Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 12 மணி நேரத்தில் புயலாக மாறும்... புயல், மழை அப்டேட்... வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பெரிதாக மழையைத் தராமல் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இப்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயல் ஆகவும் மாற உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்பதுதான் சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் எச்சரிக்கை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது? தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்க…

  2. இலவச வைஃபை, கலக்கும் காபிஷாப்... தமிழ்நாட்டில் ஒரு ஸ்மார்ட் கிராமம்! அது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழி. அங்கே இருக்கும் குருடம்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தாலே நீங்கள் ஒரு புது பரவசத்தை உணரலாம். எல்லா கிராமங்களிலும் இருக்கும் அதே இயற்கை சூழல் இங்கேயும் நிச்சயம். அத்துடன் நவீன வசதிகளுடன் ஒரு ஸ்மார்ட் கிராமம் என மெச்சும் வகையில், மற்ற ஊர்களிடம் இருந்து தனித்து தெரிகிறது இந்த குருடம்பாளையம். அங்கே என்ன சிறப்பு? வாங்க தெரிந்துகொள்ளலாம். முதன்முதலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த இலவச இணையம், காபி ஷாப், சோலார் மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை என்று பல விதங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் கிராமம் தான் இந்த குருடம்பாளையம். இவை …

  3. அரசியலுக்கு மு.க. அழகிரி "முழுக்கு"? சென்னையில் பரபரப்பு பேட்டி. சென்னை: தாம் அரசியலிலே இல்லை; என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்கவே வேண்டாம் என முக அழகிரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவர் முக அழகிரி. கருணாநிதி, ஸ்டாலினுக்கு சமமாக திமுகவில் கோலோச்சினார் அழகிரி.கருணாநிதிக்கு பிறகு தமக்குதான் திமுகவின் தலைமை பதவி கிடைக்க வேண்டும் எனவும் வியூகம் வகுத்து செயல்பட்டார் அழகிரி. ஆனால் அவரது அத்தனை வியூகங்களையும் ஸ்டாலின் வீழ்த்தினார். தற்போது திமுகவை விட்டே நீக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார் அழகிரி. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலையை முன்வைத்து அழகிரி தொடர்ந்து கோபாலபுரம் சென்று சந்தித்து வருகிறார். இதனால…

  4. ”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ் நடிகர் சங்க 63வது பொதுக்குழு, சென்னை தி-நகரில் இருக்கும் நடிகர் சங்கத்திற்கான வளாகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. சங்கத்தைச் சேர்ந்த இறந்த மூத்த நடிகர்களுக்கு முதலாவதாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நினைவு கூரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். பொதுக்குழுவிற்கு அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழைய உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் பொதுக்குழுவிற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுக…

  5. வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!! பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும் பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன? தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக…

  6. கனடாவில் பறந்த கிருஷ்ணகிரி மானம்! -அரசு மருத்துவமனைகளின் நேரடி அவலம் தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து கனடா பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிபரம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ' பலதரப்பட்ட நோய்களுக்கும் ஒரே மாத்திரைகளைக் கொடுப்பதால், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை' என அதிர வைக்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள். கனடா நாட்டில் குயல்ப் பல்கலைக்கழக(Guelph university) ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவ ஆய்வு நடத்த வந்துள்ளனர். முதன்மை ஆய்வாளர் மருத்துவர் வாரன் டோட் தலைமையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 26 கிராமங்களில் 1,693 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. ' இந்தியாவின் மற்ற மாநில…

  7. விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த நாள் தமிழகத்தில் நேற்று பரவலாக கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கைத் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனின் 62வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்னும் தொடர்ந்த போதிலும், பிரபாகரன் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகளும் கொண்டாடின. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியிட்டு விழ…

  8. இலங்கை தமிழர்கள் பதிவு செய்வது கட்டாயம்: காவல் நிலையங்களுக்கு வருபவர்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கை சென்னையில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வது கட்டாயம். பதிவு செய்ய வருபவர்களை அலைக்கழித்தால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். குறிப்பாக தமிழகத் துக்கு அதிக அளவில் அகதிகளாக வந்தனர். தமிழகத்தில் தற்போது 113 முகாம்களில் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மற்ற இடங் களில் 35 …

  9. ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, "ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்" என்று கூறியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ ம…

  10. 200 ஆண்டுகளுக்கு முந்தைய மைல் கல்லில் 'தமிழ்': மொழிக்கு பெருமை சேர்த்த ஆங்கிலேயர்கள் பல்லடம் அருகே கண்டெடுக்கப் பட்ட மைல் கல்லில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஜெ.கிருஷ்ணா புரம் அருகே அண்மையில் மிகப்பழமையான மைல் கல் ஒன்று சாலையோரத்தில் இருப்பது தெரியவந்தது. அதில் ரோமன், அரபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட மைல் கல் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்…

  11. ‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள் மக்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்…

  12. 'இசை மேதை' பாலமுரளி கிருஷ்ணா காலமானார் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்குக்கு வயது 86. சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர். திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒரு நாள் போதுமா' என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர் இவர். நடிகர் கமல்ஹாசன் இவரை பற்றி குறிப்பிடும்போது 'என் இசை குரு' என்பார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர். http://www.vikatan.com/news/tamilnadu/73159-great-carnatic-sing…

  13. ‘அமைச்சர் பதவியில்தான் இருக்கிறாரா ஓ.பி.எஸ்?!’ -கடுகடு கார்டன்; கதிகலக்கும் கோட்டை அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வர…

  14. எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் ! தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு இடையேயும் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன்…

  15. தமிழ்நாட்டில்.... விடை தெரியாத 5 மர்மமான இடங்கள்.

  16. திருப்பரங்குன்றம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் | படம்: ஆர்.அசோக். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்…

  17. 3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜ…

  18. அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள் ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன. அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை ம…

  19. நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியத…

  20. 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அல…

  21. மதன் | கோப்புப் படம். வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன் திருப்பூரில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன், கடந்த மே 27-ம் தேதி திடீரென மாயமானார். மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம், முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். அதேநேரத்தில், ரூ.200 கோடி பணத்துடன் மதன் மாயமாகி விட்டதாக எஸ்ஆர்எம் கல்விக் குழுமமும், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி மதன் ஏமாற்றி விட்டதாக 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்தனர். இது ஒருபுறம் இருக்க, மதனின் தா…

  22. ஏழை மக்கள் கதறல்...20 ரூபாய் டாக்டர் மரணம்! இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது. இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிக்கும் உயிர்கள் பல உண்டு. அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள். நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் க…

  23. ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பேசுகிறார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். வாசகர் திருவிழா 2016 | காஞ்சிபுரம் சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக் கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான …

  24. ‘உங்களைச் சுற்றி என்ன நடந்தது தெரியுமா?’ - முதல்வருக்கு கடிதம் எழுதிய சசிகலா புஷ்பா 'அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார்' என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 'நீங்கள் சிகிச்சையில் இருந்தபோது உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்' என விரிவாகவே கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 59 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். "நோய்த் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதால், கடந்த சில வாரங்களாக பிஸியோதெரபி சிகிச்சைகள் வேகமெடுத்து வருகின்றன. தற்போது எழுத்துப் பயிற்சி, கை விரல்கள் இயக்கத்திற்கான பயிற்சி…

  25. ஜெயலலிதா அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை தமிழக முதல்வர் ஜெயலலிதா,இன்று மாலை மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, அப்போலோவில் அட்மிட்டாகி நாளையுடன் இரண்டு மாதங்கள் முடிவடையப் போகிறது.ஆனால், தமிழக அரசியல் நாள்தோறும் அவரை சுற்றித்தான் நடந்துகொண்டு இருக்கிறது. நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா,டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியானது.ஆனால், அவர் தனி வார்டுக்கு மட்டுமே மாற்றப்பட்டார்.இந்நிலையில், அவர் இன்று மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல், ரூபாய் நோட்டுப் பிரச்னை, தமிழக அரசியல் சூழல் போன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.