Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் திடீரென மயங்கி விழுந்ததுடன், ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதன்காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மர்ம நோய் தொடர்பில் அறிய பாதிக்கப்பட்வர்களிடம் இருந்து இரத்த …

  2. இந்தியா- சீனா எல்லை விவகாரத்திற்கான... நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பு! இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் , வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1…

  3. கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREW FOSKER/SHUTTERSTOCK/BOOKER PRIZES இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்…

  4. பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…

  5. புனே வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது பகிர்க இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பான விசாரணையில், பிற இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் த…

  6. பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி பாராட்டு! இந்திய பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், அவுடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும்…

  7. நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த வழக்கில் மூன்று முறை பிரதமராக இருந்த அவர் சவூதி அரேபியாவில் உள்ள இரும்பு ஆலையின் உரிமை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு…

  8. இந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது January 18, 2019 இந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் உள்ளிட்ட 6 பேர் நேற்றையதினம் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையகத்தில் நிலுவையில் உள்ள 19 லட்சம் ரூபா பெறுமதியான தொகை ஒன்றினை வழங்க 3 சதவீதம் லஞ்சம் விளையாட்டு ஆணையகம் கோரியதாக சி.பி.ஐ. யிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை இந்திய விளையாட்டு ஆணையக தலைமை அலுவலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன் விசாரணையும் மேற்கொண்டுள்ளதன் பின்னர். இந்திய விளையாட்டு ஆணையகத்தின் இயக்குனர் எஸ்.கே.சர்மா, உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/110299/

  9. படத்தின் காப்புரிமை Getty Images மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜியுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து. கே. தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? …

  10. மோடி எப்படிப்பட்ட தலைவர் ?' - `ரைம்ஸ்’ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! இந்த இதழ் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரபலங்கள் பிரபல சர்வதேசப் பத்திரிகைகளில் இடம்பெறுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றாலும் அவர் குறித்தான கவர் ஸ்டோரியில் அந்தப் பத்திரிகை எடுத்திருக்கும் நிலைப்பாடு விவாதிக்கத்தக்க வகையிலாக அமைந்துள்ளது. பொதுத் தேர்தலில் இன்னும் இரண்டுகட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்று பிரதமர் மோடியைத் தனது பத்திரிகை அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். “பிரபலங்களுக்கு அடிபணிந்துபோன ஜனநாயகங்களில் முதன்மையாக இந்தியா இருக்கும். மோடியின் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் இந்தியா பல வக…

  11. இந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து June 9, 2019 இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மாலைதீவுகக்கு இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடைபெற்று வருகின்ற நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து படகு போக்குவரத்தையும் ஆரம்பிக்க இருநாடுகளும் திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில் 2 நாள் பயணமாக நேற்றையதினம் மாலைதீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருநாடுகளுக்குமிடையே படகு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறு…

  12. பெண் தலாய் லாமா இன்னொரு ஆச்சரியமான கருத்தாக, "புத்தசாலித்தனம் முக்கியமாக இருப்பதைபோல, பெண் தலாய் லாமாவுக்கு நல்ல அழகும் தேவை" என்று கூறி, தற்போதைய தலாய் லாமா கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார். சிரித்தவாறே பதிலளித்த தலாய் லாமா, "பெண் தலாய் லாமா வருவதாக வந்தால், அதிக அழகோடு இருக்க வேண்டும்" என்ற கூறினார். இந்த கருத்து, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை போதிக்கும் தலாய் லாமாவின் கருத்துகளுக்கு முரணானதாக தோன்றுகிறது. ஆனால், பௌத்த இலக்கியத்தில் உள் மற்றும் வெளி அழகு மிகவும் முக்கியமானது என்று தலாய் லாமா தெளிவாக்கியுள்ளார். சமத்துவம் முக்கியமானது என்று தெரிவித்த தலாய் லாமா, பெண்களின் உரிமைகளை வழங்குவதையும், பணியிடங்களில் பாகுபாடற்ற ஊதியம் வழங்குவதை…

  13. முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத…

  14. காஷ்மீர் விவகாரம் : இம்ரான்கானின் கருத்தால் போர்கப்பலை நிறுத்தியுள்ளது இந்தியா! காஷ்மீர் விவகாரம் போருக்குத்தான் இட்டுச்செல்லும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்கப்பலை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பல்வேறு முறைகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் தோல்வியை தழுவவே பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தி…

  15. டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம் ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லியிலிருந்து படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP via Getty Images கிழக்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை சம்பவங்களை படம்பிடித்து, பதிவு செய்து கொண்டிருந்தபோது, எங்களுடைய செல்போன்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கிருந்து வெளியேற நாங்கள் முயற்சி செய்தோம். அப்போது, எங்களுக்கு அருகே கற்கள் பறந்து வந்து விழுந்தன.…

  16. பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா! பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது. அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது. அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்…

  17. Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 03:49 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி சந்தித்துள்ளார். அமீர் கான் முத்தாகி ஒரு வார கால உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். இந்தியாவில் 16 ஆம் திகதி வரை தங்கி இருப்பார். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும். டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி இன்று வெள்ளிக்கிழமை (10) கூட்டத்தில் பங்கேற்று…

  18. இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்? அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி AFP ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ…

  19. இந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல் இந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின தீவிரவாதத் தலைவர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவுமே இவ்வாறு சீனாவுக்கு கடந்த ஒக்டோபரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், குன்மிங் பகுதிக்கு குறித்த நான்கு தீவிரவாதத் தலைவர்களும் சென்றதாகவும், சீன இராணுவ அதிகாரிகளையும், இரு தரப்புக்கும் மத்தியஸ்தராகச் செயற்படும் பிரதிநிதியையும் சந்தித்ததாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மரிலுள்ள யூனைடெட் வா ஸ்டேட் ஆர்மி (United …

  20. சீன எல்லையில்... மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை, நிறுத்தியது இந்தியா சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. கடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வந்தமையினால் இரு தரப்பினரும் அதிகளவான படை வீரர்களை அப்பகுதியில் நிறுத்தினர். இந்நிலையில் இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. ஆனாலும் சீன இராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுகி…

  21. உக்ரைனில் இருந்து... நாடு திரும்பிய மாணவர்களின், கல்வி நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை! உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்படி ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் ஆகிய அரசுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், உக்ரைன் மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் கல்வி கடன்களில், உக்ரைன் நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுமாறு வங்கிகளை நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கீவ்வில் உள்ள பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக…

  22. தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகாத வார்த்தைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தத் தகாத வார்த்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் விவாதத்தின்போது…

  23. வீர் பால் திவஸ்: ஒளரங்கசீப் பற்றி பிரதமர் மோதி சொன்னது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 53 நிமிடங்களுக்கு முன்னர் குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்களான பாபா ஃஜோராவர் சிங், பாபா ஃபதே சிங் மற்றும் மாதா குஜ்ரி ஆகியோரின் அசாதாரண தைரியத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், தில்லி உட்பட நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலும் டிசம்பர் 26 ஆம் தேதியை 'வீர் பால் திவஸ்' என்று இந்திய அரசு கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, சுமார் முன்னூறு குழந்தைகள் பாடிய 'ஷபத் கீர்த்தனிலும்’ பிரதமர் மோதி பங்கேற்றார். வீர் பால் திவஸ் நிகழ்ச்சியில் பே…

  24. Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:05 AM இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த …

  25. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம் நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.