தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தேனி, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது. இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ…
-
- 0 replies
- 382 views
-
-
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் அரசு மீது இருந்த வெறுப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி வளர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தர்மத்தை சமக முறையாக கடைபிடிக்கிறது. அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற நாங்கள் நிச்சயம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதிமுக ஆதரவால் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற…
-
- 0 replies
- 381 views
-
-
பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்? மெரீனா கடற்கரை மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நின்று அலைகளை வரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் திரட்சியான போராட்டம் அந்தக் கடற்கரையில் பெற்ற அதே முக்கியத்துவத்தை, ஓ.பன்னீர் செல்வம் என்ற ஒற்றை மனிதனின் இறுகிய தியானமும் பெற்றுள்ளது. தியானத்துக்குப் பிறகு தன் மௌனம் கலைத்த பன்னீர் செல்வம் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அமைதியே உருவான அந்த ஒற்றை மனிதனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும், கோடிக்கணக்கான தொண்டர்களுடைய மனச்சாட்சியின் குரல் பேரிரிசைச்சலாய் ஒலித்தது. “நான் வேண்டாம் என்று சொல்லியும் க…
-
- 0 replies
- 381 views
-
-
அ.தி.மு.க-வில் ஆதிக்கம்... பலிக்குமா பி.ஜே.பி-யின் சக்கர வியூகம்? எதிரியை ஒரு வளையத்திற்குள் சிக்க வைத்து, அதில் இருந்து வெளியேற முடியாமல் செய்து வீழ்த்துவதே போரில் சக்கர வியூகம். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது போரும் அல்ல; மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மேற்கொண்டுள்ள மோடி வித்தை சக்கர வியூகமாகவும் தெரியவில்லை. "அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஜெயலலிதா மரணத்திற்கு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை நடத்தப் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பா…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/08/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.jpg தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடை…
-
- 0 replies
- 381 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 381 views
-
-
சென்னை: முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வெளிப்படையான செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். திருட்டு டிவிடி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர் போலீசார். இதற்காக போலீசுக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். சிறப்பான ஆ…
-
- 3 replies
- 381 views
-
-
தமிழகத்தில் ஊரக உள்ளூராட்சித் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இடம்பெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் உள்ள 156 உள்ளூராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூராட்சித் தலைவர், உள்ளூராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அதற்கமைய, 4700 உள்ளூராட்சித் தலைவர்கள், 37,830 வார்டு உறுப்பினர்கள், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர…
-
- 0 replies
- 381 views
-
-
ஆந்திர அதிகார வர்க்கம் நடத்தி முடித்த இருபது தமிழர்களின் இனப்படுகொலையில் - எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மத்திய அரசு 'சி.பி,ஐ விசாரணை தேவையில்லை' என்று நேற்று அறிவித்திருப்பது உலக முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் சொல்லமுடியாத ரணத்தை உருவாக்கியிருகிறது. மேலும் அவர் விடுத்த அறிக்கையின் முழு விபரம்:- http://www.pathivu.com/news/39707/57/20/d,article_full.aspx
-
- 2 replies
- 381 views
-
-
`சிறை கையேடு 459-ன்படி சசிகலா மூன்றாம்வகை குற்றவாளி!' - சத்ய நாராயணராவ் வாக்குமூலத்தின் முழு விவரம் சசிகலாவுக்குச் சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து வெளியாகும் தகவல்களால், சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. `அரசு விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார் முதல்வரின் உதவியாளர். அங்கு சென்றபோது, சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருமாறு கூறினார்' என வினய் குமார் கமிஷன் முன்பாக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை மேற்கொண…
-
- 0 replies
- 381 views
-
-
சென்னை: செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் தேதியன்று ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்துகிற சாட்…
-
- 0 replies
- 381 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மாநகரம் தொடர்ச்சியாக நகர்ப்புற வெப்பத் தீவுகள், வெப்ப அலை, கடல் அரிப்பு, புயல், வெள்ளம் எனப் பல அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 16 ஆகஸ்ட் 2024 “இப்போ கடல் ரொம்ப வயலா இருக்கு (ஒரு சில அலைகள் மட்டுமே இருக்கும், பெரிய அலைகள் இல்லாத நிலை). இந்த மாதிரி இருக்கும்போது ராத்திரில கடலுக்குப் போனாதான் வரிப்பாறை, கருவாழை போன்ற மீன்கள் கிடைக்கும். கடல் இப்படி இருக்கும்போது தண்ணி ரொம்ப தெளிவா இருக்கும். காலையில போனா மீன் கண்ணுக்கு வலை நல்லா தெரிஞ்சு, சிக்காம தப்பிச்சுக்கும்.” “இதையெல்லாம், அனுதினமும் கடலைப் பார்…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’ அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை…
-
- 0 replies
- 381 views
-
-
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தகவல் - சம்பவ நாளில் என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான். கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் ம…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழப்பவருக்கு 50 இலட்சம் இழப்பீடு- முதல்வர் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது வைத்தியத் துறையினர் தொற்று ஏற்பட்டு துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்கள…
-
- 1 reply
- 381 views
-
-
ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதியக் கட்சி தொடங்குகிறார் தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தேனி: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் டி.டி.வி. தினகரன் அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக…
-
- 0 replies
- 381 views
-
-
“தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…
-
- 0 replies
- 381 views
-
-
மதுராந்தகம் அருகே மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையால் நோய் பாதிப்பா?- ஆய்வு செய்யக் கோரி போராட்டம் April 17, 2019 மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதற்கு அப்பகுதியில் இயங்கி வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து அப்பகுதி பெண்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூரில் கடந்த 9 ஆண்டுகளாக பயோ மெடிக்கல் கழிவுகளை அழிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு…
-
- 0 replies
- 381 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு! தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது. ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைது செய…
-
- 0 replies
- 380 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை - மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று கருதப்படும் இந்துத்துவ சக்திகளை விசாரணை செய்யாமல் காப்பாற்றும் நடவடிக்கைகள் – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் 19 OCT, 2023 | 02:32 PM முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விசாரிக்க…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்த, 2000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழக மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரன் இராஜபக்சேவுடைய இலங்கை பிரதமர் ஜெயரத்னா திருப்பதி வருகையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை…
-
- 0 replies
- 380 views
-
-
கேரளா தீவிரம்; தமிழகம் அலட்சியம்! மழைநீரை சேகரிக்கவும், நீர்நிலைகளை பராமரிக்கவும் கேரளா மாநிலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகம் அலட்சியம் காட்டி வருகிறது.
-
- 0 replies
- 380 views
-
-
படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும்…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
4th November 2013 காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். சேலம் காந்தி ரோட்டில் உள்ள மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 சாக்குப்பைகளில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு 4 பேர் கும்பல் தப்பிச்சென்றது. மேலும் அந்த கும்பல், ‘திராவிடர் விடுதலை கழகம்‘ என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற துண்டு பிரசுரங்களையும் வீசிச்சென்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப்பைகளில் தீ வைத்து வீசுவதற்கு தூண்டுதலாக இருந்ததாக …
-
- 0 replies
- 380 views
-
-
Thirumurugan Gandhi: நீண்ட நாட்களாக உழைத்து உண்மையை வெளியே கொண்டு வர பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் தோழர்கள்..நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் மற்றும் மரணதண்டனைக் குறித்து அறிவதற்கான மிக மிக முக்கிய ஆவணம். வெள்ளி மாலையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவசியம் பார்க்கவும், பரப்பவும். இதற்கான கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை, 23-நவ, தி. நகர் - சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடக்கிறது. அனைவரும் அவசியம் வரவேண்டும்.. இது தமிழ்ச் சமூகத்தின் வலி. அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம். குறுஞ்செய்திகள், நேரடி அழைப்புகள், மின்னஞ்சல் மூலமாக அனைவரிடத்தில் பரப்புவது நம் கடமை... அடுத்த மாதத்தில் மூவ…
-
- 0 replies
- 380 views
-