Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு! பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் 10ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் கட்சி ஒழுங்குக்கு கட்ட…

  2. UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவ…

  3. நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை 10 Sep 2025, 10:46 AM நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது. தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்த…

  4. பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர். பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்ப…

  5. பட மூலாதாரம்,Getty Images and UGC கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2025, 08:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது. 'மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது' என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமா…

  6. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு September 6, 2025 12:42 pm தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதி…

  7. கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை September 3, 2025 5:22 pm கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான், கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட …

  8. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 செப்டெம்பர் 2025, 02:54 GMT உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது. ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி. ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார். குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலட…

  9. காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி! காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளி கலவரம் அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ…

  10. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 செப்டெம்பர் 2025 'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. "ஆசிரியர்களை அரசு கைவிடாது" என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளா…

  11. தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார். இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் …

  12. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும்…

  13. பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச்…

  14. போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை செ…

  15. வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..! 24 AUG, 2025 | 09:19 AM தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9), அஸ்பியா 9ம் வகுப்பும், சபிக்கா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று சனிக்கிழமை (23) பாடசாலை விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேக…

  16. கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பா…

  17. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..! 22 Aug, 2025 | 03:33 AM தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்த அதிரடியான கருத்துக்கள் இடம்பெற்றன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்…

  18. தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தே…

  19. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந…

  20. படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சிவராசன் (வலது) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்டமிட்டிருந்தனரா? கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து விசாரிப்பதற்காக டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் க…

  21. பட மூலாதாரம், ANNAMALAI/X கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்." "ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது" மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை. 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு…

  22. நள்ளிரவில் கைது, தள்ளுமுள்ளு - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே? பட மூலாதாரம், ANI 14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்…

  23. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்…

  24. ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர…

  25. செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், தமிழ்நாடு திராவிடர் சுய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.