Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "மேகதாது" அணை கட்டுவதற்கு... தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அல்லது வேறு எந்த மாநில அரசுகள் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு எல்லா உரிமையும் கர்நாடகத்திற்கு இருப்பதால் அதற்கான திட்டப் பணிகளை ஆரம்…

  2. "ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியென்றால்... நான் மக்களாட்சி!" - ரஜினியின் 'எம்.ஜி.ஆர் ஆட்சி'க்கு கமல் பதில் சர்ச்சைகளின் ஆதர்ச நாயகனும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா, தனது முகநூலில் "தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கணடனம் தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்சைக்குரிய இப்பதிவை முகநூல் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கியதும், அதற்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 'மக்கள் நீதி மய்ய'த்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கண்டனத்தை…

  3. "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"! "தவ்ளூண்டு இட்லிதாண்டா, அப்போலோல கோடி ரூபாய்க்கு விக்கிது" என்று மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர் இணையவாசிகள். அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 1.17 கோடி ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிட்டதாக நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனல் அறிக்கை தாக்கல் செய்தது. இதைக்கேட்டதிலிருந்து தமிழக மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அம்மா ஆஸ்பத்திரியில் இட்லி சாப்பிட்டாங்களா இல்லையா என்பதற்கு இன்னும் விடையே கிடைக்காத நிலையில், இப்படி சாப்பாட்டு பில் எகிறி வந்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்க்கவே ஆரம்பித்து விட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நோயாளி, மரணம், என்ற சீரியஸ் விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த…

  4. செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட…

  5. "வருவான்டி, தருவான்டி மலையாண்டி" புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்! சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடலை இணைந்து பாடியவர்கள், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. சினிமா படங்களில் பல பக்திப் பாடல்களை இணைந்து பாடியுள்ள அவர்கள், பிறகு தனித்தனியாகவும் பாடியிருக்கின்றனர். 'தெய்வம் படத்தில் ஜ…

    • 3 replies
    • 705 views
  6. "வானளாவிய" விஸ்வரூபம் எடுத்த பி.எச்.பாண்டியன்.. அஞ்சாமல் சிறை சென்ற பாலசுப்ரமணியன்... ! சென்னை: பத்திரிகை உலகம் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளது. அதில் மறக்க முடியாத ஒன்று, "பாஸ்" எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பு தினம் எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்தது அது. எம்.ஜி.ஆர் கண் முன்பாகவே நடந்தது. யார் பெரியவர் சட்டசபையா, நீதிமன்றமா என்ற பெரும் சட்டப் போர் வெடித்துக் கிளம்பிய பரபரப்பு நாட்கள் அவை. 1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது. இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அ…

  7. "வாஸ்து பார்க்கும் சசிகலா... வழியை மாற்றிய ஓ.பி.எஸ்...!" மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அதிமுகவிலும் அரசு நிர்வாகத்திலும் நிரப்ப சசிகலாவும், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரம பிரயத்தனம் செய்து வருகிறார்கள். சசிகலா நினைத்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட்டார். அதே இப்போது தமிழக முதல்வராகவும் அவர் வரவேண்டும் என்றும் அதிமுகவினர் கூறிவருகிறார்கள். அதற்கென ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை "ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல என்பதால், அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசி…

  8. "விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…

  9. "வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு. ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும். மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்…

  10. "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்ல…

  11. "ஸ்டெர்லைட் ஆலை" விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல். ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்ட…

  12. படத்தின் காப்புரிமை ARUN SANKAR ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து: கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? ப…

  13. "ஸ்டெர்லைட்" ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகளுடன் பரிந்துரை! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள முக்கிய நிபந்தனைகள், “ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் ஆர்சீனிக், காட்மியம், வெள்ளி, தாமிரம், ப்ளூரைடு ஆகியவை அடங்கியுள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான சோதனை மாதிரிகளை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் எட…

  14. "ஸ்டெர்லைட்" ஆலை, ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது! ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விநியோகமும் ஆரம்பமாகியுள்ளது. 4.820 டன் ஒக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1215553

  15. “'மெஷின்கன்னால் சுட்டுவிடும் எண்ணம் வந்தால் அரசியலுக்கு வந்துவிடுவேன்!" கமல் மனசு என்ன சொல்லுது? கமலஹாசனின் தசாவதாரம் துவங்கிவிட்டது என்றே சொல்கிறார்கள். அரசியல் பற்றி அப்படியும் இப்படியும் குழப்பிக்கொண்டிருந்தவர் அப்போது ஊழல் என்ற வார்த்தையை அதிகார வர்க்கத்தை நோக்கி வீசி அதிர்ச்சி அலைகளை படரவிட்டிருக்கிறார். முளையிலேயே கிள்ளி எறிய நினைத்து ஆளும்கட்சியினர் லேசாக பயமுறுத்தப் பார்த்தால் அது விபரீதத்தில் கொண்டு போய்விட்டது. பேச்சிலிருந்து அறிக்கைக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் கமலஹாசன் . கமல் அரசியலுக்கு வருவாரா என மக்களும் ஊடகங்களும் ஆருடம் பார்த்துக்கொண்டிருக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தனது அறிக்கையில் தகவ…

  16. வேதனையில் வெம்பும் முகாம் தமிழர்கள்! ‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன் உள்ளிட்ட 65 இலங்கைத் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்கக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய போதுதான் நீதிபதி இப்படிச் சொன்னார். இந்த வழக்கில், ‘16 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, அதுதொட…

    • 0 replies
    • 437 views
  17. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார். …

  18. “அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என பயந்தார்கள்!” உண்மைகளை உடைக்கும் தீபா ஜெயலலிதா உயிருடன் இருக்கு வரையில் அவரை சந்திக்க முயன்று தோற்றுப் போனவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ‘‘அப்போலோ தொடங்கி ராஜாஜி ஹால் வரையில் பெரிய போராட்டத்தையே நடத்திவிட்டேன். கடைசியாக அவரிடம் ஒரு வார்த்தை பேசக் கூட முடியாமல் போய்விட்டதே’’ என உருகுகிறார் தீபா. ஜூ.வி-காக அவரிடம் பேசினோம். ‘‘அப்போலோவிலே உங்களை அனுமதிக்கவில்லை. அஞ்சலி செலுத்த எப்படி போனீர்கள்?’’ ‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்கு போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்ல…

  19. “அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’ ‘’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளி…

  20. “அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ 'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின் தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது. அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் கவிஞர் காசி ஆனந்…

  21. $ அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் வரும் செப்டம்பர் 1, 2 ஆகிய நாட்களில் “அமெரிக்க கொங்கு குடும்ப விழா - 2018” என்ற பெயரில் ஒரு ஜாதிச்சங்க மாநாடு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டிலிருந்து பல கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதியின் முக்கியமானவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் குடும்ப விழாவை நடத்துபவர்கள் அவர்களது இணையதளத்தின் வழியாக அழைப்பு விடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்கள் மட்டுமல்ல; அமெரிக்காவில் வாழும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் இதைப் போல குடும்ப விழாக்களை நடத்தி தங்களுக்குள் ஜாதிய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஜாதியச் சொந்தங்களை வளர்த்துக் கொண்டும் தான் வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல …

    • 0 replies
    • 1.5k views
  22. “அம்மாவின் நிழலைப் பார்த்து அஞ்சியவர் நடராஜன்!” சாட்டையை சொடுக்கும் சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் கண்மூடித்தனமான விசுவாசி களாகக் காட்டிக்கொண்டவர்கள் எல்லாம், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், இந்தியாவில் உச்ச அதிகாரம் படைத்த, நாடாளுமன்றத்தின் நடுமையத்தில் நின்று, ஜெயலலிதா என்னை அறைந்தார் என்று புகார் வாசித்த சசிகலா புஷ்பா எதிர்க்கிறார். ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சசிகலா வரக்கூடாது என்று சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதில் முதல் விசாரணையும் முடிந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்சித் தொண…

  23. “அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!” நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில், ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர…

  24. மிஸ்டர் கழுகு: “ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை!” மிரட்டிய பி.ஜே.பி... பதுங்கும் தினகரன்? ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுற்றியபடி வந்த கழுகாரைப் பார்க்க விநோதமாக இருந்தது. ‘‘இதைச் சுழற்றி விளையாடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! விஜயகாந்த் விட்ட பம்பரத்தின் 2.0 வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். உலகம் முழுக்கப் பள்ளிக் குழந்தைகளின் விருப்ப விளையாட்டாக இது மாறியிருக்கிறது. ‘குழந்தைகளின் மன அழுத்தத்தை நீக்கும், கற்றல் குறைபாட்டுக்குத் தீர்வு தரும்’ என்றெல்லாம் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இதைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை விளையாடும் குழந்தைகளுக…

  25. “ஆட்சியைப் பிடிக்க சசி குடும்பம் நடத்திய சதிகள்!” அதிர்ச்சி கிளப்பும் அட்வகேட் ஜோதி ‘‘அக்கா கோட்டைக்குக் கிளம்பி விட்டீர்களா... மதியம் சாப்பிட என்ன வேண்டும்’’ என ஜெயலலிதா விடம் கேட்ட சசிகலா, கோட்டையிலேயே உட்கார நினைத்தார். அதற்காக நடந்தவை அக்மார்க் அக்கப்போர்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அந்தக் கனவு தவிடுபொடியாகிவிட்டது. ‘‘அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தின் சதித்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது’’ என்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி. அவரிடம் பேசினோம். ‘‘1991-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபோதுதான், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அவர் பங்குதாரராக உள்ள நிறுவனம் வாங்கியது. ‘அரசுக்குச் சொந்தமான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.