Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 5.5.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை, தி நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெறும். அனைவரும் வருக ! நிகழ்ச்சி நிரல் : தலைமை : தோழர் வே.வெங்கடேசன், மாவட்டச் செயலர், ம.க.இ.க, சென்னை. உரையாற்றுவோர் : தோழர் காளியப்பன், இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் சு.ப.தங்கராசு, பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் அஜிதா, பெண்கள் விடுதலை முன்னணி தோழர் வ.கார்த்திகேயன், புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மில்ட்டன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் மருதையன், மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம் நாள் : 05.05.2013, ஞாயிறு நேரம் மாலை, 6 மணி. இடம் : செ.தெ.நாயகம…

  2. ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் : “ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார். ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வ…

  3. சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான் என்றும் கூறினார். பா.ம.க.வினருக்கு நாடவடக்கம் வேண்டும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அன்புமணியை கைது செய்தது சரியென்று தோன்றவில்லை என்று கருணாநிதி கூறினார். …

  4. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…

  5. தமிழகத்தின் ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரை என்று அப்பாவி மக்களை உசுப்பேத்தி ஆதாயம் அடையப் பார்க்கும் ஆதிக்க சாதி தலைவர்கள் ஒரு புறம். மறு புறம் இவர்களது ‘வீரம்’ என்பது பொதுக்கூட்ட மேடைகளில் அதிகபட்ச டெசிபல்களில் கத்தும் ஊளைச் சத்தம் மட்டும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. வில் ஏந்திய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் நிலைமை வண்டு முருகன் என்றால் அன்புமணியின் நிலைமை கைப்புள்ளையின் கண்றாவி கண்டிசனையும் விஞ்சி விட்டது. சென்னை தி.நகர் வீட்டில் அவர் கைது செய்யப்படும் போது அழவில்லையே தவிர அவ்வளவு சோகம். அரற்றியவாறு ஜெயலலிதாவுக்கு சாபம் விடுகிறார். அதுவும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற மாட்டார் என்று. தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார்.…

    • 1 reply
    • 4.5k views
  6. இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14414:chief-minister-jayalalithaa-on-katchativu-varkkappatta-recover-from-jet-assembly-resolution&catid=36:tamilnadu&Itemid=102

  7. தமிழன் தொலைக்காட்சி முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான பேருந்துகள் மூன்றா…

    • 0 replies
    • 458 views
  8. பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார். மரக்காணம் அரு…

    • 0 replies
    • 339 views
  9. சென்னை: தவறான நோக்கத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், கம்ப்யூட்டரில்தான் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றைக்கு செல்போன்களி்ல் இணையதளங்கள் பார்க்கும் வசதிகள் அமைந்ததோ, அன்று முதல் இணையதங்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை சிலர் நல்லதுக்காவும், சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துக…

  10. தமிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார். இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும். “தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு ச…

    • 4 replies
    • 3.2k views
  11. விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 750 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ராமதாஸ் மீது சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்ய கேட்டு அவர் தரப்பில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் தரப்பில் கருத்துக்கள் கேட்கப்படும்.…

    • 0 replies
    • 378 views
  12. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்…

    • 0 replies
    • 1.4k views
  13. பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்க…

    • 0 replies
    • 456 views
  14. மதுரை: தனி தமிழ்நாடு அமைக்க உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ம.தி.மு.க. மாநில செயலாளர் ஏ.பாஸ்கர சேதுபதி சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பிரச்னை, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் விரக்தியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். …

  15. சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, மரக்காணம…

  16. மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்தும் இந்தியாவின் சட்ட புத்தகத்தில் மரண தண்டனையை நீக்க கோரியும்நேற்று மாலை 7 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் மாபெரும் பொதுகூட்டம் நடை பெற்றது . இதன் முதலாவது நிகழ்வாக தமிழீழ விடுதலை போரில் உயிர் தியாகங்களை செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது . பின்னர் பொதுகூட்டம் ஆரம்பமானது இதில் நெடுமாறன் ,வைகோ ஆர்.நல்லகண்ணு , தமிழருவி மணியன் , கொளத்தூர் மணி ,மணியரசன் ,தியாகு , கோவை ராமகிருஷ்ணன் , அற்புதம்மா ,தாவூத் மியாகான் ,அதியமான் ,தமிழ்புலிகள் நகை திருவள்ளுவன் ,கி.வே பொன்னையன் , வெள்ளையன் ,ஊமர் , மல்லை சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டு மூன்று தமிழர் உயிர் க…

    • 0 replies
    • 606 views
  17. மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்து எதிர்வரும் இன்று நடக்கும் மாபெரும் பொதுகூட்டம் மாலை 6.30 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நடை பெற உள்ளது. மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழகம் வாழ் அனைவரும் அரசியல் வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்குக்குச் செல்வதை தடுத்து நிறுத்த மாபெரும் பொதுகூட்டம் நடை பெறுகிறது. அதன் நேரலையை 6.30 மணியளவில் கீழ் வரும் இணைப்பில் பார்க்கலாம் . நேரலை http://www.dinaithal.com/live

    • 0 replies
    • 345 views
  18. லங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்…

  19. ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள். இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ஆம் திகதி அன்று காலை புறப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரிய…

    • 0 replies
    • 1.8k views
  20. ஏப்ரல் 29, 2013 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறினார். கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறிய ஸ்டாலின், அதுபற்றி கேட்டால் திமுகவினர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். நீலகிரியில் போதிய நீர்நிலைகள் இல்லாத பகுதியில் 7ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எவ்வாறு மின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு திட்டம் போடுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ப…

    • 1 reply
    • 480 views
  21. ஏப்ரல் 25, 2013 நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ருபாய் செலவில் நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். விதி எண் 110 ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளுடன் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஓடும், குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே நிறுவப்படவுள்ள நீர் தேக்கத்தை பயன்படுத்தி 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, மின்…

  22. 29 ஏப்ரல் 2013 வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவர், பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), விக்னேஷ்வரன் (வயது 19), சந்திரகாந்தன் (வயது 17) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்களுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சுமதி சென்று விட்டார். வீட்டில் சிவராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 7…

  23. 27 ஏப்ரல் 2013 விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி, நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென காணாமல் போனாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவன் சிறுமிய…

  24. 29 ஏப்ரல் 2013 திருச்சியை அடுத்த நங்கவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காவிரியில் நீர் எடுக்க வந்தபோது மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உமாவதி (35), இவரது மகள் தீபா (13), சிறுவன் ஜீவானந்தம்(10) மற்றும் பிரவீணா (18) ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியாகினர். ஞாயிறன்று சவரிமேடு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சடங்குகளுக்காக அருகில் உள்ள காவிரியில் நீர் எடுக்க வந்துள்ளனர். கரை அருகே தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினர். மணற்கொள்ளையால் கரையை ஒட்டிய பகுதிகளில் நீருக்கடியில் பெரிய பெரிய ஆள் விழுங்கிக் குழிகள் தோன்றியுள்ளன. இதில்தான் இந்தக் …

  25. 29 ஏப்ரல் 2013 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையை எதிர்நோக்கி உண்ணாவிரதம் இருந்து வந்துள்ள நிலையில் சசிதரன் என்ற 21 வயது தமிழ் அகதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சசிதரன் கடிதம் எழுதிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சசிதரன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் சிலரை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.