தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியிலிருந்து தொடங்கிய நடைபயணத்தின் 11ம் நாள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புதுவலசு என்னும் கிராமம் வழியாக வரும்போது நடைபயணம் சென்றவர்களின் ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு குறுக்கே வந்தது. அப்போது மறுமலர்ச்சி மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் அந்தப் பாம்பைப் பிடித்தார். அதன் வாயை அழுத்தியவுடன் சுழன்றது பாம்பு. பாம்பைப் பிடித்த தொண்டர்கள் உற்சாகமாக இருந்தாலும், வைகோ மட்டும் பதற்றமாகவே இருந்தார் அருகில் இருந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அந்தப் பாம்பை நந்தனிடமிருந்து வாங்கி, கழுத்துப்பகுதியைப் பிடித்து அரை கி.மீ. தூரம் நடந்து வந்தார். பின்னர் பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் வைகோ அவரிடம் “ஒரு உயிரைக் கொல்வது …
-
- 7 replies
- 1k views
-
-
25 ஏப்ரல் 2013 காஞ்சிபுரத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவினர் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதில்லை என்றும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை மனதில் கொண்டு வரும் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார். அவ்விழாவில் அவர் பேசியதாவது, சீர்திருத்த திருமணங்கள் என்றால் 1967க்கு முன்னர் கேளியாகவும், கிண்டலாகும் பார்த்தனர். அத்திருமணங்களுக்கு அங்கீகாரமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். திமுகவைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அமைச்சர்களாக முடியும், எம்.பி, எம்.எல்.ஏக…
-
- 2 replies
- 695 views
-
-
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கொடுத்துவிட்டால் கூடங்குளம் அணு மின் நிலையம் மே முதல் வாரத்திலேயே செயல்பட தொடங்கிவிடும் என சென்னையில் உள்ள ரஷிய துணைத் தூதர் நிகோலோய் லிஸ்தபதோவ் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் யூனிட் அமைக்கும் பணிகள் முடிந்து உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் மற்றொரு 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது யூனிட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த முதல் யூனிட்டில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே மின் உற்பத்தியைத் தொடங்க முடியும். …
-
- 1 reply
- 399 views
-
-
காவிரி ஆற்றின் படுகைப் பகுதியில் மெதேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், இத்திட்டத்தால் விளை நிலங்கள் பாழாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மெதேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எரிவாயுத் தேவைக்காக மெதேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எ…
-
- 0 replies
- 673 views
-
-
25 ஏப்ரல் 2013 சிவகாசி அருகே அனுப்பங்குளம் கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் இருவர் பலியாயினர். அனுப்பங்குளம் பராசக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று பிற்பகல் அங்கு வெடிமருந்து கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மருந்து உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு தீ பற்றியது. பின்னர் அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், பணியில் இருந்த ரவி, கோபால் ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு…
-
- 0 replies
- 484 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில், சுப்பிரமணிய சாமி மீண்டும் மதுரையில் போட்டி? மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 1998ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுப்பிரமணிய சாமி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராம்பாபுவை தோற்கடித்தார். தேர்தலில் வெல்லும் முன் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்றெல்லாம் புருடா விட்டார். ஆனால், மதுரைக்கு உருப்படியாக எந்த வேலையையும் செய்யவில்லை. மாலையில் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, முகத்துக்கு நேராக போகஸ் லைட் அடித்துக் கொண்டு, கருப்புப் பூனைப் படையினரின் சைர…
-
- 0 replies
- 506 views
-
-
கோவையில் வணிக வளாகம் ஒன்றில் அமைந்துள்ள தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோவை நகரின் மையத்தில் அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் அருகே இந்த வணிக வளாகம் அமைந்துள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இருப்பினும் கொழுந்து விட்டு எரிந்த தீயானது, அந்த வணிக வளாகம் முழுவதும் பற்றி கொண்டது. தீயில் சிக்கி இதுவரை நான்கு பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகளில் தீயணைப்புத்துறையினர் மற்றும…
-
- 7 replies
- 1k views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் யூனிட் 1 இல் இருந்து 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசின் அணுசக்தித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத்துக்கு (MADITSSIA), மத்திய அரசின் அணுசக்தித் துறை சார்புச் செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் தேவையான மின்சாரத்தை வழங்கவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் 2012 டிசம்பர் 11இல் டெல்லி நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்…
-
- 1 reply
- 574 views
-
-
பெங்களூரில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்ததால் 16 பேர் காயமடைந்தனர். இன்று காலை பெங்களூர், மல்லேஸ்வரம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேன் வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர். முதலில் மாருதி வேனில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததாலேயே, கார்களும் சேர்ந்து வெடித்ததாக கூறப்படுகிறது. இந்ந்லையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர காவல் ஆணையர் ராகவேந்திரா ஔரத்கர், இது குண்டு வெடிப்பாகவே தோன்றுகிறது என்றார். இருப்பினும் சக்தி குறைந்த வெடிப்பு…
-
- 8 replies
- 991 views
-
-
வேலூர் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்றதொரு நிலைதான், அண்டை மாவட்டமான திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நீடிக்கிறது. வெப்பம் நிறைந்த மாவட்டமாக கருதப்படும் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகியிருக்கிறது. மாவட்டத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்வைக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீருக்காக…
-
- 0 replies
- 378 views
-
-
தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது. கோவை, திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சென்னையில் சுமாரான மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடுமையான சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ததால், மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போகம்பட்டியில் மழை காரணமாக கோழிப்பண்ணை தரைமட்டமானது. இதில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால், ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மின் கம்பங்களும்,மரங்களும் சாய்ந்தன. திண்டுக்கல்லில் கடும் சூறாவளி காற்றுடன் மழ…
-
- 0 replies
- 536 views
-
-
கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்க சொல்லி கேட்டாங்க...: கனிமொழி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொல்லி கேட்டதாகவும் ஆனால் தமிழ்நாட்டை விட்டு செல்ல விருப்பம் இல்லாத காரணத்தால் அதை ஏற்கவில்லை என்றும் அவரது மகளும் திமுக ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் வார இதழுக்கு கனிமொழி அளித்துள்ள பேட்டி விவரம்: கேள்வி: காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர் விலகலுக்குக் காரணமா?' பதில்: தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக மட்டுமே எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக இழப்புகளை வேண்டி விரும்பி ஏ…
-
- 2 replies
- 608 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று கூறினார். தன்னையும், தமது அரசையும் அவதூறாக பேசுவது மக்கள் மீதான நம்பிக்கையை …
-
- 1 reply
- 1k views
-
-
காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது. இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன. இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர். இளங்கோவன் மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130424_dmkcommenwealth.shtml
-
- 1 reply
- 471 views
-
-
தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளின் மிஸ் கூவாகம் போட்டியில் சாயாசிங் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் அரவாணனை தங்கள் கணவராக நினைத்து, திருநங்கைகள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொள்வார்கள். இந்த சமயத்தில் விழுப்புரம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் ரூம்கள் வாடகைக…
-
- 1 reply
- 3.4k views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 10 நாள்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும்வரை இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் வாரியத்தை உடனடியாக அமை…
-
- 0 replies
- 472 views
-
-
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., வினர், சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி கிடைக்காததால், விஜயகாந்த் சிறைக்கு, நடந்து சென்றார். அவருடன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் மட்டும், அனுமதிக்கப்பட்டனர். வெயிலை சமாளிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழம் ஆகியவற்றை, சிறையில் இருக்கும் அருண் சுப்ரமணியத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து செ…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா,பல்கேரியா,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு …
-
- 0 replies
- 440 views
-
-
ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச…
-
- 0 replies
- 622 views
-
-
கூடங்குளம் அணு உலையின் 4 வால்வுகளில் பழுது என்றும், எனவே மின் உற்பத்தி தாமதமாகும் என்றும், தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்றும், உடனடியாக அதை மூடியே ஆகவேண்டும் என்றும், கூடங்குளம் சுற்றியுள்ள அணு உலைக்கு எதிரான மக்கள் பல கட்ட போராட்டங்களை இன்று வரை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். இது மர்மமான முறையில் மறைத்து வைக்கப்படுகிறது. இது போன்ற மர்மங்கள் நீடிப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின…
-
- 0 replies
- 550 views
-
-
தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்களும் சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர் போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு, கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத் த…
-
- 0 replies
- 594 views
-
-
-
"தினத்தந்தி" நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையு…
-
- 2 replies
- 1.6k views
-
-
அதிமுகவுடன் உறவை முறித்துக்கொண்ட விஜயகாந்த், அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்று திடீரென கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார். கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.இருவரும் ஒருவருக்கொருவர் நலம் வி…
-
- 0 replies
- 610 views
-
-
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.'' ''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுமா? ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாது’ என்று, இலங்கை சம்பந்தமான தீர்மானம் பற்றி மத்திய அரசு நினைக்கிறது. 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக் கூடாது’ என்று, தமிழக சட்டம…
-
- 1 reply
- 757 views
-