Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம்… இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல .. சுனாமிக்கு கூட அதிர்ச்சி அடையாத தமிழன் ஆண்டுதோறும் லட்சுமிராய் பிறந்தநாளுக்கு அதிர்ச்சியடைவான். காரணம் ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் ரசிகர் மன்ற வாழ்த்து போஸ்டர்கள். நம்ம நாட்டு தலையெழுத்துப்படி நடிகர்களாவது அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ரசிகர் மன்றங்கள் உருவாகின்றன. நடிகைகளுக்குமா? என்ற சந்தேகமும் எழும். லட்சுமிராய்க்கு அடுத்து இப்போது கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷிடம் சமீபத்திய இன்ப அதிர்ச்சி எது? என்று கேட்டதற்கு "சில நாட்களுக்கு முன்பு என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் என்னை சந்தித்தார்கள். எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கியிருப்பத…

  2. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் புறப்பட்டார்: முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு டாக்டர் ரிச்சர்ட் பீலே நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அப்போலோ ம…

  3. கவர்னரை பார்க்க விடாத மர்மம்! அலுவலக மேஜையில், இருந்த விகடன் 90 இதழை புரட்டிய கழுகார், ‘‘புத்தகத்துக்கு செம ரெஸ்பான்ஸ்’’ என்றபடி, கருணாநிதி பேட்டிவந்த பக்கத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு ‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். ‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் இப்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்’ என சொன்ன கருணாநிதி, ‘ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத…

  4. மர்ம படகில் வந்த மூவர் கைது இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த படகிலிருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. அவர்களிடமிருந்து, படகு மற்றும் அதிவேக படகுக்கான இன்ஜின் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீனவர்கள் இல்லை என்ற சந்தேகம் வந்ததையடுத்து அவர்களிடம் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184511/மர-ம-படக-ல-வந-த-ம-வர-க-த-

  5. அப்போலோவில் அதிக நாட்கள் சிகிச்சை எடுத்த அரசியல் தலைவர்கள்! - ஓர் அலசல் அப்போலோவும் அரசியலும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சைக்காக அவர்கள் முதலில் செல்வது அப்போலோ மருத்துவமனைக்குத்தான். மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களும் இங்கு வந்து சிகிச்சை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். 1984-ம் ஆண்டு அக்டோபர் 5 -ம் தேதி முதல்வராக இருந்த எம். ஜி .ஆர் உடல் நலமின்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர்தான் அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை தரம் குறித்து இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்தது. ஒரு மாத காலம் சிகிச்சை எடுத்த எம்.ஜி.ஆர் ! 'எம்…

  6. சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக 2வது முறையாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வந்துள்ளார். கவர்னர் வந்தார் : செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அக்டோபர் 1ம் தேதி வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் பூரண நலம் பெறும் வரை அவர் கவனித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர…

  7. அப்போலோவில் ஒரு மாதம்- முதல்வருக்கு வந்திருக்கும் நோய் இதுதானா? இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான். கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார். அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ. அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்…

  8. ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாய…

  9. கோவை காந்திபார்க் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான ஐ ஏ எஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஐ ஏ எஸ் மற்றும் வங்கி பணி பயிற்சியில் சுமார் 150 மாணவ மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இந்த மையம் அமைந்துள்ள மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தின் ஒரு தளத்தில் பட்டாசுகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அறையிலிருந்து தீ மளமளவென மற்ற இரண்டு தளங்களுக்கும் பரவியது. தீ பிடித்ததும் அறைக்குள் இருந்தவர்கள் உடனடியாக தப்பித்து வெளியேறினர். மூன்றாவது தளத்தில் மட்டும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் புகை மூட்டத்தால் மூச்சு தினறி மயக்கம் அடைந்தனர். தீ விபத்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து மூன்றாவது தளத்தில் மாட்டி க…

  10. இலங்கை கடத்தவிருந்த போதைப் பொருள், வயகரா மாத்திரைகள் மீட்பு ; மூவர் கைது (ராமநாதபுரத்திலிருந்து ஆர் .பிரபுராவ்) மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், முக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிறப்புபிரிவினர் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மண்டபம் …

  11. ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்! ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்: தொற்றுநோய் கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர் சர்க்கரை நோய் நுரையீரல் இதயம் இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய் அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை அறிக்கைக…

  12. சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 5 பெண்கள் உள்பட 7 பேர் பலி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கிடங்கில் இருந்து லாரியில் பட்டாசு ஏற்றும்போது இந்த விபத்து நடந்துள்ளது. கிடங்கில் இருந்து பட்டாசு ஏற்றிய மினி வேன் வாகனமும் தீப்பிடித்து எரிகிறது. தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி வருகின்றன. பட்டாசு கிடங்கில் 20 பேர் சிக்கியுள்ளனர். பட்டாசு கிடங்கின் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் நோயாளிகள் சிக்கியுள்ளதாகவும் இதுவரை நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வ…

  13. 'எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்!' -சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாலும், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவே நீடிக்கிறார் சசிகலா புஷ்பா. முதல்வருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் வெளியிடும் கருத்துகள் அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படுகிறது. ராஜாத்தி அம்மாவின் சமாதானப் பேச்சு எடுபடாமல் போனதால், சசிகலா புஷ்பாவுக்கு எதிரான சுவரொட்டிகள், வழக்குகள் என விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. சசிகலா புஷ்பாவிடம் பேசினோம். தஞ்சை இடைத் தேர்தலில் முதல்வர் முன்பு தேர்வு செய்த ரங்கசாமியே நிற்கிறார். 'சசிகலா நிற்பார்' என்று வந்த செய்தி, வதந்திதானே? " நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முதல் நோக்கமே, ஓ.பன்னீர்செல்வத…

  14. இடிக்கப்படும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது. மறையும் மற்றுமொரு மதுரை சினிமா திரையரங்கு- சிந்தாமணி 1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில்,…

  15. தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் பொலிஸாரின்; இந்த நடவடிக்கையை மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் அனைத…

  16. முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்தை தெரிவித்து, பின்னர் அது நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்ட கருத்து என கூறி பல்டியடித்தார். இந்நிலையில் தமிழக இளைஞர்களை நான் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு எனவும் கோழைகள் எனவும் கூறவேண்டி வரும் என கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த காவல்துறை, பலர் மீது வழக்கும் 7 பேரை கைதும் செய்தது. …

  17. பத்து நாட்களாக அப்போலோ அறிக்கை ஏன் இல்லை? #ApolloUpdates அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை சார்பில் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அவர்கள் சொல்லி இருந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முதல்வர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இன்னும் இரண்டு நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று கு…

  18. மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி! கவர் ஸ்டோரி சின்னச் சின்ன ஞாபகங்கள் சின்னவள் என் சிந்தையிலே! அத்தை என்று உன்னை அழைக்க அமுதூறுது என் நாவிலே! அன்புக்கரம் நீ பிடித்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசையிலே! வண்ண வண்ணப் பூங்காவில் அத்தை மடி மெத்தையிலே சின்னவள் நான் குறும்புசெய்ய புன்னகைத்தாயே மலர் போலே! - ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமார் மகள் தீபா எழுதிய கவிதை இது! ‘இளவேனில் பூக்கள்’ என்கிற தீபாவின் கவிதைத் தொகுப்பில் எழுதப்பட்ட முதல் கவிதையே அத்தை மடி மெத்தையடிதான். அத்தை ஜெயலலிதாவை நினைத்து தீபா எழுதிய இந்தக் கவிதைகள் ஜெயலலிதாவின் காதுகளில் எட்டியதா? பவர் ஸ்டார்கூட அப்போலோ மருத்துவமனைக்குள் போய்த் தி…

  19. வெளிநாடு சிகிச்சை.? ஜெயாவுக்கு காத்திருக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம்.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரம் கடந்தும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ…

  20. அப்போலோவில் ரஜினிகாந்த் முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/69772-rajinikanth-visits-apollo-to-check-regarding-jayalalithaas-health.art

  21. ’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...! 1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது. 44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழு…

  22. அப்போலோ செல்லவிடாமல் விஜயகாந்தை தடுப்பது எது? அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதரவாகக் கரங்கள் நீள்வது அரசியலுக்கு அப்பாற்பட்ட கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. விருப்ப அறிக்கை முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் …

  23. டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜி.எஸ்.ஜா. தலைமையிலான குழு அண்மையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணக்கு வர உள்ளது. இந்நிலையில் உயர்மட்டக் குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பேததிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலத்தடி நீர் ஆ…

  24. சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. வழக்கறிஞர் சுகந்தி வீடு சூறையாடப்பட்ட வழக்கிலும் அவர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா புஷ்பா எம்.பி வீட்டில் பணியாற்றிய பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர், இவர்களது மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் அம்மா கௌரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பானு…

  25. பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? - ‘கப்சா’ கவர்னர் “பன்னீர்செல்வம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே ஆஜரானார் கழுகார். ‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர், இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார். ‘‘எப்படி நடந்தது இது?” ‘‘தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.