தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
மெட்ராஸ் கஃபே : சீன் பை சீன் முழு திரைக்கதையை இங்கு படியுங்கள், பிறகு நீங்களே சொல்லுங்கள் தடை செய்ய வேண்டாமா என்று? மெட்ராஸ் காபே ராஜிவை கொல்ல சதியில் ஈடுபடுபடுபவர்கள் சந்திக்கும் இடம் அது ஓர் உணவு விடுதி காட்சி 1 மூன்று நான்கு வாகனத்தில் ஆயுதங்களுடன் வரும் விடுதலைப் புலிகள் யாழ்பாண வீதியில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மீது கண்மூடிட்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் பேருந்து கொளுத்தப்பட்டு பலர் சாகடிக்கப்படுகிறார்கள் இக்காட்சி முடிந்த பிறகுதான் படமே துவங்குகிறது இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒர் நாடு அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி கதைக் குறல் நமக்கு கதை சொல்கிறது .எ…
-
- 0 replies
- 727 views
-
-
சென்னை: ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால் 13வது சட்ட திருத்தம் தொடர்பாக இந்தியா யாரிடம் பேசுவது? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது போல இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டாம் என்றால், யாரிடம் பேச வேண்டும்…
-
- 7 replies
- 2.8k views
-
-
மதராஸ் கபே திரைப்படம் முழுக்க முழுக்க தமிழர்களின் உணர்வை மேலும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது சுமார் நான்கு லட்சம் உயிர்களை இழந்து நிற்கும் எங்கள் தமிழனத்தின் வேதனை தீயில் மீண்டும் இவர்கள் இந்த திரைப்படம் மூலம் எண்ணையை ஊற்றிகிறார்கள் இதை தமிழகத்தில் வெளியிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் என்ற நோக்கிலும் மற்றும் சட்டம் , ஒழுக்கு , பிரச்சனை, உருவாக்கும் . முழுக்க முழுக்க இது காங்கிரசின் எண்ணமும் மற்றும் சதிவேலையும் இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு போடப்பட்ட திட்டம்தான் , இந்த மெட்ராஸ் கபே திரைப்படம் , நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எங்கள் இனத்தின் விடுதலை வேரோடு திசைதிருப்ப காங்கிரசின் ஏற்படுத்த…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக குற்றக் கூண்டில் நிற்கும் இலங்கை அரசு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதே கேலிக்கும், கண்டனத்திற்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத் தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத் தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும…
-
- 1 reply
- 365 views
-
-
சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…
-
- 1 reply
- 357 views
-
-
தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டித்து எதிர்வரும் 25ஆம் நாள் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் அரசியலைமைப்பு சட்டம் தமிழர்விரோத சட்டமாகும். அதனை ஏற்காத ஈழத்தமிழர்களிடம் தனிதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்காமல் துப்பாக்கி முனையில் மாகாணதேர்தல் என்ற ஒன்றை நடத்தி த…
-
- 0 replies
- 482 views
-
-
பெரியார்தாசன் காலமானார். சென்னையில் பெரியார்தாசன் காலமானார். பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பச்சையப்பன் கலூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பெற்றார். தீவிர திராவிட கழகத்தைச்சேர்ந்த இவர் ஆத்திகவாதியாக மாறினார். இஸ்லாம் மதத்தில் இணைந்து மெக்கா சென்றார். -நக்கீரன்-
-
- 15 replies
- 1.3k views
-
-
14 வயது சிறுமியை சீரழித்த சாமியார்... சிறுமியின் தாயாரே உடந்தையான கொடுமை! சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியா…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆபத்தான பணிகளில் ஈழ அகதிகள் இறங்கியிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 120 ஈழ அகதிகள் நடுக்கடலில் தத்தளித்தநிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 78 பேர் ஆண்கள், 20 பெண்கள், 22 குழந்தைகள். தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த இவர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர். கடந்த ஆண்டும் இதே போல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டபொழுது தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஏன் தமது உயிரைப் பணய…
-
- 1 reply
- 627 views
-
-
சென்னை: காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் மாணவர்களிடையே மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்துவது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் பரிசு மற்றும் விருதுகளை வைக்கோ மூலம் வழங்குவது. 18 வயது ஆகும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி…
-
- 1 reply
- 410 views
-
-
சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமி…
-
- 1 reply
- 444 views
-
-
Thirumurugan Gandhi ”ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்கிறோம் ”, விடுதலை சார்ந்த அரசியல் கோரிக்கையும், இனப்படுகொலைக்கான விசாரணைக்கோரிக்கையும் விட வாழ்வுரிமைக் கோரிக்கையையும், இலங்கையர்களாக ஒன்றுபட்டு சமரசம் செய்து வாழ்வது என்கிற அரசியல் தேர்தல் ஊடாக முன்வைக்கப்பட்டு தமீழிழ குடிமக்களிடம் இலங்கையின் அரசியல் சாசனமும், நீதி பரிபாலனையையும் ஏற்கச்சொல்லி நயவஞ்சகமாக தீர்வுகளை இந்தியாவும், சர்வதேசமும் முன்வைக்கிறது. வேட்டையாடப்பட்டவர்களாக நிற்கும் எம் தமிழீழச் சமூகம் எந்தக்கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொள்வது என்கிற பிரச்சனையில் நிறுத்தப்பட்டுள்ளது. 2009க்கு பின்பு தொடர்ச்சியாக நாம் என்ன கேட்கவேண்டும், அல்லது, என்ன தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டுமென்று சர்வதேசம் …
-
- 0 replies
- 369 views
-
-
காட்பாடியில் சித்தூர் ரோட்டில் ஆந்திர எல்லை அருகில்Â தி.மு.க அமைச்சர் துரை முருகன் நடத்தி வரும் கிங்ஸ்டன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆந்திராவில் பந்த் நடந்து வருவதால் சித்தூரில் இருந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். சித்தூரை சேர்ந்தவர் ஷர்வான்குமார் கல்லூரி மாணவர். இவர் கடந்த செவ்வாய்கிழமை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் ஷர்வான்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது உடன் இருந்த மாணவர்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கேட்டுள்ளனர். ஆம்புலன்சை அனுப்ப கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக க…
-
- 0 replies
- 729 views
-
-
சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிப் பூசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்து லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வியூகம் வகுக்க சென்னையில் இன்று மாவட்டச் செயலர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரும் ஒரு அணி! இதைத்தான் மே 19-ந் தேதி நடைபெற்ற திமுகவின் பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கோஷ்டிப் பூசல்களால் திமுக செல்லரித்து வரும் நிலையில் இருக்கிறது. இதை வெட்கப்படாமல், வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த உண்மையை மறைத்துவிட்டு, ஒரு தலைவன் - நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்று சொன்னால், அது உசுப்பி விடுவதற்காக சொல்லப்படும்…
-
- 2 replies
- 393 views
-
-
சென்னை: சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாணை எண் 92ன் படி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது இந்திய மாணவர் கழக மாணவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இன்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, மாணவர்களை உள்ளே விட மறுத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை தரதரவென இழுத்து சென்று போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கைது ச…
-
- 0 replies
- 373 views
-
-
சென்னை: கோவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, பட்டினிப்போர் நடத்தியவர்களை கைது செய்ததற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கினால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். தினமும் 800 டன் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக (சுமார் 70,000 மக்கள்) வசிக்கின்ற பகுதிகளை ஒட்டி இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோதே அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமலும், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கருத்துகளைக் கேட்காமலும…
-
- 0 replies
- 265 views
-
-
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு மதப் பிரசாரம் செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் வருகிறார். அவர் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் தர்ம பிரசார சமிதி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில், நிர்வாகிகள் குழு ஒன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்துள்ளது. அதில், ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு மதப்பிரசாரம் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதப் பிரசாரம் செய்யும் கூட்டங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால் ஈரோடு மாவட்டத்துக்குள் உமா சங…
-
- 0 replies
- 576 views
-
-
சென்னை: மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது. அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாத…
-
- 0 replies
- 944 views
-
-
கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினமான இன்று, தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அங்கு உரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன் எடுத்து வைத்தது. தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதே வழியில் கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்…
-
- 2 replies
- 475 views
-
-
டி.ஆர்.பாலுவை காரில் 'பிக்கப்' - 'டிராப்' செய்து விட்டு ஜெ.வை சந்தித்த தம்பிதுரை! Kia 2013 Range View the 2013 Kia Range. Book a Test Drive Today! Kia.com.au Unconventional Wisdom Unique Financial Thinking - Independent thought leadership www.unconventional-wisdom.com.au சென்னை: திமுக எம்.பி. டி.ஆர். பாலுவுடன் ஒரே காரில் சென்ற அதிமுக எம்.பி. தம்பிதுரை பின்னர் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் விழி உயர்த்தி பார்க்கப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்.பி.யும், நாடாளுமன்ற கட்சிக்குழு தலைவருமான தம்பிதுரை தனது காரில் கிளம்பினார்.…
-
- 5 replies
- 1.1k views
-
-
மதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது. வைகை நதிக்கரை ஓரம் துவரிமான் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.100 கோடியில் 160 அடி உயரமுள்ள தமிழ்த்தாய் சிலையும், அதை சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம், தமிழ்த்தாய் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் அறிவித்தார். தமிழ்த்தாய் சிலையும் தண்ணீருக்கு நடுவில் அழகிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடந்த 3 மாதங்களாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வண்டியூர் கண்மாய் ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தின் மகளை காதலித்து மணந்த தனது மகனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார் சென்னையைத் சேர்ந்த ஒரு பெண். சென்னை வடபழனியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் மகளை காதலித்து திருமணம் செய்த எனது மகன் ரமேசுக்கு, அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது மகன் ரமேசை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகார் மனுவில் ரமேசின் தாயார் ராஜகுமாரி கூறியுள்ளார். அருண் சுப்பிரமணியனின் …
-
- 0 replies
- 339 views
-
-
மதுரை: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மதுரை புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் திருமங்கலம் அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில், ஆலம்பட்டி பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்குகளில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை புதூர் பகுதியில், போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒர…
-
- 0 replies
- 374 views
-
-
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பாரதியஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்துவ-இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதைபோல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. இந்த கொலைகளுக்கு சுயகாரணம் தனிப்பட்ட வெறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை என்று தம…
-
- 1 reply
- 397 views
-
-
மதுரை: தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வசூலித்து பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் நெல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 18 கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கொலை செய்யவும், அதற்கான வழக்கு செலவுக்காகவும் ரூ.6 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.இந்த பணத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த கட்டை சாகுல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தனர். இதையறிந்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கட்டை சாகுல் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ரூ.6 லட்சத்…
-
- 8 replies
- 1.1k views
-