Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 1991 இல் ராஜீவ் படுகொலை முதல் பேரறிவாளனுக்கு ஜாமீன் வரை.. நடந்தது என்ன? 32 ஆண்டு கால பின்னணி! tamil.oneindia சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் ஜாமீன் பெற்றது வரை கடந்து வந்த பாதை என்ன? 1991 மே 21- ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் 1991 ஜூன் 11- ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைது 1991 ஜூன் 14- நளினி ஸ்ரீகரன் என்கிற முருகனும் கைது செய்யப்பட்டார் 1991 ஜூலை 22- சுதேந்திரராஜா எனும் சாந்தன் கைது செய்யப்பட்டார். 1…

  2. பேரறிவாளனுக்கு ஜாமீன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளானுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட…

  3. கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டகாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்…

  4. ஜெயலலிதா மரண விசாரணை : 2 வருடங்களின் பின் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்தது! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் முன் அவருக்கு தலைசுற்று, மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்கக்கூட சிரமப்பட்டதாகவும், பாபு மனோகர் என்ற மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தனர். அவர்களிடம் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நடந்தவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.…

  5. கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்…

  6. இப்படி... நடக்கும், என்று எதிர்பார்க்கவில்லை 😢

    • 11 replies
    • 1.2k views
  7. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்றவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் – முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றது. முதலமைச்சரின் ஆணையை மீறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை இராஜினாமா செய்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாந…

    • 0 replies
    • 249 views
  8. நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுக…

  9. கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி! கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திக் மற்றும் கடற்படை கடலோர காவல்படை மீன்துறை, சுங்கத்துறை, உளவுத்துறை, அதிகாரிகளும் மீனவர் ச…

  10. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்! மின்னம்பலம்2022-03-02 திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக…

  11. ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சென்னையில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவ மாணவர் உள்பட உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாணவிகளை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை சென்னையை அடுத்துள்ள ராமாவரத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்பட…

  12. ஜெயகுமார் மீது... மேலும் ஒரு வழக்கினை, பதிவு செய்ய நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவர் மீது மற்றுமோர் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியை சேர்ந்த 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்கள், பொலிஸார் ஆலோசித்து வருவதாகவ…

  13. நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம் நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் வியூகத்தை மாற்றி நோட்டீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் சில இடங்களுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர…

  14. ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்! ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள்! ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அ…

  15. சீமான் பேட்டி: "நடந்ததை நான் தேர்தலாகவே பார்க்கவில்லை" ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழ் பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI/FB படக்குறிப்பு, சீமான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐந்தாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட அக்கட்சி பெறவில்லை. இந்நிலையில் ` தி.மு.கவும், பா.ஜ.கவும் பேசி வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் செயல்பட்டுள்ளனர். நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக ஸ்டாலின் சொல்வாரா?' எனக் கேள்வியெழுப்புகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டில்…

  16. கச்சத்தீவு: 50 பேருக்கு மட்டும் அனுமதி - மீனவர்கள் எதிர்ப்பு! மின்னம்பலம்2022-02-25 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் கச்சத்தீவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். அதற்கு, தமிழக மீனவர்களும் கலந்துகொள்ளத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல இந்த வருடம், வருகிற மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை முதலில் அறிவித்தது. …

  17. கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள் மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியு…

  18. திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா? அ.தா. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUNIRATNAM படக்குறிப்பு, களர்ப்பாலை தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும்,…

  19. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் மாநிலத்தில் ஆளும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இறுதி முடிவுகளை மாநிலம் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆளும் திமுக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இந்த விலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது…

  20. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கவுன்சிலர்கள் ஆகும் 2K கிட்ஸ் முதல் வயோதிக தம்பதிவரை - சுவாரஸ்ய தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ஆரணி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 21 வயது ரேவதி தமிழ்நாட்டில் குடும்பம், குடும்பமாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள். கட்சி சார்பாகவும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு வென்ற 22 வயது இளம்பெண்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்ப…

  21. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணம்' - 'இந்து' என். ராம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, என்.ராம் "அ.தி.மு.கவின் சந்தர்ப்பவாதமே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கருதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களிலும் தி.மு.கவின் ஆதிக்கம் தொடரும். பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை" என்கிறார் மூத்த ஊடகவியலாளர் என். ராம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் மூத்த பத்திரிகை…

  22. தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரிப்பா? என்ன சொல்கிறது ஆளும் கட்சி? பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இந்த ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. `முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது தி.மு.க. என்ன நடக்கிறது? சம்பவம் 1: சென்னை மடிப்பாக்கத்தில் தி…

  23. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வா கத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்க தேவையான நடவடிக்கை களை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது. கோயிலுக்கான நிலம், சொத்துகள், நகைகள் மற்றும் பக்தர்களிடம் அன்றாடம் வரும் வருமானம் ஆகியவற்றை, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர, நூறாண்டுகளுக்கு மேலாக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால், இத்தகைய முயற்சி களை இழுத்தடித்து, தங்களது கட்டுப் பாட்டிலேயே வைத்துக் கொள்ள நீதிமன்றங்களை பொ…

    • 0 replies
    • 288 views
  24. தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு: முழு விவரம்! மின்னம்பலம்2022-02-20 தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகத் தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 12,838 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 பேர் போட்டியிட்டனர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 21 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 1.37 கோடி ஆண் வாக்காளர்களும், 1.42 கோடி பெண் வாக்காளர்களும், 4,323 திருநங்கைகளும் என மொத்தம் 2.79 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.