தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
பழத் தோட்டத்தில் தர்சன் சிங் உள்ளிட்ட பஞ்சாப் விவசாயிகள். வறட்சியான லாந்தையில் பசுமை நிறைந்த பழத்தோட்டம். வானம் பார்த்த பூமியான ராமநாத புரம் மாவட்டத்தில் பழத்தோட் டங்கள் அமைத்து வளமான பூமி யாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயி கள். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ளது லாந்தை ஊராட்சி. ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம் என மாறிமாறி பேருந்து பயணம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்து கள் இல்லாததால் ஷேர் ஆட்டோ வில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது …
-
- 6 replies
- 1.1k views
-
-
புலிகளின் தலைவரை இதற்காக தான் அழித்தார்கள் நடிகர் – ராஜ்கிரண். MAY 7, 2015 COMMENTS OFF தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் என்றால் நம் நினைவிற்கு வருவது ராஜ்கிரண் தான். இவர் நடிப்பில் வெளிவந்த தவமாய் தவமிருந்து, கிரீடம், காவலன், வேங்கை ஆகிய படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவை. இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் பிரபாகரன் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நாம் சுதந்திரம் வாங்கிய போது காந்தியடிகள் ஒரு பெண் நல்லிரவில் எந்த துணையும் இல்லாமல் தனியாக சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புகிறாளோ, அன்று தான் முழு சுதந்திரம் என கூறினார். இப்படி ஒரு நல்ல ஆட்சியை இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பிரபாகரன் நடத்தி வந்தார், இது பல பேருக்கு பிடிக்கா…
-
- 1 reply
- 741 views
-
-
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் கத்தரி வெயில் இந்த ஆண்டு 4-ம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெயில் 43.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். கடந்த ஆண் டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவலாக கன மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் திருச்சி, வேலூர், மதுரை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாகவே காணப்பட்டது. சென்னையில் அதிகம் தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகியி ருந்தது. சென்னையில் 42.8 டிகிரி, வேலூரில் 42…
-
- 1 reply
- 580 views
-
-
பணத்தை கூட எண்ணத் தெரியாதா? மணமேடையை விட்டு மணமகனை விரட்டிய புதுமைப்பெண் உத்தரப்பிரதேசத்தில் திருமண மேடையில், மணப்பெண் ஒருவர் பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா என்று மணமகனை விரட்டியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடக்கவிருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமண நாளில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சரியாக எழுதப்படிக்க தெரியாதவர் என்பதை மணமகள் அறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதனை தனது பெற்றோரிடம் எடுத்துக்கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்ட அவர…
-
- 3 replies
- 721 views
-
-
வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் :- தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார், பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்.... அவர்கள் காப்பாற்றவில்லை. இந்தியா காப்…
-
- 0 replies
- 293 views
-
-
ஆந்திர அதிகார வர்க்கம் நடத்தி முடித்த இருபது தமிழர்களின் இனப்படுகொலையில் - எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மத்திய அரசு 'சி.பி,ஐ விசாரணை தேவையில்லை' என்று நேற்று அறிவித்திருப்பது உலக முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் சொல்லமுடியாத ரணத்தை உருவாக்கியிருகிறது. மேலும் அவர் விடுத்த அறிக்கையின் முழு விபரம்:- http://www.pathivu.com/news/39707/57/20/d,article_full.aspx
-
- 2 replies
- 377 views
-
-
கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் 'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக …
-
- 5 replies
- 490 views
-
-
வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம்: - சீமான் [Wednesday 2015-04-29 08:00] விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளை மார்க்கெட் திடலில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில, நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன். …
-
- 1 reply
- 501 views
-
-
Exclusive: ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் …
-
- 0 replies
- 409 views
-
-
நேற்று மாலை நடைபெற்ற ‘சிவப்பு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தில் ‘கோனார்’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர் ராஜ்கிரண் பேசுகையில் ஆச்சரியப்படத்தக்கவகையில ஈழப் பிரச்சினை குறித்து மிக விரிவாகவே பேசினார். ராஜ்கிரண் பேசும்போது, “இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது. மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும். படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்ட…
-
- 0 replies
- 546 views
-
-
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை பேரணி நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த பேரணி கிண்டியில் தொடங்கி கவர்னர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி முடிவில் கவர்னர் மாளிகையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் தர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆந்திர என்கவுன்டர் பற்றி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இந்த பேரணியில் பங்கேற்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சி…
-
- 0 replies
- 421 views
-
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இருந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சி அய்யநாதன் உள்பட 13 மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் இன்று அய்யா பழ நெடுமாறன் அய்யாவின் தமிழர் தேசிய முன்னணியோடு இணைந்து கொண்டனர். இவ் நிகழ்வு தஞ்சை முள்ளிவாய்க்கள் முற்றத்தில் நடை பெற்றது. http://www.pathivu.com/news/39564/85//d,article_full.aspx
-
- 2 replies
- 555 views
-
-
சிறையில் இருந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரகாஷ் எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனையில் பணியாற்றியவர்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் புகாரின் பேரில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். முதலில் 2001ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக…
-
- 0 replies
- 239 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குத்தான் அதிகம் பேர் செல்கின்றனர். தமிழ்நாட்டில் 5 சதவீதக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம், ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆ…
-
- 0 replies
- 358 views
-
-
புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, சாட்சிகள் தரப்பில் விசாரிக்கப்பட்ட இளங்கோ. | ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய இணைப்பதிவாளர் இன்று புதுச்சேரியில் வாக்குமூலம் பதிவு செய்தார். கடந்த 7-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வ…
-
- 0 replies
- 411 views
-
-
சென்னை அடையாறில் சோக சம்பவம்: பள்ளிக் கட்டிடம் இடிந்து 2 மாணவிகள் பலி, ஒருவர் படுகாயம் - உறவினர்கள் மறியல்; அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி சென்னை அடையாறு அவ்வை இல்லத்தின் கட்டிடம் இடிந்து விழுந்த இடம் அருகே கதறி அழும் நந்தினியின் (உள்படம்) தாயார். அடுத்த படம்: கதறி அழும் மோனிஷாவின் (உள்படம்) தாயார் | படங்கள்: கருணாகரன், ஸ்ரீபரத் அடையாறில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு பெசன்ட் நகர் பிரதான சாலை ஆவின் கேட் பகுதியில் அவ்வை இல்லம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லம், பிரைமரி பள்ளி மற்றும் டிவிஆர் பெண்கள் …
-
- 7 replies
- 1k views
-
-
மணிரத்னம், சுஹாசினி | கோப்புப் படம்: எம்.வேதன் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், 'இணைய விமர்சகர்கள்' குறித்து நடிகை சுஹாசினி தெரிவித்த கருத்து, சமூக வலைதள சினிமா ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. ''ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு. ஏனென்றால், அவர்களுக்கு அனுபவம் உள்ளது; தகுதி இருக்கிறது. அதனால் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால், இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர…
-
- 1 reply
- 426 views
-
-
மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். திருப்பூரில் நேற்று கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத் துவ முகாமை தொடங்கிவைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது. நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திரா…
-
- 0 replies
- 260 views
-
-
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்து 40-வது முறையாக விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விமான நிலையத்தின் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, உடைந்து சிதறிய கண்ணாடிகளை ஊழியர்கள் அகற்றினர். 40-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது http://tamil.thehindu.com/tamiln…
-
- 2 replies
- 311 views
-
-
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது, ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அ…
-
- 0 replies
- 366 views
-
-
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆந்திர போலீஸ் தரப்பு நடவடிக்கையை மனித உரிமை மீறல் என நீதி கேட்டு, ட்விட்டரிலும் தமிழ் இணைய ஆர்வலர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அவற்றின் சிறு தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட் பகுதியில்... மை டியர் தல @riyas - ஆந்திரா அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...!!! அப்பாவி எம் 20 தமிழ் மக்களை சுட்டு கொன்றவர்களை உடனே கைது செய்...!!! வானவில் விஜய் @VanavilVijay - 'ஆந்திரா வங்கி'ய முற்றுகையிட்டு என்ன பிரயோஜனம் ?? அதுல இருக்கிற துட்டு தம…
-
- 3 replies
- 525 views
-
-
சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை! "காட்டுக்குள் இருந்து நேரடி ரிப்போர்ட்” [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 04:43.23 AM GMT ] [ விகடன் ] சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார். வாரிமெட்டு என்ற அந்தப் பகுதியில் தமிழர்கள் 20 பேரின் உடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தன. 20 பேரின் உடல்களுக்குப் பக்கத்திலும் தலா, ஒரு செம்மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களின்…
-
- 0 replies
- 985 views
-
-
அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்? ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மர மாஃபியாக்கள் நடத்தும் இந்தக் கடத்தலுக்கு, கூலியாட்களாக செல்லும் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. சரி, ஏன் இந்த மரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இருளாண்டி பதில் சொல்கிறார்! "சந்தன மரங்கள் மதிப்பு மிக்கவை. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவை செஞ்சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களே. இவை, 7லிருந்து 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது வளர்வதற்கு 30லிருந்து 40 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியிலும், கர்நாடகாவில் …
-
- 2 replies
- 961 views
-
-
20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர காவல்துறையையும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்ய வலியுறுத்தி அவருக்கு சொந்தமான மைலாப்பூரில் உள்ள ஹெரிடேஜ் அங்காடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அடித்து நொறுக்கினர். அவ இயக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் குமரவேல் ஆகியோரை கைது செய்யப்பட்டு மைலாப்பூர் E1 காவல் நிலையத்தில் வைக்கப்பட்டள்ளனர். http://www.pathivu.com/news/39112/57//d,article_full.aspx
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7ம் திகதி செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்களும் நேற்று அடையாளம் காணப்பட்டது. அதில் 12 பேர் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள். 5 பேர் தர்மபுரி, 3 பேர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து சென்ற அவசரஊர்தியின் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய ஆணையம் நோட்டீஸ் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் 11 பேர் ஓரிடத்திலும், 9 பேர் வேறொரு இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 9 பேர் பிணமாக கிடந்த …
-
- 0 replies
- 375 views
-