தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : அதிக வெப்பநிலையால் 9 பேர் பலி. இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய…
-
- 0 replies
- 172 views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்! ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எதுவுமே சாத்தியம் என்பதை இந்தி- ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்து இன்று தமிழக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கின்றனர். தபால்துறை அண்மையில் பல்வேறு பணி இடங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தியது. பொதுவாக இத்தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். இம்முறை திடீரென இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இத்தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் 989 தபால்துறை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை துறைசார் த…
-
- 0 replies
- 368 views
-
-
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அற்புதம்மாள் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை திருமாவளவன் எம்.பி.ஒழுங்கு செய்திருந்ததுடன்,அவரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். மேற்படி சந்திப்பு 7 பேர் விடுதலையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/32405
-
- 0 replies
- 969 views
-
-
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர். மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழக…
-
- 0 replies
- 752 views
-
-
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்- மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு! மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கன…
-
- 0 replies
- 199 views
-
-
தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது. தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர் எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது…
-
- 0 replies
- 441 views
-
-
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…
-
- 0 replies
- 451 views
-
-
தினமும் 2,000 லிட்டர் கபசுரக் குடிநீர் தயாரித்து வீடு வீடாக விநியோகம்: அசத்தும் மதுரை தம்பதி மதுரை கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து பொது மக்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி. மதுரையில் மாண்டிச்சோரி ஸ்கூல் நடத்தும் கணவன், மனைவி இருவர், தற்போது பள்ளி திறக்கப்படாததால் தங்கள் பள்ளி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் துணையுடன் தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து வீடு வீடாக டோர் டெலிவலி செய்வதற்கு உதவுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘கரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய்…
-
- 0 replies
- 461 views
-
-
எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா மின்னம்பலம் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து கொரோனா உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு அமைச்சர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மூன்று எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நேற்று (ஆகஸ்ட் 5) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில…
-
- 0 replies
- 519 views
-
-
கூவத்தூர் கும்மாளம்! விதிமீறிய போலீஸ்... வதைக்கப்பட்ட மாணவர்கள்... மலையாகக் குவிந்த மதுபாட்டில்கள்... ஜல்லிக்கட்டுக் காக பல லட்சம் பேர் திரண்ட மெரினா கடற்கரையில் சேர்ந்த குப்பையில், ஒரே ஒரு காலி மதுபாட்டில்கூட இல்லை. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக’ தங்கியிருந்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில், மூட்டை மூட்டையாக காலி மது பாட்டில்களை குப்பை களிலிருந்து அகற்றினார்கள். கூவத்தூரில் இத்தனை நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தமிழக அரசு, மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டது. பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால், அடியாட்கள் கடுங்காவல் இருந்த காம்பவுண்ட் சுவர்களுக்குப் பின்னால் என, அங்கு நடந்த சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக வ…
-
- 0 replies
- 638 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 375 views
-
-
பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க. தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையே அந்தப் பதவியில் தொடர வைப்பதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வர் பதவியில் அமரவைப்பதா என்ற ஆலோசனையில் பாஜகவின் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பதவி,அதிகாரப்பகிர்வு மோதலில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று தி.மு.க. எதிர்பார்ப்பதைவிட பா.ஜனதா எதிர்பார்ப்பதுதான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.கட்சிக்குள்ளும் நடக்கும் உச்சக்கட்ட குழப்பங்கள், தமிழகத்தின் மாநில ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகைய…
-
- 0 replies
- 355 views
-
-
மிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்? ‘‘ரஜினி ரயில் ஸ்டார்ட்ஸ்!” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார். ‘‘அது ஸ்டார்ட் ஆன வேகத்திலேயே நின்றுவிடும் ரயில்தானே? புறப்படும் என்பார் புறப்படாது” என்றோம். ‘‘புறப்படாது என்பார் புறப்படும்” என்று எதிர்பாட்டு பாடியபடியே கழுகார் ஆரம்பித்தார். ‘‘ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பது குறித்து ஏற்கெனவே நான் சொல்லி இருந்தேன். 2.4.17 ஜூ.வி இதழில் ‘உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி!’ என வெளியிட்டு இருந்தீர். ரஜினி தனது தயக்கங்கள் அனைத்தையும் சொல்ல... பி.ஜே.பி அவற்றை உடைக்கும் கருத்துக்களைச் சொல்லி அவரைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த நிலையில் அவர் வராவிட்டால், ஓ.பன்னீர்செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இப்போது என்ன நடக்கிறது..? #SpotReport #VikatanExclusive “ஆலத்தூர் கருங்குழி பள்ளம் அருகே அம்மா தோட்டம் என்று அழைக்கப்படும் சிறுதாவூர் பங்களாவை அடுத்துள்ள எங்களுடைய நிலத்தை சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டனர்" என்று ஒரு தம்பதியர் நமக்குப் புகார் தெரிவித்தனர். அபகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த நிலத்தைப் பற்றித்தெரிந்து கொள்ள அந்த இடத்துக்குப் பயணமானேன். திருப்போரூர் சென்றதும், அங்கிருந்து சிறுதாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஒரு கடையின் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன்." அரசு பேருந்து, டெம்போ போன்ற எல்லாமே அந்தவழியாப் போகும். ஆனா பஸ்ல போறதுதான் நல்லது" என்று அக்கறையுடன…
-
- 0 replies
- 402 views
-
-
‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு'? என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது. 'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனத் தொண்டர்கள் மத்தியில் வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.கவினர். பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அங்கு, 'குடியரசுத் தலைவர்…
-
- 0 replies
- 438 views
-
-
அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்; அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், வியூகம் வகுத்துள்ளார். 'கோடிகள் குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பேரம் பேசி வருகின்றனர். இதனால், தவித்து வரும், முதல்வர் பழனிசாமி, தி.மு.க.,வின் தந்திரத்தை முறியடித்து, ஆட்சியை தக்க வைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.பின், அவரை முதல்வர் பதவியிலி ருந்து, ர…
-
- 0 replies
- 359 views
-
-
-
- 0 replies
- 744 views
-
-
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களின் மகள்களை வீட்டோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்றும் மகளை கேலி செய்தே கொடுமைபடுத்துகின்றனர் அத்தெருவில் வசிக்கும் மக்கள். சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் காமாட்சியம்மமன் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும். அவர்களது மூத்த மகளுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. 15 வயதாகும் இரண்டாவது மகளுக்கு அதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பு இல்லை. பெற்றோரும் மூத்த மகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, இளைய மகள் மட்டும் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார். ஆனால், சிறுமி வேலைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அந்தப் …
-
- 0 replies
- 249 views
-
-
"நீ அதுக்குத்தான் லாயக்கு" - பேராசிரியருக்கு எதிராக மாணவி புகார் - என்ன நடந்தது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக என் வகுப்புக்கான பொறுப்பு பேராசிரியரை பார்க்க, உரிய பாடவேளை பேராசிரியரின் அனும…
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
அதிமுகவில் புதிய நிர்வாகிகள்: தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர் கடிதம்! மின்னம்பலம்2022-07-14 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொ…
-
- 0 replies
- 274 views
-
-
தங்கைக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலறிய பயணிகள்! monishaAug 27, 2022 11:26AM சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை 7.20 மணிக்குச் சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, மர்மநபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம், துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 160 பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வ…
-
- 0 replies
- 391 views
-
-
ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் - 'கல்வியை விட்டு விடாதீர்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், வாக்குசேகரிப்பிலும் பங்கேற்கும் நபர்களுக்கு பிரியாணி மற்றும் தலா 300 ரூபாய் பணமும் வழங்கப் படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுக சார்பில் இடைத் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஹோட்டல்களில் தங்கியபடியும் , மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கியும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமை…
-
- 0 replies
- 450 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 08:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது? அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆள…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நெமிலியில் ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து விஷ வாயு தாக்கியதால், ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெமிலி பகுதியில் உள்ள விநாயக நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், முன்னதாக அந்த தொட்டி இயந்திரங்களின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, அந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (53) என்பவர் அந்த கழிவு நீர்த் தொட்டி சரியாக சுத்தம் செய்ய்பட்டி…
-
- 0 replies
- 442 views
-