தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10267 topics in this forum
-
மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி …
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 22ஆம் திக…
-
- 0 replies
- 180 views
-
-
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும்? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 18ம் தேதியன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். …
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு அளிக்கப்பட்டது ஏன்? மோகன் பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஞ்சாயத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். அந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு முறையற்று கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் வலசை வரும் பல அரிய வகை பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் …
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும் MinnambalamAug 22, 2022 07:35AM ராஜன் குறை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான். அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று…
-
- 0 replies
- 340 views
-
-
ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்ற…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
இது நைஜீரியன் டச் உலகளாவிய ரீதியில் மோசடி வேலைகளுக்கு பெயர் போனவர்கள் நைஜீரியர்கள். தினுசு, தினுசா யோசித்து, புதிய தொழில் நுட்பங்களை பாவித்து மோசடி செய்து சுத்துவார்கள். 1990 களில், லண்டன் டைம்ஸ் பேப்பரில், நைஜிரியாவில் பாலம் கட்ட அரசு எந்த டெண்டரும் கோரவில்லை, பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள். டெண்டர்களின் உண்மைத்தன்மையை அறிய எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று நைஜீரிய தூதரகம் முழுப்பக்க விளம்பரம் செய்தது. வேறு ஒன்றும் இல்லை.நைஜீரிய மத்திய வங்கியின் காலியாக இருந்த மாடி ஒன்றினை வாடகைக்கு எடுத்து, மத்திய வங்கியின் முகவரியினை பாவித்து, அரசு, ஒரு நீர் மின்னுட்பத்தி அணை கட்ட $10,000 கட்டி டெண்டர் படிவங்களை பெறுமாறு கோரியது. பலர் விண்ணப்பித்தார்கள். …
-
- 4 replies
- 858 views
-
-
புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். புதுச…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FOX PHOTOS/GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம் (2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை க…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் விவகாரம்: அரசின் விதி செல்லுமெனத் தீர்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து சாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உறுப்பினர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (22/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் வி…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
தமிழ் அறிஞர்.. நெல்லை கண்ணன், காலமானார்! பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதி…
-
- 8 replies
- 944 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் 'காப்பி பேஸ்ட்' செய்யப்படும் உடற்கூராய்வு அறிக்கைகள்? என்ன நடக்கிறது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த பிரேத பரிசோதனைகளில் குளறுபடி நடப்பதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 'காப்பி பேஸ்ட்' முறையில் பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
காவிரி உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து தருமபுரி மாவட்டத்துக்கு திருப்பிவிடுங்கள்: டிரென்ட் ஆகும் விவசாயிகள் கோரிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2022 காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரசார நடைப…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தம்பதி - சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வாழை நாரில் நாப்கின் தயாரித்து வருகின்றனர் சென்னையை சேர்ந்த சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதி. பிபிசி தமிழுக்காக அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். "நாங்கள் இருவரும் முதுகலை படிப்பை லண்டனில் ஒன்றாக படித்தோம். அப்போது நிக்கி ஜோடன்ஸ் என்ற பேராசிரியர் தலைமையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தோம். அந்த ஆராய்ச்சியின் முடிவில் சாதாரண பிளாஸ்டிக் …
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMI KANTH BHARATHI/BBC படக்குறிப்பு, புள்ளும் சிலம்பின காண்.... கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் ப…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஆகஸ்ட் 2022, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீப காலமாக ஆண்களுக…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு 17 ஆகஸ்ட் 2022, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில…
-
- 1 reply
- 592 views
- 1 follower
-
-
மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த 'அந்த' பெட்டியில் இருந்தது என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ் மரபு விதைகள் அடங்கிய பேழையை பரிசாக அளிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மு…
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
பெற்றோர் பராமரிப்பு: வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAPEEPONG PUTTAKUMWONG / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (17/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) வயதான தந்தையை பராமரிக்கத் தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மகன் வைத்தியலிங்கம். மனைவியை இழ…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
இந்திய துணைக் கண்டத்திலேயே... விடுதலைக்காக, முதலில் குரல் கொடுத்தது... தமிழ்நாடு தான்- மு.க.ஸ்டாலின். இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 1600ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ‘ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது’ என்று 1755ஆம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன் மண்டியிடாத மானப் போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. …
-
- 1 reply
- 296 views
-
-
சென்னை வங்கி நகை கொள்ளையில் முக்கிய சந்தேக நபர் கைது - 18 கிலோ நகை மீட்பு 14 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் கிளையில் சனிக்கிழமை 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபரான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டதால், 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் கூறுக…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 14 ஆகஸ்ட் 2022 "குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஏரிகளு…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
சென்னை விமான நிலையத்தில்... சுங்க அதிகாரிகளாக நடித்து, இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளையடித்த.. இரு இலங்கை பிரஜைகள் ! சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை சென்றிருந்த 47 வயதுடைய பெண் ஒருவரிடம் கடந்த திங்கட்கிழமை சந்தேகநபர்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். 31 மற்றும் 40 வயதுடைய இருவர், குறித்த பெண்ணை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, அதிக நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த குறித்த பெண், சுங்க அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்கியதை அடுத்து மேற்க…
-
- 0 replies
- 306 views
-
-
நேதாஜி படையின் சிவகாமி அம்மாள்: 'குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றினோம்' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள் இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள். பிபிசி தமிழுக்காக தன்னுடைய சுதந்திர போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சிவகாமி அம்மாளுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம். ஊரில் …
-
- 0 replies
- 270 views
- 1 follower
-