தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சேலம் மாவட்டத்தில் காதலிக்கும் படி நபர் ஒருவர் வற்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுக்க முயற்சித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராணி என்ற மாணவி, அங்கிருக்கும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை சந்தீப் (22) என்ற நபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.ராணி பள்ளிக்கு செல்கையில் தினமும், அவரை வழிமறுத்து என்னை திருமணம் செய்துகொள் என வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராணியை வழிமறித்து மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ராணி மறுத்துவிட்டு விலகிச்செல்லவே, அவரை வழிமறித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். …
-
- 4 replies
- 875 views
-
-
ஒகேனக்கலில் சீறிப் பாய்ந்து வரும் காவிரி நீர் (கோப்புப் படம்) காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற வலியுறுத்தலின்பேரில் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. நேற்று முன்தினம் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, “3 மாதங்களாக நீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் கர்நாடகா, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது’’…
-
- 0 replies
- 482 views
-
-
செயல் தலைவர் பதவி: பாஜகவில் இணையும் குஷ்பு மின்னம்பலம் நடிகையும் காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக, பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி ந…
-
- 9 replies
- 967 views
-
-
விக்கிலீக்ஸ்: தனித் தமிழ்நாட்டுக்கு அமெரிக்க ஆதரவைக் கோரிய திமுக அமைச்சர்! புதன், 10 ஏப்ரல் 2013( 14:14 IST ) ஐயா இது இப்போதைய மேட்டர் இல்லை! இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போதைய திமுக அமைச்சர் ராஜாராம் இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியும் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அமெரிக்க அதிகாரியிடம் கேட்டதாக ரகசிய அமெரிக்க கேபிள் மூலம் விக்கிலீக்ஸ் தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவை உலுக்கிய எமெர்ஜென்சி என்ற இந்திராவின் பாசிச ஆட்சிக் காலத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய மோதல் இருதுவந்தது. இந்த நிலையில் அப்போதைய தொழிலாளர் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜாராம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதுவ…
-
- 2 replies
- 713 views
-
-
மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே... ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம். ‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ச…
-
- 0 replies
- 767 views
-
-
'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா? தமிழக அரசியல் தகிப்பு இன்னும் அடங்கவில்லை.! துரோகம், ஆதரவு, தீர்ப்பு, சிறை... என்று அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்துவரும் தமிழக அரசியல் இப்போது, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. தமிழகத்தின் காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி ஜெ. சமாதியில் திடுதிப்பென்று வந்தமர்ந்து தியானத்தில் மூழ்கியதில் ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இப்போதுவரையிலும் தொடர்கிறது. 'முதல்வராக அமரவைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா' என்று அவர் பற்றவைத்த நெருப்பின் சூடு தாளாமல், உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் சசிகலா. அடுத்தடுத்து ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அ…
-
- 1 reply
- 426 views
-
-
கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன் சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு. ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவு…
-
- 0 replies
- 254 views
-
-
ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…
-
- 0 replies
- 410 views
-
-
’ஆபரேஷன் தமிழ்நாடு' பி.ஜே.பி-யின் திட்டம்... ஓ.பன்னீர்செல்வம் சம்மதம்! தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா காரணங்களினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இது களத்தில் இருந்த பல்வேறு வேட்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. ''தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை. இது திட்டமிட்ட நாடகம்'' என்று அ.தி.மு.க (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடுகடுத்துள்ளார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஒரு மாணவன் காப்பி அடித்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வீர்களா? அதுபோலவே ஒருவர் தவறு செய்தால் எப்படி ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யலாம்'' என்று அதிருப்தி கருத்துகளை வெளியிட அ.தி.மு.க…
-
- 0 replies
- 541 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக ``ஒன்றியம் எனும் வார்த்தையை கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மமதா பானர்ஜியைப் போல பா.ஜ.க அரசை எதிர்ப்பதற்கு தி.மு.க முன்வர வேண்டும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்திய அரசுடன் மென்மைப்போக்கை தி.மு.க கடைப்பிடிக்கிறதா? பா.ஜ.க வழியில் தி.மு.கவா? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்தச் சந்திப்பை நான் பெருமைக்குரியதாகப் பார்க்கிறேன். பேரறிவாளன் உள்பட ஏழு பேர் வ…
-
- 0 replies
- 638 views
-
-
சசிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெளி உணவு: சிறை ஏட்டுவின் 'சாம்ராஜ்யம்' பெங்களூரு: 'அ.தி.மு.க.,வின் சசிகலாவுக்கு தேவையான பொருட்கள், சிறை வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு ஒருவரின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலமாக சிறைக்குள் செல்வது வாடிக்கையாக உள்ளது' என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறை உயர்அதிகாரிகளுக்கு, சிறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலர் எழுதிய மொட்டை கடிதம் ஒன்று நேற்று வெளியானது. அதன் விபரம்:பெங்களூரு சிறையின், புற வாசல் பாதுகாப்புக்கு, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு ஏட்டு கஜராஜ மாகனுாரு என்பவரை, அரசு நியமித்திருந்தது. சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களை, சோதனை செய்வ…
-
- 0 replies
- 633 views
-
-
உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு சிட்டுக்களுடனான நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பட மூலாதாரம்,KOODUGAL வீட்டு வாசலில் அரிசி புடைக்கும்போது சிதறுவதைச் சாப்பிட வரும் அவற்றோடு குழந்தைப் பருவத்தில் விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. அத்தகைய சிட்டுக் குருவிகளுடனான அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு முன்பு இருந்த அளவுக்குக் கிட…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார். 1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார். 96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுக…
-
- 0 replies
- 409 views
-
-
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார். வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றக் கோரி உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய அவர், இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப ஐ.நா, பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த மாதம் ஜெனிவாவில் கூட இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூ…
-
- 0 replies
- 520 views
-
-
கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் இத்திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள…
-
- 2 replies
- 431 views
- 1 follower
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், அழைப்பின் பேரில்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்திருந்தது. மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் நட்புறவை வலுப்பட…
-
- 0 replies
- 204 views
-
-
எடப்பாடியைக் கைகழுவுகிறாரா மோடி? மழையில் நனைந்து, தண்ணீர் சொட்டச் சொட்ட வந்த கழுகாரிடம், “பி.ஜே.பி-யின் நிறம் லேசாக மாறுவதுபோல் தெரிகிறதே?” என கேள்வியைப் போட்டோம். ரெயின்கோட்டைக் கழற்றியபடி பதில்சொல்ல ஆரம்பித்தார், கழுகார். “டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக அரசுக்குக் காட்டிவந்த தன் நிறத்தை இப்போது மாற்றிவிட்டது என்றும், எடப்பாடியைக் கைகழுவ மோடி தயாராகி விட்டார் என்றும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கேற்ப தமிழக பி.ஜே.பி தலைவர்களின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க அரசைத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசையும் அதில் முன்னணியில் இருக்கின…
-
- 0 replies
- 3.1k views
-
-
விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த 50 லட்சம் ரூபாய்யை அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கினார் மதிப்பிற்குரிய.அண்ணன்.திரு.#விஜய்_சேதுபதி அவர்கள்
-
- 0 replies
- 322 views
-
-
சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:- பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள…
-
- 0 replies
- 331 views
-
-
"மேகதாது அணை" திட்ட அறிக்கை குறித்து... விவாதிக்க கூடாது – முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை! மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என அவர் த…
-
- 0 replies
- 232 views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப தயக்கம் - கள நிலவரம் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெ…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது – வைரமுத்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 30 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசாங்கத்தின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, “தமிழ் மொழிக்கு ஒரு வரலாற்று நெருக்கடி எழுந்திருக்கிறது. தமிழ் மொழிக்கு இது ஒன்றும் புதியதில்லை. தமிழை மதத்தால், அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள் இப்போது சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இப்போது திணிக்கப…
-
- 0 replies
- 705 views
-
-
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருவதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெவித்துள்ளனர். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிமுக வினரின் போராட்டங்களால் பொதுமக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எதற்கெடுத்தாலும் 144 தடை உத்தரவு போடும் அதிமுக அரசு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றும், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை அமல்படுத்தா…
-
- 0 replies
- 470 views
-
-
திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு! திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319117
-
- 2 replies
- 283 views
-
-
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞர…
-
- 4 replies
- 1.5k views
-