தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா வைரஸினால், பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோ…
-
- 0 replies
- 375 views
-
-
சென்னை: "மக்களின் நியாயமான எதிர்ப்பைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப் போக்கில் கூடங்குளம் அணுஉலையை இயக்கி அதனால் ஏற்படும் கதிர்வீச்சு உள்ளிட்ட அனைத்து விளைவுகளுக்கும் மத்திய அரசும், அணுசக்தித் துறை அதிகாரிகளும்தான் பொறுப்பாளிகள்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (16ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்களாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்களும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்களமாக்கி நடத்தி வருகின்றனர். துளி அளவும் வன்முறை இல்லாத இந்த அறப்போரை நசுக்குவதற்கு, ம…
-
- 0 replies
- 375 views
-
-
‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’ அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழகத்துக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி கடவூச்சீட்டு மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்பட்ட தீவிரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்…
-
- 0 replies
- 375 views
-
-
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 750 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ராமதாஸ் மீது சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்ய கேட்டு அவர் தரப்பில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் தரப்பில் கருத்துக்கள் கேட்கப்படும்.…
-
- 0 replies
- 375 views
-
-
08 JUL, 2024 | 05:57 PM உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC) 2ஆவது சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை கடந்த ஜூன் 28ஆம், 29ஆம் திகதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்மொழியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் (IT) முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திசைகளை ஆராய்வதற்காக முன்னணி அகாடமியன்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இம்மாநாடு ஒருங்கிணைத்தது. இம்மாநாடு உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரான J. செல்வகுமாரின் உபசரிப்பு உரையுடன் தொடங்கியது. அவர், தமிழ் கலாசாரத்தை தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்ற…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
வா.மணிகண்டன் (எழுத்தாளர்) மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள். ‘அப்படினா, சட்டம் Anti conversion Law…
-
- 0 replies
- 375 views
-
-
“தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை நிதர்சனம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது. தமிழகத்தை 2030 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளது. மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் இந்த எண்ணத்தை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே புதிய சோசியலிச இயக்கம் கூறி வந்தது. தற்போது இதனை நிரூபிக்கும் வ…
-
- 0 replies
- 375 views
-
-
தேமுதிகவில் இருந்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் அதிரடி நீக்கம்| தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்களை அதிரடியாக நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி தொடர்பாக தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்களை கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணை செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்கு…
-
- 0 replies
- 375 views
-
-
தேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார். மக்கள் பிரச்சனைக்கு பாஜக வராது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார். https://www.maalaimalar.com/news/topnews/2020/11/02131443/2028712/Seeman-accusation-Kamal-Haasa…
-
- 0 replies
- 374 views
-
-
எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; குட்டிக் கதை! -பொதுக்குழுவுக்குத் தயாராகும் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கைப்பற்றுவதற்கான ஆலோசனைகளில் இருக்கிறார் சசிகலா. ' துணைப் பொதுச் செயலாளர்களாக யாரும் தேர்வு செய்யப்பட போவதில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டும்தான் பொதுக்குழு கூடுகிறது. கூட்டத்தில் ஏழு நிமிடத்திற்கும் மேல் விரிவாகப் பேசுவதற்கும் தயாராகி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ம் தேதி வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதுவரையில், ஜெயலலிதா பின்புறம் இருந்தே அரசியல் அசைவுகளைக் கவனித்து வந்த சசிகலா, முதல்முறையாக மேடையில் பேசுவதற்கான ஒத்திகையில் இருக்கிறார். " கட்சியின் ப…
-
- 0 replies
- 374 views
-
-
'பதவி ஆசை இல்லை'- ஓபிஎஸ் வெளியிட்ட சசிகலாவின் பழைய மன்னிப்புக் கடித விவரம் ஓபிஎஸ் பண்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு. | படம்: ம.பிரபு தமிழக முதல்வராக சசிகலா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ள சூழலில், தனக்கு 'அரசியல், பதவி ஆசை இல்லை' எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய பழைய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை, க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மேற்கொண்ட தியானப் புரட்சியும் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படு…
-
- 0 replies
- 374 views
-
-
சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பில் ரவுடி கொலை: சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (22) . குற்றச்செயலகளில் ஈடுபட்டு வந்தவர் வழிப்பறி வழக்கில் டிபி சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்த இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார். நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சூதாடி…
-
- 0 replies
- 374 views
-
-
ஓய்வு கிடைக்காமல் உழைப்பவர்கள் நிறைய பேர். விபத்து, இழப்பு மாதிரியான அசம்பாவிதம் நடந்தால் கட்டாய ஓய்வு கிட்டும். ஓடி ஓடி உழைக்கிறோமே தேவைதானா, நாம் போகும் பாதை சரிதானா என்று நிதானமாக திரும்பிப் பார்த்து யோசிக்க கடவுள் வழங்கும் சந்தர்ப்பம் அது. மறுப்பாளிகள் இயற்கை எனலாம். ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது அம்மாதிரியான சந்தர்ப்பம்.அரசு நிர்வாகத்தில் அன்றாட தலையீடுக்கு இடமில்லை. திரும்பி பார்ப்பது தவிரவும் நிறைய நேரம் கிடைக்கும். எங்கெங்கோ கண்காணாத இடங்களில் வசிக்கும் கட்சிக்காரர்களின் கடிதங்களை உதவியாளர்கள் வடிகட்ட விடாமல் தானே எடுத்து படிக்கலாம். நிதர்சனத்துக்கும் தனக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அளவெடுக்கலாம். பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கலா…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் பேசியபோது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கு அ இஅதிமுகவே மூல காரணம் என வாதிட்டார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் ச…
-
- 0 replies
- 374 views
-
-
மருத்துவக் கல்வியில்... தமிழ் அகதிகளுக்கு இட ஒதுக்கீடு, வழங்க வேண்டும் – ராமதாஸ் மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில், பெரும்பான்மையான உதவிகள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால் மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்தவகையிலும் அறமல்ல. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பலர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் வசிக்க விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என தி.மு.க …
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையிலிருந்து கடத்திய தங்கத்துடன் இந்தியாவில் இருவர் கைது ; பிரதான நபரைத் தேடி வலைவீச்சு ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று…
-
- 0 replies
- 374 views
-
-
கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் விபரீதம்: சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழப்பு நேற்று நடைபெற்ற சேவல்கட்டு கரூர் கரூர் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்.து க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசுவில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல்கட்டு மிக பிரசித்திமானது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சேவல்கட்டில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி இருவர் உயிரிழந்ததையடுத்த 5 ஆண்டுகளுக்கு பூலாம்வலசு சேவல்கட்டுக்க…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்' கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன. தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார். சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர். இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கல…
-
- 0 replies
- 374 views
-
-
யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 26 மார்ச் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன. யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
`சிறை கையேடு 459-ன்படி சசிகலா மூன்றாம்வகை குற்றவாளி!' - சத்ய நாராயணராவ் வாக்குமூலத்தின் முழு விவரம் சசிகலாவுக்குச் சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து வெளியாகும் தகவல்களால், சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. `அரசு விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார் முதல்வரின் உதவியாளர். அங்கு சென்றபோது, சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருமாறு கூறினார்' என வினய் குமார் கமிஷன் முன்பாக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை மேற்கொண…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற பங்கேற்பாளர்களை மிரட்டுவதாக புகார் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களைத் தரக்குறைவாக பேசுகிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பெரும்பாலான தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் இரவில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. அரசியல், சமூகம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரம…
-
- 0 replies
- 374 views
-
-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டு, வங்கிப் பணிகளும் ஒரு நாள் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13 ஆகிய இரண்டு தினங்களும் இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த இரண்டு தினங்களும் முழுமையான சேவைகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுங்கக் கட்டணம் இடைநிறுத்தம் இதனிடையே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இடைநிறுத்தி வைக்க அரசு மு…
-
- 0 replies
- 374 views
-
-
சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564
-
- 0 replies
- 374 views
-