தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்…
-
- 3 replies
- 603 views
-
-
40 வருட அரசியல்... 33 வருட நட்பு... ஓ.பி.எஸ் Vs சசிகலா கடந்து வந்த பாதை #OPSvsSasikala #Infographic ஐந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்புமணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகியிருக்கிறது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின்போது... இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா-வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வர…
-
- 1 reply
- 545 views
-
-
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் தேதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக …
-
- 0 replies
- 391 views
-
-
சசிகலாவே தற்போது எல்லா எம்.எல்.ஏக்களையும் வீட்டிற்கு போக சொன்னால் கூட, தற்போது இந்த சொகுசு ரிசார்ட்டை விட்டு எம்.எல்.ஏக்களும் போகமாட்டார்கள் போல.
-
- 0 replies
- 365 views
-
-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, கடந்த 21–ந்தேதி மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்து இருந்தது. 5 சதவீத பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.466 கோடி வருவாய் திரட்ட முடியும். இந்த முடிவுக்கு நெய்வேலி நிறுவன தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால், வருகிற 3–ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று, தொழிலாளர்கள் அறிவித்து உள்ளனர். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெய்வேலி நிலக்கரி ந…
-
- 0 replies
- 439 views
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 860 views
-
-
மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் மூன்றுபேர் இன்று பிற்பகல் மரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி: வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்ட…
-
- 18 replies
- 2.5k views
-
-
சசிகலா சந்திப்பில் விதிமீறல் சிறை துறை குட்டு அம்பலம் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, பார்வையாளர்கள் விதிகளை மீறி சந்திக்க, சிறைத் துறை அனுமதித்துள்ள தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பிப்., 15ல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 'அன்று முதல், சசிகலாவை, யார் யார், எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்' என, பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறைத் துறை…
-
- 0 replies
- 458 views
-
-
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்குப் பதிவு! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க் கொடி தூக்கியதை அடுத்து, அந்தக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிறகு, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அ.தி.மு.க அம்மா அணியின் தினகரனிடமிருந்து ரூ. 5…
-
- 8 replies
- 1.4k views
-
-
‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம்…
-
- 0 replies
- 351 views
-
-
இராமேஸ்வர மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 படகுகளில் சென்ற இவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது எல்லையை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 35 பேரும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.sankathi24.com/news/32549/64/35/d,fullart.aspx
-
- 0 replies
- 393 views
-
-
தனித்தமிழீழம் அமையும் வரைக்கும் மாணவர்களாகிய நாங்கள் அண்ணான் செந்தில்குமரனின் உடல்மீது உறுதிகொண்டு நாங்கள் பயணம் செய்கிறோம் எட்டுத்திக்கும் பரவுவோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் ஜோ.பிரிட்டோ தெரிவித்துள்ளார்(காணொளி) பாலச்சந்திரன் படுகொலையினை பார்த்து மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்களோ அதைபோன் ஆதங்கத்தையும் கோபத்தையும் நெருப்பையும் எங்கள் மனதிற்குள் செந்தில்குமரன் ஏற்றியிருக்கின்றார். எங்களின் விடியல் வெகு தொலைவில் இல்லை செந்தில் குமரன் அண்ணாவின் மீது உறுதிகூறி சொல்லுகின்றோம் திருச்சியில் இருந்து சென்னை வரை சையிக்கில் பயணமா செல்லவுள்ளோம். இனப்படுகொலைக்கு நீதிகேட்டு வீதிவீதியாக செல்லவுள்ளோம் தமிழ் தங்கைகளுக்கு தாய்க்கு முன்னால் எதுநடந்ததே தந்தைக்கு முன…
-
- 0 replies
- 481 views
-
-
நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: ரசிகர்களை மீண்டும் சந்திக்க முடிவு `காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். ரசிகர்களை மீண்டும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 164-வது படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28-ந் தேதி மும்பையில் தொடங்கியது. ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இது நெல்லையில் இருந்து மும்பை சென்று வாழ்பவர்கள் தொடர்பான கதை. எனவே, தாராவி உள…
-
- 1 reply
- 475 views
-
-
சாத்தான்குளம்: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என சாத்தான்குளத்தில் நடந்த வாகன பிரசாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரசாரத்தை தொடங்கினார். கருங்குளம், சேரக்குளம், பேய்குளம் வழியாக சாத்தான்குளம் பஸ் நிலையம் வந்தார். அங்கு திறந்த வேனில் நின்று வைகோ பேசியதாவது, மக்கள் நலனுக்காக போராடிய தகுதியோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். பெரியார் சொன்ன பண்பாட்டை மதித்து எங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை இருந்த போதிலும் மக்களுக்காக ஓய்வில்லாமல் பல போராட்டங்களை நடத்தினோம். கேரள அரசு தண்ணீர் தர மறுத்தபோதும உரிமையோடு போராடியது மதிமுகதான். க…
-
- 0 replies
- 320 views
-
-
நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொண்டனர்.மேலும் வெளிநாடுகளில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=438512473527673286#sthash.rRmszMKE.dpuf
-
- 0 replies
- 842 views
-
-
தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம் - உலக நாயகன் கமலின் கம்பீரமான பேச்சு.
-
- 0 replies
- 285 views
-
-
நடிகர் கமல் தொடர்ச்சியாக, அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். மேலும், அதிமுக அரசினையும் அதன் அமைச்சர்களையும் மிக கடுமையாக சாடிவருகிறார். தான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் வந்துவிட்டதாகவும், அதற்கான பாதையினை உருவாக்கியிருப்பவர்கள் ஆட்சியாளர்கள் தான் எனவும் வார இதழ் ஒன்றில் தொடர் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், "நான் யார் எனில் தமிழன், பிறப்பால் நீ பார்ப்பான் என்றால் அதனை நான் தெரிந்தெடுக்கவில்லை. மாறாக, பகுத்தறிவு நான் தேர்ந்தெடுத்த அறிவுநிலை எனவும், என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’ என தெரிவித்துள்…
-
- 0 replies
- 559 views
-
-
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவரது உடல் இன்று இரவு சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. இளம் வயது முதலே இராணுவத்தில் பணியாற்றுவதை லட்சியமாக கொண்டிருந்தவராம் முகுந்த் வரதராஜன். தெற்கு காஷ்மீரின் சோஃபியான் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று இரவில் நடந்த மோதலில் 44வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். இவருடன் வேறு ஒரு வீர்ரும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அன்று காலையில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளில் ர…
-
- 13 replies
- 1.3k views
-
-
விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,REUTERS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
இராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய படகால் பரபரப்பு இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியமை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாவட்ட பொலிஸார், மெரைன் பொலிஸார் மற்றும் உளவுத்துறை என பாதுகாப்பு வட்டாரங்கள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய படகை மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பைபர் படகு தலைமன்னாரை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ள நிலையில், மர்மமான முறையில…
-
- 0 replies
- 533 views
-
-
விருதுநகரில்... தி.மு.க. முப்பெரும் விழா – 2000 ஏக்கர் நிலப்பரப்பில், பிரம்மாண்ட பந்தல். தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடைபெறவுள்ளது இதற்காக பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா ஆரம்பிக்கவுள்ளதாக தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வரா…
-
- 0 replies
- 317 views
-
-
வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்த சம்பவம் - முழு பின்னணி தகவல்கள் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி ஒருவருக்கு வீடியோ கால் மூலமாக செவிலியரும் உதவியாளரும் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதால் விவகாரம் சர்ச்சையானது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததும், வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததுமே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி அந்தப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில்…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர் குருபிரசாத்தி.விஜய் Government & Politics ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர் பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பானமையான வார்டுகளில் வென்று நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி தி.மு.…
-
- 0 replies
- 400 views
-
-
'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்? பட மூலாதாரம்,ANBUPAALAM/WEBSITE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம் - என்ன சர்ச்சை?26 ஜனவரி 2023 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம்26 ஜனவரி 2023 ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?25 ஜனவரி 2023 யார் இந்த பாலம் கல்யணசுந்தரம்? திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்…
-
- 0 replies
- 480 views
- 1 follower
-
-
போட் கிளப் ரோடு போயஸ் கார்டன் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்ஜினி, போர்ஷா, ஜகுவார், ஆடி மிக விலை உயர்ந்த கார்களின் சக்கரங்கள் நடை பழகும் இடங்கள் எவை? இவைதான் கடந்த ஐந்து வருடங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு இரண்டு, மூன்று மடங்காக உயர்ந்துள்ள சென்னை நகரத்தின் மையப் பகுதிகள். இவைதான் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமாப் பிரபலங்கள் ஆகியோரின் வீடுகள் உள்ள இடங்கள். போயஸ் கார்டன், போட் கிளப், ரட்லேண்ட் கேட் ஆகிய இந்த மூன்று பகுதிகள்தான் சென்னையின் மதிப்புமிக்க அந்தப் பகுதிகள். சமீப காலத்தில் இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் இடம் வாங்க போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்க டாலர்களைச் செலவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அதிகம் விரும்பப்படும் இடங்களாக இவை உள்ளன. இந்தப் பகுதிகளில் ஒரு கி…
-
- 0 replies
- 937 views
-