தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
உலக தமிழ் நீதிமன்றம் என்ற பெயரில் ஆயுதமேந்தி போராட திட்டம்: 3 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் Posted on November 13, 2022 by தென்னவள் 8 0 சேலத்தில், நாட்டு கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், உலகத் தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகள், குவாரிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டியில், கடந்த மே 19 -ம் தேதி ஓமலூர் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களிடம் இருந்து, நாட்டு ரக கைத்துப்பாக்கிகள் 2, வெட…
-
- 0 replies
- 292 views
-
-
Vaiko · மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழியாது! வெந்த புண்ணில் வேல் வீச வேண்டாம்!! வைகோ அறிக்கை உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் கற்பு சூரையாடப்பட்டு இராணுவத்தினரால் வதைத்துக் கொல்லப்பட்டனர். வயது முதிர்ந்தோர், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் என எவரையும் விட்டுவைக்கவில்லை சிங்கள அரசு. உலகம் தடை செய்த குண்டுகளை பயன்படுத்தி அழித்தனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிருபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள்…
-
- 0 replies
- 438 views
-
-
திருநங்கைகள் நால்வருக்கு போலீஸ் வேலை: 'நீதிமன்றம் உத்தரவிட்டது; தமிழ்நாடு அரசு தாமதிக்கிறது' என புகார் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KAVI படக்குறிப்பு, கவி (இடது), தேன்மொழி (வலது) தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளை, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வுக்கு அழைத்து அவர்களை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும், தேர்வுக்கு அழைக்கா…
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
கூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க, சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மற்றும் ஏற்கனவே முதல் பட்டியலில் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்ட 20 மாணவர்கள் சார்பில் உச்சந…
-
- 0 replies
- 774 views
-
-
மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார் அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங…
-
- 0 replies
- 544 views
-
-
மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் …
-
- 0 replies
- 449 views
-
-
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னையில் போராட்டம் June 2, 2019 சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, நேற்றையதினம் ; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பெப்ரவரி 15 ம்திகதி முதல் காணாமல் போயுள்ளார் முகிலன் காணாமல் போனது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் 17 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வ…
-
- 0 replies
- 777 views
-
-
படக்குறிப்பு,மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழையும்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் செயற்கை காலை கழற்றிவிட்டு வரும்படி கூறியதாகவும் கோயிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல 500 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ஊழியர் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் ஒருவர் காணொளியை பகிருந்திருந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் …
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
ஒரே குடும்ப அட்டை முறைமைக்கு வைகோ கண்டனம் நாடு முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறிய கருத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க தொடர்ந்து முயற்சிகளை…
-
- 0 replies
- 446 views
-
-
பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் ''சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் செ…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, திருச்சியில் வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம் 23 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது. நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சரபோஜி மன்னர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 3 மணி நேரங்களுக்கு முன்னர் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து, இந்திய தொல்லியல் துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மராட்டியர்களின் கல்வெட்டுகள் குறித்து முன்பே ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களும் தற்போதுதான் தெரிய வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி. அவர்களின் வம்சம், ஆட்சி முறை, கொடை என அனைத்து விவரங்களையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டில் பொற…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்! கொட்டித் தீர்த்து சென்னையை தனித் தீவாக்கி மிதக்கவிட்ட மழை வெள்ளம், நீதிமன்றங்களில் வழக்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபதி ராஜிவ் ராய், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின என்று ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இரண்டு வழக்குகளை மழை - வெள்ளம் தொடர்பாக தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 572 views
-
-
சென்னை : பாமக சார்பில் 117 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 3ம் கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தற்போது தர்மபுரி எம்.பி.,யாக இருந்து வருகிறார். அன்புமணி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விபரம் : 1. பென்னாகரம் - அன்புமணி 2. மேட்டூர் - ஜி.கே.மணி 3. சீர்காழி - பொன்.முத்துக்குமார் 4. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம் 5. பாபநாசம் - ஆலயமணி 6. பேராவூரமணி - கலைவே…
-
- 0 replies
- 442 views
-
-
திருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்! இலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் நான்காம் திகதி புயல் கரை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தப் புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும…
-
- 0 replies
- 467 views
-
-
மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர். அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள்…
-
- 0 replies
- 412 views
-
-
‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி! ப.திருமாவேலன் ‘ஒட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர், கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவர். திருவாரூரில் சாதாரணத் தொண்டராகக் கட்சிப் பணி ஆற்றிவந்த கருணாநிதி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனை அழைத்துவந்து தனது ஊரில் கூட்டம் பேசவைத்தார். அதே அன்பழகன், இன்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினை, கட்சியின் செயல் தலைவராக 70 ஆண்டுகள் கழித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி 'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரி…
-
- 0 replies
- 471 views
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர். இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கை…
-
- 0 replies
- 451 views
-
-
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கீழ் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று …
-
- 0 replies
- 411 views
-
-
காரைக்கால் எம்.எம்.ஜி நகர், என்ஜினியர்ஸ் கார்டனை சேர்ந்தவர் ஜெய பாலன் மகள் வினோதினி (24). சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்திருந்த அவர், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு சென்னை செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தபோது வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிகிச்சை பலனின்றி கடந்த பிப்.12-ந் தேதி அதிகாலை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வினோதினி மீது ஆசிட் வீசியதாக காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வினோதினியை சுரேஷ் குமார் ஒருதலையாக காதலித்ததும், அவரது காதல் நிறைவேறாதத…
-
- 0 replies
- 482 views
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் - மாஃபா பாண்டியராஜன் சூசகம் மாஃபா பாண்டியராஜன் | படம் உதவி: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம். ‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங…
-
- 0 replies
- 222 views
-
-
"ஸ்டெர்லைட்" ஆலை, ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது! ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விநியோகமும் ஆரம்பமாகியுள்ளது. 4.820 டன் ஒக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021/1215553
-
- 0 replies
- 720 views
-
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு விசாரிக்கும் வழக்குகள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றன. அது கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அ…
-
- 0 replies
- 551 views
-
-
வேட்பாளர்களின் செலவுக் கணக்கு... ஆர்.கே. நகரில் இறுக்கும் தேர்தல் ஆணையம்...! தேர்தல் என்றாலே வாக்கு இயந்திரம், வேட்புமனு, வேட்பாளர், சின்னம், கட்சி, பிரசாரம் என்று பல விஷயங்கள் இருக்கும். தேசியக்கட்சி, மாநிலக்கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என்ற அடுத்தக் கட்ட விஷயங்களும் அங்கே காணப்படும். அடுத்ததாக சொல்வதென்றால், அது தேர்தல் ஆணையம்தான். தேர்தல் ஆணையம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் தவறாமல் நினைவில் வந்து விடுகிற பெயர் டி.என்.சேஷன். கட்சிக் கொடி கட்ட, போஸ்டர் ஒட்ட, கட்-அவுட் வைக்க, மைக் கட்டி பிரசாரம் செய்ய என்று அனைத்துக்கும் வேட்பாளர்கள் பயந்து நடுங்கிய காலகட்டம் அது. வாய்க்கு ரு…
-
- 0 replies
- 263 views
-