தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
வேற்று மொழிகளில் நான் காணும் தமிழக மாணவர்கள் கோரிக்கையை இங்கு இணைக்கிறேன். நீங்களும் கிடைத்தால் இணையுங்கள். இவற்றை உங்களுக்கு தெரிந்த வேற்றுமொழி நண்பர்களிடம் கொண்டுசெல்லுங்கள். தமிழக மாணவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இதனை வடமாநில நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்... ஈழத்தின் மேல் பற்றுகொண்டு நமக்கு மொழிப்பெயர்த்து உதவிய நமது பீகார் நண்பர் திரு. ரஞ்சித் ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நன்றி!!! तमिलनाडु के सभी कालेजों के छात्रों के संघ की मांग 9 बिंदुतमिल ईलम के लिबरेशन के लिए छात्रों की द्वारा आगे रखा मांग 1.हम दृढ़ता से अमेरिका मसौदा संकल्प की निंदा करते हैं. संयुक्त राष्ट्र मानवाधिकार आयोग (UNHRC) में इसे पारित न करें 2…
-
- 3 replies
- 619 views
-
-
தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 614 views
-
-
தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும். இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும். https://www.facebook.com/photo.php?fbid=600446339967395&set=a.591654974179865.1073741826.591654024179960&type=1&theater
-
- 5 replies
- 1.2k views
-
-
தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். [படங்கள் /வீடியோ ] ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட சென்னை , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். 1. தனித் தமிழீழம…
-
- 1 reply
- 678 views
-
-
அருமையான ஒரு காணொளி....கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள்....உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து இன்று நடக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்....... https://www.facebook.com/photo.php?v=546805748675751&set=vb.140033692837649&type=2&theater
-
- 6 replies
- 985 views
-
-
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=p9nqbYCLYbc
-
- 13 replies
- 848 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம்: [saturday, 2013-03-30 10:48:11] ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருவாரூர்: ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன். உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி மக்கள் வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். எந்த அரசாங்கமும் இவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காத நிலையில், தி.மு.க. சார்பில் வாங்கிவிடப்பட்ட இரண்டு படகுகள் மூலம் இக்கரைக்கும் அக்க ரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் கருணாநிதிக்காக ஓட்டுக் கேட்டு வந்த அவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலப்பகுதிகளில் இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகித்திருந்தது. குறிப்பிhக 83 கறுப்பு யூலை என்ற கொடுரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகம் பெருமளவில் கொத்தளித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக தமிழக இளைஞன் அப்துல் றவூப் தனக்குத் தானே தீ மூட்டி உயிர்த்தியாகம் செய்திருந்தார். இத்தகைய ஒரு கொந்தளிப்பான நிலையில் வானொலி மூலம் உரையாற்றிய அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சிங்கள நாய்கள் என்ற சொற்பிரயோகத்தையும் தனதுரையில் பாவித்திருந்தார். இவ்வாறாக கிளர்ந்தெழுந்த தமிழக மக்களின் ஆதரவு நிலைப்பாடு போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் பிள்ளைகளாக மற்றும் …
-
- 4 replies
- 742 views
-
-
தோழர்களே , 12 கோடி தமிழர்களின் ஒருமித்த குரலலான தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதையும். ராஜபக்சேவும் இந்திய காங்கிரஸ் அரசும் இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலையை , உலக மக்களுக்கு தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் , போராட்ட களமாக IPL போட்டிகள் நடக்கும் விளையாட்டு அரங்குகளை பயன் படுத்த வேண்டும், விளையாட்டு அரங்குகளை, தமிழ் ஈழத்தில் நடந்த அவலங்களின் புகைப்படங்கள், பதாகைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உங்களின் உணர்ச்சி பூர்வமான, தமிழ் ஈழ விடுதலைக்கான வாசகங்கள் நிரம்பி வழிய வேண்டும். இந்த முழு உலக மக்களை நம் போராட்டத்தை திரும்பி பார்க்க வைப்போம். மனித நேயம் படைத்த வெளிநாட்டவர்களையும், தமிழ் ஈழ ஆதரவாளர்களாக மாற்றுவோம் வெற்றி நிச்சயம். தமிழ் ஈழம் பிறக்கும்…
-
- 0 replies
- 810 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு! (படங்கள்) சென்னை: விஷவாயு வெளியேறியதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியி்லுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக வாயுவே காரணம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலையை மூடக்கோரி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியான சல்பர் டை ஆக்சைடு கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
இனப் படுகொலைக்கு எதிரான மாணவர்களது போராட்டம் தன்னிச்சையானது - பழ.நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழ தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இலங்கையில் தமிழர்களுக்கென தமிழ் ஈழம் அமைய தனி வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களை ஏற்க முடியாது என மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். மேலும் மற்ற மாநிலங்கள் இதனை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியிருப்பது வேதன…
-
- 0 replies
- 480 views
-
-
காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்த…
-
- 0 replies
- 512 views
-
-
-
- 0 replies
- 561 views
-
-
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் : இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து…
-
- 0 replies
- 615 views
-
-
"எங்களை தனிமைப்படுத்த சதி நடக்கிறது" ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இந்திய அரசு பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இவர்கள் சம உரிமை பெற இந்தியா முழு முயற்சி எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்து போக செய்து விட்டது என்பது தவறானது. இது உண்மையல்ல. இந்தியா முழு முயற்சி எடுத்து தீர்மானத்தை நிறைவேற்ற உதவி செய்தது. மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். இந்த உணர்வுகளை பிரதமரிடம் அழுத்தமாக தெரிவிப்போ…
-
- 2 replies
- 650 views
-
-
திருச்சியில் 27.03.2013 அன்று மாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்திக் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 28.03.2013 அன்று தஞ்சை பனகல் கட்டடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு.அய்யனாபுரம் சி.முருகேசன், அரசுப் போக்குவரத்துக் குடந்தைக் கோட்டச் செயலாளர் தோழர் துரை.மதிவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை முழக்கங்கள் எழுப்பினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு…
-
- 1 reply
- 470 views
-
-
தொடர்ச்சியான இந்த போராட்டம் ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது. அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கரையும் கொள்ள செய்தது. ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் …
-
- 0 replies
- 792 views
-
-
தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்கப் போவதாகவும், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக இருந்த நாடுகளின் பொருட்களை புறக்கணிக்க போவதாகவும் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சட்ட மன்ற தீர்மானதிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வே…
-
- 0 replies
- 467 views
-
-
சிறைப்பிடிக்கப்பபட்ட 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல். பிரிவு: தமிழ் நாடு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த 13ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஏப்ரல் 11ஆம் தேதி வரை காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. இந்த …
-
- 0 replies
- 457 views
-
-
சுப்பிரமணியசாமி உருவ பொம்மை எரிப்பு சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு தமிழ் திருநாடு நிலத்தரகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்க மாநில தலைவர் வி.என்.கண்ணன் தலைமையில் விருகம்பாக்கத்தில் சுப்பிரமணியசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சாமியின் உருவ பொம்மை மற்றும் படங்களை தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் மாநில பொருளாளர் வேணுகோபால், பொதுச் செயலாளர் சரவணன், சையது அலி, ஜெகந்நாதன், சுந்தர்ராஜன், பழனி, ராஜபாண்டியன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டனர். http…
-
- 0 replies
- 619 views
-
-
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 50 காங்கிரஸார் மீது வழக்கு பதிவு. திருச்சியில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் புகாரின் பேரில் முன்னாங் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13667:trichy-congeras&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 609 views
-
-
வை.கோ வை கைது செய்யுமாறு சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை 29 மார்ச் 2013 மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ வை கைது செய்யுமாறு ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கோரியுள்ளார்.இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு எதிராக வை.கோ மோசமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ மற்றும் 125 சரத்துக்களின் அடிப்படையில் வைகோவின் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வைகோவை உடனடியாக கைது செய்து அவருக்கு எதிராக வழக்குத் n;தாடர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.வடக்கு இந்தியர்களை தமிழக மக்கள் மீது கிளர்ச்சியடையச் செய்யும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் கார…
-
- 0 replies
- 583 views
-
-
தமிழக தீர்மானம்: இந்திய அரசை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஆற்றல் மாணவரிடமே உள்ளது! - ருத்ரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்கையும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாக அமைந்துள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகையதொரு சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளா…
-
- 2 replies
- 612 views
-
-
மதுரையில் மத்திய அரசின் EBF அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது (படங்கள் ) மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் இன்று மத்திய அரசின் EBF அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் இதில் திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய கோரியும் ,ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை போன்றவற்றை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். . போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13665:madurai-ebf&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 514 views
-