Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோரிக்கையோடு,பொது வாக்கெடுப்பு கேட்டு போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெறுகிறது . நேற்று மாலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களே வீதி மறியல், தபால் நிலைய முற்றுகை, தொடர் வண்டி முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மாலை 3 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முற்பட்டபோது விமானநிலைய காவல் துறையினர் பிரதான சாலையை அடைத்து வைத்திருந்தனர். மாணவர்கள் அதனை மீறி செ…

    • 0 replies
    • 568 views
  2. அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு செய்து, நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில்: தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொள்கிறார்…

  3. மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் சட்டப் பேரவையில் வெளியேற்றப்பட்ட எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் | படம்: எல். சீனிவாசன் பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் சட்டப்பேரவையில் நடந்தது குறித்து புகார் அளித்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பே…

  4. டுவிட்டரில் திடீரென கிளம்பிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ -கலகலக்கும் பதிவுகள் சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. அதேபோல் தமிழகம் என்று அழைக்கக்கூடாது என்றும், தமிழ்நாடு என்று அழைப்பதே சரியானது என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதை பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர். அந்த வகையில், அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், டைனோசர் கூட தமிழில்தான் பேசியிருந்ததாக சொல்லுவார்கள் போல இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சரமாரியாக பதிலட…

  5. தினகரனை காட்டிக் கொடுத்தது யார்? அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அக்கட்சியின் நியமன துணைப் பொதுச் செயலர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஹவலா ஏஜெண்ட் நரேஷ் உள்ளிட்ட பலரையும், டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, நடந்தவைகள் அனைத்தையும், அனைவரும் ஒப்புக் கொண்டனர். தினகரனும், மல்லுகார்ஜுனனும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, திருவேற்காட்டில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத்தும் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் வெளிப்பட, அவரையும் விசாரணை வள…

  6. 1,1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி;யாழ். இளைஞன் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைது போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இலங்கையர் உட்பட மூவரை, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவு பொலிஸ் கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் (வயது 30), இந்தியா கனக நகரைச் சேர்ந்த நவாஸ் செரீப் (வயது 22) மற்றும் பெங்களூரு வடமேற்கைச் சேர்ந்த நதீம் செரீப் (வயது 30) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வங்கிகளின் கடனட்டைகள் போன்ற 144 போலிக் கடனட்டைகள், அவற்றைத் தயாரிப்பதற்காக வைத்திருந்த 36 இயந்திரங…

  7. கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் நகர தே.மு.தி.க. சார்பில் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:– எம்.ஜி.ஆர். விசுவாசிகள் யாரும் இன்று அ.தி.மு.க.வில் இல்லை. தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா பிரசாரம் செய்ய வரவில்லை. ஆனால் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மின் பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை எதுவும் தீர்வு காணப்படவில்லை. தே.மு.தி.க. தெரியாதனமாக அ.தி.மு.க.விடம…

  8. எம்.நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் CHENNAI TAMILNADU 12/09/2016 M.Natarajan PHOTO L_SRINIVASAN சென்னை: தமிழ்நாடு: 12-09-2016: எம்.நடராஜன். படம்.எல்.சீனிவாசன். - L_SRINIVASAN சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு கடந்த 10-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல…

  9. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. இதில் தொடக்க நிகழ்வாக 26 காலை 9.30 மணிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதலுடன் நிகழ்வு ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்சியாக நடை பெற உள்ளது. http://www.pathivu.com/news/35448/57//d,article_full.aspx

  10. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி…

  11. தமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு! பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்கக் கோரி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. இவ்வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை விரைவில் போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள…

  12. படக்குறிப்பு, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கவி யாழினியைக் காப்பாற்ற ரூ. 17 கோடி ஊசியை அமெரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டும். 12 ஆகஸ்ட் 2023, 14:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கணவனை இழந்த இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (36). இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. …

  13. தமிழகம் செல்கின்றார் மோடி December 22, 2018 எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தநிலையில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. தமிழகத்திலுள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் எனது வாக்குச் சாவடி வலுவான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வீடியோ உரையாடல் மூலம் பல கட்டங்களாகப் மோடி உரையாடிவருகிறார். வெற்றிபெறுவதற்கான என்னென்ன உத்திகள் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்திவருகிறார். …

  14. வைகோவை விமர்சித்து கிண்டலுக்கு உள்ளான எஸ்.வி.சேகர்: பேட்டி எடுத்த செய்தியாளரே மறுப்பு Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST எஸ்.வி.சேகர், வைகோ- கோப்புப் படம் Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST தனது மகன் சிகரெட் கம்பெனி ஏஜென்சி நடத்துவது குறித்து வைகோ 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்த எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைக…

  15. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள் மக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ராகுல் காந்தியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாவட்டமாக, ஊர்வலமாக சென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று ராகுலை சந்தித்து தமது மகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கோரிக்கை…

  16. துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு! திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது. வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரி…

  17. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கீழ்வெண்மணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்று கீழ்வெண்மணி படுகொலை. 1968ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு. அப்போதைய கீழ் தஞ்சை மாவட்…

  18. திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!! திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம் வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்…

  19. லடாக்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி பனிப்பொழிவில் தவித்து வருகின்றனர். பனிப்பொழிவால் ஸ்ரீநகர், லடாக் பகுதிகளில் 450 லாரிகள் 12 நாட்களாக நிற்கின்றனர். நாமக்கல் ராசிபுரம் அருகே பாச்சலை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கடுங்குளிரால் உடல் உபாதை ஏற்படுவதாகவும், லாரியிலேயே 10 நாட்களுக்கு மேல்தங்கியிருப்பதாவும் தகவல்கள் தெரவிக்கின்றன. பனிப்பொழிவில் சிக்கியிருக்கும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது…

    • 0 replies
    • 563 views
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாற…

  21. மோடிக்கு ஜெ. எழுதும் கடிதங்கள் எல்லாம் குப்பைதொட்டிக்கே.! பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கின்றன என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் தெரியபடுத்தி அது தொடர்பில் தீர்வு காணவேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றமை வழமையான விடயம். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்குதான் செல்கின்றன. …

  22. டெல்லியில் முதல்- அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:–வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வர…

  23. கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் மாநகராட்சி களப்பணியாளர் குடும்பத்துக்கு நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்: பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என வருவதால் குடும்பத்தினர் கவலை கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி களப் பணியாளர்கள். (கோப்புப் படங்கள்) சென்னை மாநகராட்சி களப் பணியாளர்கள் சிலர் கரோனா அறிகுறி யுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வருவதால், குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எ…

  24. சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிப்பு.! தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு.! டெல்லி: சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட சம்பவத்தால் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உலக பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது , அவரது உருவத்தை மாற்றுவது என அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மேக்மில்லன் பதிப்பக புத்தகத்தில் 10ஆவது பாடத்தில் வாசுகியுடன் …

  25. கலைகிறதா அதிமுகவின் ராணுவ கட்டுப்பாடு? அதிமுக பிரமுகர் சட்டைப் பையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா-சசிகலா படம் | படம்: ம.பிரபு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தவறியதில்லை. மேலும், எந்த விஷயத்திலும் அவர் உத்தரவின்றி யாரும் எதையும் செய்துவிட முடியாது; எவரையும் விமர் சித்து விடவும் முடியாது. இதற்கு சசிகல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.