தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
-
கேள்வி.....! துணை சபாநாயகர் நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுகிறாரா தம்பிதுரை? பார்லி., புத்தகம் சொல்வது என்ன? 'தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டுவதை தவிர்க்க வேண்டுமென்பது மட்டுமல்ல; தான் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களிலும், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்' என்ற, பார்லிமென்ட் நெறிமுறைகளை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, காற்றில் பறக்க விடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவே, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டுமென வலியுறுத்தி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரை அறிக்கை வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், …
-
- 1 reply
- 252 views
-
-
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ப்ரபரப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று இமயமலைக்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்திடம் தமிழகத்தின் நிலை குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் இப்பொழுது இந்த கேள்விகள் வேண்டாம் என்று நழுவியுள்ளார். மேலும் இமயமலை பயணம் ஒவ்வொரு வருடமும் செல்வதுதான் என்றும் படப்பிடிப்பில் பிசியாக இர…
-
- 1 reply
- 601 views
-
-
கேள்விகேட்டுவிட்டு பதில் சொல்லவிடாமல் இடைமறித்தால் அமைதியாகிவிடுவோம் என்று நினைத்தாயோ ??
-
- 0 replies
- 293 views
-
-
கேள்விக்கு என்ன பதில் சிறப்பு நிகழ்ச்சி.... தீபாவின் பேட்டி
-
- 1 reply
- 656 views
-
-
கேள்விக்கு என்ன பதில்?... நடிகர் விஷால்
-
- 1 reply
- 546 views
-
-
கேள்விக்குறியான சசிகலா பதவியேற்பு: வெறிச்சோடிய போயஸ் கார்டன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சென்னை திரும்பாததால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி குறித்துக் கேள்வி எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.…
-
- 2 replies
- 529 views
-
-
-
கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். காலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உடல்நலம் கு…
-
- 0 replies
- 392 views
-
-
கோவில்பட்டியில் வைகோ, பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டி- மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. ஆனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தமாகா ஆகியவை இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் இன்று தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கிய மதிமு…
-
- 0 replies
- 809 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன? ‘‘சபரிமலை போல் அல்லாமல் பாதை மிகக் கடினம் என்பதால், அவசர காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரம் கொண்டு வருவது மிகக் கடினம். உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,” என்கிறார், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று டோலியில் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள ரவி. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது என்கிறார் வெள்ளியங்கிரிக்க…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
கோவையை அடுத்துள்ள சூலூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் பட்டணம்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை உள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் சிலையின் முகத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து உடனே உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். மேலும்,…
-
- 0 replies
- 850 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப…
-
- 2 replies
- 533 views
-
-
மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி? ‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார். ‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம். ‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது. பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
காற்றின் வேகம் அதிகரித்ததால், காற்றாலைகளிலிருந்து, 1,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதன்மூலம், நீண்ட நாட்களுக்குப் பின், 10 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தியை, தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில், 4,000 மெகா வாட் மின் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 14 மணி நேரத்திற்கும் மேலாக, மின் தடை நிலவி வருகிறது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த சில மாதங்களாக, 7,000 முதல் 8,000 மெகா வாட் மின் உற்பத்தியே கிடைத்தது.நவம்பர் முதல் வாரத்தில் துவங்கும் குளிர் காலம், மார்ச் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும். இக்காலத்தில், மின் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், கடந்த இரு மாதங்களாக, மாநிலத்தில் அமல் செய்யப்பட்ட மின் வெட்டும் கணிசமாக குறைந்தது. …
-
- 3 replies
- 805 views
-
-
பட மூலாதாரம்,PALANIVEL THIAGA RAJAN/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது துறைக்கான அதிகாரங்கள் குறித்து அதிருப்தியை சட்டமன்றத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வேறொரு விழாவில் இதற்கு பதிலளிப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். என்ன நடக்கிறது? தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அந்த கேள்வியில், "எனது தொகுதியா…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
இந்தியாவின் தமிழக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு (03.09.14) இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை (01.09.14) பாடசாலைக்கு சென்றபோது கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக சாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான பரஞ்சோதி றமேஸ் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வருகிறார். திங்கள்கிழமை (01.09.14) அன்று பாடசா…
-
- 0 replies
- 496 views
-
-
ஈரோடு: எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்று வைகோ கூறியுள்ளார். மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் என்ற தலைப்பில் ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் கூறியதாவது. என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் …
-
- 1 reply
- 673 views
-
-
01 JUL, 2024 | 12:03 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெ…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் செல்கிறோம் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் இந்திய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த காரணத்தாலேயே இந்திய கடலோரக் காவல்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படையினர், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கை மீனவர்களை காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு போலீஸ்கார்கள காவலுக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று…
-
- 0 replies
- 682 views
-
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.. இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன்களைப் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்பலகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம்…
-
- 0 replies
- 258 views
-
-
கைது... கலாட்டா... பில்லா! எம்.ஜி.ஆர் ஆட்சியில் ரஜினிக்கு நடந்தது என்ன? Chennai: கேள்வி: ''நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே. உண்மையா?'' (ஏ.பி.பன்னீர்செல்வம், ஐ.சி.எப் காலணி, சென்னை) ஜெயலலிதா: ''ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அதற்கு காரணம் என் வேடம். அந்த வேடம் என் மனதுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பொருத்தமாக அமையவில்லை. அதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. நல்ல படம் கிடைத்தால் அவருடன் நடிப்பதில் ஆட்சேபணை இல்லை.'' - 1979-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி 'மாலை முரசு' நாளிதழில் வெளியான ஜெயலலிதாவின் பதில் இது. வாசகர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு ஜ…
-
- 0 replies
- 684 views
-
-
கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்... கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் ப…
-
- 2 replies
- 822 views
-
-
கைமாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: திண்டுக்கல் நாராயணசாமி இப்போது எப்படி இருக்கிறார்? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”இரண்டு கைகள் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்ந்துவிடப்போகிறான் என சுற்றி இருந்த அனைவரும் பேசத் துவங்கினர். அவர்கள் அனைவரின் முன்னால் வாழ்ந்து காட்டி விட வேண்டும் என்ற வைராக்கியமே என்னை நம்பிக்கையுடன் போராட வைத்தது. இப்போது நானும் அனைவரை போலவும் சராசரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி. கட்டட …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். 1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்…
-
- 0 replies
- 366 views
-