Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு! சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வ…

  2. புலிகளால்... சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா? திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம். தமிழீழ விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' எனப் திமுகவின் லோக்சபா உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திய அந்த பெண், தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2025 எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும் 2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்…

  4. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா? 3 Oct 2025, 9:04 AM தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை ப…

  5. ரூ.570 கோடி விவகாரம்... தி.மு.க. புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -சி.பி.ஐ.க்கு உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை: கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக தி.மு.க. கொடுத்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சி.பி.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம்…

  6. கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவவில்லை- மதுரை பல்கலைக்கழகம் அறிவிப்பு கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விஞ்ஞானி மாரிமுத்து தெரிவித்துள்ளார். மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையினர் வௌவால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 35 மாணவர்கள் வௌவாலின் குண நலன்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தேசிய விஞ்ஞான கழகத்தின் கௌரவ விஞ்ஞானியுமான மாரிமுத்து தெரிவிக்கையில், “உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளத…

  7. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பேரறிவாளனுக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகவும் சிறையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததோடு, பெற்றோர்கள் இருவரும் வயதானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதி…

  8. தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி துரத்தியதால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறைவைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 15 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனிடையே கடந்த 30ம் தேதி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனி…

  9. தமிழக அமைச்சரவையில், அதிக முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள, ஆதி திராவிட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் மற்ற ஜாதியினரையே முன்னிறுத்துவதாக, அவர்கள் பகிரங்க புகார் கூறத் துவங்கியுள்ளதால், பிரச்னை வெடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்த வரை, கட்சியிலும், ஆட்சியிலும் ஜாதி வேறுபாடு தலைகாட்டவில்லை. அவர், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சரை நீக்கும் போது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவரையே, அமைச்சராகவும் நியமித்தார். அமைதி கா…

  10. பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர். இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத…

  11. குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையோர மணல் கொள்ளை, வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் கடலைச் சூறையாடியதன் விளைவால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலோர கிராமங்களில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்புகளை இழுத்துச் செல்கின்றன. அலையின் வேகத்தினால் கடலரிப்பு தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து கடலில் விழுந்து கிடக்கிறது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிபுத்த…

  12. தீ மட்டும் தான் தி.நகரில் பிரச்சினையா? சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் வீரர்கள். | படம்: க.ஸ்ரீபரத் நண்பன் பிரகாஷின் தந்தை திடீரென காலமானார். மேற்கு மாம்பலத்தில் 40 ஆண்டுகள் வசித்தவர்.அதிகாலையிலேயே உயிர் பிரிந்து விட்டது. எப்படியும் நல்லடக்கத்திற்கு உடலை எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்று 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன். அதற்குள் உடலை கண்ணம்மாபேட்டைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பன் திரும்பி வந்த பின் ஆறுதல் கூறிவிட்டு ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எடுத்திட்டு போயிட்ட என்றேன். "இல்லடா எனக்கு கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா 9 மணிக்கு மேல ஆயிடுச்சுன்னா ஏரியாவுல பயங…

  13. தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி இப்போதெல்லாம் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழிசையும் பி.ஜே.பி-யின் தமிழக நிர்வாகிகளும் சொல்லும்போது சுதி கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது. ‘‘ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடம் எங்களுக்குச் சாதகமாக இருக்கும்’’ என பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் சொன்னார். அதன்படி பி.ஜே.பி சுறுசுறு திட்டங்களோடு களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் பி.ஜே.பி-க்குப் பெரும் சவாலாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது பி.ஜே.பி. இதுபற்றிப் பேசிய முன்னாள் பி.ஜே.பி நிர்வாகி ஒருவர், ‘‘ஒரே கல்லில் பல காய்களை அடிக்கத் திட்டமிட்டு செயல்…

  14. சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் சிறையில் தீவிர விசாரணை - முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் சிறையில் சசிகலா | கோப்புப் படம் அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற‌ ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் நேற்று நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங் களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், இந்த சிறையில் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா டி.மவுட்கில் திடீர…

  15. “கைகுலுக்கிய வைகோ.. கட்டியணைத்த துரைமுருகன்!” கவிக்கோ நினைவேந்தல் நெகிழ்வுகள் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் சென்னை காமராஜர் அரங்கின் மேடையை தன்வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அது. இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி, புதிய விதையாக அரங்கேறியுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நண்பர்கள் ஓர் அமர்விலும், அரசியல் நண்பர்கள் இன்னோர் அமர்விலும் பேசினார்கள். கவிக்கோவுடனான சுவாரஸ்ய அனுபவங்கள், அவரது ஆசைகள், கோபங்கள், ஆற்றல்கள் என வந்திருந்த அனைவரும் அவரைப்பற்றிய தருணங்களை சிலாகித்தனர். முதல் அமர்வில், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவும…

  16. மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு! - தினகரன் மீண்டும் கைது? டெல்லியில் வட்டமடித்துவிட்டு அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகாரிடம் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தன. பகிர்ந்துகொள்ள நிறைய தகவல்கள் அவரிடம் இருந்தன. கேட்க ஆரம்பித்தோம். ‘‘ஒரே நேரத்தில் தமிழக முதல்வர் இ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்களே... வரவழைத்ததும், சொல்லி அனுப்பியதும் என்ன?” ‘‘ஓ.பன்னீர்செல்வம் மீது ஆரம்பத்தில் பிரதமர் மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. காரணம், மோடியின் எதிர்பார்ப்புகளைப் பன்னீரால் பூர்த்திசெய்ய முடியவில்லை. ‘தன் பக்கம் 50 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்’ எனப் பொய்யான நம்பிக்கையைப்…

  17. தமிழ் தேசியம் பற்றி திரு திருமாவளவன்

    • 0 replies
    • 424 views
  18. தமிழர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்தியாவை தமிழர் ஆட்சி செய்ய வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தர் பிரதேசதம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்திய பிரதமர்களாக பதவி வகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் ஒருவர் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை ஆட்சி செய்யக் கூடிய …

  19. ஜூனியர் விகடன் 26 Feb, 2014 சளைக்காத சட்டப்போராட்டம்! ========================= ''நெருப்பில் எரியும் உடல் விரைவில் வெந்து தணிந்துவிடுகிறது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் கைதியின் உடலும் மனமும் தூக்கிலிடப்படும் நாள் வரை ஒவ்வொரு நொடியும் எரிகிறது; தவிக்கிறது; துடிக்கிறது. இந்தக் குரூரத்துக்கு நாகரிக சமூகத்தில் நிச்சயம் இடம் இருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டி மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனை ஏற்று முருகன், சாந்தன், பேரறிவாளனை மட்டுமல்ல; ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்…

  20. சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…

  21. தமிழ்நாட்டில் சுடுகாட்டுப் பிரச்னைகள் தொடர்வது ஏன்? இது சமூக சிக்கலா? உள்கட்டமைப்பு சிக்கலா? என்ன தீர்வு? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கழுத்தளவு தண்ணீரில் இறுதிப் பயணம். சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை, கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை தூக்கிச் சென்ற கிராமவாசிகள், பட்டியல் சாதியினர் சடலங்களை பொதுப்பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தபடியே உள்ளன. நூறாண்டு கடந்த சமூக சீர்திருத்த மரபினையும், முற்போக்கான பார்வை கொண்ட அரசாங்கங்கள் அமைந்த வரலாற்றையும் கொண்ட தமிழ்நாட்டில், உள்கட்டமைப்பு வசதி, மனித மேம்பாட…

  22. கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம் கட்டுரை தகவல் எழுதியவர்,பி.சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது. கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், தமிழகம் கிட்டத்தட்ட சுமார் 1000 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத…

  23. பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி? ‘தமிழர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது’ என ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். உண்மையில் ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் மட்டுமல்ல, காங்கிரஸுக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது. டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைம…

  24. தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 லீற்றர் பெற்றோலை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி – திரேஸ்புரம் கடற்கரையில் வடபாகம் தனிப்படை பொலிஸார் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர். இதன்போது, 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/264658 பெற்றோல் தட்டுப்பாடு இங்க இல்லை என்று அவர்களுக்கு தெரியவில்லை! வேறு…

  25. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா என்று, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்களுக்கு தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “வாழ்நாளில் மக்கள் குறித்து கவலைப்படாமல், தனது கஜானாவை மட்டுமே நிரப்புவதை கொள்கையாக கொண்ட ஒருவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடீரென அரசியலுக்கு வந்து, அரசியல்வாதிகளை விமர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.