தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய…
-
- 0 replies
- 317 views
-
-
குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்த…
-
- 0 replies
- 317 views
-
-
அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்குகிறேன்! மதுசூதனன் அதிரடி சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, டி.டி.வி.தினகரன், டாக்டர். வெங்கேடஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கேடஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். அவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அ.தி.மு.க. சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்த…
-
- 0 replies
- 317 views
-
-
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art
-
- 1 reply
- 317 views
-
-
பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை! புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்…
-
- 0 replies
- 317 views
-
-
இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 317 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரசாந்த் கிஷோர் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொடங்கிய நிறுவனம் தற்போதும் தேர்தல் வியூக பணிகளை செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்படவே வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். த.வெ.க தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோ…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பட மூலாதாரம்,PERUMAL MURUGAN படக்குறிப்பு, பெருமாள் முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 மார்ச் 2023, 13:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. …
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
கச்சத்தீவு: 50 பேருக்கு மட்டும் அனுமதி - மீனவர்கள் எதிர்ப்பு! மின்னம்பலம்2022-02-25 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் கச்சத்தீவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். அதற்கு, தமிழக மீனவர்களும் கலந்துகொள்ளத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல இந்த வருடம், வருகிற மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை முதலில் அறிவித்தது. …
-
- 0 replies
- 316 views
-
-
அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு! மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி பகுதிக்கு கள்ளத்தனமாக வந்தவர் அஜாய் (24). போலீஸாரால் பாஸ்போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிவுக்கு பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மண்டபத்தில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜாய் திடீரென முகாமில் இருந்து மாயமானார்…
-
- 0 replies
- 316 views
-
-
2 ஜி வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு! சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு, வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007-ல், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து வழக்கு விசாரணையைத் தொட…
-
- 0 replies
- 316 views
-
-
18 SEP, 2023 | 04:14 PM சென்னை: "பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் …
-
- 2 replies
- 316 views
- 1 follower
-
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த ப…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழகம்- கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட தாமதித்து வந்தது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்ததால் கண்காணிப்பு குழு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்தி…
-
- 0 replies
- 316 views
-
-
மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை, திமுகவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதமரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது? அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் ப…
-
- 0 replies
- 316 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 316 views
-
-
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நா…
-
- 0 replies
- 316 views
-
-
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ். வேலூர் சிறையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணி பற்றி, வீடியோப் பதிவு ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ், “ 25 வருடங்களுக்கு முன்னாடி இதே ஜூன் 11 ம் தேதி, பேரறிவாளன் என்ற 19 வயசுப் பையனை, ‘விசாரிச்சுட்டு அனுப்பிவிடுகிறோம்’ என்று சொல்லி போலீஸார் அழைத்துப் போனார்கள். அவருடைய அப்பா குயில்தாசனும் அம்மா அற்புதம் அம்மாளும், ‘ விசாரிக்கத்தானே கூப்பிடுகிறார…
-
- 0 replies
- 315 views
-
-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார். இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லட…
-
- 0 replies
- 315 views
-
-
கூடங்குளம் அணுவுலைக் கெதிரான போராட்டத்தில் போராட்டகாரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மாநில அரசை வலியுறுத்தியும், மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக மூடக்கோரியும் எஸ்.டி.பி .ஐ கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(03.08.2013) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொது செயலாளர் எ.கே.கரீம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாப்பு…
-
- 0 replies
- 315 views
-
-
தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 21 ஏப்ரல் 2022, 09:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது? அமைச்சர் சொன்ன காரணம் கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மி…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: ஸ்டாலின் ''யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று, அறிவாலயத்தில் நடந்தது.இதில், 'அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில், நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழிகாட்டுதல்படி கூட்டத்தில், 'முதல்வர் பன்னீர்செல்வம் நம்ப…
-
- 0 replies
- 315 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்டோரியா பப்ளிக் ஹால், சென்னை கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 ஆகஸ்ட் 2024, 06:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் ஒரு காலகட்டத்தில் சென்னையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சென்னையின் வரலாற்றோடு பிணைக்கப்பட்ட இந்த கட்டடத்தின் வரலாறு என்ன? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் யாரும், அந்த ரயில் நிலையத்திற்கும் மாநகராட்சிக் கட்டடமான 'ரிப்பன் பில்டிங்கி'ற்கும் இடையில், இந்தோ - சராசெனிக் ப…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
15 JUN, 2023 | 05:43 AM சென்னை: சிலவகை வழக்குகளுக்கென சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV of 1946) ன் பிரிவு 6ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1…
-
- 2 replies
- 315 views
- 1 follower
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7–1–2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார். ஏற்கனவே, மீனவர் பிரச்சினைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது நாகை மீனவர்கள் உண்ணாவிர…
-
- 0 replies
- 315 views
-