தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்க முயற்சி: மேலும் ஒருவர் கைது! christopherAug 25, 2023 19:23PM இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சி வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை இன்று(ஆகஸ்ட் 25) கைது செய்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரை விழிஞ்சம் காவல் துறையினர் கைது செய்தனர். இ…
-
- 0 replies
- 274 views
-
-
22 AUG, 2023 | 03:49 PM தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்கள் ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கையை சேர்ந்தவர்கள்கத்தி கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகில் ஏறி 800 கிலோ மீன்பிடிவலை 2 செல்போன் திசை காட்டும் கருவி உள்ளிட்ட ஜந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதில் பாஸ்கர…
-
- 4 replies
- 524 views
- 1 follower
-
-
22 AUG, 2023 | 12:25 PM சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் அளித்த தகவலின் பேரில் சென்னையில் மன்சூரின் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையின் போது தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும் உ…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை! JegadeeshAug 22, 2023 11:08AM ஷேர் செய்ய : சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ் தினம்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னையின் 384- வது தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை தினமான இன்று பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வரும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ்’ தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஆகஸ்ட் 2…
-
- 0 replies
- 638 views
-
-
20 AUG, 2023 | 10:06 AM சென்னை: வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகுச் சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சி…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு! கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர் நல மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்…
-
- 0 replies
- 591 views
-
-
பட மூலாதாரம்,CMO TAMILNADU படக்குறிப்பு, ‘’மதுரைல சம்பாதிச்ச கோடிக்கணக்கான பணம் மதுரை மக்களுக்கே!’’ எனக் கூறி தன் சொத்தை தானமாகக் கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முதியவர். கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஆகஸ்ட் 2023, 10:18 GMT புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் “10 அணா சம்பளத்த வாங்கிட்டு வந்து மண்ணெண்ணெய் விளக்குள எண்ணி எண்ணி பாப்பாங்க எங்க அம்மா. அவங்க முதலாளி வெள்ளைச்சாமி நாடார் ஒரு கொடை வள்ளல். படிப்புக்குன்னு சொல்லிட்டா பணத்தை வாரிக் கொடுப்பாரு. அவரு பத்தின கதையெல்லாம் சொல்லித…
-
- 1 reply
- 568 views
- 1 follower
-
-
பளபளக்கும் புத்தம் புதிய 244 மாடி வீடுகள்.. இலங்கைத் தமிழர் வாழ்வில் ஸ்டாலின் செய்த மறுமலர்ச்சி சேலம்: இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் இலங்கைத் தமிழர் நலன் மீது புதிய அக்கறை பிறந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே 'அகதிகள் முகாம்' என்ற வார்த்தையை 'மறுவாழ்வு மையம்' என்று மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். உடனே பலர் சொன்னார்கள் பெயர் பலகையை மாற்றிவிட்டால், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று. அதற்குத் தன் தரமான செயல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஏறக்குறை 217 கோடி நிதி அவர்களின் நலனுக்காக ஒதுக்கி இருந்தார் ஸ்டாலின். அதன் பலனாக இன்று சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்குச…
-
- 11 replies
- 864 views
-
-
16 AUG, 2023 | 11:50 AM சென்னை: விமான டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட் சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து குடியுரிமை சோதனை நடக்கும்பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இள…
-
- 1 reply
- 520 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவில் நீர் இல்லாததால் தமிழகத்துக்கு நீர் தர முடியவில்லை எனக் கூறி தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2023, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவையும் மீறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடகா. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் விடை தேட உச்சநீதிமன்றம் சென்றுள்ளது தமிழக அரசு. தமிழகத்துக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை கிடைத்திருக்க வேண்டிய க…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2023, 09:10 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்படக் கலைஞரான இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) பல்லாவரத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்பை முடித்தார். 12ஆம் வகுப்பில் 424 மதிப்பெண்களைப் பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும…
-
- 3 replies
- 512 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAJ BHAVAN படக்குறிப்பு, தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2023 தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் ‘தின்க் டூ டேர்’ (Think to Dare)தொடரின் ஒரு பகுதியாக நேற்று(ஆகஸ்ட் 12) நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் தங்கள் பகுதிக்கே உரித்தான பாரம்பரிய சிறுதானிய விதைகளை மீட்டு பராமரித்து வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் வேளாண்மையில் பாரம்பரிய விதைகளை மீட்பதன் பங்கு முதன்மையானது. நெல் உட்பட பல்வேறு பயிர் வகைகளின் பாரம்பரிய விதைகளை மீட்கும் முயற்சிகள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பல ஆண்டுகளாக இதை ஓர் அமைப்பாகத் தொடங்கி வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட…
-
- 0 replies
- 638 views
- 1 follower
-
-
“ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது கொடூரம்” – எடப்பாடி SelvamAug 13, 2023 13:06PM ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டது பற்றி ஸ்டாலின் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது பேசிய கனிமொழி எம்.பி, “மகாபாரதத்தில் திரெளபதி துகிலுரிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார். மணிப்பூரில் தங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்று பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெண்களுக்கு எங்கு பிரச்ச…
-
- 2 replies
- 552 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கவி யாழினியைக் காப்பாற்ற ரூ. 17 கோடி ஊசியை அமெரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டும். 12 ஆகஸ்ட் 2023, 14:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17 கோடி என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கணவனை இழந்த இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (36). இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. …
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஆகஸ்ட் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்…
-
- 4 replies
- 399 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. 11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வேலூ…
-
- 3 replies
- 306 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாட்ஸப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதை நம்பி நீங்கள் அந்தப் பக்கத்தை லைக் செய்தால், பல்லாயிரக் கணக்கில் பணத்தை இழக்கிறீர்கள். 'என்ன கொடுமை சார் இது?' என்கிறீர்களா? இது தற்போது பரவிவரும் ஒரு புதுவகையான மோசடி என்கிறது தமிழகக் காவல்துறை. இது எப்படி நடக்கிறது? இதிலிருந்து எப்படிப்…
-
- 0 replies
- 607 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் இது போன்று தமிழ்நாட்டில் நடப்பது முதல் முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…
-
- 3 replies
- 445 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM படக்குறிப்பு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு காவல்துறைக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2023, 02:56 GMT “வீரப்பன் காட்டிற்குள்ளேயே இருந்திருந்தால், அவரை வீழ்த்தியிருக்க முடியாது.” இப்படிச் சொல்பவர், வீரப்பனின் கூட்டாளி இல்லை. வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையில் முக்கியப் பங்காற்றிய அப்போதைய காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன். “அவருக்…
-
- 5 replies
- 2.6k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NIMAL RAGHAVAN படக்குறிப்பு, கென்யாவிலும் நீர்நிலை புனரமைப்பு பணிகளில் நிமல் ராகவன் ஈடுபட்டுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 27 நிமிடங்களுக்கு முன்னர் நீரின்றி அமையாது உலகு என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து திருவள்ளுவர் குறள் எழுதியுள்ளார். தற்போது தண்ணீரின்றி விவசாயிகள், பொதுமக்கள் துன்பப்படும்போது இப்பிரச்னையை தீர்க்க பாடுபடுவது என்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று அழுத்தமாகக் கூறுகிறார் நிமல் ராகவன். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சே…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
06 AUG, 2023 | 01:16 PM 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழகம் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! தமிழகத்துக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு …
-
- 2 replies
- 384 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 ஆகஸ்ட் 2023 குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உகந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், தாய்ப்பால் சுரக்காத பல தாய்மார்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அவர் உடலில் தாய்ப்பால் சுரக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாயான பிறகு உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களால் பால் சுரக்காமல் போகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அப்படி தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பால் தேவையைப் பூர்த்தி செய்யத் தாய்ப்பால் வங்கியை நாடுகிறார்கள். ஆனால், அதனாலேயே அவர்கள் பல சமூக அழுத்தங்களையும் விமர்சனங்களையும் க…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில், ஒரு முதியவர் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த தனது ஒரு வயது பேத்தி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தது. இந்த துயரம் எப்படி நிகழ்ந்தது? தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது? துயரம் எப்படி நடந்தது? படக்குறிப்பு, ராஜேஷ் தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவை தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில்…
-
- 1 reply
- 529 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 59 நிமிடங்களுக்கு முன்னர் தைவானைச் சேர்ந்த மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வந்த செய்தி தவறு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன? தைவானைச் சேர்ந்த மொபைல் உதிரிபாக நிறுவனமான ஃபாக்ஸ்கான் க்ரூப் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்வீட் மூலம் திங்கட்கிழமையன்று தெரிவித்தார். …
-
- 1 reply
- 448 views
- 1 follower
-