தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது ; ஸ்டாலின் தமிழகத்தில் பல்கலைகழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என தி.மு.க தலைவரான மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ‘ தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அ.தி.மு.கவிற்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது. பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனையை அளிக்கிறது. ஊழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆளுநர், அது குறித்து நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைகழகங்களில…
-
- 2 replies
- 587 views
-
-
மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பளிக்கும் வகையில் தமிழகத்திற்கு நாளை மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4ஆம் தேதி அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல இடங்களில் 25 செ.மீட்டருக்கும் மேலான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இப்போது திரும…
-
- 1 reply
- 540 views
-
-
தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி இல்லை – கமல்ஹாசன் திட்டவட்டம் தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாரில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை ஈச்சம் பாக்கத்தில் உள்ள கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அத்துடன் அரசியலில் நான் 8 மாத குழந்தை, இருந்தாலும் சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “என் கொடியும், நானும் பரபரப்பாகப் பறப்பது மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு …
-
- 3 replies
- 750 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரி 4 லட்சம் மனுக்கள் கையளிப்பு October 6, 2018 1 Min Read ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரி நேற்றையதினம் சுமார் 4 லட்சம் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் நடத்திய அமைதிப் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. …
-
- 0 replies
- 291 views
-
-
அக்டோபர் 7ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சென்னையில் புதன்கிழமை இரவிலிருந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்துவரும் திருவாரூர், சேலம், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர்…
-
- 1 reply
- 710 views
-
-
பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 410 views
-
-
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். புழல் சிறையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி எவ்வளவு? புழல் சிறையில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக சிறப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது தினமணி நாளிதழ். சமீபத்தில் அங்கு நடைபெற்ற 5 சோதனைகளில் 70 எப்.எம் ரேடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகத்தில் 6 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புழல் சிறையில் 17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சட்டவிரோத செயல்கள், …
-
- 0 replies
- 656 views
-
-
7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்? – வேல்முருகன் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காப்பது ஏன் என, வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர் “பேரறிவாளன் மற்றும் நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரத்தை சட்டப்பிரிவு 1612 இன் கீழ் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு அனுமதி பெறும் வகையில் தீர்மான கடிதத்…
-
- 0 replies
- 646 views
-
-
கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை October 5, 2018 காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒருவரின் படகில் கடந்த 26 ம் திகதி காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களுடன் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ம் திகதி கடலுக்குள் சென்ற அவர்கள், முதலாம் திகதி கரை திரும்பி இருக்க வேண்டும் என்ற போதிலும் ஆனால் இதுவரையிலும் திரும்பாதமையினைத் தொடர்ந்து அவர்கள் காணமல் போயுள்ளதாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். இதையடுத்து கடலோர காவல்படையினரும் ம…
-
- 0 replies
- 335 views
-
-
கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார், நீதிபதி கிருபாகரன். இதயத்தை பிழியும் தீர்ப்பை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியுமா என்ன? பரிதாபமும், கவலையும், சோகமும் பின்னிப் பிணைந்த நிலையில் இந்த வழக்கில் கண்ணீரை தவிர வேறெதுவும் நீதிபதி கிருபாகரனால் உதிர்க்க முடியவில்லை!! கடலூரை சேர்ந்தவர் திருமேனி. இவர் ஒரு டெய்லர். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த போதிருந்தே பேசும் திறன் கிடையாது. மற்றவர்களை அடையாளம் காணவும் முடியாது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வலிப்பும் சேர்ந்து கொண்டது. திருமேனி போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை... டாக்டர்களிடம் மகனை அழைத்து சென்றும் எந்த பிரயோஜனமும் இல்லை.பெத்த மகன் கண் எதிரே வலிப்பு வந்து துடிக்கும்போது இவரால் அதனை…
-
- 0 replies
- 769 views
-
-
தமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு! பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்கக் கோரி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. இவ்வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை விரைவில் போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள…
-
- 0 replies
- 276 views
-
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞன் உயிரிழப்பு! கனடாவில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்.24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில் உள்ள Durham கல்லூரியில் MBA படித்து வந்துள்ளார். படிப்பிற்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக அங்கிருக்கும் பிட்சா கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு நவீன் பயணித்த காரும், மற்றுமொரு கார் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் வி…
-
- 0 replies
- 397 views
-
-
திருமுருகன் காந்தி.. விடுதலையானார். 52 நாள் சிறை வாசம் முடிவிற்கு வந்தது!மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது, அதனால் அவர் விடுதலைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழக அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 450 புதிய பேருந்துகளை முதலமைச்சர் வருகைக்காக இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், 9 ஆயிரத்து 153 புதிய பேருந்துகள் 7 ஆண்டில் வாங்கப்படும் என அரசு அறிவித்திருந்ததை அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதுவரை, பாதி அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்காத நிலையில் வாங்கப்பட்ட பேருந்துகளும் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய பேருந்துகளை இயக்காமல் பணிமனைகளில் நிற…
-
- 0 replies
- 391 views
-
-
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி, காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று (செ…
-
- 2 replies
- 600 views
-
-
சென்னை கோயம்பேட்டில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக ஏசி இயந்திரத்திலிருந்து வெளியான வாயுவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். சென்னை கோயம்பேடு அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் பீட்ஸா நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி கலையரசி மற்றும் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது மகன். மூவரும் இரவு உறங்கிய பிறகு திடீரென மின்சாரம் நின்றுபோனது. தவறவிடாதீர் இதனால் வீட்டில் உள்ள மினி ஜெனரேட்டரை ஆன் செய்துவ…
-
- 3 replies
- 572 views
-
-
பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்ட தெரிவிக்கப்படுகின…
-
- 2 replies
- 525 views
-
-
"ஸ்டெர்லைட் ஆலை" விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல். ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்ட…
-
- 0 replies
- 478 views
-
-
மனைவியின் தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்தவர்கள், பெண்ணின் வீட்டுக்குத் தீ வைத்தனர். சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிராஜன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிரிராஜனின் மனைவியின் தம்பி காதலித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் அப்பா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு கிரிராஜன் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதோடு பாபுவிடம் இருவர…
-
- 0 replies
- 410 views
-
-
தீவிர சிகிச்சையில் திருமுருகன் காந்தி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஐஎம்சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் முற்போக்கு சிந்தனையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.நா சபையில் பதிவு செய்து விட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்தது காவல் துறை. ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்த காவல் துறை அவரை சிறையில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு September 30, 2018 1 Min Read இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய 425 கோடி ரூபா பெறுமதியான திட்ட கருத்துருவுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருந்ததனையடுத்து பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சிறுவர் குற்றவியல் சட்டத்தில், 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை வயது வந்தவர்களாக கருதலாம் எனவும் திருத்தம் மேற்கொ…
-
- 0 replies
- 414 views
-
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை…. September 29, 2018 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.எனினும் அவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நால்வரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளி…
-
- 0 replies
- 378 views
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம் இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. …
-
- 42 replies
- 5.2k views
-
-
-
- 2 replies
- 718 views
-
-
`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். …
-
- 6 replies
- 1k views
-