தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், காவல்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு, 25 ஆண்டு கால சிறைத்தண்டனையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கும் வாகனப் பேரணி, வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கி கிளம்ப இருக்கிறது. நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள், பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி விரிவாகப் பேசிய இயக்குநர் ராம், " நீங்களும் நானும் வாழும் இந்த ஊர் நல்லா இருக்கணும்கிறதுதான் நம்முடைய ஆசை. 'அநீதி தோற்கணும் நீதி ஜெயிக்கணும்' னு நினைக்கின்ற வெகுளியானக் குழந்தைகள்தான் நாம். தினம்தோறும் செய்திக…
-
- 0 replies
- 429 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஜூன் 11-ல் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் திரையுலகைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.இதுதொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியதாவது, பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனிமைச் சிறையில். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர மிகவும் போராடிவருகிறார். தான் நிரபராதி என பேரறிவாளன் இன்றுவரை சொல்லிவருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், பேரறிவாளன் நிரபராதி எனக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 577 views
-
-
பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்? பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இளையராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர். அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்…
-
- 4 replies
- 643 views
- 1 follower
-
-
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்... -மாஜிக்களின் கட்சி பதவியை பறித்த ஜெயலலிதா! சென்னை: அ.தி.மு.க.வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்களை செய்தும், பல மாஜி அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. இது குறித்து அ.தி.மு.க. கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி, புதிய நிர்வாகிகள்... அ.தி.மு.க. அவைத்தலைவர் - மதுசூதனன் பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம் கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செ…
-
- 0 replies
- 364 views
-
-
சஞ்சய் தத் விடுதலை விவரம்: பேரறிவாளன் கோரிய ஆர்டிஐ தகவலுக்கு பதில் அளிக்க மறுப்பு பேரறிவாளன் | கோப்புப் படம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஆர்டிஐ மனு ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் குறித்து கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 3-வது நபர் ஒருவரின் விடுதலை விவரங்களை கோர முடியாது என்ற அடிப்படையில் மனுவை தகவல் அலுவலர் / சிறை அதிகாரி நிராகரித்தார். ஏற்கெனவே இதே தகவலைக் கோரியிருந்த போது, எரவாடா சிறை அதிகாரிகள், மனுவுடன் அனுப்பப்பட்டிருந்த ரூ.10-ற்கான போஸ்டல் ஆர்டரில் 2011-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிர…
-
- 1 reply
- 551 views
-
-
சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்' (வீடியோ இணைப்பு) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், 'படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன' என அதிர வைக்கிறது 'பைபாஸ்' திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் …
-
- 1 reply
- 782 views
- 1 follower
-
-
வீரப்பனை சுட்டுக்கொன்றது எப்படி? 1000 பக்கங்களில் புத்தகம் எழுதும் விஜயகுமார்! புதுடெல்லி: தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அதிரடிப்படை எப்படி சுட்டுக் கொன்றது என்று விளக்கும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் சாம்ராஜ்யம் நடத்திய வீரப்பனை அதிரடிப்படை கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காட்டுக்குள் சுட்டுக் கொன்றது. இந்த அதிரடி நடவடிக்கை காவல் அதிகாரி விஜ…
-
- 0 replies
- 526 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, கோரிக்கைப் பேரணியை நடத்த இருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்துப் பேசும் நடிகர் விஜய் சேதுபதி, " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிம…
-
- 0 replies
- 385 views
-
-
மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர். சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த…
-
- 6 replies
- 687 views
-
-
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் உயர் தர சிகிச்சைகள், ஏழை-எளிய மக்களுக்கும் கிடைத்திட முதல்-அமைச்சர் நிதியில் இருந்து இ…
-
- 0 replies
- 415 views
-
-
நான் அப்படி கூறவில்லை..! சீமான் சொல்வது இதுதான் தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எ…
-
- 17 replies
- 1.5k views
-
-
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ். வேலூர் சிறையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணி பற்றி, வீடியோப் பதிவு ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ், “ 25 வருடங்களுக்கு முன்னாடி இதே ஜூன் 11 ம் தேதி, பேரறிவாளன் என்ற 19 வயசுப் பையனை, ‘விசாரிச்சுட்டு அனுப்பிவிடுகிறோம்’ என்று சொல்லி போலீஸார் அழைத்துப் போனார்கள். அவருடைய அப்பா குயில்தாசனும் அம்மா அற்புதம் அம்மாளும், ‘ விசாரிக்கத்தானே கூப்பிடுகிறார…
-
- 0 replies
- 313 views
-
-
மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? - டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன் 14! டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. 'இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக …
-
- 0 replies
- 589 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 38 இலங்கை அகதிகள் கைது: பலர் தப்பி ஓட்டம்? காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 15 பேர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்…
-
- 0 replies
- 389 views
-
-
-
'விஜயகாந்த், ஜி.கே.வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்?!' -கூட்டத்தில் கொந்தளித்த வைகோ சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.கவும், த.மா.காவும் திசைக்கொன்றாகப் பறக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் 'அவர்கள் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. யாரும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்' எனக் கொந்தளித்திருக்கிறார் வைகோ. ம.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ' மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள்' என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ. கூ…
-
- 1 reply
- 702 views
-
-
கருணாநிதிக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! -சொல்றது திருமாவளவன் கடலூர்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொல்.திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதன்பின், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., த.மா.கா. இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டசபை தேர்தலில் பல்லாயிர கோ…
-
- 0 replies
- 673 views
-
-
ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? #Germany#People ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் பல்வேறு காரணங்களுக்காக புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் சுமார் 60 சதவிகித புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் 22,369 நபர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், 2014ம்…
-
- 0 replies
- 444 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது. விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளனை போலீஸார் அழைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து இன்று வரையில் பேரறிவாளனுக்கு விடியவே இல்லை. இத்தனை ஆண்டுகால சிறைவாசத்தில் ஒருநாள் கூட பேரறிவாளன் பரோலில் வெளிவரவில்லை. இவருடன் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களும் சிறையில் …
-
- 2 replies
- 600 views
-
-
'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு "முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். …
-
- 0 replies
- 378 views
-
-
திருமாவளவன் கோரிக்கை: ராஜேஷ் லக்கானி நிராகரிப்பு! சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் அந்தத் தொகுதியின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்…
-
- 0 replies
- 408 views
-
-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்ற 15 லட்சம் கோடி தேவைப்படும். ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கை எப்படி சாத்தியம் ஆகும். அதிக அளவு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வேடிக்கையானது, அது அவமானமானது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ந…
-
- 0 replies
- 397 views
-
-
பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை. இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது. தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது. ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்…
-
- 2 replies
- 531 views
-
-
http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=3403&GSS=8
-
- 0 replies
- 338 views
-
-
காலில் விழுந்த காங். எம்.எல்.ஏ... பதிலுக்கு தானும் விழுந்த கிரண் பேடி.. இது புதுச்சேரியில்! புதுச்சேரி: பதவியேற்பு விழாவின் போது தனது காலில் விழுந்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் காலில் பதிலுக்கு கிரண்பேடியும் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றவர் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் கிரண்பேடி. இவர் டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கி, தோல்வி அடைந்தார். இந்நிலையில், நேற்று அவர் புதுச்சேரியின் துணைநிலை கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது கிரண்பேடியை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து சால்வை அணிவித்தனர். …
-
- 1 reply
- 641 views
-