தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழ…
-
- 3 replies
- 788 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை பார் அசோசியேஷன் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும், வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்," போர்க்குற்றவாள…
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்…
-
- 2 replies
- 699 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்த போது கைது செய்யப்பட்டனர். 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு ஏதுமின்றி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.dinakaran.com/New…
-
- 1 reply
- 834 views
-
-
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளியும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ்பாபு மதுரையில் அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியை பிடிக்க போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அட்டாக் பாண்டி தொடர்பாக விசாரிக்க, அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஜினி மன்ற மதுரை மாவட்ட பொருப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13102:pottusuresh&c…
-
- 0 replies
- 941 views
-
-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையில் உள்ள, சிங்களருக்கு சொந்தமான லங்கா பர்னிச்சர் கடையை இன்று வழக்கறிஞர்கள் கல் மற்றும் முட்டை வீசி தாக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13103:kovai-shop&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 811 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு செல்போன் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. 092121-98181 என்ற எண்ணுக்கு இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை தேவை என்றால், ஆம் என்றும், தேவையில்லை என்றால் இல்லை என்றும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ் மூலம் கருத்தை தெரிவிப்போருக்கு வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸை ஆம்னெஸ்டி அமைப்பு அனுப்பி வைக்க இருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இணையம் வழியாகவும் கருத்தை பதிவு செய்யலாம். இதற்காக http://act.amnesty.org.in/demand_justice_in_sri_lanka என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும…
-
- 3 replies
- 753 views
-
-
இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நம்புகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்று அம்னெஸ்டி எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி தெரிவித்தார். பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி அலுவலகத்தில் இருந்து ஜி. அனந்த பத்மநாபன் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டி: ‘நோ ஃபயர் ஸோன்: தி கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் ஸ்ரீலங்கா’ படத்தை ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலக அரங்கத்தில் திரையிட விடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறியிருந்தது. அதை மீறி படம் திரையிடப்பட்டுள்ளது. எப்ப…
-
- 0 replies
- 564 views
-
-
இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக? Published: Friday, March 1, 2013, 9:27 [iST மா.ச.மதிவாணன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக திமுக கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் திமுக மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதும் மத்திய அரசை விமர்சிக்க கருணாநிதி தயங்கவில்லை. இதைவிட பெரிய போர்க் …
-
- 6 replies
- 1.1k views
-
-
திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இலங்கை அரசுக்கும், இந்திய அரசின் நட்பிற்கும் தகுந்த பதிலடி தரும் வகையில் நடத்திய போராட்டத்திற்கான வ்ழக்கு நிதியை தோழர்கள் திரட்ட பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே போராட்டங்களில் நாம் நேரடியாக பங்கெடுக்க முடியாவிட்டாலும், தங்களது சுய நலம் பாராது, குடும்பம், வேலை, என அனைத்து நெருக்கடிகளையும் மீறி இனத்தின் விடுதலைக்காக போராடும் இந்த தோழர்களை பாதுகாக்க நடைபெரும் சட்ட போராட்டத்திற்கு நிதி அளித்து பங்காற்றுங்கள் .. நீங்கள் அளிக்கும் சிறு சிறு நிதியும் வழக்கு நிதியினை சந்திக்க உதவும். தோழர்கள் விடுதலை பெறுவதும் நிகழும். அடுத்த போராட்டங்களை அமைப்புகள் முன்னெடுக்க பேருதவியாக அமையும். செய்தியை பகிர்வது மட்…
-
- 4 replies
- 628 views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி,உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசிபெருமாள், இன்று போராட்டத்தை கைவிடக்கூடும், எனத்தெரிகிறது. சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்,57, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, கடந்த ஜன., 30 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவர மறுத்து, சிறையில் அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்தார். உடல்நிலை மோசமானதால், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக காங்., கட்சியினர் கோர்ட்டில் ஜாமின் பெற்றனர். வெளியே வந்த சசிபெருமாள் தொடர்ந்து, சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள், உ…
-
- 3 replies
- 733 views
-
-
7 தமிழருக்கான தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சு.சாமி Posted by: Mathi Published: Sunday, March 3, 2013, 11:18 [iST] திருச்சி: தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 7 தமிழர்களையும் விரைந்து தூக்கிலிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வருகிற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியை தழுவும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணையுமா என்பதற்கு ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும் ஜ…
-
- 3 replies
- 852 views
-
-
ஈழத்தமிழர்கள் வடக்கு, கிழக்கை அடைய விரும்புவதில் என்ன தவறு - மதிமுக தமிழ் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு - தனிநாடு காண்பதுதான். சுதந்திர தனிநாடு அடைய வேண்டும் என்பதற்காகத்தான் லட்சக்கணக்கான தமிழர்கள் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். ஜெனிவா பிரகடனத்தின் அடிப்படையில் சுய நிர்ணய உரிமை ஒரு தேசத்தின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போது, தமிழர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகள் அடங்கிய தங்கள் சுதந்திர நாட்டை அடைய விரும்புவது, கேட்பது நியாயம் தானே என்று கூறியுள்ளார் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி. சுவிட்சர்லாந்து மக்கள் பேரவை, கனடிய மக்கள் பேரவை ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் திகதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டினை நடத்தியது. அம் மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ…
-
- 0 replies
- 721 views
-
-
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 27ஆம் தேதியில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக இலங்கையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு கசிவதாக கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை இந்திய அதிகாரிகள் மறுத்தனர். இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் என்றும் கூடங்குளத்தில் இருந்து கதிர்வீச்சு கசியவில்லை என்றும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விளக்கம் அளித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களுமே அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் திறன் படைத்தவை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த "கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்' என்ற அமைப்ப…
-
- 0 replies
- 749 views
-
-
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, யுவராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என, யுவராஜா ஆவேசமாகக் கூறினார். சென்னையில் யுவராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கியிருப்பதாக, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சத்தவ், இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பதவி நீக்கத்துக்கு, எந்த காரணமும் அவர் சொல்லவில்லை. மனசாட்சியின் அடிப்படையில், கட்சி வளர்ச்சிக்காக, கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். என் மீது, இதுவரை யாரும் குற்றம் சொன்னது கிடையாது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யாவின் மரணத்துடன் என்னை தொடர்புபட…
-
- 3 replies
- 1.2k views
-
-
"டெசோ'வில் கலந்து கொள்ள காங்., மறுப்பு! ""வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாலும், கலந்துக்கக் கூடாதுன்னு ரொம்ப தெளிவான முடிவை எடுத்திருக்காவ வே...'' என, முதல் தகவலுடன் நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""யார் வீட்டு விசேஷத்தை சொல்ல வர்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""டெசோ அமைப்பு சார்புல, 7ம் தேதி, டில்லில நடக்குற மாநாடு, கருத்தரங்கத்துக்கு, காங்கிரஸ், பா.ஜ.,ன்னு எல்லா கட்சித் தலைவர்களையும் அழைப்போமுன்னு, தி.மு.க., தரப்புல அறிவிச்சிருக்காவ... ஆனா, காங்கிரஸ் தரப்புல, டெசோ மாநாட்டுக்கு, தலைவர்கள் யாரும் கலந்துக்கக் கூடாதுன்னு முடிவு செய்திருக்காவ... ""போன வருசம், ஆகஸ்ட் மாசம், சென்னையில நடந்த டெசோ மாநாடுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களை…
-
- 4 replies
- 891 views
-
-
கச்சத்தீவை மீட்பதுடன் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டக் கோரி இராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி போராட்டம் மேற்கொண்ட 100 பேர் தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இராமேஸ்வரம் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த 100 பேர் கடலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். ஆயினும் அதையும் மீறி அவர்கள் அனைவரும் அக்னி தீர்த்தம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது சிலர், மஹிந்த ராஜபக்சவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கச்சதீவை மீட்டால் மட்டுமே தமிழகக் கடற்றொழிலாளர்களின் மீதான …
-
- 4 replies
- 777 views
-
-
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் மஹிந்த - ராமதாஸ் பேச்சு பாமக நிறுவனர் ராமதாஸ் (02)வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வ…
-
- 0 replies
- 540 views
-
-
இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 4 திங்கள் கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்குரைஞர்கள் அறிவித்திருக்கின்றனர். இன்று சேலத்தில், தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்குரைஞர்கள் கூட்டமைப்பினர் இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தனர். http://dinamani.com/latest_news/article1483880.ece
-
- 0 replies
- 571 views
-
-
புதுக்கோட்டையில் இன்று கலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ராமதாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவிடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியினருக்கும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தலித் அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13015:viduthalaisiruththai&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கை விவகாரத்தில், ஐ.நா., சபையில் கொண்டு வரவுள்ள தீர்மான அம்சங்களை பரிசீலித்த பிறகே, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போடுவதா, ஆதரித்து ஓட்டு போடுவதா என்பதை, முடிவு செய்ய முடியும் என, மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதே சமயம், இலங்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு உள்ளது என, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து, அந்நாட்டுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளில் உள்ளது. அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென, தமிழக அரசியல் கட்சிகள், கோரிக்கை விடுத்தபடி உள்ளன. இந்நிலையில்,…
-
- 1 reply
- 827 views
-
-
இலங்கை தமிழர் விவகாரம்; கட்சிகள், "எஸ்கேப்!' ""கடைசி நேரத்துல, நம்ம ஊரு தலைவர்கள் கைவிரிச்சதால, நடக்குமா, நடக்காதாங்கற குழப்பம் உருவாகியிருக்கு வே...'' என, புதுத் தகவலைக் கூறியபடியே, நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""விவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""சுவிட்சர்லாந்துல, அடுத்த மாசம், 2, 3ம் தேதி, ஈழ மக்களவை அமைப்பு சார்புல, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமா, மாநாடு நடத்தப் போறதா அறிவிச்சாங்க... இந்த மாநாட்டுல, நம்ம ஊரு அரசியல் தலைவர்களை, கட்சி சார்புல அழைச்சிருக்காங்க... ""தி.மு.க., சார்புல ஒருத்தரு, "தலைவர்ட்ட அனுமதி, விசா வாங்க, நாள் இல்லை'ன்னு சொல்லிட்டாரு... கம்யூனிஸ்ட் கட்சி சார்புலயும், "வர இயலவில்லை'ன்னு சொல்லிட்டாவ... மற…
-
- 5 replies
- 806 views
-
-
. சென்னை: மு.க.ஸ்டாலினைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கு 60 வயது நிறைவடைகிறது. இது அவருக்கு மணிவிழா ஆண்டாகும். நாளை அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை தான் ஆடம்பரமாக கொண்டாடப்போவதில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தென் சென்னை திமுக சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் கருணாநிதி. கருணாநிதி பேசுகையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் விழா கொண்டா…
-
- 3 replies
- 734 views
-
-
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி மற்றும் டாக்டர் விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக வைகைச் செல்வன், கேசி வீரமணி, பூனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கின்றனர். இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில். சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சிவபதி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கேசி வீரமணி மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. டிபி பூ…
-
- 4 replies
- 1.4k views
-