Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து! இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த கப்பல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையினால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செ…

  2. உட்கட்சி குழப்பம்: பதவி விலகிய பாஜக முதல்வர்! மின்னம்பலம் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சரான பாஜகவின் திரிவேந்திரசிங் ராவத் பதவிவிலகினார். பொதுவெளிக்கு புதிதாக இருந்தாலும் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்! ஆளுநர் பேபி ராணி மௌர்யாவிடம் நேற்று (மார்ச் 9) மாலை 4 மணிக்கு ராவத் தன் விலகல்கடிதத்தை அளித்துவிட்டார். கடந்த ஞாயிறன்று தொடங்கிய உத்தராகண்ட் பாஜக பஞ்சாயத்து, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆளுநரைச் சந்தித்த கையோடு, செய்தியாளர் சந்திப்புக்கும் ராவத் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி மேலிடம் சொன்னதால் பதவியிலிருந்து விலகியதாக அவர் கூறினார். உண்மைதான்..! உள்…

  3. ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: நடுக்கடலில் படகில் பட்டினியுடன் மாதக்கணக்கில் இருந்தவர்கள் மீட்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, இந்தோனேசியாவுக்கு புகலிடம் தேடி வந்த ரோஹிஞ்சா முஸ்லிம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அடைக்கலம் தேடி பயணித்த படகின் இன்ஜின் பழுதானதால், நடுக்கடலில் உணவின்றி ஒரு மாத காலமாக தவித்துள்ளனர் அதில் பயணித்த 180 ரோஹிஞ்சா முஸ்லிம்கள். எங்கு நடந்தது இந்த சம்பவம்? அவர்களுக்கு என்ன ஆனது? 1900 கிலோ மீட்டர் கடல் பயணத்திற்கு பிறகு இறுதியாக இந்த படகில் பயணித்தவர்களை இந்தோனீசியாவின் அட்சே பிராந்தியத்திற்குள் நுழைய கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. இல…

  4. Published By: NANTHINI 29 APR, 2023 | 11:24 AM சீனாவின் சக்திவாய்ந்த இணைய உளவுத் திறன்கள் ஆபத்தை அதிகரித்துள்ளதால், இந்திய இராணுவம் 'சைபர்ஸ்பேஸ் டொமைனைக்' கையாள நாடு முழுவதும் ஆறு செயற்பாட்டு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற இந்திய இராணுவ தளபதிகள் மாநாட்டின்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் நவீன தகவல் தொடர்பு அமைப்புகளின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகர மையத்தன்மையை நோக்கிய இராணுவத்தின் நகர்வுகள் காலத்தின் தேவையாகும். சீனா ஓர் எதிரியின் இராணுவ சொத்துக்கள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் உளவு நடவடிக்கைகள…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் உப்ரெட்டி பதவி, பிபிசி செய்தியாளர் 12 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தை அவர் இந்த பயணத்தின் போது உறுதி செய்வார் என்று பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. அதே நிறுவனத்திடம் இருந்துதான…

  6. இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமையன்று காலை, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் உள்ளே ஏறிய பிறகு, விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது, 52 வயது ஹர்ஷா லோபோ விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு அடிபட்டது. கீழே விழுந்ததில் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்ட லோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந…

  7. காஷ்மீர் எல்லையில் கடும் துப்பாக்கிச்சண்டை: 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு! காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை அவதானித்த பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத பயங்கரவா…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்தி…

  9. 2016-ம் ஆண்டு நவம்பர், 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அறிவித்தபின் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 50 நாட…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போட்டார் பதவி, பிபிசி செய்தியாளர் 2 ஜூன் 2024, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 ஜூன் 2024, 04:00 GMT இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் படியோ முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மே 27 அன்று தீர்ப்பளித்தது. சிலைகளை வணங்கும் அல்லது நெருப்பை வழிபடும் இந்துப் பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்ய இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்றும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் கூட அத்தகைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள…

  11. வாயில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்; யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர…

  12. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம் உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே இவ்வாறு ஆழ்துளை்க கிணற்றில் விழுந்துள்ளார். கோதுமை வயலுக்கு இன்று (புதன்கிழமை) குடும்பமாகச் சென்றிருந்த நிலையில், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆழ்துளைக் கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத…

  13. குழந்தைகள் பாலியல் காணொளிகள் கொரோனா காலத்தில் அதிகரித்தது ஏன்? வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டு ஜூலையில், அசாம் மாநில காவல்துறைக்கு 'சந்தேகத்திற்கிடமான' ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் வந்தது. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் மூலம் இந்தப்புகார் கிடைத்தது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் உள்ளன என்றும், அந்தப்பக்கம் சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் அல்லது CSAM (Child Sexual Abuse Material) ஐ ஊக்குவிப்பதாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கப்பட…

  14. இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு! நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்கான முன்பதிவு நேற்று முன்தினமே ஆரம்பிக்கப்பட நிலையில், கோ-வின் இணையத்தளம் மூலமாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது போடப்பட்ட அதே தடுப்பூசிதான் மூன்றாவது டோஸாகவும் போடப்படும் எனவும், இதில் கலப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  15. தெலங்கானா பாமாயில்: இந்தியாவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய உத்தி சுரேகா அப்பூரி பிபிசி தெலுங்கு 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென்மாநிலமான தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தின் 80 கி.மீ நீள சாலையின் இருபுறமும் எண்ணெய் பனை மரங்கள் காணப்படுகின்றன. இந்த சீசனில் நாகார்ஜூனா உள்ளிட்ட பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் எண்ணைய் பனை நடவு செய்துள்ளனர். 50 வயதாகும் இந்த விவசாயி, தனது நான்கு ஏக்கர் வேளாண் பண்ணையில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்ததில் பெரும் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டார். எண்ணெய் பனை வளர்ப்பு மீண்டும் லாபத்தை நோக்கி செல்ல உதவும் என்று அவர் நம்புகிறார். தன்…

  16. நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு! இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2023/1322740

  17. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவம் அனந்த்நாக்கில் புதன்கிழமையன்று கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர் பதவி, பிபிசி உருது செய்தியாளர், ஸ்ரீநகரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கோகர்நாக்கில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டிஎஸ்பி ஆகியோர் கொல்லப்பட்டனர். …

  18. புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகி உள்ளன. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்…

  19. நான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி ! டெல்லி: நான் இந்தியாவின் மகன் என்று புத்த மத துறவியும், திபெத்திய ஆன்மீக தலைவருமான தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியாமல், அந்த நாட்டை எதிர்த்து அமைதி வழியில் போராடி வருபவர் தலாய் லாமா, இந்தநிலையில், சீனா மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் இந்தியாவின் மகன் என்றார். எனது சிந்தனைகள் அனைத்தும் உலகிற்கே அறிவொளியை தந்த நாளந்தா பல்கலைக்கழகத்துடையது. அதே போன்று, இந்தியாவின் பருப்பு சப்பாத்தி மற்றும் தோசைகள் தான் உயிரோட்டம் தருகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவன். அதனால் தான் நான் ஒரு இந்தியாவின்…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 26, 1971. மேகாலயாவின் துராவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் 83-வது படையணியின் தலைமையகத்தில் அதிகாலை 2 மணியளவில், எல்லை பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட் வீரேந்திர குமார் கவுரை தொலைபேசியின் அழைப்பு மணி எழுப்பியது. கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் தஞ்சம் கோரி வருவதாக மங்காச்சார் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். "எல்லை பாதுகாப்புப் படைக்கு இதுபோன்ற முடிவை எடுக்க உரிமை இல்லை என்பதால் என்னால் இதை அனுமதிக்க முடியாது. இதுபோ…

  21. தபின்டா கௌகாப் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 25 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 25 மார்ச் 2024 மாலத்தீவைத் தொடர்ந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்த விவாகரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆளும் அவாமி லீக் மற்றும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையே அரசியல் ரீதியாக கடும் விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாகரம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 'இந்தியாவே வெளியேறு' என்று சொல்லப்படும் பிரசாரம் அல்லது இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது என்கிற முழக்கம் , ஒரு சில எதிர்க்கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அத…

  23. காங். சின்னமாம்! கை காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூரு போலீசுக்கு நூதன உத்தரவு. காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் …

  24. இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் ISIS தாக்குதல் – உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ISIS அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அஸார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ISIS அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாதுகாப்பு பலப்பட…

  25. கார்கில் வெற்றி தினத்தின் ஜோதி பயணம் ஆரம்பமானது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ‘கார்கில் வெற்றி ஜோதி’ பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றி வைத்தார். காஷ்மீர் உட்பட 11 முக்கிய நகரங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கில் ஜோதி, வரும் 26ஆம் திகதி டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் அணையாஜோதியுடன் சங்கமமாக்கப்படும். காஷ்மீர் எல்லைப் பகுதியான கார்கிலில் கடந்த 1999ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு மாதங்கள் மற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.