தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
சீமான் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை.. ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி! மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மதுரை மாஜிஸ்திரேட் கூறி விட்டார். மேலும், சீமான் மீது புகார் கொடுத்தவரும், தன்னிடம் போலீஸார் 2 தாள்களில் எதையோ எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறவே, சீமானை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சீமான் விடுவிக்கப்பட்டார். அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் சீமான் மீது ஏன் போலீஸார் பொய் வழக்குப் போட முனைந்தனர் என்பது புதிராக உள்ளது. சோதனைச் சாவடி கலாட்டா. கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை …
-
- 3 replies
- 810 views
-
-
திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துளார். காங்கேயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார். மேலும், "கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்திகள் வெளியானது. ஸ்டாலின் உடனான சந்திப்பு அரசியல் நாகரீகம் கொண்டது மட்டுமே" என்றார் வைகோ. முன்னதாக, வரும் 2016 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையவுள்ளதாகவும், அதில் மதிமுக, பாமக சேரும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தொடக்கமாக பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத் திருமண நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கட…
-
- 1 reply
- 514 views
-
-
தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: 01 - 11 - 1956 கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணைந்து 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று 59-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைப்புக்காக நடைபெற்ற திருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா (80), அந்த நாள் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது நிலவிய சூழ்நிலை என்ன? அப்போது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. குடியானவர்களுக்கு 2 இடங்குழி அரிசி (3 கிலோ) கன்ட்ரோல் துணி (மலிவான துணி) 2 ராத்தல் மரவள்ளி கிழங்கு (3 கிலோ) இவைதான் வாழ்க்கை. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அரிசியும…
-
- 1 reply
- 759 views
-
-
மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். கருணாநிதி கூறும்போது, " ஸ்டாலின் - வைகோ சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.நானும் வைகோவும் பகைவர்கள் அல்ல நீண்ட கால நண்பர்கள். புதிய கூட்டணி உருவானல் திமுக பொதுக் குழு,செயற் குழு கூடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பா.ம.க. தலைவரின் முன்னிலையில…
-
- 13 replies
- 967 views
-
-
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஞானதேசிகன் ராஜினாமாவை வரவேற்ற ஜி.கே. வாசன், லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையை அவர…
-
- 0 replies
- 358 views
-
-
5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சேசு ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மீனவர்கள் தூக்கை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தாரும், அவர்களுடன் மீனவ சமுதாயத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என 3000 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். திமுகவின் சுப.தங்கவேலம், காங்கிரஸ் கட்சியின் ராமன் உன…
-
- 0 replies
- 447 views
-
-
தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவராக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம்! சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை காலை அறிவித்தார். 65 வயதாகும் இளங்கோவன் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். நன்றி தற்ஸ் தமிழ். எல்லாம், நன்மைக்கே..... இவரின் தலைமைப் பதவியுடன், தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் அடியோடு காணாமல் போய…
-
- 4 replies
- 559 views
-
-
‘‘இளம் வயதில் என் ஆசையெல்லாம் ஏதாவது ஒரு அலுவலகத்தின் மூலையில் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் வரைந்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு உயரத்தைத் தொட்ட பிறகு, புதிய சவால்களுக்கு தயாராவதுதானே சரி... வாய்ப்பு வரும்போது அதை உதாசீனப்படுத்தவும் கூடாது இல்லையா?! அப்படித்தான் எனக்கு எழுத்து, சினிமா விமர்சனம் என்று பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் ஆசையோடு எடுத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுக்க ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்" என்று தனது நீண்ட விரல்களைக் காற்றில் அசைத்துப் பேசத் தொடங்குகிறார் கார்ட்டூனிஸ்ட் மதன். கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை, தியாகராஜ பாகவதர் முதல் விஜய் - அஜித…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்த சிங்கள இனவெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக, தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (Facebook)
-
- 0 replies
- 403 views
-
-
சென்னை, அக்.31 இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர். போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 5 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
5 மீனவர்கள் மீதான தீர்ப்பை கண்டித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் முற்றுகை. தமிழ்நாடு மாணவர் இயக்கம் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் (Facebook)
-
- 0 replies
- 497 views
-
-
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் இன்று (30.10.2014) வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. 2011, நவம்பர் 28-ஆம் தேதி இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது. மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக …
-
- 2 replies
- 672 views
-
-
ஈரோடு: திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என அக்கட்சியுடன்,ஆயுட்கால கால ஒப்பந்தம் போடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில், அக்கட்சியின் சார்பில் சேலம் மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன்," கொள்முதல் உயர்வைக் காரணம் காட்டி பால் விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. நிபந்தனையின்றி தமிழக அரசு பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் வடஇந்தியாவில் குறிப்பாக டெல்லியில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு…
-
- 0 replies
- 344 views
-
-
கோவை/சென்னை: ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கமும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் இன்று விலகியுள்ளார். இது அக்கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், மூப்பனார் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம் 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட…
-
- 1 reply
- 511 views
-
-
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். பின் நிருபர்களிடம் வைகோ பேசியபோது, ’’தலித் மக்களை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்து சென்ற பெருமை தேவரையே சாரும். ஏழை மக்களுக்கு தனது சொந்த நிலங்களை தானமாக தாரை வார்த்து கொடுத்தவர் தேவர். சிறு வயது முதலே முத்துராமலிங்கத் தேவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் மீது கொண்டுள்ள மரியாதையால், சிறையில் இருந்த ஆண்டுகளை தவிர, 39 ஆண்டுகளாக நான் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகிறேன். ஜாதி மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தியவர் தேவர், என்றார். மேலும், கூட்டணி குறித்து கலைஞ…
-
- 0 replies
- 501 views
-
-
மீனவர்களுக்கு தூக்கு- பற்றி எரியும் ராமேஸ்வரம்- ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! ராமேஸ்வரம்: 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன. 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற செய்தி வெளியானது முதல் ராமேஸ்வரம் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. தங்கச்சிமடத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. இதனால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. ராமேஸ்வரத்தில் சென்னை எழும்பூர், கன்னியா…
-
- 4 replies
- 534 views
-
-
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ஞானதேசிகன். இந்நிலையில், அவர் இன்று (30ஆம் தேதி) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். மேலும், ''கடந்த 3 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க உதவும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தமிழக காங்கிரஸ் தலைவராக சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி'' எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&…
-
- 1 reply
- 453 views
-
-
ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி எம்.பி.,யை, பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதால், காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு, தி.மு.க., அறிவித்த நிதியை அளிக்க முடியாமல் தவிக்கிறது.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, அனைத்துத் தரப்பி னரும் உதவ வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார். நேரில் வழங்க...:இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செப்., 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,க்கள், இத்தொகையை, பிரதமரிடம் நேரில் வழங்குவர்,'' என, கூறியிருந்தார்.இதற்கான காசோலையை, தி.மு.க., த…
-
- 4 replies
- 569 views
-
-
'கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார். தீபாவளி ரிலீஸாக வெளியான நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்போன் எண்ணை கொடுப்பார். நாயகன் விஜய், இந்த எண்ணை பலமுறை சொல்லிக்கொண்டே, அந்த எண்ணில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சிக்கான எண் எனவும், தாங்கள் நாய் பிடிக்கும் பிரிவு எனவும் கூறுவதாக படத்தில் வேடிக்கையான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. கத்தி திரைப்படத்தில் விஜய் பலமுறை திரும்ப திரும்…
-
- 3 replies
- 705 views
-
-
சென்னை: மழைக்கால நிவாரண நடவடிக்கை குறித்து எத்தனை பொய்க்குற்றச்சாட்டுகள் கூறினாலும் கருணாநிதி என்றும் ஜீரோதான் என முதல்வர் பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மழைக்கால நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என விமர்சித்து, 'பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்!' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து, 'மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா?' என்ற பதற்றத்தில் கருணாநிதியின் அறிக்கை உள்ளதாக குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பன்னீர் செல்வம், “தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் எடுத்த ம…
-
- 0 replies
- 397 views
-
-
தயாநிதி மாறன், கலாநிதி மாறன்| கோப்புப் படம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பத்துள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குரூப் உயர் அதிகாரி அகஸ்டஸ் ரேல்ஃப் மார்ஷல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர சன் டைரக்ட் உள்பட 4 நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி …
-
- 0 replies
- 355 views
-
-
தர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா? தர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா? அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர். தர்மபாலாவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவில் வாழும் இலங்கை எதிலிகளில் 67 வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்த நாட்டில் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்களிடம், மும்பை கற்கை நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 520 குடும்பங்களைச் சேர்ந்த 23 வீதமானவர்கள் இலங்கை திரும்புவதற்கு ஆர்வத்துடன் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு வீதமானவர்கள், அவர்களின் உறவினர்கள் வசிக்கும் மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. அடிப்படை வசதிகள், வாழ்வாதார உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் இலங்கை அகதிகள், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கே …
-
- 1 reply
- 587 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு தொடர்பாக, 200 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் பரிவர்த்தனை நடந்த விவகாரத்தில், அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவை விடுவிக்க வேண்டும் என, அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் 'அப்செட்' அடைந்து உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து, கலைஞர் 'டிவி' நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்பட்டதில், முறைகேடு இருப்பதாக சொல்லி, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. 10 பேர் குற…
-
- 3 replies
- 671 views
-