Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமையன்று காலை, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் உள்ளே ஏறிய பிறகு, விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது, 52 வயது ஹர்ஷா லோபோ விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு அடிபட்டது. கீழே விழுந்ததில் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்ட லோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந…

  2. உயர்நீதிமன்றத்தை அவதூறான சொற்களால் விமர்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா. இதையடுத்து இது தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று காவல்துறையினருக்கும் எச். ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரைக் மிகக் கடுமையாக திட்டிய எச். ராஜா, உயர்நீதிமன்றம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அவதூறான சொற்களால் நீதிமன்றத்தைக் குறி…

  3. காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச்சண்டை: 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு! காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை அவதானித்த பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத பயங்கரவா…

  4. பா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார் ஜம்மு நகராட்சியில் மொத்தமுள்ள 75 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று ஜம்மு காஷ்மீரிலுள்ள 178 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் மக்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களித்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமையால், அம்மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் என அறிவிக்கப்பட்டு, நான்கு கட்…

  5. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் October 20, 2018 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருந்தது.மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே முன்வந்தமையினால் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வாக்கு…

  6. சபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி அனுப்பியது போலீஸ் #GroundReport பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு கோரி வந்த மேரி சுவீட்டி என்ற மூன்றாவது பெண்ணையும் போலீசார் பாதுகாப்போடு வீ…

  7. காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரி காலமானார்: பிறந்தநாளில் உயிர் பிரிந்தது October 19, 2018 காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான என்.டி. திவாரி இன்று காலமானார். அவருக்கு வயது 93. இன்று அவரது பிறந்த நாளாகும். உத்தராகண்ட் மாநிலம் நைனிதால் மாவட்டத்தில் 1925-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பிறந்தவர் என்.டி. திவாரி. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தனது சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். நாடு சுதந்திரமடைந்ததும் முதன்முதலில் 1952-ம் ஆண்டு நைனிதால் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பலமுறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட அவர், ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் மத்திய அம…

  8. பிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.! பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது ஒளியை விட வேகமாக சென்று தாக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியால் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக சீனா தன்னிடம் இருக்கின்ற 78 ஆள்ளிலா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்து ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி…

  9. ஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்!- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இடையே 149 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதுடன், இக்காலநிலை தொடர்ந்து மூன்று, நான்கு மணிநேரங்களுக்கு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒடிசா அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாக மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சரிந்து விழுந்து பாரிய சேதங்கள் பதிவாகியுள்ளதுடன், ஆந்திரா பிரதேசத்திலுள்ள கலிங்கப்பட்டிணம் முதல் கோபால்பூர் …

  10. இந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானுக்கு வழங்கிய சிப்பாய் கைது October 18, 2018 1 Min Read இந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றும் அவரது பெயர் மற்றும் தகவல்களை ராணுவத் தரப்பு வெளியிடவில்லை. அவர் அடிக்கடி பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசியதனையடுத்து ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டதனை தொடர்ந்து …

  11. பதட்டமான சூழலில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு. சபரிமலை கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தீவிரமாக நடந்து வரும் அந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெர…

  12. எம்.ஜே. அக்பர் ராஜிநாமா: பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகியுள்ளார். இதனை டிடி நியூஸ் செய்தி முகமை உறுதிபடுத்தியுள்ளது. Getty Images தன் மீதுதவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தான் நீதிமன்றத்தில் நியாயம் கோரவுள்ளதாகவும் எம்.ஜே. அக்பர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து தான் ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் பணியாற்றவும், நாட்டுக்கு சேவை செய்யவும் தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோதிக…

  13. அருணாச்சலில் சீன படைகள் அத்துமீறல் – மீண்டும் பதற்றம்… October 16, 2018 1 Min Read காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன ஹெலிடிகொப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன என இந்தோ – திபெத் எல்லைக் காவல்துறைப் படையினர் தெரிவித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு, லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 5 நிமிடங்களுக்கு மேல் பறந்தததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பகுதிக்குள் சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி நுழைவது இது முதல் முறை அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 5 முறை சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளன…

  14. பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதை தடுப்பதற்காக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், புதன்கிழமை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால், பெண்கள் யாரும் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தப் பெண்கள் முகாம் அமைத்து அங்கு தங்கி போராட்டம் நடத்துகின்றனர். வாகனங்களை சோதிக்கின்றனர். …

  15. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை WWW.JAGATGURURAMPALJI.ORG தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ராம்பாலுக்கு 2014ஆம் ஆண்டு நான்கு பெண்களையும் 18 மாத குழந்தையும் கொன்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹரியானா நீதிமன்றம் ஒன்று ராம்பால் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவர் மீது மற்றொரு கொலை குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் வரும் புதன்கிழமை அன்று தீர்ப்பு வரவுள்ளது. ராம்பாலின் ஆதரவாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இடையே ஏற்பட்ட …

  16. பெங்களூரில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை. பெங்களூருவில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் முதல்வர் ரங்கநாத்(60). தனக்கு சொந்தமான பள்ளியில் முதல்வராக உள்ளார்.ஞாயிற்றுக்கிழமை ரங்கநாத் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஸ்பெஷல் கிளாஸில் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்குள் புகுந்தது. அந்த கும்பல் மாணவர்கள் கண் முன்பு ரங்கநாத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. முதல்வர் கொலை செய்யப்பட்டதை பார்த்த மாணவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். கொலையாளிகள் …

  17. இந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் : October 14, 2018 இந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் திகதி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜா…

  18. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய உறுப்பினராக இந்தியா தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் புதிய உறுப்பினராக இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 188 அதிக வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு சபையில் அங்கத்துவம் வகிக்கும். 193 அங்கத்துவ நாடுகளை கொண்ட ஐ.நா. சபையில், மனித உரிமைகள் சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது 18 புதிய உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். சபைக்கு தெரிவ…

  19. சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை : October 11, 2018 1 Min Read சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் ஹொலிவூட் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ‘மீ ரூ’ என்ற பெயரில் ஹாஷ் ரக் செய்து ருவிட்டரில் பதிவிட்டதனையடுத்து இந்தியாவிலும் ‘மீ ரூ’ இயக்கம் தொடங்கப்பட்டு, பல பிரபலங்கள் பாலியல் கொடுமைகள் குறித்து டருவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்ச் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே மேனகா காந்தி மேற்கண்டவாறு …

  20. சபரிமலை விவகாரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு! சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரிக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட…

  21. ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்ற இந்தியப் பொறியியலாளர் கைது! ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DARO) பொறியியலாளர் நிஷாந்த் அகர்வால் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக விசாரித்து வருவதாக இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  22. காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல் எதிர்வரும் 5 மாநிலங்களுக்குமான சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ள நிலையிலெயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் திகதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதற்கமைய சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12…

  23. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் இன்று -இணைய சேவை நிறுத்தம் October 8, 2018 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 8,10,13,16 ஆகிய திகதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் ந டைபெறும் எனவும் பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் திகதி முதல் 9 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது. அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய இந்த வார்டுகளில் 4 …

  24. நீண்ட நாட்களுக்கு முன்னர் 'இந்திராணி முகர்ஜி' என்னும் மேல்தட்டு பகட்டு, வட இந்திய பெண் ஒருவரின் மறுபக்கம் குறித்த செய்தி ஒன்றினை பதிவு செய்திருந்தேன். மேலதிக விபரங்களை இட, அதனை தேடித் பிடிக்க முயன்று சரி வர வில்லை. ஆகவே புதிதாக பதிகிறேன். ஆடம்பர வாழ்வுக்காக சொந்த மக்களை, தங்கை என சமுகத்துக்கு அறிமுகப்படுத்திய தாய்... அந்த மகளை கொலை செய்த கதை.

    • 2 replies
    • 645 views
  25. அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி October 7, 2018 நேற்றிரவு இடம்பெற்ற அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவுநேரசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். பிருத்வி – 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. ஒரிசா மாநிலத்தின் சண்டிப்பூரில் நடத்தப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனை நடமாடும்; லோஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும் திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.