தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்! உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏத…
-
- 0 replies
- 755 views
-
-
முதல்வர், 10 அமைச்சர்கள் 'டிஸ்மிஸ்' : கவர்னரிடம் ஸ்டாலின் சார்பில் கடிதம் சென்னை: 'முதல்வர் பழனிசாமி உட்பட, 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தி.மு.க., முதன்மைச் செயலர் துரைமுருகன், ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய மூவரும், மும்பையில் சந்தித்தனர். அப்போது, கவர்னருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, வித்யா சாகர் ராவிடம் வழங்கினர். கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஆர்.கே. நகர் தொகுதி யில், முதல்வர் பழனிசாமி மற்றும் அவரதுஅமைச்…
-
- 0 replies
- 306 views
-
-
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால், தமிழ்நாட்டில் உள்ள செய்யூர் அனல் மின் நிலைய பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. -இந்திய சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசன் - தமிழ்நாட்டிலிருந்து வெற்றிபெற்று மத்திய அமைச்சரானவர்.. செய்யூர் மின் நிலையத்திக்கு அனுமதி கிடைத்து விட்டால் மொத்தம் 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ( தமிழ்நாட்டிக்கு வெறும் 1600 மெகாவாட் தான்.),.... அது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் இன்னும் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்..... - இத்தனை அதிகாரமிக்க செயலலிதா என்ன செய்யவேண்டும்??? சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவேண்டும்.. அவர் வீடு , அலுவலகம் முன்பாக தொடர் போராட்டங்கள் நட…
-
- 0 replies
- 359 views
-
-
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சி அமல்? - பாஜக போடும் புதிய திட்டம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதத்தில் கூறியுள்ளனர். இவர்கள் தவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின…
-
- 0 replies
- 346 views
-
-
நைட்நேரம் ஜெயா மூர்ச்சையான நிலையில் நைட்டியோடு அம்புலன்ஸில் ஏற்றுவது பதிவு டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தடதடக்க போயஸ் கார்டனுக்குள் நுழைந்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்களில் ஒரு கட்சித் தலைமையின் விதியையே மாற்றும் சாட்சியங்களைக் கைப்பற்றியது. சரியாக 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பத்தைச் சந்தித்துள்ளது போயஸ் தோட்டக் கதவுகள். கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இளவரசியின் மகள் ஷகீலா சகிதம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பூங்குன்றன் அறைக்குள் முதலில் சல்லடை போட்டனர். பின்னர் போயஸ் இல்ல…
-
- 0 replies
- 590 views
-
-
கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம் மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் …
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்க…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் - கள நிலவரம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 …
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்? "என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்." மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி.! கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன விடுதலை குறித்து பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் மீது பயன்படுத்தப்படும் ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீதி பயன்படுத்தியதை தமிழக அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்திருந்தன. இந்த நிலையில், இன்று திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டத்தினை நீக்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 2017இல் சென்னையில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் UAPA பிரிவை மட்டும் ரத்து செய்து…
-
- 0 replies
- 509 views
-
-
இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்குரிய நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது.. மருத்துவ முன்னேற்றங்களும் நவீன கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், புதிய புதிய நோய்களின் தாக்கமும் அதிகரித்தபடியேதான் உள்ளது. எத்தகைய நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால்கூட டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் எத்தகைய பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய சிறப்புவாய்ந்த இயன்முறை மருத்துவத்தைத் தமிழக அரசு பரவலான செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும். இயன்முறை மருத்துவத்தின் தரத…
-
- 0 replies
- 369 views
-
-
’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி! தமிழகத்தில், பெண் சிறைக்கைதிகளில் அதிக நாட்கள்... மிக அதிக நாட்கள்... சிறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர், அதன்பிறகு மரண தண்டனைக் கைதியாக, ஆயுள் தண்டனைக் கைதியாக 24 ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஆயுளில் பாதி கரைந்துவிட்டது. இந்த நிலையில், நளினி உள்பட ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு கருணைகாட்டி விடுதலை செய்ய முன்வந்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு தடைகேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிக…
-
- 0 replies
- 680 views
-
-
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 407 views
-
-
ஆறுமுனைப் போட்டியில் பலசாலி யார்? – மாலன் ஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் அணி வகுத்து நிற்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் (1991-2016) தமிழகத்தில் நடந்த ஐந்து சட்டப் பேரவைத் தேர்தல்கள் பெரும்பாலும் மும்முனைப் போட்டிகளையே சந்தித்து வந்திருக்கின்றன. 1996-இல் மட்டும் நான்கு முனைப் போட்டி இருந்தது. பல முனைப் போட்டி இருந்தால், நடுநிலை வாக்குகள் ஓர் அணி அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பதிவாகாமல் அவை பலவாறாகச் சிதறும். அவ்விதம் பலவாறாகப் பிரியும் போது சிறிய அளவு வாக்கு வித்தியாசங்கள் கூட வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்துவிடும் என்பது யதார்த்தம். அதாவது, எல்லாக் கட்சிகளுக்…
-
- 0 replies
- 674 views
-
-
பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் முதலில் திறக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக 8000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் ஷெட்டர் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், திங்கட்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழக டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்ப…
-
- 0 replies
- 666 views
-
-
லோக்சபா தேர்தலில், மக்களிடம் அங்கீகாரம் பெற்ற அ.தி.மு.க.,வுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என, அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். ஈரோட்டில், இந்திய கம்யூ. மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: நிலக்கரி இறக்குமதி ஊழலை விசாரித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழங்கிய ரகசிய வாக்குமூலத்தை, மத்திய அமைச்சர்கள் திருத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், காங்., தோற்கும் இடத்தில், பா.ஜ., வெற்றி பெறாது. மாநில கட்சிகள், ஜனநாயக கட்சிகளுடன், இடதுசாரிகள் அமைக்கும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. பா.ம.க.மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சால், தமிழகத்தில் சமூக…
-
- 0 replies
- 375 views
-
-
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் – தொல்.திருமாவளவன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கை கோரியது போன்று இந்தி அரசு, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாயின் ஆது தமிழர்களுக்கு எதிரான செயற்பாடாகவே அனைவரினாலும் பார்க்கப்படும்.ஆகவே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ப…
-
- 0 replies
- 231 views
-
-
ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் தவறா? சட்டசபையில் நடந்த, ஓட்டெடுப்பில் பங்கேற்ற, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் குளறுபடி நிகழ்ந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தவறானது என, தெரிய வந்துள்ளது. தமிழக சட்டசபையில், மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 234. ஜெயலலிதா மரணத்தால், ஆர்.கே.நகர் தொகுதி, காலியாக உள்ளது. மீதம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நேற்று முன்தினம், நம்பிக்கை ஓட்டு கோரியது. அப்போது, ஏற்பட்ட அமளி யால், 88 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளி யேற்றப்பட்டனர். தி.மு.க.,வின் மற்றொரு …
-
- 0 replies
- 271 views
-
-
நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்; எங்களுக்கு ஒரு தலையணை போதும் என்று நடராஜன் தனது நெருக்கமானவர்களிடம் பேசியதாக அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உண்ணாவிரத மேடையில் இவ்வாறு அவர் பேசியது பன்னீர்செல்வத்தை அதிர்ச்சியடைய வைத்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத மேடையில்…
-
- 0 replies
- 317 views
-
-
பொதுச்செயலர் பதவியை தக்க வைக்க சசி கும்பல் தந்திரம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் வந்தால், வெற்றி பெற வசதியாக, புதிதாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டைகள் அச்சிட, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர். சசிகலா, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பொதுச்செயலர் பதவிக்கு, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுச்செயலர் பதவிக்கு,பன்னீர் அணியினர் போட்டியிடுவர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியில் உள்ள…
-
- 0 replies
- 258 views
-
-
சரத், ராதிகாவிடம் வரித்துறை துருவி துருவி விசாரணை நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்; பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம், ஏழு மணி நேரம், துருவித் துருவி விசாரணை நடத்தினர். மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் குவாரி தொழிலில், பங்குதாரராக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களிலும், 7ம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின; மேலும், 5 க…
-
- 0 replies
- 402 views
-
-
‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive ஊர் கூடித் தேர் இழுக்கத் தயாராகி வருகிறது அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளும். ஆனால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 'உள்ளே வெளியே' ஆட்டத்தினால் இந்த இணைப்பு சாத்தியமல்ல என்ற கருத்து இரு அணிகளின் மூத்த நிர்வாகிகளிடையேயும் எழுந்துள்ளது இப்போது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அதிருப்திக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருடன் கணிசமான எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் அணிவகுத்தனர். அதிமுக பிளவுபட்டதால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் புகழ்பெற்ற தனது இரட்டை இலைச் சின்னத்தை இழந்தது அ…
-
- 0 replies
- 330 views
-
-
சென்னை: ஈரோட்டிலும், தஞ்சாவூரிலும் புதிய ரயில்வே போக்குவரத்து மேம்பாலங்களைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய மேம்பாலங்கள் அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருமளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுக…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கினால் தமிழகம் கொந்தளிக்கும் : ராமதாஸ் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் வீடின்ற…
-
- 0 replies
- 423 views
-
-
' சிறையிலிருந்து பிணமாகத்தான் வருவேன்!' -விவேக்கிடம் கதறிய இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ' சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்' என்கின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை, தொடக்க காலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர். குற்ற வழக்கில் சிறைபட்டுள்ள ஒருவரை அமைச்சர்கள் சென்று சந்திப்பது அரசிய…
-
- 0 replies
- 501 views
-