்கு நீர் தர முடியவில்லை எனக் கூறி தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2023, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவையும் மீறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விடை தேட உச்சநீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு. தமிழகத்துக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை கிடைத்திருக்க வேண்டிய க…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள்: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சை ட்வீட்! புதுதில்லி: தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்தி…
-
- 1 reply
- 457 views
-
-
சென்னை: காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ கூறியதாவது: மத்தியில் நடைபெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அல்ல. பாரதிய ஜனதா அரசு. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தால் கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கும். ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு கூட்டத்தையும் பாரதிய ஜனதா கூட்டியது இல்லை. நரேந்திர மோடி அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுனால், தமிழகத்தில் 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படு…
-
- 0 replies
- 390 views
-
-
காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? - 3 எளிய கேள்வியும், பதிலும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை. தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து, நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது. படத்தின் காப்புரிமைM NIYAS AHMED காவிரி …
-
- 0 replies
- 434 views
-
-
புதன், 22 மே 2013 கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித…
-
- 0 replies
- 417 views
-
-
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை: தமிழ் திரை உலகினரின் அறவழிப் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஐம்பது நாட்களுக்…
-
- 1 reply
- 624 views
-
-
காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி ஆரம்பம்! காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வள ஆணையரான மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரமாக செயற்படக்கூடிய நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டுமென தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது. மசூத் ஹுசைன் ஓய்வுபெற்ற பின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஏ.கே.சின்ஹா, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருவார் எனக் கூறப்பட்டது. …
-
- 0 replies
- 323 views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 10 நாள்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும்வரை இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் வாரியத்தை உடனடியாக அமை…
-
- 0 replies
- 474 views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிர…
-
- 3 replies
- 837 views
-
-
பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ. இயற்கை ஆறுகள் …
-
- 0 replies
- 813 views
-