Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார். 2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்…

  2. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாளு அம்மாளின் மகள் செல்வி செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 82 வயதாகும் தயாளு அம்மாளின் உடல்நிலை சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் இல்லை. அவரது உடல் நிலையை மருத்துவ குழு ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாபக மறதி நோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கொண்ட பெஞ்ச், ‘‘தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமன…

  3. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு ஆகஸ்ட் 2-ல் பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி இம்மாவட்டத்தில்உள்ள தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ஓலைக்குடிப்பட்டியில் பெல் தொழில்சாலையை திறந்துவைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆகஸ்ட் 2-ம் தேதி வருகைதரவுள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், விழா அரங்கம் பகுதிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களது ஆலோசனைப்படி அப்பகுதியை காவல்துறையினர் தன்வசமாக்கியுள்ளனர். இப்பகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்டது என்பதால் அத்தொகு…

    • 0 replies
    • 326 views
  4. பம்மலில் இருந்து பாஸ்டன் வரை! (Student of Pammal school to go to Boston) செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு யோசனையைக் கூறி அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சென்னை மாணவர். எதிர்காலத்தில் மனிதன் பூமியில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறி, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனம் மாநில அளவில் நடத்திய ‘யங் சயின்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார், சென்னை அருகே உள்ள பம்மல் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஆர். ரச்சன். செவ்வாய் கிரகமும் நமது பூமியைப் போன்றதுதான் என்றாலும் அங்கு போதிய சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் அங்கு தாவரங்களோ, விலங்கினங்களோ இருக்காது. அதை நாம்தான் அங்கு உருவாக்க வே…

  5. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர் 16-7-2013 அன்று எழுதிய கடிதத்தில் “இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் எல்லாச் சமுதாயத்தினரும், குறிப்பாக இலங்கைவாழ் தமிழர்கள் அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை அளித்து ஓர் உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய நாள்பட்ட கோரிக்கையாகும். இலங்கைவாழ் தமிழர்களுக்கு இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும்” என்று எழுதியிருக்கிறார். பிரதமர் கடிதத்தில் தெரிவித்திருக்கும் செய்திகள் நமக…

    • 0 replies
    • 335 views
  6. தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடந்த நவம்பர் 7–ந் தேதி கலவரம் நடந்தது. இதில் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே திவ்யா தாயார் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து திவ்யா கடத்தப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் சுந்தரேஸ் முன்பு கடந்த 3–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான திவ்யா தனது தாயாருடன் செல்வதாக கூறினார். இந்த நிலையில் மறுநாள் இளவரசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு…

    • 0 replies
    • 526 views
  7. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். கடந்த 1ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 19ம் தேதி சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்த கொடூரங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வன்முறை குற்றங்களை கடும் நடவடிக்கைகள் மூலம் வேரோடு கிள்ளிய எறிய வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர இந்த 2 கொலைகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் கொடநாட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றியும், அது தொடர்பானவை பற்றியும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோச…

  8. புதுடெல்லி: முல்லைப் பெரியார் அணை நீரில் தமிழகத்திற்கு உரிமை வந்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி விடுத்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையை கூட்டி, சட்டம் நிறைவேற்றியது இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், எச்.சி.தத்து, சந்திரமவுலி கிருஷ்ண பிரசாத், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாராணை இரண்டாவது நாளாக இன்று நடைபெ…

  9. புதுடெல்லி: 2ஜி வழக்கில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 2ஜி வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கலைஞர் டி.வி.யின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்களை சிபிஐ பதிவு செய்துள்ளது. …

  10. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டத…

  11. பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களில் தூண்டுதலாலேயே தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அக்கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் இல. கணேசன் மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் தூண்டுதலால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் டிசம்பர் 6-ந் தேதி தமிழகத்தில் மட்டும் பதற்றத்தை உருவாக்குகிறார்கள். பா.ஜனதா மற்றும் இந்து இயக்க …

  12. தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– "டெசோ" கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 8.8.2013 வியாழக்கிழமை அன்று கழக மக்களவை–மாநிலங்களவை உறுப்பினர்கள் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தலைமையில் புதுடெல்லி, நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலை நகரங்களில் நடைபெறும் "தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில்" கலந்து கொள்வோர் விவரம் பின்வருமாறு:– சென்னை – தலைவர் கருணாநிதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மதுரை– வீரமணி, திருச்சி– பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர்–தொல்.திருமாவளவன் எம்.பி., கோவை–சுப்புலட்சுமி ஜெக…

  13. தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து, அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் கலப்பு திருமண பிரச்சினைகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, சாலை மறியல்களோ, சாதி சங்க கூட்டங்களோ நடத்தக்கூடாது, சாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் இயக்குனர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று வந்தார். விழாவிற்கு புறப்பட்ட அவரை போலீச…

    • 0 replies
    • 444 views
  14. சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அர…

  15. தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்த டுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழ…

  16. தமிழர்களை பொறுக்கிகள் என இழிவுபடுத்தி பேசி தமிழர்களுக்கு எதிராக தன்னுடைய வாழ்நாள் பெரும்பகுதியை செலவளித்து வரும்  சுப்ரமணியசாமி கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவிற்கு வருகை தருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் சார்பில் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சுப்ரமணிய சாமி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை கிழித்து எறிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தி சு.சாமிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறைனர் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20 பேர்களை கைது செய்துள்ளனர் .    http://dinaithal.com/tamilnadu/17443-cupramaniyacami-torn-banners-arrested-20-people-showed-black-flag.html

    • 0 replies
    • 471 views
  17. புதுடெல்லியில் உள்ள கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் நடுத்தர வயது விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அதனை விசாரணை செய்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி நிவேதிதா அனில் சர்மா என்பவர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் 7 வருட சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறியுள்ளார். டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி யமுனா பஜார் பகுதியில் ஆர்ய சமாஜ் மந்திரில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக 3 குழந்தைகளுக்கு தாயான விதவை பெண் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும், தனக்கு திருமணமானதை மறைத்து தான் ஒரு த…

    • 0 replies
    • 305 views
  18. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம். கடந்த 2008ம் ஆண்டும் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரையுலகினர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்தது திமுக அரசு. இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார் சீமான். இன்றும் அவர் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி சதாசிவம், வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.  இதனால் சீமான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று வழக்கறிஞர்கள் வாட்டரங்கள் தெரிவிக்கிறனர் .http://dinaithal.com/tamilnadu/17406-seema-ramanathapuram-court-ordered-…

    • 0 replies
    • 303 views
  19. ராமநாதபுரம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். http://tamil.oneindia.in/news/2013/07/19/tamilnadu-arrest-warrant-against-see…

  20. போராட்டம் கை கொடுத்தது.. மதுரை நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதி!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை திரும்பப் பெறுவதாக நீதிபதி மணிக்குமார் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இனி அந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியும். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் என்பவர் 2 வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த 2 வழக்குகளும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தமிழில் வாதாடினார். ஆனால் இதற்கு நீதிபதி மணிக்குமார் அனுமதி மறுத்தார். தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி 2 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடியும் செய்தார். இது கடும் எதிர்ப்பை உருவாக்கி…

  21. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளி…

    • 0 replies
    • 390 views
  22. முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை : Â இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி; இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம். Â Â அதற்குப் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய போது, தமிழக அரசின் சார்பாகவோ அல்லது தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசின் சார்பாகவோ, தமிழகத்திற்கு சாதகமான ஒரு மனு…

    • 0 replies
    • 381 views
  23. தர்மபுரியில் ரயிலில் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மது அருந்தியதாக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் திகதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன். அவரது உடலுக்கு அருகே சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும் அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குற…

    • 0 replies
    • 571 views
  24. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மீத்தேன் வாயு திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார். முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, உற்பத்தி செய்ய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட் டம் செயல்படுத்தப்பட்டால், மண் வளம் பாதிக்கும், நிலத்தடி நீர் குறையும், விளைநிலம் உப்பளமாக மாறிவிடும். மீத்தேன் வாயு நச்சுத்தன்மை வாய்ந்ததால், வாயு கசிவு ஏற்பட்டா…

    • 0 replies
    • 679 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.