தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்க…
-
- 3 replies
- 408 views
-
-
ராமதாஸ் | கோப்புப் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரி…
-
- 0 replies
- 189 views
-
-
தமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது. மேலும், அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல், நேற்று வெளியிடப்பட்ட, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு சுதந்திரம் அடையும் முன், 1931ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பின், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2011ல், இந்தக் கணக்கெடுப்பை, மத்திய அரசு, நாடு முழுவதும் நடத்தியது. காகிதம் பயன்படுத்தாமல், கையடக்க எலக்ட்ரானிக் கருவி மூலம், வீடு, வீடாகச் சென்று, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்தின் கல்வி அறிவு, வருவாய், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதி, வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஜாதி போன்ற விவரங்கள் சேகரிக்…
-
- 0 replies
- 323 views
-
-
இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் கால் பதிக்க, கல்வி அடிப்படைத் தகுதி அல்ல. பாமர மக்களின் பிரதிநிதிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால்தான் இந்திய அரசியல் அமைப்பு, கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கவில்லை. சாதனை படைத்த பெருந்தலைவர்கள் பலர் படிக்காத மேதைகளாக இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் அரசியல் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் முயற்சி இது. கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் எனும் கொள்கையோடு தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்; ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் காமராஜர். காமராஜரின் சிறுபிராயத்திலேயே அவர் தந்தை இறந்துபோனார். இதனால் ஆறாம் வகுப்போடு காமராஜரின் பள்ளி…
-
- 2 replies
- 333 views
-
-
மிஸ்டர் கழுகு : விரக்தியில் ஜெ. பதவியை குறிவைக்கும் அப்பீல் மனு ! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் எல்லாம் இப்போது டெல்லியை நோக்கித்தான் இருக்கிறது” என்றபடியே லேண்ட் ஆன கழுகார் மேலும் தொடர்ந்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கின் சுழல் மீண்டும் தொடங்கிவிட்டதுதான் ஜெயலலிதாவின் பயத்துக்குக் காரணம். ஆச்சார்யா தாக்கல் செய்த மனு, முதல்வர் பதவியைக் குறி பார்ப்பதாக அமைந்திருக்கிறது. தீர்ப்பில் உள்ள குளறுபடிகள் பற்றி உமது நிருபர் எழுதி இருப்பார். அப்பீல் மனுவின் மையப்புள்ளியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை நான் சொல்கிறேன்!” ‘‘ம்!” ‘‘நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பைப் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் இருக்கின்றன. ‘நீதிபதி குமாரசாமி, வழக்கின் …
-
- 0 replies
- 329 views
-
-
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாராயக்கடையை இடமாற்றம் செய்யும்படி அரசை பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள், சாராயக் கடையை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் இருக்கிறது 6-ம் எண் சாராயக்கடை. இந்தக் கடையில் இன்று காலையில் பத்து மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் மகளிரணியைச் சேர்ந்த சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு திடீரென சாராயக்கடையில் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த சாராய கேன்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும், கடைகளையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். இந்த திடீர் தாக்குதலால் சாராயக்கடை உரிமையாளர் மற்றும் …
-
- 0 replies
- 532 views
-
-
காதல் திருமணம் செய்து ஈழப் பெண்ணை கைவிட்ட அதிமுக பிரமுகர்: மந்திரி என் பக்கம் என மிரட்டல் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் உள்ள சானார்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளரான நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த கருணாகரன். இதன் அருகே உள்ள தோட்டநுத்து அகதிகள் முகாமில் வசித்து வரும் ஈழத் தமிழரான லதா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். கருணாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, துளசி என்ற மனைவி உள்ளார். துளசி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். துளசிக்கு குழந்தை இல்லை என்பதால் 2வது திருமணம் செய்ததாக கூறி வந்தார். லதாவும், கருணாகரனும் திண…
-
- 0 replies
- 864 views
-
-
தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும்! இது வீரலட்சுமியின் வீர முழக்கம்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 12:54.24 AM GMT ] [ விகடன் ] பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை, குஷ்பு வீடு முற்றுகை... என சில நாட்களாகவே மீடியாக்களில் தென்படுகிறார் தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனர் வீரலட்சுமி. தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கான கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வீரலட்சுமியை சந்தித்த போது அவர் வழங்கிய செவ்வி:- நீங்கள் யார்? உங்கள் பின்னணி என்ன? என் சொந்த ஊர் சென்னை. என் தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் சிறு வயதில் இருந்தே எனக்கு நற்பண்புகளைச் சொல்லி வளர்த்தார். வீரமங்கை வேலு நாச்சியார் போல ஒரு சிறந்த போராளி ஆகவேண்டும் என்பதே என் இல…
-
- 0 replies
- 210 views
-
-
முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை!டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம் வேலூர்…
-
- 2 replies
- 694 views
-
-
தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்Jun 18, 2015 | சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 …
-
- 0 replies
- 196 views
-
-
லதா ரஜினிகாந்த் | கோப்புப் படம்: ஆர்.ரகு 'கோச்சடையான்' படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் போட்டார். இந்நிலையில் அபிர்சந்த் நஹார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் நிதி மோசடி புகார் தெரிவித்தார்.…
-
- 2 replies
- 430 views
-
-
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பணத்தை கொள்ளையடித்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திங்கள்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் வேலை செய்வதற்காக ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த இரு நபர்கள், சுப்புராயன் என்பவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சுப்புராயனும், பிற தொழிலாளர்களும் சேர்ந்து இரு நபர்களையும் விரட்டிப் பிடித்துள்ளனர். பின…
-
- 2 replies
- 463 views
-
-
குப்பை அள்ள போட்டி போடும் பாஜக, ஆம் ஆத்மி டெல்லியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், தேங்கி கிடக்கும் குப்பையை ஆம் ஆத்மி கட்சியினரும், பாஜகவினரும் போட்டி போட்டுக் கொண்டு அகற்றியதால்பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் துப்புரவு பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரம் முழுவதும் ஏராளமாக குப்பைகள் தேங்கியதால் டெல்லி முழுவதும் நாற்றம் அடிக்க துவங்கியது. பாஜக அதிகாரத்தில் உள்ள டெல்லி மாநகராட்சி, துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததே வேலை நிறுத்தத்திற்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குபி…
-
- 0 replies
- 1.9k views
-
-
நெல்லை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று நெல்லையில் நடந்துள்ளது. பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.45 மணியளவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றது. ஆனால், ரயிலை பார்த்து சீட் பிடிக்க ஓட வேண்டிய பயணிகளோ, பேயறைந்ததை போல காணப்பட்டனர். காரணம், ரயில் இன்ஜின் முன்பு அகோரமாக தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலமாகும். ரொம்ப தூரத்துக்கு அந்த சடலம் ரயிலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்பது பார்த்த உடனேயே புரிந்தது. ஏனெனில், கால்கள் துண்டாகி ரத்தம் வழிந்து நின்று போயிருந்தது. பேண்ட் கிழிந்து உள்ளாடையுடன் அந்த ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது. …
-
- 0 replies
- 345 views
-
-
அமலாக்கப்பிரிவால் தங்கள் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சன் டி.வியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் தனக்கு இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வெளிநாடு வாழ் இந்தியர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் 2011-ல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் சன் டிவி நிறுவனத்தின் ரூ. 742 கோடி சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்கத் துறை உத்தரவிட்டது. இந்த முடக்கத்துக்கு எதிராக சன் டி.வி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசா…
-
- 0 replies
- 295 views
-
-
சென்னை: தியாகங்களால் வளர்ந்த திராவிட இயக்கத்தை எப்படிப்பட்ட புயல் வந்தாலும் சாய்க்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், " இந்த திருமணம் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நேரத்தில் எனது இதயத்தை நெகிழ வைக்கும் மலரும் நினைவுகள் என் நெஞ்சு சுவற்றில் வந்து மோதுகின்றன. 44 வருடங்களுக்கு முன்பு என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக, எனது கிராமமான கலிங்கபட்டிக்கு எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்தி, விருந்துண்டு, ஓய்வெடுத்து விடைப்பெற்று சென்றதை நினைத்து பார்க்கிறேன். அதே போல் 1978–ம…
-
- 6 replies
- 679 views
-
-
சிறுநீரக தொற்று: சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டுள்ளார். அவர் கடந்த 5 மாதத் துக்கு முன்னர் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இந்நிலையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும் எனவே சென்னை அரசு பொது மருத்துவ மன…
-
- 0 replies
- 410 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2006-ல் . ரூ.24.7 கோடியாகவும், 2011-ல் ரூ.51.40 கோடியாகவும் இருந்தது. இது தற்போது இரு மடங்காக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் தனது அசையும் - அசையா சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அதன் விவரம் வருமாறு: 2013–2014–ம் ஆண்டு வங்கிக் கணக்குப்படி மொத்த வருமானம்: ரூ.33,22,730 | கையிருப்பு - ரூ.39,000 | வங்கி கணக்கில் சேமிப்பு தொகை - 9 கோடியே 80 லட்சத்து 9,639 ரூபாய் | மைலாப்பூர் கரூர் வ…
-
- 0 replies
- 486 views
-
-
நாகர்கோவில்:'தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது' என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், 'பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்' என கூறியிருந்தார். மேலும், க…
-
- 0 replies
- 319 views
-
-
யூடியூப் பகிர்வு: கருணாநிதி 92 | அரிய காட்சிகள் அடங்கிய சிறப்பு கருப்பு - வெள்ளை வீடியோ தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே | எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசிய…
-
- 2 replies
- 554 views
-
-
கப்டனும் அம்மாவும் 10ee9a3c3ca36855fb1f6e50f8d88103
-
- 0 replies
- 303 views
-
-
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 40 டிகிரி வெயில்: மேலும் 2 நாட்களுக்கு தகிக்கும் தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 40 டிகிரி வெயில் பதிவானது.சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் அதிகபட்ச வெயில் சென்னையில்தான் பதிவாகிறது. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடல் காற்று தாமதமாக வீசுவதால், பகலில் அனல் காற்று வீசுகிறது. மாலை நேரங்களில் கடல் காற்று வீச ஆரம்பித்த பிறகு வெப்பம் தணிந்து காணப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ…
-
- 6 replies
- 672 views
-
-
சென்னை: அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி. முன் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பேராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
செம்மரங்களை வெட்ட வந்ததாக, தமிழகத்தின் வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 74 தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் நேற்று கைது செய்தனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில அதிரடி போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர ஐ.ஜி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்தது. தவிர, ஆந்திர உயர் நீதிமன்ற மும், தேசிய மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்ன மாண்டியம் என்ற இடத்தில் நேற்று காலை போலீஸார் தீவிர வாக…
-
- 0 replies
- 229 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பாக தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பங்களைக் கடந்த சொத்துக் குவிப்பு வழக்கு, மே 11-ம் தேதி குமாரசாமியால் முடித்து வைக்கப் பட்டும், தீர்ப்பு குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத் திருக்கும் விடுதலை எளிதாய் கிடைத்தது அல்ல. விடுதலை தந்த 919 பக்க தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்திலும் முகம் தெரியாத பல வழக்கறிஞர்களின் உழைப்பு இழையோடிருக்கிறது. சட்டத்தில் இருந்த அத்தனை பிரிவுகளிலும் நுழைந்து வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிட்ட விருத்தால ரெட்டியாரில் தொடங்கி ஜோதி, கே…
-
- 9 replies
- 1.1k views
-