Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த! June 4, 2022 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், தமிழ் தத…

  2. கரு முட்டை எடுத்து விற்க பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஈரோடு சிறுமி: தாய் கைது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருமுட்டை - சித்தரிப்புப் படம். ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். …

  3. தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள் பிரசன்னா வெங்கடேஷ், பிபிசி தமிழுக்காக பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் மூடப்படவுள்ள நிலையில், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆலை மூடப்படுவதற்கு எதிராக, கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்கள் இதுவரை எந்த சுமூகமான நிலையும் எட்டப்படவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். ஃபோர்டு நிர்வாகம் இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தை நட…

  4. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்க…

  5. சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு 1 ஜூன் 2022 படக்குறிப்பு, சிதம்பரம் நடராஜர் கோயில். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய‌ இருப்பதாக அறிவித்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம…

  6. தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 1 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், தங்களால் பணியமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரது விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகள் கோரிவருகின்றன. இது குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன. என்ன நடக்கிறது? கடந்த மே 28ஆம் தேதியன்று ராமேஸ்வரம் நகராட்சியின…

  7. திருச்சி அகதிகள் முகாமிலிருந்து உலக தமிழர்களை நோக்கி வேதனை கலந்த வணக்கம் -காணொளி வணக்கம் மதிப்புக்குரிய எங்கள் உலக வாழ் தமிழர்களே... மிகமிக எங்கள் நெருக்கமானவர்களும் எப்பொழுதெல்லாம் நாங்கள் சோர்ந்து போகும் போது தோல்வி அடையும் போது எங்கள் அருகில் இருந்து எங்களுக்கு உதவும் நிறைந்த இரக்கமுள்ள எங்கள் உலக தமிழர்களுக்கு வேதனையோடு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஈழத் தமிழரது வாழ்க்கை போராட்டம் என்பதற்காகவே தொடங்கப்பட்டது இல்லையென்றால் போராடுவதற்கு பிறந்தவர்கள் என்று அறியாமல்.. இல்லை கடவுள் எழுதப்பட்ட விதி என்று தெரியாமல் தொடர்ந்து எங்கள் வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். இன்று 10வது நாளாக நாங்கள் உண்ணாவிரத ப…

  8. பெண்கள் உடல்நலம்: சிசேரியன் பிரசவங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆம் இடம் - தேசிய குடும்பநல கணக்கெடுப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில் தான் நடைபெறுகிறது தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில்தான் நடைபெறுகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 11% வரை அதிகரித்துள்ளது மத்திய அரசின் தேசிய குடும்பநல கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பத…

  9. யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 30 மே 2022, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்தி…

  10. கச்சத்தீவை மீட்க நரேந்திர மோதியிடம் கோரிக்கை: மு.க. ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு: தமிழ்நாடு அரசின் பதில் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, கொழும்பில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MKSTALIN இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26ம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம…

  11. பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்: கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DRRAMADOSS/TWITTER பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பா.ம.கவின் இளைஞரணித் தலைவராக…

  12. தருமபுரியில் நவீன ஸ்கேன் மூலம் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு: 7 பேர் கைது - சிக்கியது எப்படி? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த…

  13. “எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். இன்று மாலை சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறு இல்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறியுள்ளார். தமிழ்…

  14. கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாழ்ப்பாணம் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? இதில் பாக் நீரிணைப் பகுதி என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்…

  15. கருணாநிதியின் சிலையை... இன்று திறந்து வைக்கிறார், வெங்கையா நாயுடு..! சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மாலை கருணாநிதி சிலையை குவெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284249

  16. திறந்தவெளியில் மலம் கழித்தல்: 6-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு ஊரகப் பகுதி மோகன் பிபிசி தமிழ் 27 மே 2022, 05:57 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 28% வீடுகளில் கழிப்பிட வசதியில்லை என்பது சமீபத்தில் வெளியான அரசாங்க தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்கள் மட்டுமே தமிழ்நாட்டைவிட மோசமான நிலையில் உள்ளன. இந்திய அரசு திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் 1999-ம் ஆண்டு இந்திய அரசு முழு சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவந்தது. 2014-ம் ஆண்டு முதல் இது 'தூய்மை இந்தியா…

  17. தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் - முதல்வர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய …

  18. வீரப்பன் அண்ணன் மாதையன்: 34 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னணி என்ன? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு வனத்துறையை உலுக்கிய படுகொலை சம்பவம் அது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம். சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரம் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொல்லப்படுகின்றனர். சந்தனக் கட்டைகளை கடத்தும் பணியில் இருந்த வீரப்பன் கும்பலைத் தடுக்க முற்பட்ட காரணத்தாலேயே இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக அதாவது 87 ஆம் ஆண்டு மே மாதம் தந்தக் கடத்தல் வழக்…

  19. ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம் 25 மே 2022, 06:32 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஊர்மக்கள் போராட்டம் கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வடகாடு கடல் பகுதியில் க…

  20. பேரறிவாளன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: தனிமைச் சிறைவாசம் எப்படி இருந்தது? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்த காலத்தில் தான் நடத்திய சட்டப்போராட்டம், சிறையின் சூழல், தனக்காக தன் தாயார் நடத்திய போராட்டம், செங்கொடியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம், தன் வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை குறித்தெல்லாம் பிபிசியிடம் விரிவாகப் பேசினார் பேரறிவாளன் பேட்டியிலிருந்து: 31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை என்ற அறிவ…

  21. தனுஷ்கோடியில்... 58 ஆண்டுகளுக்கு முன்னர், கடலில் மூழ்கிய தரைப்பாலம்... வெளியே தெரிந்தது! ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மேலும் பாடசாலை, தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. புயல் ஏற்…

  22. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: - தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய கேள்விகள் 26 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/TN YOUNGSTERS TEAM கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில், மே 22 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலை இழுத்து மூடப்பட்டது. இன்று மே 22ஆம் தேதியை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சரி... ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் என்ன செய்கிறது. அந்த ஆலை எப்போது தொடங்கப்பட்டது உள்ளிட்ட 5 கே…

  23. அந்த இலங்கை மக்களுக்கு உதவ ‘டீ’ மொய்விருந்து..! புதுக்கோட்டை இளைஞரின் முயற்சி-இளைஞருக்கு பாராட்டு புதுக்கோட்டை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய்விருந்து வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய் விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்…

  24. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாள் கழித்து புதைக்கப்பட்ட பட்டியலின பெண் உடல் - சுடுகாடு இல்லாத அவலம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 21 மே 2022, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, உயிரிழந்த அமுதா விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு,…

  25. தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள் பி சுதாகர் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சில கிராமங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கும் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.