தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
நேற்று மாலை நடைபெற்ற ‘சிவப்பு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தில் ‘கோனார்’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண் பேசுகையில் ஆச்சரியப்படத்தக்கவகையில ஈழப் பிரச்சினை குறித்து மிக விரிவாகவே பேசினார். ராஜ்கிரண் பேசும்போது, “இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது. மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும். படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்ட…
-
- 0 replies
- 545 views
-
-
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை பேரணி நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த பேரணி கிண்டியில் தொடங்கி கவர்னர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி முடிவில் கவர்னர் மாளிகையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் தர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆந்திர என்கவுன்டர் பற்றி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இந்த பேரணியில் பங்கேற்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சி…
-
- 0 replies
- 420 views
-
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இருந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சி அய்யநாதன் உள்பட 13 மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் இன்று அய்யா பழ நெடுமாறன் அய்யாவின் தமிழர் தேசிய முன்னணியோடு இணைந்து கொண்டனர். இவ் நிகழ்வு தஞ்சை முள்ளிவாய்க்கள் முற்றத்தில் நடை பெற்றது. http://www.pathivu.com/news/39564/85//d,article_full.aspx
-
- 2 replies
- 553 views
-
-
சிறையில் இருந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரகாஷ் எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனையில் பணியாற்றியவர்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் புகாரின் பேரில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். முதலில் 2001ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக…
-
- 0 replies
- 238 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குத்தான் அதிகம் பேர் செல்கின்றனர். தமிழ்நாட்டில் 5 சதவீதக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம், ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆ…
-
- 0 replies
- 354 views
-
-
புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, சாட்சிகள் தரப்பில் விசாரிக்கப்பட்ட இளங்கோ. | ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய இணைப்பதிவாளர் இன்று புதுச்சேரியில் வாக்குமூலம் பதிவு செய்தார். கடந்த 7-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வ…
-
- 0 replies
- 410 views
-
-
சென்னை அடையாறில் சோக சம்பவம்: பள்ளிக் கட்டிடம் இடிந்து 2 மாணவிகள் பலி, ஒருவர் படுகாயம் - உறவினர்கள் மறியல்; அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி சென்னை அடையாறு அவ்வை இல்லத்தின் கட்டிடம் இடிந்து விழுந்த இடம் அருகே கதறி அழும் நந்தினியின் (உள்படம்) தாயார். அடுத்த படம்: கதறி அழும் மோனிஷாவின் (உள்படம்) தாயார் | படங்கள்: கருணாகரன், ஸ்ரீபரத் அடையாறில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு பெசன்ட் நகர் பிரதான சாலை ஆவின் கேட் பகுதியில் அவ்வை இல்லம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லம், பிரைமரி பள்ளி மற்றும் டிவிஆர் பெண்கள் …
-
- 7 replies
- 1k views
-
-
மணிரத்னம், சுஹாசினி | கோப்புப் படம்: எம்.வேதன் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், 'இணைய விமர்சகர்கள்' குறித்து நடிகை சுஹாசினி தெரிவித்த கருத்து, சமூக வலைதள சினிமா ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. ''ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு. ஏனென்றால், அவர்களுக்கு அனுபவம் உள்ளது; தகுதி இருக்கிறது. அதனால் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால், இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர…
-
- 1 reply
- 425 views
-
-
மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். திருப்பூரில் நேற்று கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத் துவ முகாமை தொடங்கிவைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது. நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திரா…
-
- 0 replies
- 260 views
-
-
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்து 40-வது முறையாக விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விமான நிலையத்தின் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, உடைந்து சிதறிய கண்ணாடிகளை ஊழியர்கள் அகற்றினர். 40-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது http://tamil.thehindu.com/tamiln…
-
- 2 replies
- 310 views
-
-
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது, ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அ…
-
- 0 replies
- 365 views
-
-
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆந்திர போலீஸ் தரப்பு நடவடிக்கையை மனித உரிமை மீறல் என நீதி கேட்டு, ட்விட்டரிலும் தமிழ் இணைய ஆர்வலர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அவற்றின் சிறு தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட் பகுதியில்... மை டியர் தல @riyas - ஆந்திரா அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...!!! அப்பாவி எம் 20 தமிழ் மக்களை சுட்டு கொன்றவர்களை உடனே கைது செய்...!!! வானவில் விஜய் @VanavilVijay - 'ஆந்திரா வங்கி'ய முற்றுகையிட்டு என்ன பிரயோஜனம் ?? அதுல இருக்கிற துட்டு தம…
-
- 3 replies
- 525 views
-
-
சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை! "காட்டுக்குள் இருந்து நேரடி ரிப்போர்ட்” [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 04:43.23 AM GMT ] [ விகடன் ] சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார். வாரிமெட்டு என்ற அந்தப் பகுதியில் தமிழர்கள் 20 பேரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தன. 20 பேரின் உடல்களுக்குப் பக்கத்திலும் தலா, ஒரு செம்மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின்…
-
- 0 replies
- 983 views
-
-
அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்? ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மர மாஃபியாக்கள் நடத்தும் இந்தக் கடத்தலுக்கு, கூலியாட்களாக செல்லும் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. சரி, ஏன் இந்த மரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இருளாண்டி பதில் சொல்கிறார்! "சந்தன மரங்கள் மதிப்பு மிக்கவை. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவை செஞ்சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களே. இவை, 7லிருந்து 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது வளர்வதற்கு 30லிருந்து 40 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியிலும், கர்நாடகாவில் …
-
- 2 replies
- 960 views
-
-
20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர காவல்துறையையும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்ய வலியுறுத்தி அவருக்கு சொந்தமான மைலாப்பூரில் உள்ள ஹெரிடேஜ் அங்காடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அடித்து நொறுக்கினர். அவ இயக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் குமரவேல் ஆகியோரை கைது செய்யப்பட்டு மைலாப்பூர் E1 காவல் நிலையத்தில் வைக்கப்பட்டள்ளனர். http://www.pathivu.com/news/39112/57//d,article_full.aspx
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7ம் திகதி செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்களும் நேற்று அடையாளம் காணப்பட்டது. அதில் 12 பேர் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள். 5 பேர் தர்மபுரி, 3 பேர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து சென்ற அவசரஊர்தியின் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய ஆணையம் நோட்டீஸ் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும், 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 9 பேர் பிணமாக கிடந்த …
-
- 0 replies
- 373 views
-
-
ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நகரியில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஷேஷாச்சலம் வனப்பகுதியில் செவ்வாய்க் கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ரூயா அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டறியும் பணியில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் ஈடுபட…
-
- 4 replies
- 2.6k views
-
-
கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திலும் கோவை கமிஷனர் அலுவலகத்திலும் ஏற்கெனவே புகார்கள் கொடுத்துள்ளார். தன்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக திருமாவளவன் மீது அவர் புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா மீண்டும் புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’திருமாவளவன் கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திரு…
-
- 2 replies
- 464 views
-
-
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை - அம்பத்தூரில் நடந்தது. அதில் சீமான் பேசும்போது, " 'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு' என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான் தலைவர் பிரபாகரன். இன்றைக்கு நாங்கள் பெரியாருக்கு எதிரி என்கிறார்கள். 'எதனையும் சுயஅறிவோடு சிந்தித்து செயல்பாடு' என்றார் பெரியார். ஆனால், இன்றைய பெரியாரியவதிகளோ, 'சொந்தப்புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்' என்கிறார்கள். எ…
-
- 4 replies
- 576 views
-
-
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம் டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்; இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டை…
-
- 4 replies
- 676 views
-
-
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்ததில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. எனவே கட்டிடங்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதா தரப்பு வாதம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின் தீர்ப்பு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக உயர்நீதிமன்றத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக நீண்ட விசாரணை, சுமார் ஆறரை லட்…
-
- 13 replies
- 4.1k views
-
-
சென்னையிலும் வெளியான இனவழிப்பு ஆவணப்படம்! கண்ணீரில் மூழ்கிய அரங்கம் இயக்குனர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான ''Pursuit of Justice'' என்கிற ஆவணப்படமானது கடந்த 25ம் திகதி ஐ.நா அவையின் 24வது அரங்கிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. மணிவண்ணன் அவர்களின் தயாரிப்பில் உருவான குறித்த ஆவணப்படமானது, ஐ.நா அவையில் திருமதி. ரஜனி செல்லதுரை அவர்களது முயற்சியால் திரையிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம் ஐ.நாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஐ.நாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை நேரி…
-
- 1 reply
- 505 views
-
-
திருச்சியில் வைகாசி 24, 2015 அன்று இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியால நடத்தப்பட இருக்கிறது.. யாழ்களத்தைப் பார்வையிடும் தமிழகத்தோழர்கள் கண்டிப்பாக சென்று வரவேண்டும் என உங்கள் உறவாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்..! செ. இராசன் (காஞ்சி மண்டலச் செயலாளர்) அழைப்பு: அன்பு தென்னரசன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அழைப்பு: கு. செந்தில் (திருவள்ளூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்) அழைப்பு:
-
- 1 reply
- 441 views
-
-
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் என்ற அடைமொழியுடன் தமிழர்கள் மத்தியில் மிகப்பிரபலம். சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியில் ஈழத்தமிழ் சிறுமி ஜெசிக்கா இரண்டாம் இடம் பிடித்து 1 கிலோ தங்கம் வென்றிருந்தார். இந்த தங்கத்தையும் ஈழத்து குழந்தைகளுக்கு வழங்கி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி தொடர்பாக சிறுவர் நலன் அமைப்பு ஒன்று பொது நல வழக்கு தொடரவுள்ளதாம். இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கு வெற்றி ஒன்றையே குறிக்கோளாக காட்டி அவர்களது மனதில் ஒருவித அழுத்தத்தை விதைப்பதாக கூறி இந்த வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. http://seithy.com/breifNews.php?newsID=128752&category=Indi…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுவரை அவருக்கு கட்சி பதவி எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் மந்திரி பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் அறிவித்தார். இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜய தாரணி எம்.எல்.ஏ, ம…
-
- 0 replies
- 340 views
-