Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராமேஸ்வரம்: தீவு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக பாம்பனைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அமெரிக்க நிறுவன விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்க கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் உள்ள 28 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கடல் பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் சுமார் 2200 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்த கூட்டமைப்பின் தலைவராக பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி (46) இருந்து வருகிறார். கடலில் உயிரற்ற பாறைகளில் வளரும் பாசிகளை சுற்று சூழலுக்கும், கடல் வளத்திற்கும் பாதிப்பு …

  2. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,விஜயானந்த் ஆறுமுகம் பதவி,பிபிசி தமிழ் 9 மார்ச் 2025, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மேற்கோள் காட்டியுள்ளார். மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்தாலும் அதனை விரைந்து மீட்பதற்கான வழிகள் உள்ளதாகக் கூறுகின்றனர், சைபர் தொழில்நுட்ப வல…

  3. இன்று முதல் உங்கள் கையில் பொங்கல் பரிசு.. ரூ.1000 ரொக்கம்.. ரேஷன் கடைகளில் கிடைக்கும் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி அட்டை கார்டு வைத்துள்ளவர்களுக்கு இன்று முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14,15,16,17 ஆகிய நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அறிவித்தபடி திட்டத்தை தலைமைச்செயலகத்தில் அவர் தொடங்கி வ…

  4. தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக மதிமுகவில் கலகக்குரல்: கிருஷ்ணகிரி மா.செ.மாதையன் ராஜினாமா ! கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மாதையன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.சட்டசபை தேர்தலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சந்திப்போம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோ அறிவித்ததார். இந்த அறிவிப்பு அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதிமுகவின் மாநில பொருளாளராக இருந்த மாசிலா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ. தாமரைக் கண்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட மு…

  5. சென்னையில் 27 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் 95 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் தற்போது தற்காலிமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தி…

  6. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்! முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலல…

  7. 1926-2016 - 50 நிகழ்வுகள்... அழியாத சுவடுகள்! தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத தருணங்களின் புகைப்படத்தொகுப்பு இங்கே... http://www.vikatan.com/anandavikatan

  8. நேற்று டெல்லியில் நடந்த டெசோ கருத்தரங்கில் தி.மு.க வை தவிர மற்ற முக்கிய அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. முக்கியமாக காங்கிரஸ் தரப்பிலான உறுப்பினர்களின் வருகை திமுக வுக்கு ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. டெசொ கருத்தரங்கிற்கு அகில இந்திய அளவிலான பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஞானதேசிகன், எம்.பி-கள் என்.எஸ்.வி. சித்தன், ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜவாதி உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேக வரவேற்கப்பட்ட போதிலும் திமு…

    • 0 replies
    • 984 views
  9. முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி' ''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பிதுரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப் பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த சந்திப்பை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.…

  10. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளனின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கானகாரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்தியத் தகவல் ஆணையம் கூறியிருக்கிறது. கருணை மனுக்கள் குறித்த மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, எனவே பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டேயாக வேண்டும் என வற்புறுத்த முடியாது என தகவல் ஆணையர் சுஷ்மா சிங் தீர்ப்பளித்திருத்திருக்கிறார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்ட பல்முனை கண்காணிப்ப…

  11. தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்க…

  12. பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறினார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கேல் குன்ஹாவை கர்நாடக அரசு நியமித்தது. இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "எனக்கு புதிய வழக்கு என்பதால் ஆரம்பத்தி்ல் இருந்து …

  13. அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் துணை முதல்வராக ஒபிஎஸ் பதவியேற்பு ஆகியவை இன்று (திங்கள்கிழமை) நடந்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடு, சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். படத்தின் காப்புரிமைTWITTER இது குறித்து சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான பெர்னார்ட் சாமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "தனக்கு ஆதரவாக ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதாக டி.டி.வி.தினகரன் கோருவது அரசியலமைப்பு ரீதியில் ஏற்புடையதாக இருக்காது. அவரது கருத்…

  14. சென்னை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– ஆம் ஆத்மி கட்சியின், தமிழ் மாநில தலைமை அலுவலகமானது, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளை, கட்சியின் தேசிய செயற்குழு தேர்வு செய்துள்ளது. மேலும் கட்சியின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமியும் மற்றும் லெனின், டாக்டர் ஆனந்த் கணேஷ், ராஜேஷ் சுரானா, சாமுவேல் நிர்மா, ரோஸ்லின் ஜீவா, நாகராஜன் மற்றும் ராஜ ராஜ சோழன் ஆகியோர் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் என…

  15. சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல் கோவையில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க நாள் பார்க்க, ரஜினியோ அதற்கு அமைதி காக்க, கோவை ரஜினி ரசிகர்கள் கமலுக்கு எதிராக போஸ்டர், வாட்ஸ் அப் படங்களை கடைவிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், 'சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?' என்ற வேடிக்கை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'போர் வரட்டும் பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லிச் சென்றது இன்னமும் அடையில் அப்படியே இருக்க, பிக்பாஸ் வருகையில் திடீர் எழுச்சி பெற்ற கமலஹாசன் அதீத அரசியல் பேசி, இறுதியில் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதையும், அதற்கான சின்னம், கட்சிப் பெயர் பணிகளில் இறங்கி …

  16. சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும் மனம் தளராத பா.ஜனதாவினர் மோடியிடம் பேசி, …

  17. கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2020-ம் தேதி மார்ச் 14 இந்தோனேஷியாவில் பெருநிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த 54 வயதான அவர், அதே நிறுவனம் தென் அமெரிக்காவில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் புரொஜெக்டிற்காக (Anthracite Project) பெரு நாட்டிற்கு செல்லும் வழியில் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார். புதிய புராஜெக்டில் சேரும் முன்பாக, தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக, சென்னை வந்திறங்கிய அவர் அதன் பிறகு, தான் இதுகாறும் பணிபுரிந்து வந்த இந்தோனேஷியாவுக்கோ அல்லது புதிய புராஜெக்டிற்காக பெருவுக்கோ செல்லவே இல்…

  18. 25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அ…

  19. இராஜராஜ சோழன் சமாதி: அகழ்வாராய்ச்சி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர் திருமுருகனின் மனுவில், “சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் கி.பி.985 முதல் கி.பி.1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துத் …

  20. கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும்…

  21. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி…

  22. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்…

  23. 29 JAN, 2025 | 11:55 AM சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52) என்பவர் அதிகப்படியான வியர்வை, நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்ப…

  24. தமிழகத் தேர்தல்:திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது. திமுக தலைவருடன் முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து தேர்தல் உறவு குறித்து பேசினர் அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.