Jump to content

தமிழ்நாடு - வயது 60


Recommended Posts

தமிழ்நாடு - வயது 60

ப.திருமாவேலன்

 

வம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்த நாள். அதுவும் இந்த நவம்பர் 1, வைர விழா ஆண்டு. `‘இது தமிழ்த் தேசியப் பெருநாள்’' என உதிரம் கொதிக்க ஜீவா சொன்னது இந்த நாளைத்தான்.

‘தமிழ் கூறும் நல்லுலகத்து...’ என்று தொல்காப்பியமும், ‘தென் தமிழ் நன்னாடு...’ என இளங்கோவடிகளும், ‘தமிழ்ப் பூமி...’ என அடியார்க்கு நல்லாரும், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...’ என மனோன்மணியம் சுந்தரனாரும், ‘திராவிட உத்கல பங்கா...’ என ரவீந்திரநாத் தாகூரும் சொன்ன தமிழ்நாடு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது.

p8b.jpg

p8.jpg

``இந்த அவையில், தெலுங்கு நாட்டுக்காரர் இருக்கிறார்கள்; கன்னடர் இருக்கிறார்கள்; கேரள தேசத்தவர் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டுக்காரர்களும் இருக்கிறார்கள். நவம்பர் முதல் தமிழ் நாட்டுக்காரர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்க, எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தோழர் ஜீவானந்தம் சொன்னபோது, அண்ணாமலைப்பிள்ளை என்கிற உறுப்பினர், ‘`ஆந்திராவைச் சேர்ந்தவர்களைத்தான் நாங்கள் இதுவரை முதலமைச்சர்களாக ஏற்றுக்கொண்டோம். அப்படி இருந்தும் இவர்கள் `பிரிய வேண்டும்' என்கிறார்கள். உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், எங்கள் நாட்டை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்பதுதான்” என்று கேட்டுக்கொண்டார். நமது நாட்டை நம்மிடம் விட்டுவிட்டு, ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்தக் காலத்தில் நமக்கு ‘மதராஸ் ஸ்டேட்’ எனப் பெயர். `சென்னை ராஜதானி' என்றும் சிலர் செப்புவார்கள். இன்றைய ஆந்திரா, அதில் முழுமையாக இருந்தது. மைசூர் நீங்கலாக கர்நாடகம், கொச்சி நீங்கலாக கேரளா என, பல பகுதிகள் இதனுடன் இருந்தன. அனைத்தும் சேர்ந்த அன்றைய சென்னை மாகாணத்துச் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 420. இவர்கள் பிரிந்துபோன பிறகு, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.

தென் இந்தியாவின் முக்கியப் பகுதியே சென்னை மாகாணம்தான். ஆங்கிலேயர் முதலில் உருவாக்கிய மூன்று முக்கிய மாகாணங்களில் சென்னையும் ஒன்று என்பது நம்முடைய சிறப்பு. தமிழில் இருந்து பிறந்த கிளை மொழிகள் என்பதால், கன்னடமும், கலி தெலுங்கும், கவின் மலையாளமும் என நாம் நினைத்தோம். ஆனால், அவர்கள் நினைக்கவில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், சென்னை மாகாண அரசியலில் கோலோச்சியவர்கள் தெலுங்கு மொழியினர். ஆனால், இனமாறு பாடு கண்டு அல்லது இனவேறுபாடு கொண்டு தனி ஆந்திரம் கேட்டவர்களும் அவர்களே!

மொழிவாரியாக முதலில் தனி மாகாணம் கண்டது ஆந்திரம். `சென்னையும் வேண்டும், சித்தூரும் வேண்டும், திருத்தணியும் வேண்டும்' என ‘விசால ஆந்திரப் பிரதேசம்’ அமைக்கத் துடித்தார்கள். ம.பொ.சி நடத்திக்காட்டிய வடக்கு எல்லைப் போராட்டம் சென்னையையும் திருத்தணியையும் நமக்கு வாங்கிக் கொடுத்தது. திருவாலங்காடு கோயிலும் ஓசூரும் கிடைத்தன. திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புகளின் போராட்டத்தால் தென் தமிழகத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கல்குளம், செங்கோட்டை ஆகியவை நமக்குக் கிடைத்தன. செங்கோட்டை வனமும், தேவிகுளம், பீர்மேடும் கேரளாவுக்குப் போய்விட்டன. தென் தமிழகப் போராட்டம் நடக்காமல்போயிருந்தால், இன்றைய கன்னியாகுமரி மாவட்டமே தமிழகத்தில் இருந்திருக்காது. நிறைய இழந்தோம். ஓரளவாவது பெற்றோம். தமிழன் என்கிற இன உணர்வும், ஒன்றுபட்ட போராட்டங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு தமிழ்த் தேசத்தை இந்திய எல்லைப்பரப்பில் உருவாக்க அடிப்படையாக அமைந்தன.

`‘ `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினால், உலகத்துக்குத் தெரியாது'’ என்று அன்றைய காங்கிரஸ் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சட்டமன்றத்தில் சொன்னார். ‘மதராஸ் ஸ்டேட்’ எனச் சொன்னால்தான் உலகம் அறியும் என்பது அவரது எண்ணம். அதனால்தான் 10 ஆண்டுகாலம் (1956 - 1967) `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட மறுத்தது காங்கிரஸ் அரசு. `‘தமிழ் என்பது, ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. எல்லா கட்சிகளுக்கும் தமிழ் சொந்தம்’' என்று ஜீவா சொன்னதை, காங்கிரஸும் கேட்கவில்லை; காமராஜரும் ஏற்கவில்லை.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த பிறகுதான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப் பட்டது. தமிழ்நாட்டை உலகம் மறந்துவிட்டதா? தமிழ்நாடு அறியாத உலகம்தான் உண்டா? அழியா மொழிகளின் பட்டியலில் தமிழ் உள்ளது. அனைத்துலக நாடுகளின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. தமிழன் வாழா நாடு, உலக வரைபடத்தில் இல்லை. ஈழத்தமிழராக இருந்தாலும், மலேசியத் தமிழராக இருந்தாலும் மங்கோலியத் தமிழராக இருந்தாலும், தமிழ்நாட்டை தங்கள் தொப்புள் கொடி உறவுகள் வாழும் நாடாக நினைக்கிறார்கள்; போற்று கிறார்கள்; வந்து போகிறார்கள்; நம்மைப் பெருமையாக மதிக்கிறார்கள். ஆனால், நாம் பெருமையாக வாழ்கிறோமா?

காவிரிக்காக கர்நாடகாவிடம் கையேந்தி, முல்லைப் பெரியாறுக்காக கேரளாவிடம் மடியேந்தி, கிருஷ்ணா, பாலாறுக்காக ஆந்திராவிடம் பிச்சையெடுத்து நிற்கிறது தமிழ்நாடு. சென்னை ராஜதானியாக இருந்தபோது நம் வரிப்பணத்தால் பிழைத்த பகுதிகள் இவை. இன்று நம்மையே வதைக்கின்றன. கர்நாடகாவும் கேரளாவும்  அடிமைப் பிரதேசத்தைப்போல அச்சுறுத்து கின்றன. ஓசூரில் வந்து சேர்பவர்கள் ஓலமிடு கிறார்கள். ‘பாண்டிய நாட்டுக்காரனை விடாதே!’ எனத் துரத்துகிறது கேரளா. தட்டிக்கேட்கத்தான் யாரும் இல்லை. பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், சில ஏற்ற-இறக்கங்கள் இருந்தாலும் ம.பொ.சி., ஜீவா, பெரியார், அண்ணா ஆகியோர் ஒரே நேர்கோட்டுக்கு வந்தார்கள் அன்று. ஆனால் இன்று, சாண் ஏறினால் முழம் இழுக்கும் மனிதர்களின் கையில் கட்சிகளின் தலைமைப் பதவி சிக்கிக்கிடக்கிறது.

எல்லா கட்சிகளும் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஒரே மேடையில் இருக்கின்றன. கர்நாடக காங்கிரஸ் சித்தராமையாவை, தமிழ்நாடு காங்கிரஸ் திருநாவுக்கரசு கண்டித் திருக்க வேண்டும். பா.ஜ.க எடியூரப்பாவை, பா.ஜ.க தமிழிசை செளந்தரராஜன் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். எங்கேயாவது போய் எம்.பி ஆனால் போதும் என, ப.சிதம்பரமும் இல.கணேசனும் நினைக்கும் நாட்டில், உரிமைகளை எப்படிப் பெற முடியும்? தேசியக் கட்சிகள், தேய்நிலைச் சிந்தனைகளில் இருப்பதால்தான், பாகிஸ்தான் படையால் கொல்லப்படும் குஜராத் மீனவன் இந்திய மீனவனாகவும், சிங்களப் படையால் கொல்லப் படும் தமிழக மீனவன் தமிழ் மீனவனாகவும் அடையாளம் குறுக்கப்படுகிறான். கடந்த 30 ஆண்டுகாலத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. எந்த இந்திய ரத்தமும் துடிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தெருவில் காந்தியும் நேருவும் உண்டு. தமிழன் வீட்டில் போஸும் பகத்சிங்கும் உண்டு. உ.பி-யில் வ.உ.சி உண்டா? கொல்கத்தாவில் காமராஜ் உண்டா? ராஜஸ்தானில் பாரதி உண்டா? திரிபுராவில் திருவள்ளுவர் உண்டா? இல்லை. ஏன் இல்லை? நாமே இவர்களை மதிக்கவில்லை. ‘ஜி’ போட்டு அழைத்துக்கொள்வதாலேயே  இந்தியனாகிவிட்டதாக தேசியக் கட்சி உறுப்பினர்கள் நினைப்பதை என்ன சொல்ல?

p8a.jpg

மாநிலக் கட்சிகள்... குறிப்பாக, திராவிடக் கட்சிகள் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. `கபாலி' படத்தில் எல்லா காட்சிகளிலும் ரஜினி இருப்பதுபோல், எல்லா இடங்களிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான். அண்ணா ஆரம்பித்த கட்சியை கருணாநிதியும், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதாவும் தங்களது பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றி விட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எதை எல்லாம் பேசினாரோ, அதை எல்லாம் காவுகொடுத்தே வந்தார் கருணாநிதி. எந்த அடித்தட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினாரோ, அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் கோடீஸ்வர, லட்சாதிபதிகளின் கையில் கட்சியை ஒப்படைத்தார் ஜெயலலிதா. கொள்கை அரசியலையும் ஆட்சியையும் இவர்கள் நடத்தவில்லை. கருணாநிதி தந்தவை வெறும் நலத்திட்ட உதவிகள். ஜெயலலிதா தந்தவை இலவச உதவிகள். வாக்காளர்களைக் கவர்வதில் இவர்களுக்குள் இதற்குத்தான் போட்டி. காங்கிரஸ், பா.ஜ.க-வின் தயவை யார் முந்திப்பெறுவது என்பதிலும் போட்டி. கருணாநிதி, ஜெயலலிதாவை மிரட்டிப் பணியவைப்பதில் யார் கில்லாடி என்பதில்தான் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் போட்டி. இந்தப் போட்டி அரசியலில், தமிழனின் வேட்டி கிழிந்து தொங்குகிறது.

இந்தக் கட்சி அரசியல்தான் தங்களைப் போலவே மக்களை உருவாக்குகிறது. ஒரு பக்கம் கல்வியில், பொருளாதாரத்தில் தமிழ்நாடு  வளர்ந்தது. இன்னொரு பக்கம் வறுமையில், வேலையில்லாத் திண்டாட்டத்தில் தமிழ்நாடு தளர்ந்தது. இந்த முரண்பாடு, தமிழகத்தை மூச்சுத் திணறவைக்கிறது. கல்வியில், பொருளாதாரத்தில் வளர்ந்தவர்கள் சமூகத்தைவிட்டு விலகியும், வறுமையில், வேலையில்லாத் திண்டாட்டத்தில் உழல்பவர்கள் சாதி மற்றும் மத மயக்கங்களில் அமுங்கியும் போய்க்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு வருவது இதனால்தான்.

என்ன வளம் இல்லை? எல்லா இயற்கை வளங்களும் இருக்கின்றன. அதைவிடக் கூடுதலாக மனிதவளமும் இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு பக்கவாதத்தில் கிடக்கிறது. காரணம், ஒட்டுமொத்த இலக்கு இல்லை.

`தமிழனாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதால், மதமாகச் சேர்ந்தார்கள்.

தமிழனாகச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, சாதியாகப் பிரிந்தார்கள்'
- என்றார் அறிவுமதி.

இத்தகைய பிரிவினைகளில் இருந்து விடுபடுவதே வெள்ளிவிழா ஆண்டின் சபதமாக இருக்க முடியும். தமிழ் நிலம் சேர்ந்தோம். தமிழ்க் குணம் சேர்த்தோம் இல்லை. தமிழ்நாடு எனப் பேரு வைத்தோம். தமிழ்ச் சிந்தனைக்குச் சோறு வைத்தோம் இல்லை. தமிழ்நாட்டின் பெருமை, வார்த்தைகளில் இல்லை... வாழ்வதில் இருக்கிறது!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை மீட்ட அந்த 10 பேர்...! #TamilNadu60

TN_12108.jpg

 

1956-ம் நவம்பர் 1 தமிழ்நாடு உருவான நாள்! தொல்லுயிர் எச்சங்களும், மண்டை ஓடுகளும் தமிழ்நாட்டின் - தமிழர்களின் தொன்மையைச் சொல்வதற்கு இருந்தாலும் இந்த நிலப்பரப்பு தனித்த மாநிலமாக அமையவும், உருப்பெறவும் தங்களது வாழ்க்கையை ஒப்படைத்த உத்தம மனிதர்கள் ஏராளம். அடுத்தவர் நிலத்தை அபகரித்து உண்டு கொழுத்த மனிதர்களை மட்டுமே இப்போது பார்த்து வரும் மக்களுக்கு, இனப் பற்றால் மொழிப் பற்றால் தாய்த் தமிழகத்தின் எல்லைப் பரப்பைக் காத்த பத்துப் பேரும் வாழத் தெரியாதவர்களாகக் கூட தெரியலாம். ஆனால் அவர்கள்தான் நம்மை வாழ வைத்தவர்கள். அவர்கள் இவர்கள்...

ம.பொ. சிவஞானம்

MaPoSi_12366.jpg'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் அலறியபோது 'சென்னை நமதே' என்று சீறியவர் ம.பொ.சிவஞானம். 'தலை தந்தாவது தலைநகர் காப்பேன்' என்று மீசை முறுக்கினார். திருத்தணி மலையையே முழுங்கப் பார்த்தார்கள். திருப்பதியே நமக்குத்தான் சொந்தம் என்றவர் இவர். 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து' என்பது தொல்காப்பியம். பாட்டை ஆதாரமாகக் காட்டி வாதாடினார் புலவர். 'மாலவன் குன்றத்தை விட்டாலும் விடுவேன்; வேலவன் குன்றத்தை விடமாட்டேன்' என்று தமிழ்ச் சண்டை போட்டார். வட தமிழகத்தை தெருத் தெருவாய் அளந்து தீப்பொறி கிளப்பினார். இத்தனை காரியங்களையும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே செய்தார். விடுவார்களா காங்கிரஸ்காரர்கள்? விரட்டப்பட்டார் ம.பொ.சி. ஆனால் படைத்தார் புதிய தமிழகம்!

 

விருதுநகர் சங்கரலிங்கம்

Sankaralinganaar_12189.jpg1956 ஜூலை 27-ம் நாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த விருதுநகர் சங்கரலிங்கம், அக்டோபர் 13-ம் நாள் இறந்து போனார். 79 நாட்கள் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உடலுக்கு உணவு எடுக்காமல் உணர்வை மட்டுமே எடுத்துக்கொண்டு படுத்துக் கிடந்தார் சங்கரலிங்கம். மொழிவாரி மாகாணம் அமைத்தல் வேண்டும், சென்னைக்குத் தமிழ்நாடு எனப் பெயரிடுதல் வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்... என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வைத்த சங்கரலிங்கமும், காங்கிரஸ்காரர்தான். அன்றைய காங்கிரஸ் அவரைக் கிண்டல் செய்தது. உண்ணாவிரதம் இருந்த அவருக்கு முன்னால் எச்சில் இலையையும் அல்வாவையும் தூக்கிப் போட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். ''திருந்தாவிட்டால் இந்த ஆட்சி ஒழிந்தே தீரும்" என்று கடிதம் எழுதிவிட்டு இறந்தார். அவருக்கு இறுதிக்காலத்தில் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தன்னை வந்து சந்தித்த பேரறிஞர் அண்ணாவிடம், ''நீங்களாவது என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டு உயிர் துறந்தார் சங்கரலிங்கம்.

 

தோழர் ஜீவானந்தம்

Jeeva_12002.jpgகட்சிக் கொள்கைப்படி பார்த்தால் அவர் சர்வதேசியம்தான் பேசியிருக்க வேண்டும். ஆனால் ஜீவா, தமிழ்த்தேசிய சொற்களையே பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் அது இனவாதம். அதுபற்றி ஜீவா கவலைப்படவில்லை. தமிழ்நாடு பெயர் சூட்டுவது தி.மு.க-வின் கோரிக்கையே என்று காங்கிரஸ் தயங்கியபோது, ''தமிழ் அனைத்துக் கட்சிக்கும் பொது" என்றவர் ஜீவா. ''மொழிவாரியாக ராஜ்யங்கள் பிரிக்கப்படும் போது இந்திய தேசம் சுக்குநூறாக உடைந்து விடாது. காங்கிரஸ் கட்சியும் கூட சுக்குநூறாக உடையாது" என்றார். தேவிகுளம் - பீர்மேடு பகுதி தமிழகத்துடன்தான் சேர்க்கப்பட வேண்டும் என்று துடித்தார் ஜீவா. ''இது மலையாளி, தெலுங்கு மக்களுக்கு எதிரான பகைமைப் போராட்டமல்ல, நம்முடைய போராட்டம்'' என்ற ஜீவா, ''ஐக்கிய தமிழகத்துக்காக போராடுவது தமிழ் மக்களின் தாய்க் கடமையாகும்" என்றும் சொன்னார். ஐக்கிய தமிழகம், தமிழ் மக்கள் என்ற சொற்கள் மீது இன்றும் சில கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒவ்வாமை நோய் இருக்கிறது. ஜீவா 1956-ல் பேசினார். பேசியதால் பெற்றோம்.

 

பொட்டி ஶ்ரீராமுலு

Sriramalu_12516.jpgதமிழ்நாடு அமைய மறைமுகமாக உதவிய தெலுங்கர் பொட்டி ஶ்ரீராமுலு. அவர் அன்று தனி ஆந்திரம் கேட்டிருக்காவிட்டால் 'தமிழ்நாடு' அமைந்திருக்காது. சென்னை மயிலாப்பூர் லஸ் முனை அருகில் இன்றும் பொட்டி ஶ்ரீராமுலு அரங்கம் உள்ளது. 1952 அக்டோபரில் உண்ணாவிரதம் தொடங்கிய அவர் 58 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 15-ம் நாள் இறந்து போனார். சென்னையும் சேர்ந்த ஆந்திரம் கேட்டார் பொட்டி. சென்னையைக் கேட்காவிட்டால், ஆந்திரா அமைய தமிழரசு கழகம் ஆதரவு தரும் என்றார் ம.பொ.சி. ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் அமைய ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வைத்த கோரிக்கையை ம.பொ.சி. நிராகரித்தார். தகராறுக்கு இடமில்லாத வகையில் ஆந்திரா அமையும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். இப்படி ஆந்திரா பிரிக்கப்பட்டது தமிழ்நாடு அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

பி.எஸ்.மணியும் நேசமணியும்

Marshal%20Nesamani_12371.jpgகுமரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளாக விளங்கும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையின் நகர்ப்பகுதி ஆகியவை திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்திலிருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கு தெற்கெல்லை போராட்டம் என்று பெயர். இதில் முக்கியப் பங்கெடுத்தவர்கள் பி.எஸ். மணியும், நேசமணியும்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்கள் இவர்கள். 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'விடுதலை நாள் ஆர்ப்பாட்டம்' என்ற பெயரால் நடந்த போராட்டத்தில் மார்த்தாண்டம் ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 11 தமிழர்கள் உயிரிழந்தனர். காவல்துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்து மக்கள் போராடினார்கள். அதன் விளைவாகவே பல பகுதிகள் தமிழகத்துக்கு கிடைத்தன.

பூபேஷ் குப்தா

தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த வாதப்பிரதிவாதங்கள் - ஆகியவை ஏராளமாக உண்டு. இப்படி Boopash_12332.jpgதமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை செய்ய வேண்டியது மத்திய அரசு. டெல்லியில் இந்தக் குரலை எதிரொலித்தவர் பூபேஷ் குப்தா. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர். 'வரலாறு, மொழி, கலாச்சார அடிப்படைப்படி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து சென்னை மாகாண மக்களிடம் மிக ஆழமாக உள்ளது' என்று அவர் தீர்மானம் கொண்டு வந்தார். 'இப்படி ஒரு தீர்மானத்தை சென்னை மாகாண அரசாங்கம்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்' என்று பூபேஷ் குப்தா சொன்னார். பேரறிஞர் அண்ணா அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் இத்தீர்மானத்தை ஆதரித்து விரிவாகப் பேசினார். 'மக்கள் எங்களைத்தான் வெற்றி பெற வைத்துள்ளார்கள்' என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசினார். பூபேஷ் குப்தாவின் தீர்மானம் இறுதியில் தோற்கடிக்கப்பட்டது.

 

ஏ.கோவிந்தசாமி

A%20Govindasamy_12139.jpgமொழிவாரி மாகாணங்கள் அமைவதற்கான சட்டம் 1952-ல், சென்னை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்கவில்லை. 1957 தேர்தலில்தான் தி.மு.க முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. 1952 தேர்தலில் தங்களது கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரச்சாரம் செய்தது தி.மு.க! அந்த அடிப்படையில் சட்டமன்றத்துக்குள் சென்றவர் ஏ.கோவிந்தசாமி. இவர் திராவிட இயக்க சிந்தனைகளை சட்டமன்றத்தில் விதைத்துப் பேசினார். அன்று திராவிட நாடு கேட்டுக்கொண்டு இருந்தது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். அந்த அடிப்படையில் ஏ.கோவிந்தசாமி பேசினார். ''மொழிவாரியாக நாம் பிரிந்து இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்" என்று கோரினார் அவர்.

ஆந்திரா பிரிந்தபோது அவர்களுக்கு பிரிவு உபசார விழா சென்னை சட்டமன்றத்தில் நடந்தது. 'பிரிகிறீர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. வருத்தம் இல்லாமல் நீங்கள் பிரிந்து போங்கள்" என்றார். ஏ.கோவிந்தசாமி. 1952 - 57 காலகட்டத்தில் மொழிவாரி மாகாணத்துக்காக சென்னை சட்டமன்றத்தில் ஒலித்த முக்கிய குரல் ஏ.கோவிந்தசாமியுடையது.

சி.சுப்பிரமணியம்

C%20Subramani_12386.jpgமக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், 'தமிழ்நாடு' என்ற பெயரைக் கேட்டாலே எட்டிக் காயாகக் கசந்த காங்கிரஸ் கட்சிதான் 'தமிழ்நாடு அரசு' என்ற சொல்லை முதன்முதலில் வழிமொழிந்தாக வேண்டிய நெருக்கடிக்கும் ஆளானது. 1961 பிப்ரவரி 24-ம் நாள் பிரஜா சோசலிஸ்ட் உறுப்பினர் பி.எஸ். சின்னதுரை, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு மறுநாள் தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் அமைச்சர் சி.சுப்பிரமணியம். 'தமிழ்நாட்டு அரசின் வரவு செலவினை சமர்ப்பிக்கிறேன்' என்றார். இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்துக்குத் தயாராக இல்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழ்நாடு என்றும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் காங்கிரஸ் பயன்படுத்த சி.சுப்பிரமணியம் காரணமாக அமைந்தார்.

 

அண்ணா

பேரறிஞர் அண்ணா சொன்னார் 'தமிழ்நாடு' என்று. உறுப்பினர்கள் அனைவரும் 'வாழ்க' என்றார்கள்; ஒருமுறை அல்ல... மூன்று முறை Annadurai_12052.jpgஒலித்தது இந்தக் குரல், தமிழ்நாடு சட்டமன்றத்தில். 'தமிழ்நாடு என்று சொன்னால் இந்தியாவில் யாருக்கும் தெரியாது. உலகத்துக்கு தெரியாது' என்று எந்தக் காங்கிரஸ்காரர்கள் விளக்கம் அளித்தார்களோ அதே சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அண்ணா. எந்த சங்கரலிங்கனாருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண அண்ணாவாக இருந்து சத்தியம் செய்து கொடுத்தாரோ - முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதனை தனது வெற்றியாக அவர் சொல்லிக்கொள்ளவில்லை. ''இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்" என்றார் அண்ணா.

எல்லோரும் கொண்டாடுவோம்!

http://www.vikatan.com/news/coverstory/71041-10-leaders-who-bailed-out-tn-tamilnadu.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ்நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மட்டும்தான்... "தமிழ்நாடு".  தமிழைத்  தவிர....  
ஊழல், இலவசம், பிரியாணி, மது, சினிமா, இவைகள் மட்டுமே... 60ஆண்டுகளாக மக்களை ஆட்சி செய்கிறது...

Link to comment
Share on other sites

தமிழ்நாடு 60 : இன்றைய நாளின் சபதமாக இது இருக்கட்டும்...! #TamilNadu60

Map_16173.jpgமிழ்நாடு தன் 60-வது உருவான தினத்தைக் கொண்டாடுகிறது. அது, என்ன மாநிலம் உருவான தினம்... மாநிலம்  எங்காவது உருவாகுமா? ஆம், மாநிலம் உருவாகும். சென்னை மாகாணம் நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, நம் எல்லைகளைக் களவாட அனைத்துத் தந்திரங்களையும் அண்டை மாநிலங்கள் கையாண்டன. சென்னையை எடுத்துச்செல்ல ஆந்திரமும், கன்னியாகுமரியைக் கைப்பற்றக் கேரளமும் துடித்தன... எல்லைகளை இருள் சூழ்ந்தபோது, ம.பொ.சி., சங்கரலிங்கனார், அண்ணா, நேசமணி போன்ற தலைவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்... மக்களைத் திரட்டினார்கள். அவர்கள், பிரசவம் பார்த்ததால்தான் தமிழ்நாடு பிறந்தது. அவர்கள் எமக்கேன் என்று ஒதுங்கி இருந்தால், வட சென்னை ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்... திருத்தணி முருகனை தரிசிக்க நாம் ஆந்திரம் செல்ல வேண்டி இருக்கும்... கோலார் போனதுபோல் ஓசூரும் கர்நாடகா வரைபடத்தில் இருந்திருக்கும். போராடிப் பெற்றதுதான் இன்று நாம் வாழும் நிலப்பரப்பு... அந்த நிலத்தை நாம் முறையாகக் காக்கிறோமா?

கழிவான ரத்தநாளங்கள்!

‘‘அண்டமே பிண்டம்’’ என்றார் திருமூலர். எப்படி இந்த உலகம் பஞ்சபூதங்களின் கலவையோ... அதுபோலத்தான் மனித உடலும். இதை நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. இப்போது, கொஞ்சம் உங்கள் விழிகளை மூடுங்கள்... உங்கள் பிண்டத்தில் ரத்தத்துக்குப் பதிலாக கழிவுநீர் ஓடுவதாக; உங்கள் நுரையீரல் முழுவதும் நஞ்சு படிந்து இருப்பதாக; உங்கள் கல்லீரலில் மெர்க்குரியின் துகள்கள் படிந்திருப்பதாக நினைத்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது அந்த நினைப்பே உங்களை அச்சுறுத்துகிறதா... மயக்கம் வருகிறதா?

சரி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துக்கொள்ளுங்கள். அய்யோ... அந்தத் தண்ணீராவது தூய்மையானதா? சாயப்பட்டறைகளின், தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்காததா...?

இப்படியாகத்தானே இருக்கிறது தமிழ்நாட்டின் நிலை...? உங்கள் பிண்டத்தில், ரத்தநாளங்கள் உங்கள் உடலுக்கு பிராணவாயுவை கடத்தும் உயிர்காப்பான் என்றால், இந்த அண்டத்தில் ஆறுகள்தானே ரத்தநாளங்கள். உங்கள் ரத்தத்தில் பில்ருபின் அளவு 5-ஐத் தாண்டினால் மரணம் என்கிறது மருத்துவம். அதுபோலத்தானே ஆறுகளுக்கும். நாம் கழிவுகளைக் குவித்துக்கொண்டேபோனால் அது மரணித்துவிடாதா...? ‘நதி மரணிக்குமா’ என்று கேட்காதீர்கள். ஏரல் கடலை (ஏரியை)-யே கொன்றவர்கள் மனிதர்கள்...!

Noyyal_16358.jpg

 

நம் முன்னோர்கள் தமிழ்நாட்டு எல்லையில் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் மீட்க பெரும் போராட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்... குருதி சிந்தி இருக்கிறார்கள். ஆந்திர தலைவர்கள் கூவத்தை எல்லையாகவைத்து வட சென்னையை ஆந்திராகவும், தென் சென்னையை தமிழ்நாடாகவும் பிரித்துக்கொள்வோம் என்று பிதற்றியபோது பொங்கி எழுந்தார்கள் நம் பாட்டனார்கள். அப்படிப் போராடி பெற்ற கூவத்தை, கொசஸ்தலையை நாம் இன்று எப்படி வைத்திருக்கிறோம்...?  ம.பொ.சி-யின் ஆன்மாகூட நம் முகத்தில் காறி உமிழும்.

அண்டை மாநிலத்தின் குப்பைத்தொட்டி...!

ஆறுகள் பிராணவாயுவைக் கடத்தும் ரத்தநாளங்கள் என்றால், மலைகளும் காடுகளும்தான் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் கிடங்குகள். இன்று அந்தக் கிடங்குகளின் நிலை என்ன... கிரானைட், தாது என்று நாம் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்தானே...? நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு பி.பி.எம் மூச்சுக்காற்றிலும், மேற்குத் தொடர்ச்சி மலை கலந்திருக்கிறது. அந்த மலை சிதைந்தால் நாம் சிதைக்கிறோம் என்றுதானே அர்த்தம். இன்று  நாம் அதைச் சிதைத்துக் கொண்டிருக்கவில்லையா... இதை இன்று பார்த்தால் மார்ஷல் நேசமணிக்கு நெஞ்சடைக்காதா...?

002_16524.jpg

 

தன் ஆற்றிலிருந்து ஒரு பருக்கை மண்ணைக்கூட எடுக்காத அண்டை மாநிலங்களுக்கு, லாரி லாரியாக இங்கு தமிழ் முதலாளிகள்தான் மண்ணை அனுப்புகிறார்கள். இதற்காகத்தான் உணவருந்தாமல் மாண்டுபோனாரா சங்கரலிங்கனார்...?

இதற்கெல்லாம் மேலாக, தமிழ் நிலத்தை அண்டை மாநிலங்கள் குப்பைத்தொட்டியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இங்கு ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி பயிர் வளர்க்கலாம்.... குப்பைக்கிடங்கைக் கட்டி அமைக்கலாமா? பாலக்காட்டிலிருந்து கோவை பகுதியில் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்ட வரிசையாக வண்டிகள் நிற்கின்றன... தினம் தினம் கோவையில் மட்காத ரசாயனக் குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்கின்றன. இதைப் பார்த்தால் நிச்சயம் தோழர் ஜீவானந்தம் மூச்சுமுட்டியே இறந்துபோயிருப்பார்.

ஆற்றை, கழிவுநீர் பெருவாய்க்காலாக மாற்றி, காடழித்து கல் சமைக்கவா நம் பாட்டனார்கள் தாய்நிலத்தை மீட்டார்கள்..? தமிழன் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பிரித்துவாழ்ந்தான்.

நிலம், பொழுது ஆகிய இரண்டும்தான் முதற்பொருள். இதன்மீதுதான் அனைத்தும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதை நவீன அறிவியலும் ஆமோதிக்கிறது. நிலம் இல்லை என்றால் வாழ்வில்லை; பண்பாடு இல்லை; நாகரிகம் இல்லை. ஆம், நிலம் இல்லை என்றால் இங்கு நமக்கு எதுவும் இல்லை. அது தெரிந்துதான் நம் பாட்டன்கள் நல்வாழ்வுக்காகப் போராடினார்கள்... நாளை நம் பிள்ளைகளும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புவோமாயின்... அந்த நிலத்தைக் காப்போம்!

இதுவே இந்த நாளின் சபதமாக இருக்கட்டும்...!

http://www.vikatan.com/news/tamilnadu/71079-this-should-be-our-pledge-on-this-day-tamilnadu60.art

Link to comment
Share on other sites

இப்படியாகத் தான் நமக்கு கிடைத்தது குமரி மாவட்டம்...? #TamilNadu60

111_18335.jpg

ந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், இன்று மாநிலம் உருவான நாளாக இந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிதான் நமது தமிழகமும் சென்னை மாநிலம் என்ற பெயரில் புதிய எல்லை வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு மாநிலமாக உருவானது. இதே நாளில்தான் கன்னியாகுமரி மாவட்டமும் பிறந்தது. அது, பிறந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.

குமரி உருவான வரலாறு

1_18151.jpg

குமரி மாவட்டம் (தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய வட்டங்கள்) திருவிதாங்கூர் (கேரளா) சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதி ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே கவனித்து வந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கோலப்பன், ‘‘திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் வேலைகளுக்குக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கீழ்தான் இயங்க வேண்டும்’’ என்றார். அதை நடைமுறையிலும் கொண்டுவந்தார். இதனை காங்கிரஸ் தமிழ் பகுதி தலைவர்களான டாக்டர் நாயுடு, காந்திராமன், சிவதாணுபிள்ளை மற்றும் அக்கரை நீலகண்டபிள்ளை ஆகியோர் எதிர்த்தனர்

5_18441.jpg1935-ம் ஆண்டு இந்திய மாகாணங்களுக்கு ஓரளவு சுயஆட்சி கிடைத்தது. அதை கண்ட, மன்னர் ஆட்சிப்பொறுப்பில் வாழ்ந்த சமஸ்தானக்காரர்களும் தங்களுக்கும் ஜனநாயக உரிமை வேண்டுமென விரும்பினர்.


திருவிதாங்கூரும் மன்னர் ஆட்சியில் இயங்கியதால் இங்கும் சமஸ்தானக் காங்கிரஸ் தோன்றியது. 1938-ல் இந்தக் காங்கிரஸ், திவானாக இருநத சர்.சி.பி.ராமசாமி அய்யரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. சமஸ்தான காங்கிரஸுக்கும் திவானுக்கும் ஏற்பட்ட இறுதிப் போராட்டத்தில் திருவிதாங்கூர் தமிழர்கள் அதிகமாக ஈடுபடவில்லை. திருவிதாங்கூர் தமிழர்கள் சமஸ்தான காங்கிரஸை ஆதரிக்காதது மலையாளிகளுக்கு வெறுப்பை தந்தது. இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்து இணைத்து ஆட்சி நடத்துவது என அகில இந்திய காங்கிரஸ் கருதிய நீண்டகால கொள்கையை, சுதந்திரம் கிடைத்தபிறகு செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தது. இதன் பிரதிபலிப்பாக மொழிவாரி மாநில குரல் எங்கும் எழுந்தது. இந்தக் குரல் திருவிதாங்கூரில் எழுவதற்கு சமஸ்தானம் தடையாக இருந்தாலும் டெல்லி சூழ்நிலையை ஒட்டி கேரளத்திலும் இது மேலோங்கியது.

மலையாளப் பிரதேசங்களில் மூன்றாகப் பிரிந்து செயல்பட்ட அரசியல் ஸ்தாபனங்களாகிய மலபார் மாகாணக் காங்கிரஸ், கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் பெருந்தலைவர்கள், காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக அமைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். சமஸ்தான காங்கிரஸ் வேலைகளைச் செயல்படுத்த திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸின் கட்டுப்பாட்டில் நாகர்கோவிலில் டிவிஷன் கமிட்டி ஒன்று இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானக் காங்கிரஸின் ஒரே லட்சியம் திருவிதாங்கூரினுள் மன்னரின் கீழ் மக்களின் பொறுப்பாட்சி ஏற்படுத்துதல் என்பதுதான்.

‘‘தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!’

2_18024.jpg

1945-ம் ஆண்டு இறுதியில் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் தலைவர்கள் கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். தென்திருவிதாங்கூர் பகுதிகளில் கேரள காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்த்து குழுக்கள் அமைப்பதற்கு பொன்னாரை ஸ்ரீதரை நியமித்தனர். இவரோடு சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களும் இறங்கினர். இதனை முதன்முதலில் பி.எஸ்.மணி எதிர்த்தார். கேரள காங்கிரஸ் சார்பாக ஸ்ரீதர் வாசித்த தீர்மானத்துக்குப் பதிலளித்த பி.எஸ்.மணி, ‘‘ஸ்ரீதர் வாசித்த தீர்மானம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என இருக்கிறது. கேரளம் அமைவதானால் அமையட்டும். அதில், கன்னியாகுமரி வரை என இருக்கும் பகுதி நீக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாகாணம் அமையும்போது திருவிதாங்கூரினுள் அகப்பட்டுள்ள தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடும் விவாதம் நடைபெற்றது. பி.எஸ்.மணியின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியது.
அதன்பின், 1945-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் உருவானது.

‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்!’

தெற்கெல்லைத் தமிழர்களின் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க வேண்டும் என திட்டமிட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்றத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸைக் கட்டுப்படுத்த தமிழர் தேசியக் காங்கிரஸ் என்ற போலியான அமைப்பை எதிர் அணியினர் உருவாக்கினார்கள். அதன்பிறகு, சுசீந்திரம் இரவிபுதூரில் கூடிய அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் 3_18246.jpgகட்சியின் பெயரை ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என பெயர்மாற்றம் செய்துகொண்டனர். 1947ஆம் ஆண்டு ஜனவரியில் சில மாற்றங்களோடு திருவிதாங்கூர் அரசின் புது அரசியலமைப்பு பற்றிய அறிக்கை வெளியானது. அறிக்கையில் மன்னரின் மேலதிகாரத்தில் அமையும் மக்கள் அரசினைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் திவானுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பலமாக எதிர்ப்பு கிளம்பியது. திருவிதாங்கூர் தமிழர்களுக்கு ஆதரவாக நெல்லை சோமையாஜிலு செயல்பட்டார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் பொதுக்குழுவில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸை, தமிழ்நாடு காங்கிரஸின் திருவிதாங்கூர் கிளையாக மாற்ற வேண்டுமென்று தீர்மானத்தை ம.பொ.சி. கொண்டுவர, அது காமராஜரின் ஒரு திருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை

1947-ம் ஆண்டு மே மாதம், ‘‘திருவிதாங்கூர் காங்கிரஸ் இயக்கத்தை ‘மலையாள மாகாண காங்கிரஸ்’ என்றும் ‘தமிழ் மாகாண காங்கிரஸ்’ என்றும் இரு கூற்றாக்கிச் செயல்படுத்த வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் ம.பொ.சி. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியில் சுதந்திரத்தின் அடையாளமாகக் தேசியக் கொடியை ஏற்றிய அதேவேளையில் நாகர்கோவில் முனிசிப்பல் திடலில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் தலைவர் நத்தானியேல் தேசியக் கொடியை ஏற்றினார். 1949-ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சியை இணைக்க முன்வந்த மத்திய அரசு, தென்திருவிதாங்கூர் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான அண்டை மாநிலமான சென்னை மாகாணத்தோடு இணைக்க இணங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஏப்ரல் 13-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். நத்தானியேல் தலைமையில் அன்றைக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருவிதாங்கூர் கொச்சி இணைப்பைக் கூறிய அரசு ஆவணத்தின் நகல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1950-ம் ஆண்டு செப்டம்பரில் பாளையங்கோட்டையில் மூத்த அமைச்சரான பக்தவத்சலத்தை சந்திக்க நத்தானியேல் மற்றும் நேசமணி போன்ற பல தலைவர்கள் சென்று சமரச உடன்படிக்கை ஏற்படுத்தினர். ஆனால் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அதை ஏற்கவில்லை.

‘‘இரு இயக்கமும் இணைந்து செயலாற்ற வேண்டும்!’

4_18432.jpg

1951-ம் ஆண்டு ஜூன் மாதம் நாகர்கோவில் வந்த காமராஜர், சமாதானத்துக்கான ஆலோசனைகளைக் கூறினார். இந்தநிலையில், இராமசாமி பிள்ளை தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போயிற்று. அவரோடு அவர் பிரிவில் இணைந்திருந்த மாதேவன் பிள்ளையும், நத்தானியேலும் இயக்கத்திலிருந்து வெளியேறினர். அப்படியே தாணுலிங்க நாடாரின் பிரிவில் செயல்பட்டு வந்த காந்திராமனும், குஞ்சன்நாடாரும் இயக்கத்திலிருந்து வெளியேறினர். இவர்கள் நான்கு பேரும் இணைந்து நின்று திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இணைப்புக் கமிட்டி ஒன்றை உருவாக்கினர். அவர்கள் ஒரு அறிக்கையும் விட்டனர். அதில், ‘கடந்த ஒரு வருடமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு இயக்கமும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம். நாங்கள் நான்கு பேரும் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இணைப்பு கமிட்டி என்ற பெயரில் காந்திராமன் அவர்களை தலைவராகக் கொண்டு ஒரு கமிட்டியாகச் சேர்ந்திருக்கிறோம்’’ என்று அறிக்கை வெளியிட்டனர். இவர்களின் நல்லெண்ண முயற்சியை அறிந்த காமராஜர், செப்டம்பர் 17-ம் தேதி நெல்லையில் இருபிரிவினரையும் அழைத்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், நால்வர் குழுத் தலைவரான காந்திராமனும், நத்தானியேலும் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் இருவர் உடல் நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இருவரின் உண்ணாவிரதத்தால் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் பரபரப்பாயின. ஆனாலும் இரு இயக்கத்தினரும் இணைய முன்வரவில்லை.

மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள்!

5_18581.jpg1951-ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலும் 1952 ஜனவரியிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாராளுமன்றத் தேர்தலையும் மாநிலங்களின் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் பாராளுமன்றத்தின் ஒரு தொகுதியாக தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் ஆகிய தமிழ் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதியானது. அதில் நேசமணி மாபெரும் வெற்றி பெற்றார். 1954-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் வலுவடைந்தன. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, மாநிலச் சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இது இந்தியா எங்கும் பயணம் செய்து 1955-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த நிலையில், தென் திருவிதாங்கூர் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டனர். மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி கமிஷன் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களை புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க கமிஷன் பரிந்துரைத்தது. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்துவிட்டது.

குமரிக்கு வயது 60

7_18009.jpg

“பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுகாக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்ஜியத்துக்குத் தேவையானவை” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தி.த.நா.கா. கோரிக்கை விடுத்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தி.த.நா.கா. கலைக்கப்பட்டது.

நவம்பர் 1-ம் தேதி தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அன்று குமரிக்கு உள்ளூர் விடுமுறை. இந்த ஆண்டோடு குமரிக்கு வயது 60. குமரிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் வயது 60-தான்.

http://www.vikatan.com/news/tamilnadu/71096-detail-history-of-kanyakumari-struggle-tamilnadu60.art

Link to comment
Share on other sites

தமிழ்நாடு : 60 ஆண்டு... 60 நிகழ்வுகள்...!

kam_2473802g_15478.jpg

1956 - சுமார் 200 மக்களை மருதையாற்றங்கரையின் மண்ணில் புதைத்த அரியலூர் ரயில் விபத்து.தமிழக வரலாற்றில் மிகப்பெரும் ரயில் விபத்துகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

1957- தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகக் காமராசர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது.

1958 - தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி இரண்டடுக்கு கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1959- தத்துவங்களையும், அரசியலையும் தமிழ் சினிமாவில் தன் பாடல்வரிகளின் வழியாகப் பேசிய பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார் தனது 29 வயதில் மறைந்தார்.

1960- தமிழக நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தது.

1962- கல்வி அறிவு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவைத்த ‘மதிய உணவுத் திட்டம்’ காமராசரால் அமல்படுத்தப்பட்டது.

1_15223.jpg

1963- இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில். ஆங்கிலமே இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஆட்சிமொழிச் சட்டம்1963ல் அறிவிக்கப்பட்டது.

1965- தமிழ்நாடு தவிர்த்து முதல்முறையாக வேற்றுநாடான சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ராசரத்தினம் என்பவர் சுதந்திர சிங்கப்பூரின் முதல் தமிழ் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

பிற்காலத்தில் அதிமுகவை வழிநடத்திய தலைவர்களான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன்முதலாக இணைந்து நடித்து வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வெளியானது.

1966- ஏ.பி.ஜே அப்துல் கலாம் சுஜாதா உள்ளிட்டவர்களை மாணவர்களாகப் பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT, Chromepet) நிறுவப்பட்டது 

12862_MadrasInstituteofTechnologyMITChen

1967- எம்.ஜி.ஆரின் வீட்டுக்குத் தயாரிப்பாளர் வாசுவுடன் சென்ற நடிகர் எம்.ஆர்.ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றார். 

1968- கீழ்வெண்மணி வன்முறைச் சம்பவம் நடந்தது, அதில் நூற்றுக்கணக்கான தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1969- மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை இதனை அறிவித்தார். ஆனால் அதே வருடம் அண்ணாதுரை மறைந்தார். அவரையடுத்து கருணாநிதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

1971- மதுவிலக்கின் மீதான தடையை திரும்பப் பெறுவதாக அப்போதைய கருணாநிதி அரசு அறிவித்தது.

1972- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும், பொதுத்துறை நிறுவனமான சிப்காட்-ம் தொடங்கப்பட்டது

1973- தமிழக நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதர்ச கார் ரகமான ’ப்ரீமியர் பத்மினி’, அந்தப் பெயரில் தனது உருவாக்கத்தைத் தொடங்கியது. 

திராவிடர் கழகத்தின் நிறுவனர், தந்தை ஈ.வே.ரா பெரியார் மறைந்தார்.

1974 - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் சிரிமாவோ பண்டாரநாயகே தலைமையிலான இலங்கைநாட்டு அரசிடம் நட்புறவு அடிப்படையில் தரப்பட்டது.

1975- பிரதமர் இந்திராகாந்தியால் எமர்ஜன்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழகம் இதற்கு எதிராகக் குரல்கொடுத்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

indira-gandhi_15363.jpg

1976- தமிழகத்தில் முதன்முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. கருணாநிதி தலைமையிலான அரசு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதராவாகச் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பிரதமர் சந்திரசேகர் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்தார்.

1977 - சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றதை அடுத்து எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். 

1978 - மேல்நிலை கல்வி (10 +2) அறிமுகப்படுத்தப்பட்டது.

1980 - கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

Kannadasan%20600_13297_15558.jpg

1981 - ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஆடம்பர வசதிகள் மீதான வரி சட்டம் அமலுக்கு வந்தது.

1982 - பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் என்பது ஊட்டசத்து உணவு திட்டமாக மாற்றப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.

1983 - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.

1984 - எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போலோவில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

1985 - பிஎஸ் முத்துராமன் இயக்கத்தில் 100-வது படமான 'ஶ்ரீராகவேந்திரா' திரைப்படத்தில் ரஜினி நடித்தார்.

இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது.

1986 - முதன்முதலில் தமிழகத்தில் ஒரு நபருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - எம்.ஜி.ஆர். டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

1988 - டாக்டர் எம்.ஜி.ஆர்-க்கு அவரது மறைவுக்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் ஆகியோர் கூடங்குளம் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

KUDANKULAM-2_15278.jpg

1989 - சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க 13 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. 

1990 -தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.

1991 - ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 

1992 - பெண்கள் பாதுகாப்புகாக தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது.

1993-தி.மு.க-வில் இருந்து வெளியே வந்து வைகோ ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 

1994 - குற்றாலீஸ்வரன் என்ற தமிழக மாணவன் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி உலக சாதனைப் படைத்தார்

1995-ஜெயலலிதா அரசு மீது பரபரப்பான குற்றசாட்டுகளைக் கூறிய சுப்ரமணியம் சுவாமி, மற்றும் கவர்னர் சென்னா ரெட்டி ஆகியோருக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்றன. 

1996 - ஜூலை 17-கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில், 'மெட்ராஸ்' 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Chennai_Central__15522.jpg

1997- ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான 47 வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களை தி.மு.க அரசு அமைத்தது. 

1998- கோவை குண்டு வெடிப்பு, 58 பேர் உயிரிழப்பு

1999 - நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 26 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 

2000- கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கடத்தினார். 

2001- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

2002- தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

press-release-abdulkalam_15222.jpg

2003- டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான சில்லரை விற்பனை தொடங்க சட்டத்திருத்தம் 

2004- சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கிய தினம்...

2005- தே.மு.தி.க கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். 

2006- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க 69 இடங்களைப் பிடித்தது. 

2007- மு.க.ஸ்டாலின் செல்வாக்கு குறித்த சர்வே வெளியானதால், மு.க அழகிரி ஆதரவாளர்களால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. 

2008- சென்னையில் கடும் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. 

2009- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 18  இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க கூட்டணி 9  இடங்களைப் பிடித்தது. 

2010- 2 ஜி விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்தார். 

2011- தமிழக சட்டமன்றத் தேர்தலில் 203 இடங்களைப் பிடித்து அ.தி.மு.க வெற்றி பெற்றது. தி.மு.க 31 இடங்களைப் பிடித்தது. 

2012- தமிழ்நாட்டில் கடுமையான மின் வெட்டு அமலில் இருந்தது. சென்னையில் தினமும் 2 மணி நேரமும், மாவட்டங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையும் மின் வெட்டு அமலில் இருந்தது. 

divya-ilavarasan_16415.jpg

2013- தர்மபுரியில் ரயில் பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளவரசன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. 

2014- சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை இழந்தார். 

gallerye_010110460_1400542_16581.jpg

2015- பெரும் மழை வெள்ளத்தால், சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

2016- சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

http://www.vikatan.com/news/coverstory/71071-tamil-nadu--60-years-60-incidents.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயம்பேடு பேருந்து நிறுத்ததிற்கு எதிரில் ஒரு டாஸ்மார்க்கு கடை உண்டு அதாங்க தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அடுத்தாப்புல இருக்கு.அங்கு தினமும் குடிப்பவர் ஒருவர்.. குடிக்காரன் என்று சொல்ல முடியாது.. இவர் அதுக்கும் மேல!!! மனுசன் தாகத்திற்கு கூட அவ்வளவு சீக்கரமாக தண்ணீர் குடிப்பார் என்று சொல்லமுடியாது.ஆனால் 12 மணிக்கு கடைதிறந்த உடனே முதல் போணி அவர்தான்.. அசால்டாக ஒரு புல் பாட்டில் இறக்குவார் ..அதற்கு அப்புறம் அவர் பண்ணுற அலப்பற இருக்கே எப்பா சாமி! எம்.ஜீ.ஆர் பாட்டு சிவாஜி பாடலகளை பாட ஆரம்பித்து போடுவார். யாரவது கிட்ட போய் உங்களுக்கு என்ன சிக்கல் என்று கேட்க ஆரம்பித்தால் "என் முதல் பொண்டாட்டி இருக்காலே!" என்று ஆரம்பித்து போடுவார்.அந்த கதைய கேட்பவர்கள் நிச்சயம் பரிதாபடவே செய்வார்கள் ..சரி நமக்கு எதற்கு இந்த பாவம் போலீசே  வந்து பார்த்து கொள்வார்கள் என்று இருந்த நிலையில் .. ஒரு நாள் ரவுண்ட்ஸ் வந்த  போலீசார் இவரின்ட அலப்பறைய பார்த்து வாகனத்தை நிறுத்தி ஏய் இங்கிட்டு  வா ! உன் பேர் என்ன ?அவரும் வந்தார் தன்னுடைய பெயரை செப்பினார் ..! ஞான பிரகாசம்

டிஸ்கி :

அட போங்கப்பா .. நாட்டில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் கிடக்கு..? ஆமாம் கமல் - கவுதமி பிரிஞ்சிட்டாங்களாமா ? என்ன காரணமாக இருக்கும் உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? ரெல் மீ ரெல் மீ!!

Link to comment
Share on other sites

14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆமாம் கமல் - கவுதமி பிரிஞ்சிட்டாங்களாமா ? என்ன காரணமாக இருக்கும் உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? ரெல் மீ ரெல் மீ!!

:grin::grin:

 

Link to comment
Share on other sites

மொழி வாரி மாநிலங்கள் உருவாகி 60 ஆண்டுகள் பூர்த்தி

 

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் நாட்டின் பல பகுதிகளில் இன்று அனுசரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா
 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.

இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.

கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும் கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது.

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப்பகுதிகள் அளிக்கப்பட்டதால் பொதுவாகவே இந்த தினம் குறித்த உற்சாகம் தமிழகத்தில் காணப்படுவதில்லை.

ஆனால், மொழி அடிப்படையில் தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பிறகுதான், மாநிலத்தில் வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார்.

ஒரு நிலப்பகுதி மொழிவழியாக பிரித்து, ஆளப்படும்போதுதான் அதற்கென ஒரு சமூக கூட்டு உணர்வு வருகிறது என்று கூறுகிறார் அரசியல் செயற்பாட்டாளரும் மொழியியல் ஆர்வலருமான செந்தில்நாதன். மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதையும் பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வட இந்திய மாநிலங்கள் அந்த அளவு வளர்ச்சியின்றி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், மொழி வழியாக மாநிலங்கள் பிரிந்ததால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடுமா என்ற விவாதங்களும் நீடிக்கவே செய்கின்றன.

எதிர்பார்த்த வளர்ச்சி இல்லையென்றால், மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து மத்திய அரசால் மையப்படுத்தப்பட்டு வருவதே காரணம் என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுபவீர பாண்டியன்.

இருந்தபோதும், தங்களுடைய மொழி, கலாச்சாரம், பிராந்தியம் வளர வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் தற்போது குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்களால் திரிக்கப்பட்டு இனவெறியாக மாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார்.

மொழிவழியாக மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், தமிழகம் தற்போது சந்திக்கும் எல்லைப் பிரச்சனைகள், நதி நீர் தாவாக்கள் போன்றவை ஏற்பட்டிருக்காது என்ற வாதம் வலுவானதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். வேறுவிதமான பிரச்சனைகளை அவை உருவாக்கியிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த மாநிலங்களில் அடங்கியிருந்த பல்வேறு பகுதிகள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக போராடியதில் உத்தராகண்ட், தெலங்கானா என பிராந்திய அடிப்படையிலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

தற்போதும் இந்தியாவில் பல தனி மாநிலக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகின்றன.

http://www.bbc.com/tamil/37839863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.