Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திருப்பதி கோயிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதத்தில் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். லட்டு பிரசாதம் 97.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 63.49 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 9.82 லட்சம் ப…

  2. இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்காவின் மிரட்டலால் பரபரப்பு.. என்ன நடந்தது? இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. நிறைய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது. ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியாதான். இந்த நிலையில் இந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்தியா கடந்த சில வருடங்களாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு வகையாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் போர் விமானங்கள் மட்டும் இல்லாமல் விண்ணில் …

  3. கோப்புப் படம் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்க…

  4. ரஸ்யா ஜனாதிபதி- இந்திய பிரதமர் சந்திப்பு! ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியா – ரஷ்யா பங்கேற்கும் 12 ஆவது உச்சி மாநாடு, தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்தியாவைச் சென்றடைந்தார். புதுடெல்லி விமான நிலையத்தச் சென்றடைந்த புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரடியாகச் சென்று வரவேற்றார். இதன்போது, அவருக்கு இராணுவ மற்றும் செங்கம்பள வரவேற்றுபு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விளாடிமிர் புட்டின் புதுடெல்லியில் அமைந்துள…

  5. கேரளாவில் ஆகஸ்ட் 2018 வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், நிலச்சரிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டம் மேப்பாடி மலையில் வசித்துவரும் சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த செரிய வெளுத்தா என்ற ஆதிவாசி முதியவர் வனத்திலிருந்து வெளியேறவில்லை. சோழநாயக்கர் இனத்தைச் சேர்ந்த எல்லா குடும்பங்களும் கிளம்பிவிட்டபோதும், எந்த பயமும் இல்லாமல் தனது இரண்டு மனைவிகளுடன் தொடர்ந்து அங்கு வசிப்பதாக கூறுகிறார் செரிய வெளுத்தா. வனமகன் வெளுத்தாவுடன் ஒரு சந்திப்பு அடர்ந்த செங்குத்தான மேப்பாடி மலையில், மூன்று மணிநேரம் நடந்து சென்றபோது, வழியில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும், அவரது குடியிருப்புக்கு சென்று உரை…

  6. சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஆலய நிர்வாகம் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலின் ‘நடை’ எதிர்வரும் 17ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலைய…

  7. புட்டின் இன்று இந்தியா செல்கின்றார் October 4, 2018 1 Min Read ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா மற்றும் ரஸ்யா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புட்டின் இன்று இந்தியா செல்கின்றார். புட்டினின் இந்தப் பயணத்தின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புட்டின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில் நாளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…

  8. 40 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை! இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் பெற மாநிலங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அது மியான்மருக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 ரோஹிங்யா இஸ்லாமியர்களை மியான்மருக்கு இந்தியா அரசாங்கம் நாடு கடத்துகிறது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து 7 பேரும் மனிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு அ…

  9. சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்? மா.ச.மதிவாணன் சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் பாதை (SILK ROUTE) திட்டத்தைக் கிடப்பில் போடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த பகீர் முடிவு சீன அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக 2 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முத்துமாலைத் திட்டம் மற்றொன்று பட்டுப் பாதை திட்டம். ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றுக்கான திட்டம் பட்டுப்பாதைத் திட்டமாகும். அதாவது சீனாவிலிருந்து வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் வரையிலான கடல்வழிப் போக்குவரத்தை…

    • 2 replies
    • 924 views
  10. தான்சானியா நாட்டில், 1000 சிங்கங்களை கொன்ற "வைரஸ்" மீண்டும் பரவுகிறதா? கிர் காடுகளில் பலி தொடருகிறது. குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் பலியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் இருப்பதாக 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.ஆனால் சமீப காலமாக அந்த வனப்பகுதியில் சிங்கங்கள் பலியாகும் எண்ணிக்கை என்பது திடீரென அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை திடீரென பதினோரு சிங்கங்கள் பலியாகின. இந்த செய்தி வெளியான நிலையிலும், சிங்கங்களின் பலி எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை மேலும் 10 சி…

  11. மகாத்மா காந்தி எமோஜியை டுவிட்டரில் ஆரம்பித்து வைத்தார் மோடி மகாத்மா காந்தி எமோஜியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த மகாத்மா காந்தி எமோஜி எதிர்வரும் 8ஆம் திகதி அனைவரது பயன்பாட்டுக்கு கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, காந்தி ஜெயந்தி, எம்.கே.காந்தி, பாபு அட்150, மகாத்மா காந்தி, மகாத்மா அட்150 உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் மகாத்மா காந்தியின் ஓவியத்தை கொண்டிருக்கும் இப்புதிய எமோஜியை எதிர்வரும் 8ஆம் திகதி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் டுவிட்டர், டுவிட்டர் லைட் ஆகியவற…

  12. கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபல வயலின் கலைஞர் பாலாபாஸ்கர். இவர் கடந்த வாரம் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வியினியுடன் சென்ற போது அவர்கள் பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். வயலின் கலைஞர் பாலா பாஸ்கரும், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது கார் சாரதி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பாலா பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது விதி எழுதிய ஓர…

  13. தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கணவர் மேற்கோள் காட்டிப் பேசியதால் சென்னையைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்கிறது காவல்துறை. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி, குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், புஷ்பலதா கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடன் பணியாற்றும் பெண்ணுடன் ஜான் பாலுக்கு தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண்ணைக் கடந்த வாரம் வீட்…

  14. தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வ…

  15. சிறப்புக் கட்டுரை: ‘தவறான’ உறவுக்கு அனுமதி அளிக்கிறதா நீதிமன்றம்? ஆஸிஃபா நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றம் சமீபகாலத்தில், மிக முக்கியமான சட்டங்கள் சம்பந்தமான தீர்ப்புகளை வெளியிட்டுவருகிறது. அதிலும், மாற்றுப் பாலினத்தவர்கள் சம்பந்தமான சட்டப் பிரிவு 377, சட்டப் பிரிவு 497, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இந்திய வரலாற்றில் முக்கியமான தீர்ப்புகளாக நான் நினைக்கிறேன். மண உறவுக்கு வெளியில் கொள்ளும் உடலுறவு குறித்த சட்டப் பிரிவு 497 தொடர்பான வழக்கின் தீர்ப்பு பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தீர்ப்பு வந்ததிலிருந்து எல்லோருக்கும் ஒரே குழப்பமாகவே இருக்கிறது. குடும்பங்கள் உடைய…

  16. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி Idealnabaraj கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்…

  17. புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு மாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டியில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இறுதி முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். நடைமுறைகளின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும். ஆனால், மாலைதீவு மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருக்கிறார்கள் என்பதே உடனடியாகத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.வாக்காளர்களில் 58 சதவீதமானவர்கள் சோலீயை தெரிவுசெய்திருக்கிறார்கள்.அரசியல் சார்புகளுக்க…

  18. 65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? - கல்லூரி மாணவி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "தலைமை ஆசிரியர் - கல்லூரி மாணவி காதல்" படத்தின் காப்புரிமைதினத்தந்தி 65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் …

  19. ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERTRAND GUAY / GETTY IMAGES Image caption2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார். ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள…

  20. ரபேல் விமானம்: என்ன தேவை? இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின…

  21. ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: 'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன?' படத்தின் காப்புரிமைGETTY IMAGES போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நடந்…

  22. '515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ்: '515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம் படத்தின் காப்புரிமைஇந்து தமிழ் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை தனது வாகனத்தில் ஏற்றி உதவி புரிந்…

  23. விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - நெகிழ்ச்சி சம்பவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: 'விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்' சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரிய…

  24. மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு ஆரம்பமானது மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் சற்றுமுன் வாக்கெடுப்பு ஆரம்பமானது.. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார். இன்று நடைபெறும் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது. எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  25. குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉலகில் பிறக்கும் குழந்தைகளில் 18% இந்தியாவில் பிறக்கின்றன. (கோப்புப்படம்) இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.