தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து ஏரியில் பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளது கொட்டணத்தான் ஏரி. பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது…
-
- 0 replies
- 593 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மாநிலகல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன், முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். எனினும் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டை மாநில கல்விக் கொள்கை குழு மறுத்துள்ளது. இதேபோல் பிபிசியிடம் பேசிய உதயசந்திரன் ஐஏஎஸ் இந்த க…
-
- 0 replies
- 712 views
- 1 follower
-
-
காரைக்கால் மீனவர்கள் 10 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை! ராமேஸ்வரம்: காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களையும் ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளத…
-
- 0 replies
- 481 views
-
-
குடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்கர்தான்! (படங்கள்) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார் கொடி அசைத்து அனுப்பிவைத்தார். வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிலையில் தயாரானது. தேனி மாவட்டம் பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.…
-
- 0 replies
- 1.3k views
-
-
சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவ…
-
- 0 replies
- 531 views
-
-
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் புதனன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் சுமார் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஐந்து கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,88,17,750 பேர் என்றும் பெண் வாக்காளர்கள் 2,90,93,349 பேர் என்றும் மூன்றாம் பாலினத்தவர் 4,383 பேர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில்தான்…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மன்றத்தின் கொடியையோ, ரஜினியின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/91890/உள்ளாட்சி-தேர்தலில்யாருக்கும்ஆதரவள…
-
- 0 replies
- 663 views
-
-
கன்னியாகுமரியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு …
-
- 0 replies
- 787 views
-
-
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். அங்கு ஈழத்…
-
- 0 replies
- 413 views
-
-
உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! 2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு! solomon5050 3 years ago மடிந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி, தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்தும், விவசாய பன்னைகளை ஆங்காங்கே கட்டி எழுப்பவேண்டும் என்ற நம்மாழ்வாரின் கனவினை நனவாக்க துடிப்புடன் செயல்பட்டு கொண்டும், இப்பொழுது நட…
-
- 0 replies
- 807 views
-
-
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளியும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ்பாபு மதுரையில் அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியை பிடிக்க போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அட்டாக் பாண்டி தொடர்பாக விசாரிக்க, அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஜினி மன்ற மதுரை மாவட்ட பொருப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13102:pottusuresh&c…
-
- 0 replies
- 936 views
-
-
'மாவட்டச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட்' அ.தி.மு.க-விலும் நீண்ட ராவ் கரம்! ''முன்னாள் தமிழகத் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஐ.டி. பிடியில் சிக்கியது யாருக்கு சந்தோசத்தை தருகிறதோ இல்லையோ, அவரால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க-வின் சீனியர்கள் பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது'' என்கிறார்கள் போயஸ் கார்டன் வட்டாரத்தில். காரணம், அரசுத் துறைகளின் ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டில், பணியிட மாற்றம் மற்றும் புதியதாகப் பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட அரசு நிர்வாக விஷயங்களில் மட்டும்தான் ராவ் தலையீடு அதிகம் இருந்தது என்று புகார்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க-விலும் அவர் அறிவிக்கப்படாத பொதுச் செயலாளராக இருந்தார் என்பதுதான். இதனை 2011 - 2016 வரையிலான அ.த…
-
- 0 replies
- 422 views
-
-
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு கடந்த 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உடனே ரத்து செய்யும்படி அம்மாநில அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுமாறும் இந்திய உள்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், இந்திய உள்துறை கடைசியாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று சுட்டிக…
-
- 0 replies
- 535 views
-
-
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வங்கிக் கணக்கு, சொத்துக்களை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பவரின் புகழ் மாநிலம் கடந்தும் பரவி உள்ளதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் அவர் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவர் ஸ்டார் பற்றிய வாழ்க்கைக் குறிப்பே உள்ளது. “மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து, பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில…
-
- 0 replies
- 339 views
-
-
காயமே இது பொய்யடா! வாஸந்தி நமது முன்னோர்கள் - சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம். 'உலகமே ஒரு நாடக மேடை; எல்லோரும் நடிகர்கள்' என்றார் ஷேக்ஸ்பியர் நானூறு ஆண்டுகளுக்கு முன் - எல்லாமே மாயை என்று நமது சித்தர்கள் சொன்னதுபோல. …
-
- 0 replies
- 686 views
-
-
உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியிலிருந்து விலகிய, நடிகர் ஆனந்தராஜை, ஜெ., அண்ணன் மகள், தீபா ஆதரவாளர்கள் நேற்று சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சசிகலாவுக்கு, கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; ஜெ., அண்ணன் மகள் தீபாவை, 'கட்சி தலைமை ஏற்க வேண்டும்' என்றும், வலியுறுத்தி வருகின்றனர். சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள், சமூக வலைதளங்களில், தீபாவிற்கு ஆதரவு தி…
-
- 0 replies
- 498 views
-
-
இலங்கை இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு: சேலம் மாணவர்கள் அனுசரிப்பு சேலம்: இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். சேலம் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், சேலம் கலைக்கல்லூரியிலிருந்து, போஸ் மைதானம் வரை ஊர்வலமாக வருவதற்காக சேலம் மாநகர காவல்துறையில் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், திடீரென்று நேற்று காவல்துறை அனுமதியை ரத்து …
-
- 0 replies
- 439 views
-
-
இரு அணிக்கும் இல்லை இரட்டை இலை! பிரமாண பத்திரங்களை படிக்க போவதில்லை தேர்தல் கமிஷனிடம், பலத்தை நிரூபிப்பதற் காக, கட்சி நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரங் களில் கையெழுத்து பெறுவதில், அ.தி.மு.க., அணிகளிடையே, கடும் போட்டி தொடர்கிறது. இதனால், இரு அணிகளுக்கும், இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் கமிஷனிடம், தங்களுடைய பலத்தை நிரூபிக்க, பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். கட்சியில் இருப்பவர்களிடம், தங்களுக்கு சாதகமாக, பிரமாண பத்திரங்களை வாங்கி, ஒட்டுமொத்தமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை, பன்னீர் அணி தரப்பி…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கையிலிருந்து கடத்திய தங்கத்துடன் இந்தியாவில் இருவர் கைது ; பிரதான நபரைத் தேடி வலைவீச்சு ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று…
-
- 0 replies
- 373 views
-
-
''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?'' தமிழகக் கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, 'கள ஆய்வு' என்று ஒவ்வோர் ஊராகச் சென்று வருகிறார். கோவையில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம், இப்போது ஒவ்வொரு நகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் பன்வாரிலால் புரோகித் வரும்போது அவருக்கு தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படுகிறது. சமீபத்தில் திருச்சி வந்த கவர்னருக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டனம் தெரிவ…
-
- 0 replies
- 413 views
-
-
உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு? கௌதமி கான் பிபிசி தெலுங்கு செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNILEVERUSA.COM படக்குறிப்பு, ஷாம்புகள் உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையா…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எழுப்பிய புதிய கேள்வி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுள் ஒருவரான செலமேஸ்வர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். டெல்லியில் நடந்த ஹார்வர்டு க்ளப் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய “ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கரண் தாப்பர் உடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது நீதிபதி செலமேஸ்வர் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு …
-
- 0 replies
- 696 views
-
-
”இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம்!”- ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் ``பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும்.” நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். – பெரியார் (விடுதலை:23-8-1940) …
-
- 0 replies
- 758 views
-
-
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி நபரொருவர் தம்மிடம் 10 இலட்சம் இந்திய ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் சென்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியாவை சேர்ந்த செல்வராஜா என்பவரே தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் தர்சிகா மற்றும் தனது 2 மகன்களும் வந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்று, பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் சிலருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை(02) காலையில் சென்ற செல்வராஜா, முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்…
-
- 0 replies
- 446 views
-