தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
"தினத்தந்தி" நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையு…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறப்புக் கட்டுரை: போகாத ஊருக்கு வழி தேடும் பாரதீய ஜனதா கட்சி! மின்னம்பலம் ராஜன் குறை பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு கருத்தியல் அடிப்படை உண்டு. அது இந்துத்துவம். அது வெறும் மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ கிடையாது. மாறாக அது இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் கலாசார தேசியத்தை, அகண்ட பாரதத்தை கட்டமைப்பது. இந்துக்கள் என்ற அடையாளம் என்று சொல்லும்போது சனாதன ஜாதீய இந்து அடையாளம் அதற்குள் புகுந்துகொள்கிறது. அதனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வெறுப்புடன் பார்ப்பனீய, ஜாதீய, ஆணாதிக்க சிந்தனையும் இந்துத்துவத்தில் புகுந்துவிடுகிறது. அதற்கெல்லாம் மாற்றாக, மறுப்பாக உருவானது திராவிடம் என்ற பண்பாட்டு அடையாளமும், அதன் மாநில சுயாட்சி கோரிக்கையும், கூட்டாட்சி தத்துவமும். அதனா…
-
- 0 replies
- 883 views
-
-
சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'இன்று காலை போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக பேசி மாணவர்களை கலந்து போகச் சொல்லினர். மக்களை அமைதியாக கலைக்கவே விரும்பினோம். ஆனால், கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர். சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்குழுவில் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தன. சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்ததால் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தகுதி இல்லாதவருக்கு பெரிய பதவி: ஜெ., சொல்லியது சசிக்கு பொருந்தும் 'தகுதி இல்லாதவருக்கு, பெரிய பதவி கிடைத் தால் நிலைக்காது' என, விஜயகாந்த் குறித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது, சசிகலாவுக்கு பொருந்துகிறது என, அ.தி.மு.க., வினர் தெரிவித்துள்ளனர். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வும், தே.மு.தி.க.,வும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில், இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வராக ஜெயல லிதாவும்; எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந் தும் பதவி ஏற்றனர். சில மாதங்களுக்கு பின், சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, அமைச்சர்களை அடிக்கப் பாயும் வகையில், விஜயகாந்த் நடந்து கொண்டார். …
-
- 0 replies
- 572 views
-
-
6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்கள் தேர்வு செய்ய 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அ.தி.மு.க. - கம்யூனிஸ்டு அணியில் 170 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு அ.தி.மு.க.வின் 4 வேட்பாளர்களையும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிடும் டி.ராஜாவையும் தேர்வு செய்து விடுவார்கள். 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 2 பேரும், புதிய தமிழகம் …
-
- 0 replies
- 486 views
-
-
பெங்களூரு செல்லவில்லை; கூவத்தூர் செல்கிறேன்! முதல்வர் பழனிச்சாமி பேட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சிறைக்குச் செல்லவில்லை, கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்துவரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைத்ததோடு, பதினைந்து நாள்களில் பெரும…
-
- 0 replies
- 790 views
-
-
கமல்ஹாசன் பேட்டி: "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?" #BBC_Exclusive தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 3 ஏப்ரல் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார், மக்களை சந்திக்கிறார். இதற்கு நடுவில், தமிழக சட்டமன்ற தேர்தல், திராவிட கட்சிகள், பிராமணர் - பிராமணர் அல்லாதோர் விவகாரம் ஆகியவை குறி…
-
- 0 replies
- 477 views
-
-
'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!' -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர் 'தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் மூத்த அமைச்சர்கள். ' டெல்லியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் ஒரே வழி என தினகரனிடம் எடுத்துக் கூறியும், விஜயபாஸ்கரைக் காப்பாற்றும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது கார்டன்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்து, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இந…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…
-
- 0 replies
- 439 views
-
-
முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம் முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.…
-
- 1 reply
- 329 views
-
-
கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். காலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உடல்நலம் கு…
-
- 0 replies
- 390 views
-
-
மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி... ‘‘எடப்பாடி ஆட்சி நடக்கிறது’’ என்றபடி வந்தமர்ந்தார் கழுகார். ‘‘எடப்பாடிதானே ஆட்சி நடத்துகிறார். அதை ஏன் புதிதாகச் சொல்கிறீர்?’’ என்றோம். ‘‘கட்சியிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குச் சுக்கிர திசை நடக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உள்துறை மானியக் கோரிக்கை என்பது தலைமேல் தொங்கும் கத்தியைப் போன்றது. கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த காலத்தில்கூட அது இவ்வளவு அமைதியாக நடந்ததில்லை. ஆனால், எடப்பாடி அதைக்கூடச் சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தைப் பார்த்து அதிகம் க…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஜெயா டி.வி யாருக்குச் சொந்தம்? வைரலாகும் ஜெயலலிதா வீடியோ! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடந்த போட்டி தற்போது ஜெயா டி.வி-யைக் கைப்பற்றுவதில் வந்து நிற்கிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து அவரைத் துணை முதல்வராக்கி, சசிகலா குடும்பத்துக்குச் சவால் விட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, நேற்று அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்களில்,' ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் கழகத்தின் சொத்துகள். அவற்றை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தினகரன் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தாண்டி பரபரப்பை ஏற்…
-
- 0 replies
- 630 views
-
-
புதுச்சேரி சொகுசு விடுதியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் சந்திப்பு: ஓரிரு நாட்கள் காத்திருப்போம் என தகவல் புதுச்சேரி ரிசார்ட்டில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் டிடிவி தினகரன். - படம்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்எல்ஏக்களை யாரும் இங்கு அடைத்து வைக்கவில்லை என்று கூறிய தினகரன், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கப் போவதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கடந்த 12 நாட்களாக தங…
-
- 0 replies
- 314 views
-
-
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் அரசு மீது இருந்த வெறுப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி வளர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தர்மத்தை சமக முறையாக கடைபிடிக்கிறது. அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற நாங்கள் நிச்சயம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதிமுக ஆதரவால் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற…
-
- 0 replies
- 375 views
-
-
ஆர்.கே.நகர் யாருக்கு? திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் (இடமிருந்து வலமாக) சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்.. தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்த…
-
- 20 replies
- 2.5k views
-
-
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குத் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. அதற்கு, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நிதி திரட்டி வந்தனர். தமிழக அரசு சார்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொ…
-
- 5 replies
- 605 views
-
-
மு.க. ஸ்டாலின் அரசில் அமைச்சராகிறார் உதயநிதி - டிசம்பர் 14இல் பதவியேற்பு - அடுத்த திட்டம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DMK தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவை டிசம்பர் 14ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையொட்டி பதவியேற்பு விழாவுக்கான பணிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்பார்…
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி, போயஸ்கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே சமாதியில், மூன்று முறை தனது கையால் ஓங்கியடித்து சபதம் செய்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக பெங்களூரு கிளம்பிச்சென்றார்... இன்றுடன் 500 நாட்கள் சிறை வாசத்தை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா! பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன், கைதி எண் 9234-ஐ சசிகலாவுக்கும், 9235-ஐ இளவரசிக்கும், 9236-ஐ சுதாகரனுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார். சசிகலா சிறை சென்ற பிறகு திண்டு…
-
- 0 replies
- 632 views
-
-
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெள…
-
- 3 replies
- 883 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே. ‘இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை இட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினா…
-
- 0 replies
- 585 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்பட மாட்டார்: கமல்ஹாசன் இலங்கையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நான் வரவேற்கவில்லை. ஆனால் அவர் முன்னைய ஆட்சியில் செயற்பட்டதை போன்று செயற்படமாட்டாரென நம்புகின்றேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த பிரதமராக வந்துள்ளமையால் அவர் தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று யாரும் எண்ண வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரத்தில் தலையீடு செய்வது சிறந்ததில்லையெனவும் கமல் சுட்டிக்காட்டியு…
-
- 7 replies
- 1.1k views
-
-
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு! வெற்றிடமாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இன்று(புதன் கிழமை) தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியபோது, “20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகின்றேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கின்றோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் …
-
- 0 replies
- 402 views
-
-
கோடீஸ்வரர்களிடம் இல்லை, உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்: தொண்டர்களுக்கு, கருணாநிதி கடிதம். சென்னை: தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம…
-
- 3 replies
- 417 views
-